Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூலை 2007

பார்ப்பன இந்தியாவின் அவலம்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உயர்நீதிமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டபோது நீதிமன்றத்தின் வாயிலிலேயே ‘நால்வர்ணத்தை’ சட்டமாக்கிய ‘மனு’வின் சிலையை வைத்து விட்டார்கள். ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்று அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனால், மனிதர்கள் பிறப்பின் அடிப்படையிலேயே வேறுபட்டவர்கள் என்று கூறும் மனுவின் சிலை உயர்நீதிமன்றத்தின் வாயிலில் கம்பீரமாக நிற்கிறது.

இதுதான் பார்ப்பன இந்தியா! 1989 ஆம் ஆண்டு ஜுன் 28 ஆம் தேதி ராஜஸ்தான் உயர்நீதிமன்ற பார்ப்பன வழக்கறிஞர்கள் ரகசியமாகத் திட்டமிட்டு - இந்த சிலையை நிறுவிவிட்டனர். அப்போதே கடும் எதிர்ப்புகள் வெடித்தன. உயர்நீதிமன்றத்தின் ‘முழு பெஞ்ச்’ இது தொடர்பான வழக்கை விசாரித்து, 48 மணி நேரத்தில் மனு சிலையை அகற்ற உத்தரவிட்டது. உடனே அவசர அவசரமாக விசுவ இந்து பரிஷத்தைச் சார்ந்த ஆச்சாரியா தர்மேந்திரா என்ற பார்ப்பனர், சிலையை அகற்றத் தடைகோரி, அதே உயர்நீதிமன்றத்திலே ரிட் மனு தாக்கல் செய்தார். மகேந்தர்பூஷன் என்ற பார்ப்பன நீதிபதி - ‘மனு’ சிலையை நீக்க இடைக்காலத் தடையை 1989 ஜூலை 27-ல் பிறப்பித்தார்.

அது முதல், இன்று வரை தடை நீடிக்கிறது. பார்ப்பனர்களின் இறுமாப்பு சின்னமான ‘மனு’வின் சிலை உயர்நீதிமன்றத்தின் நுழைவாயிலில் கம்பீரமாக அமர்ந்த நிலையில் அப்படியே இருக்கிறது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம், நீதிபதிகள், வழக்கைத் தள்ளிப் போட்டே வருகிறார்களாம். இதற்குப் பின்னால் வந்த வழக்குகளையெல்லாம் கூட, விசாரித்து, தீர்ப்பு வழங்கிய ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், ‘மனு’ சிலை வழக்கில் மட்டும், தலையிட மறுத்து வருகிறது.

திருவரங்கத்தில், கோயில் கோபுரம் முன் பெரியார் சிலை வைக்கப்பட்டதால், பக்தர்கள் மனம் புண்பட்டு விட்டதாக மதவெறி சக்திகள் ஓலமிட்டு பெரியார் சிலையை உடைத்தன. பா.ஜ.க. இல. கணேசன்களும், இந்து முன்னணி ராமகோபாலன்களும், துக்ளக் ‘சோ’க்களும் பெரியார் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பூணூலை உருவிக் கொண்டு கூக்குரல் போட்டார்கள். ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு குலத்துக்கு ஒரு நீதி பேசும் ‘மனு’வின் சிலை உயர்நீதிமன்றத்தின் வாசலிலே நிற்கிறது. அதற்கு விசுவ இந்து பரிஷத் சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்ப்பன இந்தியாவின் யோக்கியதை இதுதான்! இந்த ‘மனு’வின் சிலை நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும், “சூத்திர” இழிவை பறை சாற்றிக் கொண்டேயிருக்கிறது.

அரசியல் சட்டத்தின் கோட்பாட்டையே மறுக்கும் மனுவுக்கு உயர்நீதிமன்றத்திலே சிலை என்றால், இதைவிட வெட்கக் கேடு வேறு ஏதாவது இருக்க முடியுமா?



கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP