Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூலை 2007

உயர்நீதிமன்றத்தில் கழகம் வழக்கு அய்.ஏ.எஸ். தேர்வில் தொடர்ந்து அநீதி

அய்.ஏ.எஸ். தேர்வுகளில் இடஒதுக்கீடுகளில் தொடர்ந்து நிகழும் மோசடிகளை எதிர்த்து கழகம் தொடர்ந்த வழக்கை, உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

அகில இந்திய சர்வீசுகளான அய்.ஏ.எஸ். தேர்வுகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடுகளில் தொடர்ந்து பார்ப்பன அதிகாரவர்க்கம் மோசடி செய்து வருகிறது.

பொதுப் போட்டியில் தகுதி அடிப்படையில் இடம் பெற வேண்டிய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களை பொதுப் போட்டியில் இடம் பெறச் செய்யாமல், இடஒதுக்கீட்டுக் கோட்டாவின் கீழே தள்ளி விடுகிறார்கள். இதனால், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய இடங்களின் எண்ணிக்கை குறைந்து விடுகிறது. கடந்த ஆண்டு இதே போல் மோசடி நடந்தது.
இதை முன்னாள் அமைச்சர் சரத்யாதவ் அம்பலப்படுத்தி - ‘இந்து’ நாளேட்டில் கட்டுரை எழுதினார். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் உச்சநீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.

ஆனாலும், இந்த மோசடிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதை எதிர்த்து கழக சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். மத்திய தேர்வாணையத் தலைவர், செயலாளர்கள் உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பேராசிரியர் எம்.எஃ.கான், இதே பிரச்சினைக்காக தொடர்ந்த வழக்கில், தேர்வு முறை தவறு என்றும், மீண்டும் முறையாக தேர்வு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார். கழகத் தலைவர் சார்பாக தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

2007 மே மாதம் அய்.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. திறந்த போட்டிக்கான 50.5 சதவீத இடங்களில் தகுதி அடிப்படையில் தேர்வு பெற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் இடம் தரப்பட வேண்டும். அதன் பிறகு தான் தனியே இடஒதுக்கீட்டுக்கான இடங்களை முழுமையாக நிரப்பப்பட வேண்டும். இதன்படி திறந்த போட்டிக்கான 239 இடங்களில் 60 இடங்கள் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு தகுதி அடிப்படையில் தரப்பட்டிருக்க வேண்டும். அப்படி நிரப்பும் போது முன்னேறிய சாதியினருக்கு 154 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

ஆனால், முறைகேடாக திறந்த போட்டியில் தகுதி அடிப்படையில் இடம் பெற வேண்டிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை இடஒதுக்கீட்டுப் பட்டியலுக்குக் கீழே கொண்டு வந்து விட்டனர். இதன் காரணமாக முன்னேறிய சாதியைச் சார்ந்த தேர்வுக்கு தகுதியில்லாத 60 மாணவர்கள், திறந்த போட்டியில் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அய்.ஏ.எஸ். தேர்வில் முதலிடத்தைப் பெற்றுள்ள முத்தையா ராஜீ ரேவு என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்து மாணவருக்கும், 11 ஆம் இடத்தைப் பெற்ற சரண் மாலிக் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மாணவருக்கும், 94வது இடத்தைப் பெற்ற குமார் புராராம் என்ற பழங்குடி மாணவருக்கும் திறந்த போட்டியில் இடம் தராமல், இடஒதுக்கீடுப் பட்டியலிலே இடம் தரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 469, 470, 471வது இடங்களில் தேர்வு பெற்றுள்ள முன்னேறிய சாதி யினருக்கு திறந்த போட்டியில் இடம் கிடைத்துள்ளது.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது 13.8.90-ல் அரசு பிறப்பித்த ஆணையில் திறந்த போட்டியில் தகுதி அடிப்படையில் தேர்வு பெறும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய இடங்களை, இடஒதுக்கீட்டுக் கோட்டாவின் கீழே கொண்டு வந்து கணக்கு காட்டக் கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றமும் இந்த உத்தரவு சரியானதே என்று, ‘இந்திரா சகானி’ வழக்கில் 16.11.92-ல் உறுதிப் படுத்தியுள்ளது. 1995-லும் (விர்பல்சிங் - சவுகான் வழக்கு), 1996லும் (ரித்தேஷ் ஆர். ஷா வழக்கு) உச்சநீதிமன்றம் இதே தீர்ப்பையே வழங்கியுள்ளது.

முன்னேறிய சாதியினரின் நலனுக்காகவே இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசும் சரி, ஒடுக்கப்பட்டோரின் காவலர் என்று கூறிக் கொள்ளும் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் சரி, இதில் தலையிட்டு, தவறைத் தடுத்து நிறுத்திட எந்தக் கவலையும் எடுத்துக் கொள்ளவில்லை. இது தவிர, நேர்முகத் தேர்வு இடஒதுக்கீட்டுக் கீழே வருவோருக்கு மட்டும் தனியே பிரித்து நடத்தப்படுவதால் இடஒதுக்கீட்டுக் கீழே வருவோரை, தேர்வு நடத்துவோர் அடையாளம் கண்டு கொண்டு, அவர்களிடம் வேற்றுமை பாராட்டும் நிலை உருவாகிறது.

சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் தேர்வாணையக் குழு உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை தேர்ச்சியாளர்களுக்கு பணி நியமனங்கள் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வழக்கு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 13.7.2007 அன்று இந்த ரிட் மனுக்கள் - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் நீதிபதி ஜோதி மணி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. கழக வழக்கறிஞர்கள் வி. இளங்கோவன், எம். செந்தில்குமார் மற்றும் எம்.பி. இராசவேலாயுதம் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர். கழக வழக்கறிஞர் எஸ். துரைசாமி ஆஜராகி வாதாடினார்.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மத்திய அரசுக்கும், மத்திய தேர்வாணையத்துக்கும் இரண்டு வாரத்துக்குள் பதில் தரக்கோரி, தாக்கீது அனுப்பியுள்ளனர்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com