Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூலை 2008

ராமன் பாலம் - கடலுக்கு கீழே போனது ஏன்?
புரட்டுவாதங்களுக்கு இயக்குனர் சீமான் பதிலடி!

அவரவர் செய்த பாவங்களுக்கு தண்டனை நரகத்தில் இருந்தது என்றால், நாட்டில் நீதிமன்றங்கள் எதற்கு என்று, இயக்குநர் சீமான் கேட்டார். கடலுக்கு மேலே இருந்தால் தான் பாலம்; கடலுக்கு கீழே எப்படி ராமன் பாலம் போனது என்றும் கேள்வி எழுப்பினார்.

ஜூன் 15 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய காமராசர் பிறந்த நாள் விழா கூட்டத்தில் பங்கேற்று இயக்குனர் சீமான் ஆற்றிய உரை, சென்ற இதழின் தொடர்ச்சி:

கோயில் உண்டியல் காணோம் காவல் துறையே நடவடிக்கை எடுக்கனும்னா, கோயில் உண்டி யலையே காவல்துறை தான் காப்பாற்றுதுனா கடவுளைவிட காவல்துறைக்கு சக்தி அதிகம் இல்லையா. அவர்கள் காலில் விழுந்து கும்பிடு.

கேரளாவில் மீரா ஜாஸ்மின் என்ற கிருத்துவ பெண் இந்துக் கோவிலுக்குள் சென்றதால் சாமிக்கு தீட்டாயிடுச்சாம். அப்படியானால் கடவுளைவிட மீரா ஜாஸ்மின்னுக்கு சக்தி அதிகமா? அவர் காலில் விழுந்து கும்பிடுங்க (கைதட்டல்) என்ன பைத்தியக் காரத்தனம். அறிவு கெட்ட நிலை. காலங்காலமாக ஆண்டாண்டு காலமாக இந்த மக்களை சிந்திக்கிற திறனற்று அதே இடத்தில் நிற்க வைத்து வாக்கு பறித்து ஆளவும், வாழவும் பழகிக் கொண்ட பார்ப்பனர்களின் சதி.

இந்து மதம் என்கிறாயே? உன் மதத்தை தோற்று வித்தவன் யார்? இந்து மதம் என்கிற ஒரு மதத்தை உருவாக்கியவனே வெள்ளைக்கார கிருத்துவன் தானே? இல்லை என்று உன்னால் மறுக்க முடியுமா?

யார் இந்து? எவன் கிருத்துவன் இல்லையோ, யார் இஸ்லாமியன் இல்லையோ, யார் பார்சி இல்லையோ, யார் யூதன் இல்லையோ, அவன் இந்த நாட்டில் அரசியலமைப்புச் சட்டப்படி இந்து மதத்தைச் சார்ந்தவன் என்று வெள்ளைக்காரன் எழுதினான். நான் சொல்லவில்லை. இதற்கு முன்னால் இருந்த பெரியவா காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னார், வெள்ளைக்காரன் வந்தானோ இல்லையோ, நாம தப்பிச்சோம் என்றார். உன் மதம் என்ன நெறிப்படுத்தியது. நீங்க படம் போறீங்க, பக்தி படமா இருந்தா நம்ம பெண்களுக்கு சாமி வருதே. அதே திரையரங்கில் பால்கனியில் உட்கார்ந்து படம் பார்க்கும் பெண்களுக்கு சாமி வந்து, நீங்கள் பார்த்ததுண்டா? காரில் வந்திறங்கி படம் பார்க்கும் பெண்களுக்கு சாமி வந்து ஆடி பார்த்ததுண்டா?

ஒரு பாப்பாத்தி சாமி வந்து, பேய் பிடிச்சி ஆடி பார்த்ததுண்டா? கோயிலுக்கு வெளியே நிற்கும் உழைக்கும் பாட்டாளி வர்க்கம், இந்தத் தமிழன் தானே ஆடுகிறான், சாமி வந்தது என்று. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கோயிலின் உள்ளே சிறிய மணியை ஆட்டுகிற ஒரு பார்ப்பானுக்கு சாமி வந்திருக்குதாடா இந்த நாட்டிலே? ஆட மாட்டான், ஏன் தெரியுமா? அவனுக்கு எங்கள் அய்யா பெரியாரை விட நல்லாவே தெரியும் கடவுள் இல்லை என்று. இல்லை என்றால் கோயில் வாசலில் வைத்து சங்கரராமனை கொலை செய்வார்களா? இல்லாத ராமனுக்கு கோயில் கட்டுவானாம்; இருக்கின்ற இராமனை தீர்த்துக் கட்டுவானாம். (கைதட்டல்) என்ன பைத்தியக்காரத்தனம். இதை நாங்கள் கேட்கக் கூடாது; பேசக் கூடாது என்றால் எப்படி? எம் மக்களுக்கு யார் சொல்லித் தருவார்கள்? இதை யார் உணர்த்துவார்கள்? எவ்வளவு காலமாக இதையே சொல்லிச் சொல்லி மடமையில் தள்ளுவீர்கள்?

இந்து மதம், இந்து என்று சொல்லுகிறான் என்றால் எதற்காக? வாக்கு சேகரிக்க. சாதிக் கட்சியாக இருந்தால் எந்த இடத்திலும் கட்டிய முன் பணம்கூட பெற மாட்டோம் என்பது தெரியும். அதனால் தான் கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் இங்கே பயன்படுத்தி வருகிறான். எப்படி கிருத்துவனுக்கு பல நாடுகள் இருக்கு, இசுலாமியனுக்கு, பவுத்தனுக்கு பல நாடுகள் இருக்கு. ஆனா, இந்துக்களுக்கு ஒரு நாடு இல்லை. யாரு இந்து இங்கே, தாழ்த்தப்பட்ட பள்ளன், பறையன் இந்துவா, ஏன் இந்த இந்து மதத்தை சாட வேண்டி இருக்கிறது. மக்களே, ஒரு தாழ்த்தப்பட்டவர், ஒரு கிருத்துவனாக மாறிவிட முடியும். ஒரு இசுலாமியனாக மாறிவிட முடியும். ஆனால், இவர்கள் பார்ப்பனாக மாறி விட முடியுமா? ஒரு போதும் இந்த நாட்டில் ஆக முடியாது. அப்படியானால் எது கொடுமை?

தீண்டாமையைப் பற்றி எல்லாம் பேசுவான். ராஜாவே! உன் முதுகில் இருக்கும் பூணூல் உன் தோட்டத்தில் விளைந்ததா? என் தோழன் தோட்டத்தில் விளைந்த பஞ்சாலே தானே பூணூல் செய்து போட்டிருக்கிறாய். அப்போது தீட்டு வரலையா? இந்த நாட்டில் எந்த பார்ப் பானாவது விவசாயம் செய்கிறான் என்று சொல்ல முடியுமா? உழைக்கிற எல்லா வேலையும் செய்து, செல்வங்களை செழிக்க வைப்பது எம்மினம் தானே?

கடவுள் என்கிறாய், இராமன், பிள்ளையார் என்கிறாயே! இராசாவே ஈசுவரன் யார்? ஈஸ்வரி யார்? தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிறந்த பிள்ளையார் மட்டுமே எப்படி பார்ப்பான் ஆனான்? இதற்கு பதில் சொல்லுங்கடா.. பிள்ளையாருக்கு மட்டும் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி மட்டும் தெருவுக்கு இரண்டு பிள்ளையார் வைத்து கும்பிடுகிறீர்களே! அவனுடைய தம்பி முருகன், அவனும் இந்துக் கடவுள் தானே. அவனே திருத்தணியிலிருந்து வடக்கு நோக்கி ஒரு அங்குலம் நகர்த்துங்கடா பார்க்கலாம். என்ன கொடுமை!

இந்து, இந்து என்று சொல்கிறாயே, அந்த இந்து தானே தமிழ் ஈழமண்ணில் போராடுகிறான். அதற்கு குரல் கொடுத்து, அந்த விடுதலைக்கு போராடேன் பார்ப்போம். அந்த விடுதலைக்காக ஒருத்தனாவது பேசியிருக்கிறீர்களாடா? இந்த நாட்டிலே அது குறித்து சிந்தித்திருக்கிறீர்களா? சிந்திக்க மாட்டீர்கள்.

ராஜா சொல்கிறான், பெரியார் சுதந்திர தினத்திற்கு எதிராக கருப்புக்கொடி ஏற்றிவிட்டாராம். அதனாலே அவர் தேச துரோகியாம். எதற்கு ஏற்றினார் கருப்புக் கொடி என்பது தெரியுமா? சுபாஷ் சந்திரபோஸ் கூட இந்த தேச விடுதலைக்காக இராணுவம் கட்டி போராடியவர். அவர் சொன்னார், சுதந்திரம் வாங்கினால் அதை மக்களுக்கு 20 ஆண்டுகளுக்கு சொல்லாதீர்கள் என்று. அது என்ன குற்றமா? ஏன் சொன்னார்? அடிமைத்தனத்தில் இருந்த மக்களை அதே அடிமைத்தனத்தில் வைத்து கடுமையாக உழைக்கவைத்து வளத்தையும், செல்வத்தையும் பெருக்கிவிட்டு இந்த நாட்டில் சுதந்திரத்தை அறிவித்து கொடுங்கள் என்று சொன்னார் சுபாஷ் சந்திர போஸ்.

காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள் என்று நேருவிடம், காந்தி சொல்லுகிறார். ஆனால் நேரு ஒத்துக் கொள்ளவில்லை. தந்தை பெரியார், “ஒரு முழுமையான கல்வி அறிவு இல்லாமல், படிப்பறிவு தெளிந்து சிந்திக்கக் கூட திறனில்லாமல் இருக்கும் மக்களிடத்தில் ஒரு ஜனநாயகத்தை கொடுத்தால், அவனுக்கான சரியான தலைவனை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறி விடுவான். தவறு செய்து விடுவான் என்று அச்சப்பட்டுத்தான் முதலில் கல்வியைக் கொடு, பிறகு சுதந்திரத்தைக் கொடு என்றார். அந்தக் கல்வியை மறுக்கும் வர்ணாஸ்ரமத்தைப் பாதுகாக்கும் பார்ப்பானின் கீழ் எங்கள் மக்கள் சுதந்திரம் பெறுவதை எதிர்த்தார். எங்கள் நாட்டைத் தனியாகப் பிரித்துக் கொடுத்துவிடு என்றார். அந்த பார்ப்பான் சுதந்திரத்திற்கு எதிராக கருப்புக்கொடி ஏற்றச் சொன்னார் எங்கள் அய்யா. கல்வி அறிவு இல்லாத சுதந்திரத்தை தந்ததால்தான் ராஜாவே நீயெல்லாம் மத்திய அமைச்சராப் போயிட்டே. என் அன்பு மக்களுக்கு வாக்களிக்க தெரியலையே. தனக்கான தலைவன் யாருன்னு தெரியலையே. மூக்குத்திக்கும், பிரியாணி பொட்டலத்துக்கும், 100 ரூபாய் காசுக்கும் வாக்களிக்கும் கீழ்த்தரமான சனநாயக நாட்டில் என்னடா சுதந்திரம் இருக்குது.

தமிழை காட்டுமிராண்டி மொழின்னு சொல்லிட்டாருன்னு, ராஜாவே சொன்னியே. உன் சங்கராச்சாரி, தமிழ் மொழியை நீச மொழி, தேவிடியா மொழின்னு சொன்னானே, அதைவிடவா கேவலமா எங்கள் அய்யா சொன்னார், ஏன் சொன்னார்? இந்த புராண புளுகுகளிலிருந்து இந்த மொழியை பிரிக்க முடியலியே என்ற வேதனையில் சொல்றார்.. அய்யா சொல்றார், ஒருவர் முழுமையான தமிழ் பற்றாளராய், தமிழை விரும்புவாரேயானால் நான் காலங்காலமாக அடிமையாய் இருப்பேன் என்று சொல்றார். ஏன் காட்டுமிராண்டி மொழின்னு சொல்றாரு. உங்க இராமாயணம், மகாபாரதம், பாஞ்சாலி சபதம் என்ற எழவு, கருமாதி, தேவாரம், திருவாசகம், இந்த புராண புளுகுகளை சுமந்த மொழியாக இந்த தமிழ் இருந்து கொண்டிருக்கிறதே என்ற வேதனையில்தானே. மொழியின் மேலே, இந்த நாட்டு மக்கள் மீது பற்று இல்லாமலா தனித் தமிழ்நாடு கேட்டார்?

கூறு போட்ட சமஸ்கிருதம்

அவர் தாத்தா பாட்டி பூர்வீகக் குடி பிறந்த மண் கர்நாடகாவிலே இருக்கு. ஆனால் தனித் தமிழ்நாடு கேட்டு இந்திய தேசிய வரைப்படத்தை தமிழ்நாடு நீங்கலாக எரிக்கிறபோது அவர் தாயக மண்ணான கர்நாடகமும் வரைபடத்தில் சேர்ந்துதான் எரிந்தது என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். ராசாவே நீ யாரு,இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக எங்கள் இனத்துக்கு துரோகம் செய்பவர்கள்தானேடா நீங்கள்? இமயம் வரை பரவியிருந்த ஒரு தேசிய இனம் இன்றைக்கு மலையாளிகளாகவும், தெலுங்கர்களாகவும், கன்னடர்களாகவும் பிரிந்துப் போனதற்கு காரணமே பார்ப்பன ஆரிய மொழியான சமஸ்கிருதம் தான். தமிழ் மொழியோடு இந்த மொழியை கலந்து பேசியதின் விளைவு தான் இத்தனை மொழிகள், மறுக்க முடியுமா?

காரியம் என்ற சொல் இருக்கும் போது விசேஷம் என்ற சமஸ்கிருத சொல்லை நாம் பயன்படுத்து கிறோம். அவன் காரியத்தை கெட்டதுக்கு வைச்சான். மகிழ்ச்சி என்ற சொல் இருக்கும் போது சந்தோஷம் என்ற சொல்லை பயன்படுத்தினோம். கோயில் என்ற சொல் இருக்கும் போது ஆலயம் என்று பேசினோம். சோறு என்ற சொல் இருக்கும்போது சாதம் என்ற பேசினோம். மிளகு சாறு என்பதை ரசம் என்றோம். கருவி என்பதை ஆயுதம் என்றோம். இப்படி பேசிப் பேசியே ஏற்பட்ட மொழி திரிபில் கலப்பில்தான் இவ்வளவு பெரிய தமிழ் தேசிய இனம் சிக்குண்டு சிதறிப்போனது என்பது வரலாற்று உண்மை. சேர, சோழ, பாண்டியன் என்ற தமிழ் மூவேந்தர்கள். அதில் சேர மன்னன் மலையாளம் பேசிக் கொண்டு கேரளா போனான் என்பது நீங்கள் ஆய்வு செய்தால் தெரியும்.

இராமனுக்கு என்னடா சக்தி?

நாம் கட்டிய பாலம் எல்லாம் கடலுக்கு மேலே இருக்கிறது. இராமர் கட்டிய பாலம் மட்டும் ஏன் கடலுக்கு அடியிலே போகனும். கடவுளுக்கு சக்தியில்லாமல் போய் விட்டதா? இராமன் எதற்காக பாலம் கட்டினான்? இலங்கைக்கு செல்வதற்கு எதற்காக? இராவணன் இராமன் பெண்டாட்டியை தூக்கிக் கொண்டு போய்விட்டானாம். நாமே அரை மணி நேரம் மனைவியைக் காணவில்லை என்றால் இங்கும் அங்கும் தேடுவோம்; காவல் நிலையத்திற்கு செல்வோம். ஆனால் இராமன் பொறுமையாக குரங்குகளை, அணில்களை கொண்டு பாலம் கட்டிக்கிட்டிருந்திருக்கிறான். அணில் கல் எடுத்துக் கொடுத்ததாம். அணில் கல் எடுத்துக் கொடுத்துத்தான் பாலம் கட்டனும்னா இராமனுக்கு என்னடா சக்தி இருக்கிறது? இராமர் செல்லமாக அணிலை வருடிவிட்டாராம், மூன்று கோடு விழுந்ததாம்.

