Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூன் 2007

பார்ப்பனர் பிடியில் இந்தியா

உ.பி.யில் மாயாவதி - பார்ப்பன அணி ஆட்சியைப் பிடித்திருக்கலாம். ஆனால், மத்தியில் அதிகார வர்க்கத்தில் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்து கிறார்கள் என்று, ‘அவுட் லுக்’கில் அனுராதா ரமணன் என்பவர் எழுதி யுள்ளார். அவர் எழுதியுள்ள கட்டுரை:

அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக - பார்ப்பனர்களே, இப்போதும் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு பதவிகளில் செல்வாக்குள்ள அதிகாரிகளாக இருப்பவர்கள் அவர்கள் தான். பிரதமருக்கு ஆலோசனை கூறும் இடத்தில் இருப்பவர்களும் அவர்கள்தான். காலம் காலமாக அவர்களின் இந்த “பிறவி உரிமை” தொடரவே செய்கிறது.

இந்த ஆதிக்கம் - பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கிவிட்டது. படிப்பாளிகளாக பார்ப்பனர்கள் மட்டுமே இருந்தார்கள். எனவே உயர் பதவிகளில் பார்ப்பனர்களே நியமிக்கப்பட்டார்கள்.

மேலோட்டமாக - பார்த்தாலே பார்ப்பன அதிகாரிகளே - இப் போதும் மத்திய அரசில் - மய்யமான இடங்களைப் பிடித்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். ‘ரா’ உளவுத்துறை பாதுகாப்பு மற்றும் ஆய்வுத் துறை, விவசாயம், கூட்டுறவு, பொருளாதாரம், வருவாய், சட்டம் போன்ற முக்கிய துறைகளின் பொறுப்பு - பார்ப்பனர்களிடம்தான் இருக்கிறது.

தற்போதைய மத்திய நிர்வாக அமைப்பில் - செயலாளர்கள் என்ற உயர்நிலையில் இருப்பவர்களில் 37 பேர் பார்ப்பனர்கள். 37.17 சதவீதம் பேர் பார்ப்பன அதிகாரிகள் என்று, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.

அரசு நிதியுதவியுடன் செயல்படும் ஆராய்ச்சி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் பார்ப்பனர்களே!

வி.பி.சிங் - 1990களில் பிற் படுத்தப்பட்டோருக்கு கதவைத் திறந்தார். ஆனாலும், இட ஒதுக்கீட்டின் கீழ், பிற்படுத்தப்பட்டோர் உயர்பதவியில் செயலாளர் என்ற நிலையை எட்டுவதற்கு இன்னும் அய்ந்தாண்டு காலம் பிடிக்கும் என்று, அதிகார வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அய்.ஏ.எஸ். தேர்வுகளில் - இப்போது பிற்படுத்தப்பட்டோர் வரத் தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு - அய்.ஏ.எஸ். தேர்வில் 144 பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் வெற்றி பெற்றுள்ளனர். முதல் இடத்தைப் பெற்றவர்கூட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் தான். “2010 ஆம் ஆண்டில்தான் தற்போதுள்ள அதிகார அமைப்பில் மாற்றத்தைக் காண முடியும். அதுவரையில் பார்ப்பன கட்டுப்பாட்டில் தான் இந்திய அதிகார அமைப்பு இருக்கும்” என்கிறார் ஒரு மூத்த அதிகாரி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP