Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூன் 2008

மூடநம்பிக்கையற்ற கல்வி

“சிறுபிள்ளைகளுக்குக் கொடுக்கும் பாடப் புத்தகங்களிலேயே மூடநம்பிக்கைக் கொண்ட புராணக் கதைகள் புகுத்தப்படுகின்றன. இங்குக் கல்வி கொடுப்பவர்கள் இந்தக் கல்வியால் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கோ, வாழ்க்கைக்கோ எவ்வளவு பயன்படும் என்பதை முக்கியமாய்க் கவனிப்பதில்லை.”

“உலகக் கல்வி வேறு, பகுத்தறிவு வேறு, பட்டம் வேறு. பெரிய டாக்டராய் இருப்பான். ஆனால், அவனும் மூத்திரமும் சாணியும் சாப்பிட்டால் மோட்சத்திற்குப் போகலாம் என்று நினைப்பான். பெரிய வான சாஸ்திர நிபுணனாக இருப்பான். அவனும் தன் இறந்த தந்தைக்கு (திதி மூலம்) அரிசி, பருப்பு, காய்கறி, செருப்பு அனுப்புவான் - அவனும் தன் மனைவியையும், மக்களையும் வீட்டுக்குத் தூரம் என்று வீட்டுத் திண்ணையில் தள்ளி மூடி வைத்து விட்டு உள்ளே தாழ்ப்பாள் போட்டுத் தூங்குவான்.”

“கல்வியானது நிகழ்காலத்திலும், எதிர்காலத்திற்குமாக ஓர் இணையற்ற முதலீடு... கல்வி அனைவருக்கும் தேவையான ஒன்று. சமத்துவம், சமயச் சார்பின்மை, சனநாயகம் போன்ற அரசியல் சட்டத்தில் காணப்படும் உயரிய குறிக்கோளுடைய கல்வியே உகந்த வழி; மேலும் நம் பொருளாதாரத்தில் பல்வேறு நிலைகட்கும், பிரிவுகட்கும் தேவையான தேர்ந்த மனித சக்தியை உருவாக்கி வழங்கக் கூடியது கல்வி மட்டுமேயாகும்.” - பெரியார்


அப்பா - மகன்

மகன் : சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கல்விக் கட்டணத்தை ரூ.32.500-லிருந்து ரூ.62,500 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதே அப்பா!

அப்பா : இது அநீதி; அக்கிரமம் மகனே!

மகன் : ஒவ்வொரு நாளும் கலைஞரையும், அரசு அறிவிப்புகளையும் பாராட்டி அறிக்கை வெளியிடும் நிகர்நிலை பல்கலைக்கழகம் நடத்தும் கி.வீரமணி, இதில் மவுனம் காப்பது ஏன் அப்பா? கல்விக் கட்டண உயர்வை ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா?

அப்பா : எனக்குத் தெரியாது மகனே!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com