Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puratchi Periyar Muzhakkam
உச்சநீதிமன்றம் போகச் சொன்னது யார்?

-மருத்துவர் இராமதாசு

உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்தது மாபெரும் தவறு என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசு கூறினார்.

“அரசுக்கு இந்தத் தவறான ஆலோசனையை வழங்கியவர் யார்? அந்த ஆலோசகர்களின் உள் நோக்கம் என்ன என்ற கேள்வி மக்கள் மன்றத்தில் இப்போது ஏற்பட்டிருக்கிறது. அப்படி உள்நோக்கம் இருக்கிறது என்பது தெரியவந்தால், அந்தத் தவறான ஆலோசனைகளை வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். சலுகை செய்வது போல தோற்றத்தை உருவாக்கி, எந்தச் சலுகையும் கிடைக்காமல் செய்து விடுவது என்று காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்படுவதில் தவறு இருக்க முடியாது” என்று மருத்துவர் இராமதாசு கூறியிருக்கிறார்.

உச்ச நீதிமன்றம் போவதே சரி!

- வீரமணி -

உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதால் பயனில்லை என்று, பா.ம.க. உட்படப் பலரும் வலியுறுத்திய நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மட்டும், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததை வரவேற்று அறிக்கை விட்டிருந்தார்.

69 சதவீத இடஒதுக்கீட்டில், உச்சநீதிமன்ற நடவடிக்கைகளைக் கண்டித்து நீதிபதிகள் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நடத்திய திருவாளர் வீரமணி, இப்போது, உச்சநீதிமன்றத்தின் மீது திடீர் நம்பிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டது வியப்பைத் தருகிறது. நுழைவுத் தேர்வு ரத்துக்கான தனது ஆதரவு, ஏனைய கட்சிகளின் ஆதரவைவிட ‘பரிசுத்தமானது’ என்பதை முதல்வரிடம் காட்டிக் கொள்ளவேண்டும் என்ற துடிப்புதான், வீரமணியாரின் இந்தத் தடுமாற்றத்துக்குக் காரணமாக இருக்க முடியும்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.