Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puratchi Periyar Muzhakkam

அ.ப.சிவாவின் ‘கருப்பு காத்து’

கோவை கழகத் தோழர் அ.ப.சிவாவின் ‘துளிப்பாக்கள்’, ‘கருப்புக் காத்து’ எனும் தலைப்பில் நூலாக நீலாம்பூர் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலின் அறிமுக விழா 20.3.2006 அன்று மாலை கோவை - இருகூர் சுங்கம் திடலில் ஆ.சிவராசு தலைமையில் நடைபெற்றது. இயக்குனர் சீமான், கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நூலில் இடம் பெற்றுள்ள சில துளிப்பாக்கள்:

ஆறு மாதத்துக்குப் பாலும்
சீராய் ஓடியிருந்தது
சேரி இரத்தம்

கருப்பண்ண சாமிக்கு
ஆடு கோழி!
இராமர் சாமிக்கு
குசராத்.

படைத்தல் -
இச்சை மயமாக்கல்
அழித்தல் -
உலகமயமாக்கல்
காத்தல் -
பெரியார் மயமாக்கல்

கலப்பின
பழம்
இனிக்கும்
பார்ப்பான்
வீட்டிலும்

சலவைக் கல்லில்
சாமி கோவில்
அரச மரத்தடி
ஆரம்பப் பள்ளி

திருவிழாக் கூட்டம்
திருடு போயிற்று
இராசிக்கல் மோதிரம்

இனியில்லை
தடாகங்கள்
தமிழ்நாட்டில்
தாமரை பூக்க

திருநீறு
நெத்தியில!
குல்லா
தலையில!
சிலுவை
கழுத்தில!
திங்கறது மட்டும்
வாயில!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.