இந்தியாவிலுள்ள அணிலுக்கு இராமர் கோடுபோட்டார். ஆஸ்திரேலியாவிலுள்ள அணிலுக்கும் கோடு இருக்கிறதே, அதற்கு யார் போட்டது? இராமர் விரல்பட்ட இடம் எல்லாம் கோடா இருந்தால், சீதை வரிக் குதிரையாக அல்லவா இருக்க வேண்டும். (கைதட்டல்) இதையெல்லாம் சிந்தித்துப் பேசினால், இந்துக் கடவுள்களை மட்டுமே பேசகிறார்கள் என்பதா? இவையெல்லாம் கடவுளா? 60 ஆயிரம் பெண்டாட்டிகளைக் கட்டி, 6 ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தாரு தசரதன். ஒரு பெண்டாட்டிக் கட்டி வாழ்பவனுக்கே இல்லாத பொல்லாத நோய்களெல்லாம் வருகின்றது. 60 ஆயிரம் பெண்டாட்டிகளோடு வாழ்ந்திருந்தா, எயிட்ஸ் வந்தில்ல செத்திருக்கணும். இதை சொன்னா என்ன தப்பிருக்கு.

--சீமான் உரையிலிருந்து

(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
Muthukumar
2008-09-05 04:55:00
mmmuthukumar@gmail.com

Seeman,
excellent speech. I've forwarded it to as many people I can. Let us spread the msg that "God is the mother of all Evil"

vivek
2008-09-06 04:14:00
vivekkrishnan@gmail.com

ஆணித்தரமான ஆவேசமான பேச்சு. சீமானின் சமூகப் பணி தொடரட்டும்

Puram Boakku
2008-09-06 10:01:00
puramboakku@gmail.com

தலைவா, "பாலம் கீழே போனது ஏன்" என்பதை, உங்கள் பகுத்தறிவில் தம்மாத்தூண்டு பயன்படுத்தினாலே கண்டு பிடித்து விடலாமே! உலகில் உள்ள அறிவியல் அறிங்கற்கள் எல்லோரும், புவியின் வெப்பம் அதிகரித்து வருகிறது என்றும், துருவப் பகுதியில் பனி மலைகள் உருகுகின்றன என்றும், கடல் மட்டம் அதிகரித்து வருகிறது என்றும் கூறுவது அன்றாடம் செய்தி தாளில் வருகிறதே- உங்களுக்கு ஞானக் கண்ணில் தான் நம்பிக்கை இல்லை என்றாலும், வூனக் கண்ணால் படித்து தெரிந்து கொள்ளலாமே! மேலும் இப்படி மீரா ஜாஸ்மின் காலில் விழுவது, குஷ்பு காலில் விழுவது எல்லாம், சுய மரியாதையும், கேளிக்கை தொழிலும் சரியான அளவில் கலக்கப் பட்ட, உங்கள் நண்பர்களுக்குத்தான் பொருந்தும். ராமர் பாலம் இந்தியாவின் கலாச்சாரச் சின்னம்தான? கேட்பதில் தவறில்லை! இந்திய மக்கள் கலாசாரம் என்பது என்ன? எனக்குத் தெரிந்த வரையில் 1) அடுத்தவருக்கு துன்பம் கோடுக்காமால் வாழ்வது 2) உண்மை பேசுவது, உண்மையைத் தேடுவது 3) குடும்ப வாழ்க்கை 4) பிறர் மனைவியை விரும்பாமை 5) ஒழுக்கமான வாழ்க்கை 6) விருந்தோம்பல்... இப்படியான பண்புகளின் படி வாழ்ந்து வந்த சமுதாயம் தான் இந்திய சமுதாயம், தமிழ் சமுதாயம்! இப்போது கணிசமான அளவில் இந்தப் பண்புகளில் இருந்து மாறு பட்டு வாழ்ந்தாலும், மேற்கூறிய, மற்ற பிற நல்ல பண்புகளை குறிக்கோளாக வைத்துதான், இந்திய சமுதாயம் செயல் பட்டு வருகிறது ! இராமாயணம் அரசியல், சமூகம் என பல பரிமாணங்களை உடையது! அரசியல் ரீதியாகப் பார்த்தால் "பதவி என்பது தோளில் போடக் கூடிய துண்டு போன்றது! கொள்கை என்பது இடுப்பில் அணியும் வேட்டி போன்றது" என்றார் அண்ணா! தன் தந்தை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றூம் கொள்கைக்கு ஆக, தன் பதவியை துச்சமாக கருதி காடு சென்றத தான், இராமாயணத்தின் முதல் முக்கிய நிகழ்ச்சி இரண்டாவது நிகழ்ச்சி இராமனோடு, சீதையும் தானாக வனம் சென்றது! இந்திய வரலாற்றிலே, கண்ணகி,சீதை, சந்திரமதி போன்ற சில பெண்கள் உலகிற்கு முக்கியமான செய்தியை விட்டுச் சென்றுள்ளனர்! அது என்னவென்றால் "கற்பு என்பது கணவனோடு மட்டும் உறவு கொள்வது" -என்பது மட்டும் அல்ல!'- கணவன் எந்த தாழ்ந்த நிலயை அடைந்தாலும், அவனை விட்டுக் கொடுக்காமல், விட்டு விலகாமல், அவன் துயரங்களில் பங்கு எடுத்து, அவன் மீண்டு வர ஒத்துலைப்பதுதான் கற்பு' என்பதுதான் கண்ணகி, சீதை போன்ற பெண்கள் உலகிற்கு விட்டுச் சென்ற வரலாறு! அப்படிப்பட்ட கற்புக்கரசிகளின், கர்ப்பளிக்க கயவர்கள் முனையும்போது, நாகரீக சமுதாயம் வேடிக்கை பார்க்காது- எவ்வளவு சிரமப் பட்டாலும், அந்தக் கர்ப்புக்கரசிக்கு உதவி செய்யும் என்பதன் சான்றுதான் இராமாயணமும், சிலப்பதிகாரமும், இந்தப் பாலமும்! எனவே இந்தப் பாலம் இந்திய மக்களின் கலாச்சாரத் தோடு பின்னிப் பிணைந்து இருக்கிறது ! அதே நேரத்தில் இந்தப் பாலம் ஒரு நிணவுச் சின்னம் என்பதால், இந்தப் பாலம் முக்கியமா அல்லது கால்வாய் முக்கியமா என்று கேட்பதில் தவறு இல்லை!

மற்றவரின் நன்மைக்கு ஆக தான் துயரங்களை சுமப்பது தான் இராமரின் கொள்கை! எனவே இந்தப் பாலத்தை இடிபப்தால் இராமருக்கு ஒரு நட்டமும் இல்லை! ஆனால் எல்லோரும் தங்கள் பெற்றோர் நினைவாக ஏதாவது ஒரு பொருளை வைத்திருப்பது போலத்தான் இந்தப் பாலமும்! எனவே இந்தக் கால்வாயினால் உண்மை உபயோகம் இருந்தால், கால்வாயை வெட்டிக் கொள்ளலாம்! உதாரணமாக இராமர், வட அமெரிக்கா- தென் அமெரிக்க கண்டங்களுக்கு இடையே பாலம் கட்டியிருந்தால், அதில் கால்வாய் அமைப்பது உபயோகம் ஆனா ஒன்று! ஆனால் வெறும் 450 KM பயண தூரம் மீட்ச்ப் படுத்த 4000 கோடி கொட்டி, தண்டதிற்கு கால்வாய் அமைக்க வேண்டியது என்ன? That also in a sea route where the ship transportation is very less!!!!!!

Raja sundaram
2008-09-06 10:05:00
sun_agencies7wells@yahoo.com

Seeman jolted the back bone of Brahminism and Hindu Terrorism. He also slapped the faces of the Hindutua Terrorists like Raja, Ramagopalan, Advani and etc with his excellent speech. I am afraid, these Sangh Hindutua Terrorists may spread violence against Seeman and groups. As they doing in Orissa and done in Gujarat.

selva
2008-09-07 12:20:00
enselva@gmail.com

dear mr. Purambokku,
i read your response to mr. seeman in keetru. you seem to be a little objective.
but you have to understand that people like Seeman have to speak like this because the whole issue has been diverted as a religious issue by BJP people.
Nobody wants to argue on the basis of merits and demerits of the project.
secondly from your response it is not clear what is ur stand.
Read BjP raja's speech also in keetru and comment on it.
selva

Makizhnan
2008-09-15 11:36:00
suresh.sasa2125@gmail.com

நல்ல உரை!!!

ஒரு சின்ன ஐயமும் கூட
"காரியம் என்ற சொல் தமிழ் சொல்லா?"

Sindhippavan
2008-10-03 01:55:00
Sindhippavan@yahoo.com

Dear Seeman,
That was an Excellant speech. We the people of Dravidian culture really proud of U. This kind of Speeches are inspiring and awakening. We have been witnessing these kind of Speeches from Paghutharivu Thanthai Periyar to Seeman but still the fools are doing and repeating the same old story.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP