Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜனவரி 2009

போராட்டங்களின் ஆண்டாகியது 2008


போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கைதுகள் என்று களப்பணிகளில் பம்பரமாகச் சுழன்ற பெரியார் திராவிடர் கழகம் மீண்டும் தன்னை செயல்படும் இயக்கமாக தமிழ்நாட்டுக்கு வெளிப்படுத்திய ஆண்டு 2008. தமிழகத்தில் தொடர்ந்து மத மோதல்களை உருவாக்கும் வன்முறைகளை நடத்திய பாரதிய ஜனதா தனது மாநில செயற்குழுவை சேலத்தில், அதன் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில் கூட்டியபோது, செயற்குழு நடக்கும் பகுதியிலேயே எதிர்ப்புப் போராட்டம் நடத்திய கழகம் ஈழத் தமிழருக்கு எதிராக அதிகார ஆணவத் திமிர் காட்டிய தமிழக காங்கிரஸ் தலைமையகத்துக்கு அருகேயும் தமிழின உணர்வை போராட்டங்களாக வெளிப்படுத்தியது.

தமிழகத்தில் பயிற்சிக்கு வந்த சிங்கள ராணுவத்தை ஓட வைத்ததும், தீண்டாமை திமிர் பேசிய ஆதிக்க சாதியினரைப் பணிய வைத்ததும், கடந்த ஆண்டு கழகம் நடத்திய போராட்டங்கள்தான், அறிக்கை விளம்பரங்களில் தன்னை மூழ்கடித்துக் கொள்ளாமல், ஆக்கபூர்வ கள பணிகளில் அர்ப்பணித்துக் கொண்டுள்ள பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கடந்த ஆண்டு தொய்வின்றி தொண்டாற்றிய செயல்பாடுகளை இத்தொகுப்பு பட்டியலிடுகிறது.

பெரியாரின் எழுத்து பேச்சுகளைத் தொகுக்கும் மகத்தான கழகப் பணியை முடக்கிய திராவிடர் கழகத் தலைமை நீதிமன்றத்துக்கு ஓடிய வரலாற்றுத் துரோகம் நிகழ்ந்ததும், அதை கழகம் எதிர் கொண்டதும் இதே ஆண்டுதான்.

தமிழக காங்கிரசாரை மகிழ்விக்க அப்பட்டமான பொய் வழக்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான், மணியரசனை கைது செய்து, பல வாரங்களாக சிறையிலடைத்து வைத்துள்ளது கலைஞர் ஆட்சி. பிரச்சாரம், போராட்டம், களப்பணி என கடந்த ஆண்டு கழகம் கடந்து வந்த பாதையில் பதித்த சில முக்கிய சுவடுகளின் தொகுப்பு:

ஜனவரி

7 ஈரோடு மாவட்டம் நம்பியூரிலுள்ள திருமண மண்டபத்தை அருந்ததியர் சமூகத்தினருக்கு வாடகைக்குவிட மறுத்த தீண்டாமைக்கு எதிராக கழகம் களமிறங்கி, சாதி ஒழிப்பு கூட்டியக்கத்தை உருவாக்கி, கோபியில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. போராட்டம் வெற்றி பெற்றது. ஆதிக்கசாதியினர் இறங்கி வந்து மறுக்கப்பட்ட அதே அருந்ததி தோழருக்கு மண்டபத்தை வாடகைக்கு வழங்க முன் வந்தனர். தீண்டாமைத் தடை தகர்ந்தது.

14 சென்னை வந்த குஜராத், பா.ஜ.க. முதல்வர் மதவெறியர் மோடிக்கு எதிராக கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து பாசிச எதிர்ப்பு முன்னணியை உருவாக்கி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பிப்ரவரி

3 இலங்கை இராணுவத்துக்கு இந்தியா ராணுவ உதவி செய்யக்கூடாது என்று ஜனவரி மாதத்திலிருந்து தமிழகம் முழுதும் பொது மக்களிடையே கையெழுத்து இயக்கம் நடத்தி - அந்த கையெழுத்துகளை டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனியிடம் நேரில் அளித்ததோடு, டெல்லி நாடாளுமன்றத்தின் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் கழகம் நடத்தியது. 10 லட்சம் கையெழுத்துடன் 400 கழகத் தோழர்கள், தோழியர்கள் பிப்.3 ஆம் தேதி டெல்லி புறப்பட்டு, பிப். 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தி, 7 ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சரை நேரில் சந்தித்து வற்புறுத்தினர். இந்தியா இலங்கை இராணுவத்துக்கு ஆயுதம் வழங்கும் துரோகத்தை முதன்முதலாக மக்கள் மன்றத்திற்கு இதன் வழியாக கழகம் அம்பலப்படுத்தியது.

தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்று கேரளா சென்ற தமிழக அணியை அவமதித்தது மலையாள அணி. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிப். 3 ஆம் தேதி பொள்ளாச்சியில் கராத்தே போட்டிக்கு வந்த மலையாள அணிக்கு கழக சார்பில் கண்டனமும், ஆர்ப்பாட்டமும் நடத்தப் பட்டது.

4 கோபியில் சுற்றுச் சூழலைக் கெடுக்கும் 'வர்ணா பட்டுநூல்' தொழிற்சாலைக்கு எதிராக கோபியில் கழகம் ஆர்ப்பாட்டம்.

18 உடுமலை அருகே உள்ள சாளரப்பட்டி கிராமத்தில் அருந்ததியினர் மீது ஆதிக்கசாதியினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து உடுமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கழகம் பங்கேற்றது. இதே பிரச்சினைக்காக மதுரையில் பிப்.23 இல் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

தேனியில் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்துப் பெண்ணை, தேனி காவல் நிலையத்தில் காவல் துறையினர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய குற்றத்தில் வழக்குப் பதிவு செய்யாத தேனி காவல்துறையைக் கண்டித்து, போராட்டம் நடத்தச் சென்ற கழகத் தலைவர், தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

மார்ச்

3 சிங்கள புத்த பிக்குகள் மரம் நடு விழா என்ற பெயரில் தமிழகத்தில் ஊடுருவ முயல்வதற்கு திருச்சியில் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது.

4 தில்லை சிற்றம்பல மேடையில் நீதிமன்ற அனுமதியோடு தேவாரம் பாடச் சென்ற 80 வயது முதியவர் ஓதுவார் ஆறுமுகசாமியைத் தாக்கிய தில்லை தீட்சதப் பார்ப்பனர்களைக் கண்டித்துதில்லை நடராசர் கோயிலை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வலியுறுத்தி, சென்னையில் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மதுரையில் கழகம் மார்ச். 8 இல் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

11 இலங்கை ராணுவத் தளபதிகள் குன்னூர் அருகே பயிற்சிக்காக இந்திய ராணுவப் பள்ளிக்கு வரும் செய்தி அறிந்து, உடன் கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. சிங்கள ராணுவத்தினர் பயிற்சி பெறாமல் ஆந்திராவுக்கு ஓடினர்.

15-16 சீர்காழி ஒன்றிய கழக சார்பில் கிராமங்களில் பிரச்சாரப் பயணம் நடந்தது.

18 இந்திய அரசுக்கு சொந்தமான அச்சகத்தில் மலையாளிகள் ஆதிக்கம், தமிழர்களுக்கு எதிரான பாகுபாடுகளைக் கண்டித்து, கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம், போராட்டம் வெற்றி பெற்றது. அச்சகப் பணியாளர் தேர்வு நிறுத்தப்பட்டது.

28 தமிழக மேற்கு மாவட்டங்களில் தீண்டாமைக்கு எதிராக அருந்ததியினர் எழுச்சிப் பெற்றுள்ளதற்கு பெரியார் திராவிடர் கழகம் முக்கிய பங்காற்றியுள்ளதாக 'பிரன்ட் லைன்' (மார்ச் 28) பத்திரிகை எழுதியது.

ஏப்ரல்

7 ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்காக கன்னட வெறியர்களைக் கண்டித்து பொள்ளாச்சியில் கழகம் ஆர்ப் பாட்டம்.

10 ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்த கன்னடர்கள், பெங்களூரில் தமிழ்ச் சங்கத்தின் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, சென்னையில் கன்னட நிறுவனங்கள் தாக்கப்பட்டன. தாக்குதலையொட்டி சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு வாரம் கழித்து பிணையில் விடுதலையானார்கள். ஆனை மலையிலும், ப.குமார பாளையத்திலும் கழகம் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்திய அரசுக்காக தகவல் சேகரிக்க, மாநில உரிமைகளுக்கு எதிராக, ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசின் இருப்புக் காவல்படை (சி.ஆர்.பி.எஃப்) குவிக்கப்பட்டதை எதிர்த்து கழகம் முற்றுகைப் போராட்டம்.

14 கா.சு.புதூர் கிராமத்தில் சுகாதார பாதுகாப்பு கோரி பொள்ளாச்சியில் கழகம் ஆர்ப்பாட்டம். தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வரை தூத்துக்குடி மாவட்டக் கழகம் சாதி ஒழிப்புப் பிரச்சாரப் பயணத்தை நடத்தியது.

மே

3 மத்திய அரசின் சுங்கம் மற்றும் கலால் வணிக துறையில் மலையாளிகள் ஆதிக்கத்தை எதிர்த்து கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்.

6 பாதிக்கப்பட்ட சாளரப்பட்டி அருந்ததி மக்களுக்கு உடன் நிவாரணம் வழங்கக் கோரி, உடுமலையில் கழகம் ஆர்ப்பாட்டம்

17 கோவையில் நடிகவேள் எம்.ஆர்.ராதா நூற்றாண்டு விழா மாநாடு போல் நடந்தது.

20 மேட்டூரில் மாபெரும் நாத்திகர் விழா மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணி எழுச்சியுடன் நடந்தது. கழகத்துக்கு 50000 நன்கொடை வழங்கியது.

30 குடந்தையில் நடிகவேள் நூற்றாண்டு விழாவை கழகம் எடுத்தது. கழகத்துக்கு ஒரு லட்சம் நன்கொடை வழங்கியது.

31 பயிற்சி முகாம்களை நடத்தும் திட்டத்தின் கீழ் இரண்டு நாள் பயிற்சி முகாம் புதுவையில் தொடங்கியது.


ஜுன்

7, 8 மேட்டூரில் சேலம் மாவட்டக் கழக சார்பில் இரு நாள் பயிற்சி முகாம் சிறப்புடன் நடந்தது.

சின்ன சேலம் கள்ளக் குறிச்சி ரயில் பாதையை மேலும் சுற்றுப் பகுதிகளுக்கு நீட்டிக்கக் கோரி சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்.

12 சென்னை சேத்துப்பட்டில் சட்டவிரோத கோயிலை எதிர்த்து கழகம் தொடர்ந்த வழக்கில் கோவிலை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

14 கழக மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசுக்கு பாராட்டு விழாவையும், நாத்திகர் விழாவையும் சென்னை மாவட்டக் கழகம் நடத்தியது.

15 சென்னையில் கழகத்தின் செயற்குழு கூடியது. 'குடிஅரசு' தொகுப்புகளை வெளியிடும் திட்டங்களை உருவாக்கியது.

21, 22 கோபியில் ஈரோடு மாவட்டக் கழக சார்பில் 2 நாள் பயிற்சி முகாம் சிறப்புடன் நடந்தது. காரத் தொழுவில் கழகம் மூட நம்பிக்கை ஊர்வலம்.

30 சாதி மறுப்பு திருமணத் தம்பதிகளை எதிர்த்த சாதிவெறியர்களுக்கு துணை போன ஈரோடு மாவட்டக் காவல் துறையைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்


ஜூலை

4 நிர்வாண சாமியார்கள் ஊர்வலத்தை எதிர்த்து சென்னை மாவட்டக் கழகம் போராட்டம்; சாமியார்கள் ஊர்வலம் ரத்தானது.

5-6 பூம்புகாரில் நாகை மாவட்டக் கழகத்தின் 2 நாள் பயிற்சி முகாம் சிறப்புடன் நடந்தது.

கேரளாவுக்கு மணல் கடத்துவதை எதிர்த்து ஆனைமலையில் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அடுத்த இரு நாட்களிலேயே கேரளாவுக்கு மணல் கொண்டு போக அரசு தடை விதித்தது; போராட்டம் வெற்றி.

8 ரோகினி மில்ஸ் முன்பு கழக அமைப்பான பஞ்சாலை தொழி லாளர் சங்கம் நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

12 மீனவர் படுகொலையைக் கண்டித்து பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி உருவ பொம்மை பொள்ளாச்சியில் கழக சார்பில் எரிப்பு.

17 விழுப்புரத்தில் நடிகவேள் நூற்றாண்டு விழா

22 ஜூலை 2 முதல் 27 வரை கழக முன்னணி அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகம், தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் பயணம் செய்து மாணவர்களை சந்தித்தது.

25 பெரியார் நூல்களை நாட்டுடை மையாக்கக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. சென்னை, சேலம், நெமிலி, திருப்பூர், தர்மபுரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், உடுமலை, மயிலாடுதுறை, பொள்ளாச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல ஊர் களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

30 சென்னையில் கழக சார்பில் கலைவாணர் நூற்றாண்டு விழா.

ஆகஸ்டு

26 மேட்டூரில் 'குடிஅரசு' 27 தொகுதி களை கழகம் வெளியிட்டது.

செப்டம்பர்

15 அண்ணா நூற்றாண்டையொட்டி கோவையில் 100 பேர் அண்ணா போல் வேடமணிந்து கழக சார்பில் ஊர்வலமாக வந்தனர்.

27 தொடர்ந்து மதக் கலவரங்களை உருவாக்கி வரும் பா.ஜ.க. மாநில பொதுக்குழு சேலத்தில், பா.ஜ.க. தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில் கூடியபோது பல்வேறு மனித உரிமை அமைப்புகளை ஒன்று திரட்டி செயற்குழு கூட்டம் நடக்கும் மண்டபம் அருகே கழகம் போராட்டம் நடத்தியது. 250 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். கழகத் தோழர்கள் மோட்டார் வாகனங்களை பா.ஜ.க. வினர் எரிக்க நிலைமை பதட்டமானது.

அக்டோபர்

5 திருப்பூரில் பெரியார் அண்ணா சிலைகளை அகற்றக் கோரிய இந்து மதவெறி சக்திகளுக்கு எதிராக திருப்பூர் கழகத் தோழர்கள் பெரியார் கைத்தடி ஊர்வலம் நடத்தி கைதானார்கள்.

13 சிங்கள ராணுவத்துக்கு இந்தியா வழங்கிய படைக் கருவிகளை திரும்பப் பெற வற்புறுத்தி, சென்னை, சேலம், கோவை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி போன்ற ஊர்களில் கழகம் ஆர்ப்பாட்டங்களை காயக்கட்டுகளுடன் நடத்தியது.

14 ஈழத்தில் சிங்கள ராணுவம் போரை நிறுத்தக் கூடாது என்று பார்ப்பனத் திமிரு டன் கட்டுரை வெளியிட்ட 'இந்து' நாளேட்டின் அலுவலகம் முன்பு கோவையில் கழகத்தினர் 'இந்து' ஏட்டைக் கொளுத்தி கைதானார் கள்.

24 சென்னையில் மனித சங்கிலியில் கழகம் பங்கேற்பு

27 தீபாவளி நாளன்று காலை 7 மணியி லிருந்து 11 மணி வரை சென்னையில் 'ஈழத்தில் ரத்தத்தில் வெடி குண்டு; தமிழகத்தில் சத்தத்தில் பட்டாசா' என்ற முழக்கத் தோடு, பெரியார் திராவி டர் கழகம் தோழமை அமைப்புகளோடு இணைந்து வீதி வீதியாக ஊர்வலமாக சென்று மக்களிடம் தீபாவளியை புறக்கணிக்க வேண்டு கோள் விடுத்தது.

30 ஈழத் தமிழர் அவலங்களை விளக்கிடும் 500 குறுந்தகடுகளை உடு மலை கழகத் தோழர்கள் இலவசமாக மக்களுக்கு வழங்கினர்.

31 ஈழத் தமிழர்களுக்காக புதுவையில் அமைதியாக உண்ணாவிரதம் இருந்தவர்களை மிரட்டி, வன் முறையில் இறங்கிய காங்கிர சாரை தட்டிக் கேட்ட புதுவை கழகத்தினரை காவல்துறை கைது செய்து சிறையிலடைத்து வழக்கு தொடர்ந்தது.

நவம்பர்

11 மயிலாடுதுறையில் கழகத் தோழர்கள், ராஜபக்சே உருவ பொம்மை களை எரித்து கைதானார்கள். சீர்காழியில் கிராமம் கிராமமாக வீடியோ காட்சிகளை கழகம் ஒளிபரப்பியது. கோபியில் ராஜபக்சேயை பாடை யில் ஏற்றி ஊர்வலம் நடத்தி, உருவ பொம்மைக்கு தீயிட்ட கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

18 நவம்பர் 18 முதல் டிசம்பர் முதல் தேதி வரை 15 நாட்கள் தமிழக மாணவர் கூட்டமைப்பு நடத்திய ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பரப்புரைப் பயணத்தில் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். தமிழகம் முழுதும் பயணக் குழுவினரை வரவேற்று கூட்டங்களை ஏற்பாடு செய்யும் கடமைகளை கழகத்தினரே ஏற்றனர்.

17 வி.பி.சிங்கை இழிவுபடுத்தி எழுதிய 'இந்தியா டுடே' பத்திரிகைக்கு செருப்படி தரும் போராட்டத்தை கோவையில் கழகம் நடத்தியது.

19 ஈரோட்டில் நடந்த ஈழத் தமிழர் படுகொலை கண்டன கூட்டத்தில் உரையாற்றியதற்காக காங்கிரசாரின் மிரட்டலுக்கு பணிந்து கலைஞர் ஆட்சி கழகத் தலைவர் கொளத்தூர் மணி த.தே.பொ.க. பொதுச்செய லாளர் மணியரசன், இயக்குநர் சீமான் ஆகியோரை 19 ஆம் தேதி கைது செய்து கோவை சிறையில் அடைத்தது.

டிசம்பர்

20 கைதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ்கட்சி அலுவலகமான சத்திய மூர்த்தி பவன் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தச் சென்ற 62 கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டு 22 ஆம் தேதி இரவு நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

தடைகள் - கெடுபிடிகளுக்கு இடையே நிகழ்ந்த பரப்புரைகள்


பிப்ரவரி தொடங்கி, மே மாதம் வரை வாரத்துக்கு இரண்டு பிரச்சாரக் கூட்டங்கள் என்று திட்டம் வகுத்து பெரியார் சிந்தனைகளை மக்களிடம் இடைவிடாது பரப்புவதில் முனைப்போடு செயல்பட்டது திருப்பூர் பெரியார் திராவிடர் கழகம்.

சிற்பி ராசன் - மந்திரமல்ல தந்திரமே நிகழ்ச்சிகளை தோழர்கள் அழைத்த ஊர்களுக்கெல்லாம் சென்று நடத்தினார். சென்னையில் 11 நாட்கள் தொடர்ந்து அவரது நிகழ்ச்சிகள் நடந்தன. திருப்பூர், கோவை, மயிலாடுதுறை, சீர்காழி, மேட்டூர், சேலம் நகரங்களில் 4 நாள், 5 நாள் தொடர்ந்து சிற்பி ராசன் நிகழ்ச்சிகளை கழகத்தினர் நடத்தினர். குழந்தைகள் - சிறுவர்களுக்கான பயிற்சி முகாமை, சென்னை மாவட்டக் கழகம் நடத்தியது.

சமர்பா குழுவினரின் எழுச்சி இசை நிகழ்ச்சிகள், மேட்டூர் 'டி.கே.ஆர்.' குழுவினரின் இசை நிகழ்ச்சிகள், காவை. இளவரசன் தூத்துக்குடி பால். அறிவழகன், மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகள் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டன. 'குடிஅரசு' தொகுப்புக்கு முன்பதிவுத் திட்டத்தின் கீழ் உறுப்பினர்களை இணைக்கும் பணியில் கழகத் தோழர்கள் கடும் உழைப்பை வழங்கினர். 'ஒப்பந்தங்களை சீர்குலைத்தது - யார்' நூலின் இரண்டாம் பதிப்பை கழகம் வெளிக்கொண்டு வந்து, மக்களிடம் பரப்பியது. மேட்டூரில் வெளியிடப்பட்ட 'குடிஅரசு' தொகுப்புப் பணியில் கழகத் தோழர்களின் உழைப்பு மதிப்பிட முடியாதது.

ஜனவரி 5 ஆம் தேதி சென்னையில் கழகம் ஏற்பாடு செய்த மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணிக்கு இந்து முன்னணி இராம.கோபாலனின் மிரட்டலுக்கு பணிந்து கலைஞர் அரசு தடை விதித்தது. ஈழத் தமிழர் ஆதரவு பொதுக் கூட்டங்களுக்கும் கலைஞர் ஆட்சி தடை விதித்தது. புதுவையில் கழகக் கூட்டத்துக்கு அம்மாநில அரசு விதித்த தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் கழகம் வழக்கு தொடர்ந்தது. தடையை நீக்கி உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.

தடை நீங்கியதால் தொடர்ந்து மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியோடு கழகம் மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசுக்கு பாராட்டு விழாவையும் சென்னையில் நடத்தியது.

திருச்சி விமான நிலையத்தில் கொழும்பிலிருந்து வந்த விமானம் தரை இறங்க விடாமல் தடுக்கும் போராட்டத்தை திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். தடைகளை எதிர்கொண்டு கழகம் பிரச்சாரங்களை கடந்த ஆண்டு நடத்தியது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com