Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puratchi Periyar Muzhakkam
பிப்ரவரி 2009

வி.பி. சிங்கை இழிவுபடுத்தும் 'புதிய ஜனநாயகம்'
விடுதலை இராசேந்திரன்

'மக்கள் கலை இலக்கியக் கழக'த்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழமை சக்தியாகவே கருதுகிறோம். களப் பணிகளில் பல்வேறு சூழல்களில் கரம் கோர்த்து நிற்கும் இயல்பான சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் இரு சக்திகளும் கரம் கோர்த்தே களமிறங்கி வருகின்றன. குறிப்பாக 'இந்து' எதிர்ப்பு; பார்ப்பன எதிர்ப்பு என்ற கோட்பாடுகள் - இரு அணியின் தோழர்களையும் நெருக்கமாக்கியுள்ளன. ஆனாலும்கூட அண்மையில் அவர்களின் 'புதிய ஜனநாயகம்' ஏட்டில் வி.பி.சிங் பற்றி வெளிவந்த ஒருகட்டுரை - 'புதிய ஜனநாயகத்தின்' பார்ப்பன எதிர்ப்புப் பற்றிய பல்வேறு அய்யங்களை எழுப்பியிருப்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.

'காக்கை குயிலாகாது; பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்து மதவெறியர்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அக்கட்டுரை, வி.பி.சிங்கைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது. குஜராத் மோடி அளவில் வி.பி.சிங்கைக் கொண்டு வந்து நிறுத்தி, "குற்ற"ப் பட்டியல்களை அடுக்கியிருக்கிறது. பச்சைப் பார்ப்பனியப் பார்வையில் வெளிவந்திருக்கும் அக்கட்டுரை 'துக்ளக் சோ', 'சு.சாமி' கும்பலை நிச்சயமாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கும். 'பொதுவுடைமை கட்சிகளில் மீண்டும் தமது குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது' என்று "அவாள்"கள் கருதினால், அதில் தவறு இல்லை என்பதே நமது கருத்து.

இந்திய அரசியலில் பார்ப்பனர்கள் மற்றும் 'அவாள்' ஊடகங்களின் கடுமையான வெறுப்புக்குரிய மனிதர் தான் வி.பி.சிங். அவரின் மரணம் கூட ஊடகங்களால் 'இருட்டடிப்பு' செய்யப்பட்டன. தங்களின் வஞ்சகத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்; அவரது மறைவையொட்டி சிறப்புக் கட்டுரைகள் எதையும் எந்த பார்ப்பன தேசிய ஏடும் வெளியிடவில்லை. பார்ப்பனர்கள் 'கள்ள மவுனத்தால்' வி.பி.சிங்கை அவமதித்தார்கள் என்றால் 'புதிய ஜனநாயகம்' பததிரிகையோ வெளிப்படையாகவே தமது அவமதிப்புகளைப் பதிவு செய்து, அதில் மகிழ்ச்சி அடைகிறது.

காங்கிரஸ் அரசியலில் பொது வாழ்க்கையைத் தொடங்கிய வி.பி.சிங், பிறகு காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலுக்கு வந்தார் என்பது வரலாறு; தமது சொந்த நிலங்களை 'பூமி தான' இயக்கத்துக்கு வழங்கினார். அமைச்சர் பதவிகளை வகித்தார். ஆனால், வி.பி.சிங்கின் பொது வாழ்க்கை காங்கிரஸ் அரசியலில் முடங்கிக் கிடந்தபோது, காங்கிரஸ் இழைத்த தவறுகளையெல்லாம் பட்டியலிட்டு அதை வி.பி.சிங் மீது சுமத்தி, அவற்றையெல்லாம் எதிர்த்தாரா என்று 'புதிய ஜனநாயகம்' கேள்வி எழுப்புவது - அதன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறதே தவிர, நேர்மையான சமூகப் பார்வையை அல்ல. காங்கிரஸ் அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்காமல், அதன் சுயரூபத்தை அறிந்து வெளியேறி - காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தொடங்கியதுதான் வி.பி.சிங்கின் சிறப்பு.

'இரண்டு அரசியலிலும் எங்களுக்கு உடன்பாடில்லை; நாங்கள் மூன்றாவது அரசியல் அணி' என்பது 'புதிய ஜனநாயகத்தின்' கொள்கையாக இருக்கலாம். அந்தக் கொள்கைக்கு வந்து சேராத எவருமே 'கடைந்தெடுத்த அயோக்கியர்கள்' தான் என்ற நிலைப்பாட்டில் எழுதுவதும் - பேசுவதும் கட்சி வாதமாகத்தான் இருக்க முடியும். லட்சியவாதிகள் - கட்சிவாதிகளாக முழுமையாக மாறி நிற்பது மக்களை அணி திரட்டுவதற்கு - ஒரு போதும் பயன்படாது. அவர்களின் சுயதிருப்திக்குத்தான் தீனி போடும்.

வி.பி.சிங் பிறப்பித்த பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டு ஆணையை சில அரசு பதவிகளுக்கான சலுகைகளாக உண்மையான பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையாளர்கள் எவரும் சுருக்கிப் பார்த்து விட முடியாது. மாறாக இந்திய அரசியலில் அதிரடி மாற்றங்களை உருவாக்கிய நடவடிக்கை அது. பார்ப்பன அரசியல் தலைமையைப் புரட்டிப் போட்டு, பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை அணி திரட்டலுக்கு வழியமைத்து அவர்கள் தேர்தல் அரசியலை நிர்ணயிக்கும் செல்வாக்கு மிக்க சக்திகளாக்கிய மாற்றத்தை அந்த ஆணை தான் கொண்டு வந்தது.

பார்ப்பனர்களுக்கு வி.பி.சிங் மீது எழுந்த கடும் கோபத்துக்கு இதுவே அடிப்படை. பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல, அதுவரை பார்ப்பன மேலாதிக்கம் - சாதியமைப்புகளைக் கவனத்திலே எடுக்காமல், வர்க்கக் கண்ணோட்டத்தில் 'புதிய ஜனநாயக'ப் புரட்சிகளைப் பேசி வந்த பொதுவுடைமை கட்சிகளும், இதனால் நெருக்கடிக்கு உள்ளாயின என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மை. தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தத்தை இந்த மனிதன் உருவாக்கி விட்டானே என்ற ஆவேசத்தை - தங்களது அடி உள்ளத்தில் புதைத்து வைத்திருந்தவர்கள்தான் வி.பி.சிங்கை அவர் மறைவிலும் கொச்சைப்படுத்தத் துடிப்பவர்களாக இருக்கிறார்கள். மாறாக, சரியான சமூகப் பார்வைக்கு 'மண்டலாக்கம்' வெளிச்சம் தந்தது என்று கருதுவோர், வி.பி.சிங்கின் பங்களிப்புக்கு ஏற்பு வழங்கி பாராட்டுவார்கள்.

'புதிய ஜனநாயகத்தின்' இந்தக் கட்டுரை மண்டலாக்கத்தால் பதறிப் போன பார்ப்பனர்கள் பக்கம் அது நிற்பதையே உணர்த்துகிறது.

1989 இல் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்த போது, "அதை நாங்கள் எதிர்க்கவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை" என்று எழுதிய 'புதிய ஜனநாயகம்' "மண்டல் குழு பரிந்துரை அமலாக்கமும் எதிர்ப்பும் அரசியல் பயன்களை அடைவதற்காக மேல்சாதிகளுக்கிடையே நடக்கும் மோதல் சண்டை" என்றும் எழுதியது. ('புதிய ஜனநாயகம் - மார்ச், 2003) வி.பி.சிங் நாட்டை சாதிவாரியாகக் கூறு போட்டுவிட்டார் என்று 'அருண்சோரி'களும், 'சோ'க்களும், பார்ப்பனர்களும் ஏதோ, சாதியமைப்பையே வி.பி.சிங் தான் உருவாக்கியது போலக் கூப்பாடு போட்டார்கள். அதே பார்ப்பன குரலைத்தான் 'புதிய ஜனநாயகம்' அன்று இவ்வாறு ஒலித்தது. "நம்புங்கள்; இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதைத் தவிர, நாடு ஒரு உள்நாட்டுப் போரில் மூழ்கிப் போய்விட்டது, சாதிப்போர், மதப்போர், இனப் போராக." (புதிய ஜனநாயகம், அக்.16, 1990)

மண்டல் குழு பரிந்துரையை எதிர்த்து நாடு முழுதும் கலவரத்தை உருவாக்கிய பார்ப்பன சக்திகளைக் கண்டித்து, ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்க வேண்டிய 'புதிய ஜனநாயகம்' அதைச் செய்யவில்லை. மாறாக - இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்களையும் சேர்த்தே குற்றவாளியாக்கியது.

"இடஒதுக்கீட்டை ஆதரித்தும் எதிர்த்தும் சாதி அடிப்படையிலும், அயோத்தி விவகாரத்தில் மத அடிப்படையிலும் நடக்கும் கோரக் கொலைகள், வன்முறை வெறியாட்டங்கள் மனசாட்சியுடைய அனைவரையும் வெறுப்பும், அதிருப்தியும் அடைய வைக்கின்றன" என்று எழுதியதோடு "அரசு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மேல்சாதி மேட்டுக் குடியினரிடையே நடக்கும் சாதிச் சண்டைகளை அம்பலப்படுத்தி முறியடிப்போம்" என்று அறைகூவலும் விடுத்தது.

வி.பி.சிங் ஆட்சியின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பார்ப்பன சக்திகள் தொடர்ந்த வழக்கில், பல்வேறு நிபந்தனைகளுடன் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீhப்பளித்தபோது, 'புதிய ஜனநாயகம்' இவ்வாறு எழுதியது. "இடஒதுக்கீடு ஆதரவும் சரி; எதிர்ப்பும் சரி; தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் உட்பட சகல பிரிவு உழைக்கும் மக்களையும் அடக்கி ஒடுக்கிச் சுரண்டும் தரகு அதிகார முதலாளிகள், நிலப் பிரபுக்களுக்குச் சேவை செய்யும் அரசு எந்திரத்தில் பதவி - இடம் பிடிப்பதற்கான போட்டா போட்டியும் - நாய்ச் சண்டையும் தான் இந்த அப்பட்டமான உண்மை இப்போது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று எழுதியது ('புதிய ஜனநாயகம் 1993 - செப். 16-31, அக் 1-15)

ம.க.இ.க.வின் அரசியல் அமைப்பான இந்தியப் பொதுவுடைமை கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) அதிகாரப்பூர்வ ஏடான "புரட்சிப் புயல்", "இடஒதுக்கீடு கொள்கை மக்கள் சாதிகளாகப் பிரிந்திருப்பதை சாசுவதமாக்குகிறது" என்று எழுதி, பார்ப்பனர்களின் நிலைப்பாட்டையே தனது கொள்கை என்று அறிவித்திருந்தது. ('புரட்சிப் புயல்' - 1985 டிசம்பர்)

"ஒரு அரசியல் தலைவரை - எந்த வர்க்கத்துக்கு சேவை செய்தார் என மதிப்பீடு செய்யாமல், தனி மனிதப் பண்புகளையும், ஒரு சில சீர்திருத்த அறிவிப்புகளையும் மட்டும் வைத்து மதிப்பீடு செய்து, துதிப்பாடி போற்றுவது என்பது இன்னொரு மோசடியே" என்று, எழுதும் 'புதிய ஜனநாயக'த்தைப் பார்த்து, நாம் கேட்க விரும்புவதெல்லாம் இதுதான். அரசியல் தலைவருக்கு பொருந்தக்கூடிய இலக்கணம் அரசியல் கட்சிக்கும் பொருந்தக் கூடியது தானே; அப்படியானால் 'புதிய ஜனநாயகம்' இடஒதுக்கீட்டில் மேற்கொண்ட நிலைப்பாடு எந்த வர்க்கத்துக்கு சேவை செய்வதாகும் என்ற கேள்வியைத்தான் நாம் திருப்பிக் கேட்க விரும்புகிறோம். இடஒதுக்கீட்டில் கண்டிப்பான எதிர்நிலை எடுத்திருந்த புரட்சிகரக் குழுக்களை எல்லாம் வி.பி.சிங்கின் ஆணை நெருக்கடிக்குள்ளாக்கி விட்டதன் சீற்றத்தை 'புதிய ஜனநாயக'த்தின் கட்டுரையிலும் பார்க்கிறோம்.

போபர்சு பீரங்கி ஊழலில் ராஜீவ்காந்தியோடு சமரசம் செய்து கொள்ள மறுத்ததால் காங்கிரசை விட்டு வெளியேறினார் வி.பி.சிங் என்ற உண்மையை 'புதிய ஜனநாயகம்' மறைத்து - "கறைபடாதவர் என போற்றப்படும் இவர் போபோர்சு பீரங்கி விவகாரத்தில் வெளியேறி ஜனமோர்ச்சா எனும் கட்சியை உருவாக்கினார்" என்று எழுதுகிறது. கறைபடாதவராக இருந்த காரணத்தினால் தானே வெளியேறினார்?

போபோர்ஸ் ஊழலை அதிகாரத்தைப் பயன்படுத்தி மூடி மறைக்க முயன்றார் ராஜீவ். வி.பி.சிங் அதிகாரத்துக்கு வந்த பிறகு தான் பல தடைகளைக் கடந்து 'முதல் தகவல் அறிக்கையே' பதிவு செய்யும் நிலை உருவானது என்பதை எல்லாம் மறைத்து, குற்றவாளி ராஜீவ் கும்பலை தண்டிக்கவோ, விசாரிக்கவோ இல்லை என்று எழுதுவது பொறுப்புள்ள விமர்சனமாகுமா? 27 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து, வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ராமன் ரதயாத்திரையைத் தொடங்கினார் அத்வானி. பீகாரில் யாத்திரை தடை செய்யப்பட்ட நிலையில், வி.பி.சிங் ஆட்சிக்கு பா.ஜ.க. ஆதரவைத் திரும்பப் பெற்ற வரலாறுகளையெல்லாம் மறைக்க, 'புதிய ஜனநாயகம்' ஏன் துடிக்க வேண்டும்? பீகாரில் லாலு, அத்வானி யாத்திரையைத் தடுத்து நிறுத்தியது, வி.பி.சிங், ஒப்புதல் பெற்றுத் தானே? ஏதோ வி.பி.சிங்கை கேட்காமல் லாலுவே முடிவு எடுத்தது போல் ஏன் திரித்து எழுத வேண்டும்?

ராஜீவ் ஈழத்துக்கு இந்திய ராணுவத்தை அனுப்பினார் என்றால், ராணுவம் திருப்பி அழைக்கப்பட்டது வி.பி.சிங் பிரதமராக இருந்த போதுதான்; 'இன்னும் கேவலமாக தோற்பதைவிட, நாடு திரும்புவதே மேல்' என்ற முடிவின் பேரில் வி.பி.சிங் திருப்பி அழைத்ததாக அதையும் கொச்சைப்படுத்துகிறது 'புதிய ஜனநாயகம்'.

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் - வி.பி.சிங் - புரட்சிகர மார்க்சிய லெனினியக் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல. ம.க.இ.க.வின் தத்துவார்த்தப் பார்வையில் கூற வேண்டுமானால், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியலில் இருந்த ஒருவரே, அந்த அரசியலுக்குள் அதிர்வுகளை நிகழ்த்தியவர் என்பதுதான். அந்த அதிர்வுகளின் தாக்கத்தைக் கவனத்தில் கொள்ளாமல் ஏற்கனவே இருந்த 'சமூக நிலையைக் குலைத்து விட்டாரே' என்று புலம்பும் பார்ப்பனியக் குரலோடு தன்னையும் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தன் பங்கிற்கான 'சேற்றை' பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு வி.பி.சிங் மீது வீசுவது பார்ப்பனிய சார்புப் பார்வை அல்லவா?

'புதிய ஜனநாயகத்தின்' கட்டுரை நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இடஒதுக்கீட்டுக் கொள்கையில் அக் கட்சியின் தெளிவான நிலைப்பாட்டை நாம் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். "இந்து மதத்தின் ஆன்மாவாக இருக்கும் பார்ப்பனியத்தை சாதிய அடுக்குமுறை மற்றும் ஒடுக்குமுறை அமைப்பை எதிர்த்து நமது போராட்டம் இருக்கும்" - என்று 1993-ல் அறிவித்த ம.க.இ.க. ('புரட்சிப் புயல்' - பக்.27, 28) 1998-ம் ஆண்டு கட்சித் திட்டத்துக்கான ஆவணத்தில் அத்திட்டம் காணாமல் போனது ஏன் என்பதும் நமக்குப் புரியவில்லை.

"இன்றைய நிலையில் இந்திய மக்கள் மீது மூன்று மலைகள் - அமெரிக்கத் தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், நிலப் பிரவுத்துவம் ஆகியவை அழுந்திக் கொண்டிருக்கின்றன. இம் மூன்றும் தான் முக்கியமாக இந்திய மக்களின் எதிரிகளாகும்" - (ம.க.இ.க.வின் கட்சித் திட்டம்-1998). - என்று 1998 இல் திட்டத்தை வகுத்துவிட்டார்கள்.

இந்திய மக்களின் அடிப்படை எதிரிகளாக பார்ப்பனர், பார்ப்பனியச் சக்திகள் இல்லை என்பதை கட்சித் திட்டமாக வைத்துக் கொண்டு, அதே பார்வையில் வி.பி.சிங் பற்றிய விமர்சனத்தையும் முன் வைத்துக் கொண்டு ம.க.இ.க. செயல்படுவது நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பவே செய்கிறது.

'கவி'யின் இந்த கட்டுரை 'புதிய ஜனநாயகத்தின்' பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையை சந்தேகப்பட வைத்துவிட்டது!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
venkat
2009-02-15 09:40:00
venkatss2000@gmail.com

Check the below link, which came in frontline ( Hindu Group ) on V.p.Singh

http://www.flonnet.com/fl2525/stories/20081219252512400.htm

OBITUARY

Icon of social justice

VENKITESH RAMAKRISHNAN

Vishwanath Pratap Singh (1931-2008).

பங்கர...
2009-02-16 01:30:00
uyyalala81@yahoo.in

ம.க.இ.க.விற்கோ, அதன் ஊதுகுழலான "புதிய ஜனநாயக"த்திற்கோ- தெளிவான எந்தவொரு திட்டமும்- வரையறையும் கிடையாது.
அவர்களைப் பொறுத்தவரை, எல்லோருமே அயோக்கியர்கள்... அடிமுட்டாள்கள்... (சுய விமர்சனமாக- அதில் தங்களையும் சேர்த்துக் கொள்வார்கள்) அந்த அளவிற்கு மார்க்சிய- லெனியத்தில்(?) ஊறியவர்கள்.
எவண்டா யோக்கியம்? என்று மேடையைப் போட்டுத் திட்டுவது; புதிய ஜனநாயகத்தில் கொச்சையாக எழுதுவது..? அதைத்தவிர அவர்களுக்கு வேறொன்றும் தெரியாது.
"புதிய ஜனநாயகம்" என்கிறார்களே.... அந்த புதிய ஜனநாயகம் எது....? அது எப்படியிருக்கும்... என்பதையாவது விளங்கும்படி சொல்லியிருக்கிறார்களா? அதுபோன்ற உருப்படியான எதையும் ஒருபோதும் அவர்கள் செய்ததில்லை.
ஒன்றில் குறை காண்பவன், அந்த குறையை எப்படிக் களையலாம் என்பது பற்றியும் சொல்ல வேண்டும். மாறாக, நான் அப்படியெல்லாம் செய்யமாட்டேன்... எனக்கு குற்றம் கண்டுபிடிக்கத்தான் தெரியும்.... என்றால் அவனை என்ன சொல்வது...?
இந்த தீவிர புரட்சிபுயல்கள், வி.பி.சிங்கை விமர்சித்தது, வியப்பளிக்கவில்லை. காரணம் தந்தைப் பெரியாரையே பலவாறாக விமர்சித்த- யோக்கிவான்கள்தானே இவர்கள்.

SUPERLINKS
2009-02-16 01:50:00
superlinkroad@gmai.com

வி.பி சிங்கு என்ன‌ க‌ல‌ப்பில்லாத‌ சொக்க‌த்த‌ங்கமா..?


வி.பி. சிங்கை இழிவுபடுத்தும் 'புதிய ஜனநாயகம்' என்கிற பெயரில் ஒரு க‌ட்டுரையை பெரியார் முழ‌க்க‌ம் இத‌ழில் விடுத‌லை ராசேந்திர‌ன் எழுதியுள்ளார்.




வி.பி.சிங்கை நாம் என்னமோ 2009 ல் தான் முதல் முறையாக விமர்சனம் செய்து எழுதியுள்ளதை போலவும் அதைக்கண்டு அவர் அதிர்ச்சியடைந்தவரை போலவும் கட்டுரையை இவ்வாறு துவங்கி எழுதியுள்ளார்.




'மக்கள் கலை இலக்கியக் கழக'த்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழமை சக்தியாகவே கருதுகிறோம். களப் பணிகளில் பல்வேறு சூழல்களில் கரம் கோர்த்து நிற்கும் இயல்பான சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் இரு சக்திகளும் கரம் கோர்த்தே களமிறங்கி வருகின்றன. குறிப்பாக 'இந்து' எதிர்ப்பு; பார்ப்பன எதிர்ப்பு என்ற கோட்பாடுகள் - இரு அணியின் தோழர்களையும் நெருக்கமாக்கியுள்ளன. ஆனாலும்கூட அண்மையில் அவர்களின் 'புதிய ஜனநாயகம்' ஏட்டில் வி.பி.சிங் பற்றி வெளிவந்த ஒருகட்டுரை - 'புதிய ஜனநாயகத்தின்' பார்ப்பன எதிர்ப்புப் பற்றிய பல்வேறு அய்யங்களை எழுப்பியிருப்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.




அவரைப் பற்றி நாம் கட்டுரை மட்டும் எழுதவில்லை நையாண்டியாக‌ பாட்டு கூட‌ பாடியுள்ளோம்,கிட்டத்தட்ட‌ ப‌தினைந்து ஆண்டுக‌ளுக்கு முன்பே. எனவே நாம் வி.பி.சிங் கால‌த்திலிருந்தே அவரை அம்ப‌ல‌ப்ப‌டுத்தி தான் எழுதி வ‌ருகிறோம்.ஒருவேளை விடுத‌லை ராசேந்திர‌னுக்கு அப்போதெல்லாம் புஜ‌,புக வும் நமது பாடல்களும் கிடைக்க‌வில்லையோ என்ன‌வோ?அந்த பாடலின் சுட்டி கீழே உள்ள‌து.




வி.பி சிங்கு என்ன‌ க‌ல‌ப்பில்லாத‌ சொக்க‌த்த‌ங்கமா..






விடுதலை ராசேந்திரன் இவ்வாறு ஒரு கட்டுரையை எழுதியிருப்பதில் நமக்கு ஒன்றும் வியப்பில்லை தான், அவரால் அதற்கு மேலே இந்த விமர்சனம் தொடர்பாக அதன் எல்லையை கடந்து நோக்க முடியாது தான்,


காரணம் அப்படியான ஒரு விமர்சன எல்லையை அவருடைய கண்னோட்டம் கடக்கும் எனில் அந்த விமர்சனம் வி.பி.சிங்குடன் நிற்காது என்பதை அவர் அறிவார் என நான் கருதுகிறேன். புஜ விமர்சனங்களுக்கு எதிராக அவர் வைக்கும்‌ வாத‌ங்க‌ள் அனைத்தும் சொத்தை க‌த்த‌ரிக்காயாக‌த்தான் இருக்கிற‌து. வி.பி.சிங் மீது பு.ஜ‌ முன்‌வைத்துள்ள‌ வரிசையான அனைத்து விம‌ர்ச‌ன‌ங்க‌ளுக்கும் க‌ட்டுரையாளர் த‌க்க‌ ப‌தில்களை கூறி அதை ம‌றுக்க‌ முற்ப‌ட‌வில்லை,மாறாக தம‌து உப்புச்சப்பற்ற வாதங்களோடு அவர் தொடர்ந்து பார்ப்பனியம் பார்ப்பனியம் என்பதை மட்டும் தான் கூறிக்கொண்டிருக்கிறார்.




ம‌.க‌.இ.க‌ வை தாங்கள் எப்போதும் தோழ‌மை அமைப்பாக‌ தான் க‌ருதி வ‌ருகிறார்க‌ளாம் இந்நிலையில் வி.பி.சிங்கை புதிய ஜனநாயகம் இழிவுபடுத்திவிட்டதால் ம‌.க‌.இ.க வின் பார்ப்பன எதிர்ப்புப் பற்றி அவர்களுக்கு பல்வேறு அய்யங்கள் எழுந்துவிட்ட‌தாம்!


அந்த‌ அய்ய‌ங்க‌ளை தீர்த்துக்கொள்வ‌து மிக‌வும் அவ‌சியம்.


ஆனால் எவ்வாறு இவர்களின் அய்யங்களை தீர்த்து வைப்பது?


இவர்களுடைய கட்டுரைக்கு ப‌திலுக்கு ப‌தில் என்று நாம் வரிந்து கட்டிக்கொண்டு ப‌தில் கூறிக்கொண்டிருப்ப‌தால் ஒன்றும் இவ‌ர்க‌ளின் அய்ய‌ங்க‌ள் தீராப்போவ‌து இல்லை !




உதார‌ண‌த்திற்கு ம‌.க‌.இ.க‌ இட‌ஒதுக்கீட்டுக்கு எதிரான‌‌ அமைப்பு என்கிற‌ பொய்யை யார் திரும்பத் திரும்ப‌ சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் ?


சாதி ஒடுக்குமுறையை அனுப‌விக்காத‌ ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கி பார்ப்பனியத்திற்கு சேவை செய்து கொண்டே தானும் ஒடுக்கப்பட்டவன் தான் அதனால் எனக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று வெட்கமில்லாமல் கைகளை நீட்டிக்கொண்டு நிற்கும் ஆதிக்க சாதி இந்துக்களின் பிரதிநிதிகளாக கட்சிகளை நடத்திக்கொண்டிருப்பவர்கள்‌‌ தான் ம‌.க‌.இ.க‌ இட‌ஒதுக்கீட்டிற்கு எதிரான‌ அமைப்பு என்கிற‌ பொய் பிர‌ச்சார‌த்தை கூச்ச‌மின்றி தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள், அந்த பொய் பிரச்சாரத்திற்கு வஞ்சகமாக‌ தாழ்த்தப்பட்டவர்களையும் சேர்த்துக்கொள்கிறார்கள். அவ‌ர்க‌ளுக்கு நாம் ப‌க்க‌ம் ப‌க்க‌மாக‌ ப‌தில் கூறினாலும் மண்‌டையில் ஏறுவ‌தில்லையே ஏன் ?




ஏனென்றால் அவர்கள் சாதிய‌ ஒடுக்குமுறையின் கொடூர‌த்தை அனுப‌வித்த‌வ‌ர்க‌ள் அல்ல‌ அதை ஏட்ட‌ள‌வில் மட்டுமே வாசித்திருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு நாம் என்ன‌ விள‌க்க‌ங்க‌ள் த‌ந்தாலும் ம‌.க‌.இ.க‌ இட‌ஒதுக்கீட்டுக்கு எதிரான‌ அமைப்பு என்கிற‌‌ பொய்யை தான் சொல்லிக்கொண்டிருப்பார்க‌ள்.


என‌வே அவ‌ர்க‌ள் சாதி இந்து க‌ண்ணோட்ட‌த்திலிருந்து விடுப‌டாத‌வ‌ரை,தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை ஒடுக்கும் அவ்வகை க‌ண்ணோட்ட‌த்திலிருந்து இட‌ஒதுக்கீடை நோக்கும் வ‌ரை ம‌.க‌.இ.க‌ இவ‌ர்க‌ளுக்கு எதிரியாக‌த்தான் தெரியும்.என‌வே அவ‌ர்க‌ள் அதிலிருந்து‌ விடுப‌டாத‌வ‌ரை இட‌ஒதுக்கீடு, ம‌.க‌.இ.க‌ போன்ற‌ வார்த்தைக‌ளை உச்ச‌ரிக்க‌ அவ‌ர்க‌ளுக்கு எந்த தகுதியுமில்லை.






அதுவே தான் விடுத‌லை ராசேந்திர‌னுக்கும் பொருந்தும் என்று க‌ருதுகிறேன். என‌வே இத‌ற்கு ஒரே தீர்வு அவ‌ர் மீண்டும் புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌ம் க‌ட்டுரையை நேர்மையாக‌ வாசிக்க‌ முயல்வது மட்டுமே,அவ‌தூறு செய்ய‌ வேண்டும் என்கிற‌‌ நோக்க‌த்தையும்,தமது விமர்சன கோட்டைத்தாண்டாமலும் க‌ட்டுரைக்குள் குதித்து புரண்டல் இப்ப‌டி தான்‌ ம‌.க‌.இ.க‌ க‌ன்ணுக்குத்தெரியும்,


எனினும் கான‌ல் நீர் நீர‌ல்ல‌வே.




விசுவநாத் பிரதாப் சிங் : காக்கை குயிலாகாது!

சமூகநீதிக் காவலர் என்றும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காகப் பதவியை இழந்தவர் என்றும் புகழப்படும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங், கடந்த நவம்பர் 27ஆம் நாள் மறைந்துவிட்டார். காவிரி நீர்ப் பங்கீட்டுக்கு நடுவர் மையம்

அமைத்ததும், பல்லாண்டுகளாக அரசின் குப்பைத் தொட்டியில் கிடந்த மண்டல் பரிந்துரைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதும் வி.பி.சிங்கின் அரசியல் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்கவை.


அவரின் மரணத்தையடுத்துத் திராவிடக் கட்சிகள், தலித் அமைப்புகள் போன்றவைகளும், அறிவுஜீவிகள், தன்னார்வக் குழுக்களின் மனித உரிமைப்போராளிகள் போன்றவர்களும் "சமூகநீதிப் புரட்சியை ஏற்படுத்தியவர்' என்று ஏற்றிப் போற்றி, அவரைப் புனிதராக்குகின்றனர். சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்த வி.பி.சிங்கை இடஒதுக்கீட்டுக்காக மட்டும் தூக்கி வைத்துக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? ஜெயலலிதா, பார்ப்பன பயங்கரவாதி சங்கராச்சாரியைத் துணிவோடு கைது செய்ததை வைத்து அவரைப் "பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி' என்று கொண்டாட முடியுமா?


வி.பி.சிங் தனது அரசியலை காங்கிரசு கட்சியிலிருந்து தொடங்கினார். தெலுங்கானாப் புரட்சி வெற்றிகரமாக நிலப்பங்கீட்டை நடத்தி முடித்திருந்த காலகட்டத்தில், எங்கே புரட்சித் தீ இந்தியா முழுவதும் பரவி விடுமோ என்ற அச் சத்தில் வினோபா பாவே ஆரம்பித்த மோசடித்தனமான "பூமிதான' இயக்கம்தான் இந்த முன்னாள் ராஜாவை காங்கிரசுக்குக் கொண்டுவந்தது.


பாசிஸ்ட் இந்திராவின் இளைய மகன் சஞ்சய் காந்தியிடம் வி.பி.சிங் காட்டிய தீவிர விசுவாசமே அவரை படிப்படியாக முன்னுக்குக் கொண்டுவந்து, 1980இல் உ.பி. முதல்வராக்கியது. 1984இல் இந்திரா செத்த பிறகு, ராஜீவால் மத்திய நிதியமைச்சராக ஆக்கப்பட்டார். 1987இல் போபர்சு பீரங்கி ஊழல் அம்பலமானதையடுத்து, இவரது காங்கிரசு அத்தியாயம் முடிவுக்கு வந்தது.


காங்கிரசில் இருந்தபோது அவசரநிலை பாசிச ஆட்சியை அவர் தீவிரமாக ஆதரித்ததையோ, அவருடைய குருநாதர் சஞ்சய்காந்தி காட்டுமிராண்டித்தனமாக முசுலிம்கள் மீது பாய்ந்து குதறியபோது அதனை அவர் கண்டும் காணாமல் இருந்ததையோ, மனித உரிமை பேச காஷ்மீர் வரை போகும் அ.மார்க்ஸ் ஏன் கண்டுகொள்வதில்லை?


அவசரநிலைப் பாசிச ஆட்சிக் காலத்தில் தி.மு.க. பிரமுகர்கள் சிறையில் அடைக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்ட போதிலும், வி.பி.சிங்கின் அவசரநிலை ஆதரவை தி.மு.க. ஏன் விமர்சிப்பதில்லை?


1980இல் இவர் உ.பி. முதல்வராக இருந்தபோதுதான், உ.பி. அரசின் ஆயுதப்படை போலீசு மொராதாபாத் முசுலிம்களை இனப்படுகொலை செய்து, இந்தியாவின் மதக்கலவர வரலாற்றில் புதுப்பரிணாமத்தை உருவாக்கியது. இவரின் ஆட்சியில்தான் ஆதிக்க சாதிப் பண்ணையார்களின் சட்டவிரோத ஆயுதப்படைகள் தாழ்த்தப்பட்டோர் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தன. ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும் "நிலைமை விரைவில் சரிசெய்யப்படும்' என்ற வெற்று அறிக்கையைத் தவிர, இவர் செய்தது எதுவுமில்லை. கான்பூருக்கு அருகேயுள்ள தஸ்தம்பூர் தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, 1982இல் இவர் பதவி விலகவேண்டி வந்தது. 1984 சீக்கியப் படுகொலைக்காக 1989இல் மன்னிப்புக் கேட்ட வி.பி.சிங், தனது ஆட்சியில் கொலையுண்ட முஸ்லிம்களுக்காகவோ, தாழ்த்தப்பட்டோருக்காகவோ மன்னிப்பு எதையும் கேட்டதில்லை என்பது தொல்.திருமாவுக்கோ, தமிழக முசுலீம் முன்னேற்றக் கழகத்திற்கோ தெரியாதா?


கறைபடாதவர் எனப் போற்றப்படும் இவர், போபர்சு பீரங்கி விவகாரத்தில் காங்கிரசை விட்டு வெளியேறி ஜன மோர்ச்சா எனும் கட்சியை உருவாக்கினார். அக்கட்சியின் தளபதியோ கிரிமினல் குற்றவாளியான சஞ்சய் சிங். இந்திய பாட்மின்டன் வீரர் சையது மோடியின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த சஞ்சய் சிங், 1988இல் லக்னோவில் மோடியைச் சுட்டுக் கொன்றான். இக்கொலை வழக்கு வி.பி.சிங் பிரதமரானவுடன் முடக்கப்பட்டது. ஜன மோர்ச்சா, அப்போதிருந்த உதிரிக்கட்சிகள் பலவற்றுடன் சேர்ந்து ஜனதா தளமானது. ஜனதா தளத்துக்கும் வி.பி.சிங் தலைவரானார். "திருவாளர் புதிய பரிசுத்தம்' அவர்களின் கட்சியிலோ தேவிலால், லாலுபிரசாத் யாதவ், தேவே கவுடா எனப் பெரும் ஊழல் பெருச்சாளிகள் மண்டிக் கிடந்தனர்.


பாசிச ராஜீவின் பீரங்கி பேர ஊழலை அம்பலப்படுத்தி ஆட்சியைப் பிடித்த வி.பி.சிங், குற்றவாளி ராஜீவ் கும்பலை விசாரிக்கவோ தண்டிக்கவோ செய்யவில்லை. காங்கிரசுக்கு மாற்று என்ற பெயரில் ஆட்சியைப் பிடிப்பதற்காக இந்துவெறி பயங்கரவாதக் கட்சியான பா.ஜ.க.வுடன் சிங் கூட்டணி கட்டினார். அதற்கு முன்பு வெறும் 2 எம்.பி.களை மட்டும் வைத்திருந்த பா.ஜ.க. இவரது உதவியால் 89 இடங்களில் வெற்றி பெற்றது. தனது ஆட்சியின்போது பா.ஜ.க. இட்ட வேலைக்கெல்லாம் தட்டாமல் சேவை செய்தார். இந்து பயங்கரவாதி ஜக்மோகனை பா.ஜ.க. நிர்ப்பந்தத்தால் காஷ்மீரின் ஆளுநராக்கினார். ஜக்மோகன் பதவி ஏற்ற நாளிலிருந்து இந்திய ராணுவம் காஷ்மீரில் பச்சை இரத்தம் குடிக்கத் தொடங்கியது. நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் கொன்று வீதிகளில் வீசப்பட்டனர். நாடெங்கும் எதிர்ப்பு வலுத்த பின்னர் வேறுவழியின்றி சிங், ஜக்மோகனைத் திரும்ப அழைத்தார் . "அதிகாரத்தை நோக்கி உண்மை' பேசும் அ.மார்க்ஸ், வி.பி.சிங்கின் இந்துத்துவ சேவையை மறைத்துவிட்டு இடஒதுக்கீடு மட்டும் பற்றிப் பேசுவது ஏன்?


வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது ஒருமுறை கூட பாபர் மசூதி பிரச்சினையில் தனது நிலைப்பாடு எதுவென கூறியது கிடையாது. 1990இல் சோமநாதபுரத்தில் இருந்து அத்வானி தொடங்கிய இரத யாத்திரையை அவர் எந்த இடத்திலும் தடுக்க முயலவே இல்லை. யாத்திரை சென்ற இடமெல்லாம் இரத்தக் களறியை ஏற்படுத்தி, முசுலிம்களைக் கொன்று குவித்தது. அத்வானியின் இந்துவெறி இரத யாத்திரை உ.பி. மாநிலத்தில் மட்டும் 3 மாதங்களில் 600 பேர்களைக் காவு கொண்டது. அலிகாரில் மட்டும் 88 பேரைப் படுகொலை செய்தது. இவ்வாறு நாடெங்கும் இந்துவெறி பயங்கரம் ஆட்டம்போட்டபோதும், தனது நாற்காலி மட்டும் கவிழ்ந்து விடாமல் சிங் பார்த்துக் கொண்டார். கடைசியில் பீகார் எல்லைக்குள் இரத யாத்திரை நுழையும்போதுதான் லாலுபிரசாத்தின் அரசு அத்வானியைக் கைது செய்தது. உடனே வி.பி.சிங் அரசும் கவிழ்ந்தது. மண்டலுக்காக ஆட்சியைப் பறிகொடுத்தவர் என்று சிங்குக்குப் பட்டம் சூட்டும் பெரியார் இயக்கம், அவர் இப்படி இந்து மதவெறியைக் கண்டும் காணாமல் இருந்ததை விமர்சிப்பதே இல்லையே, ஏன்?


ராஜீவால் ஈழத்துக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் பத்தாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்து, பாலியல் வல்லுறவுகளை நடத்தியது. சுமார் 3,000 வீரர்களைப் பலிகொடுத்துத் தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருந்த இந்தியப் படையை இலங்கை அரசும் வெளியேறச் சொல்லி அழுத்தம் கொடுத்து வந்தது. இன்னும் கேவலமாகத் தோற்பதை விட நாடு திரும்புவதே மேல் என்ற முடிவின் பேரில்தான் வி.பி.சிங், அந்தக் கூலிப்படையைத் திரும்பப் பெற்றார். ஆனால், அந்த முடிவை மட்டுமே மையப்படுத்தி, இவரை "ஈழத்தமிழர்கள் பால் நேசம் கொண்டவர்' என்று இங்குள்ள ஈழ ஆதரவாளர்கள் சிலாகித்துக் கொள்கிறார்கள். ராஜீவ் காலத்தில் இந்திய அரசு மேற்கொண்ட அதே பிராந்திய மேலாதிக்கத்தைத் தான் வி.பி.சிங்கின் அரசும் பின்பற்றியது என்பதையோ, காஷ்மீர், அசாம் மாநிலத்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அவரின் அரசும் கொடூரமாக நசுக்கிக் கொண்டிருந்தது என்பதையோ பேச இவர்கள் வாய் திறப்பதில்லையே, அது ஏன்?


1990இல் மண்டல் பரிந்துரையை நடைமுறைக்குக் கொண்டு வந்த வி.பி.சிங்கோ, மண்டல் முக்கியமாய் பரிந்துரைத்திருந்த நிலச்சீர்திருத்தத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு, அரசு வேலை வாய்ப்பில் 27 சதவீதத்தை பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கினார். இதே வி.பி.சிங் தான் 198586இல் ராஜீவ் காந்தியின் அரசில் நிதியமைச்சராக இருந்தபோது, அதுவரை அரசு வேலை வாய்ப்புக்களைக் கணிசமாக உருவாக்கி வந்த, நேரு பாணி கலப்புப் பொருளாதாரக் கொள்கையைக் கைவிட்டு, தனியார்மயத்துக்கு ஆதரவான பொருளாதாரத் திட்டங்களைத் தீட்டினார். பின்னாளில் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் தனியார்மயம் முழுமையாக அமல்படுத்தப்பட்டாலும், ராஜீவ் அரசின் காலத்தில் இருந்தே அதற்கு அடித்தளம் போட்டவர் தான் வி.பி.சிங்.


2000த்திற்குப் பிறகு ஏற்பட்டு வரும் மக்கள் போராட்டங்களின்போது வி.பி.சிங் இன்னொரு அவதாரமும் எடுத்தார். எங்கெல்லாம் உலகமயம், தனியார்மயத்துக்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்கள் நடக்கின்றனவோ, அங்கெல்லாம் சென்று உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் கலந்து கொண்டார். அங்கும் அவர் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் துரத்தி அடிக்கச் சொல்லிப் பேசவில்லை. நிலமிழந்தவர்களுக்கு நியாயமான விலை கொடுக்க வேண்டும் என்பதே அவரின் கோரிக்கையாக இருந்தது. மறுகாலனியாதிக்கத்தை எதிர்க்கும் அரசியல் அவரிடம் கிடையாது. தாராளமயக் கொள்கைக்கு மனிதமுகம் தரும்படி, தன்னார்வக் குழுக்களின் பிரதிநிதியாகத்தான் அவர் இருந்தார். இந்தப் புள்ளிதான் வீரமணியில் இருந்து அ.மார்க்ஸ் வரை உள்ள "சமூகநீதி' பக்தர்களையும் வி.பி.சிங்கையும் இணைக்கிறது.


கடந்த 15 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மறுகாலனியாதிக்கம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான அனைத்து அரசு வேலைவாய்ப்புகளையும் அடைத்து

anbu
2009-02-16 04:03:00
manianbu71@gmail.com

அது என்னவோ போங்க இந்த மக இக காரங்களும் இந்து துக்ளக் வகையறாக்களும் இட ஒதுக்கீட்டுப்பிரச்சினையில் ஒரே மாதிரி பேசி குழப்புறாங்க. இந்த பிரச்சினையில் மட்டும் மக இக வின் தத்துவார்த்த வரையறை இந்து துக்ளக் உடன் ஒத்துப்போவது எப்படின்னு தான் புரியலைங்க

Dr. V. Pandian
2009-02-16 05:10:00
porkkaiponds@yahoo.co.in

பிடல் காஸ்ட்ரோ சொன்னார். 'நமது கொள்கைகள் நம்மக்களையும் ஏமாற்றக்கூடாது. நமது எதிரிகளையும் ஏமாற்றக்கூடாது'.

அன்பு அவர்கள் குறிப்பிட்டது போல கொள்கைக் குழப்பம் இருந்தால், அதற்கு நிச்சயம் காரணம் இருக்கும்!

ம க இ க தோழர்களே! உங்களது தலைமைகளைச் சிறிது கிளறிப்பாருங்கள்! அங்கே பார்ப்பனீய ஊடுருவல் இருக்கலாம்.

அடுத்துக் கெடுப்பான் பார்ப்பான்!

சின்னபாண்டி
2009-02-16 05:47:00
chinnapandi@hotmail.com

சூப்பர் லிங்க், எங்கெங்கோ "லிங்க்" ஆகி போய்க் கொண்டே இருக்கிறார்....
காங்கிரசின் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல், வி.பி.சிங் அக்கட்சியை விட்டு வெளியேறிய பின்னரும்... அவர் காங்கிரசில் இருந்தாரே... அமைச்சராக இருந்தாரே... முதலமைச்சராக இருந்தாரே என்று "சூப்பர் லிங்க்" மீண்டும் மீண்டும் கூப்பாடு போடுவது, வி.பி.சிங்கை இழிவுபடுத்த வேண்டும் என்ற ஒற்றை "அரிப்பை"த் தவிர வேறு எதையும் பிரதிபலிக்கவில்லை.
பாஜக-வின் மதவெறியைத் தடுத்திருக்கலாமே... என்று "லிங்க்" கேட்கிறார்...
சரி, அவரின் வாதப்படியே போனாலும்.....
பாஜகவின் மதவெறி நடவடிக்கைகளை எதிர்க்காமல்; பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, சமூகநீதிக் காற்றை திறந்துவிட்ட- மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்காமல் இருந்திருந்தால்- பாஜகவின் ஆதரவுடன் வி.பி.சிங் தொடர்ந்து ஆட்சி நடத்தியிருக்கலாமே...!
ஏன் அதற்கு அவர் முயற்சிக்கவில்லை....?
இந்த விஷயத்தைக் கூட"லிங்க்" கூட்டத்தால் புரிந்து கொள்ள முடியாமல் போகிறது என்றால், அது அவர்களின் வறட்டு போக்கைத்தான் காட்டுகிறது.

சமரன்
2009-02-16 05:51:00
samara@gmail.com

அதிதீவிர கம்யூனிசம் பேசித்திரியும், ம.க.இ.க. கூட்டத்தினர், வெறும் காகிதப் புலிகள்தான். அவர்கள் இதுவரை எதையும் சாதிக்கவும் இல்லை; இனிமேல் சாதிக்கப் போவதும் இல்லை...
எல்லோரையும் திட்டுவார்கள்; மண்ணைவாரித் தூற்றுவார்கள்... அதைத்தாண்டி வேறு எதுவும் அவர்களுக்குத் தெரியாது.
சமூகநீதிக்காவலரான வி.பி.சிங்கை விமர்சித்ததன் மூலம், ம.க.இ.க. கும்பலின் பார்ப்பனிய சாயம் வெளுத்ததும், ஒருவகையில் நல்லதுதான். தமிழினமும் ஒடுக்கப்பட்ட மக்களும் இவர்களைப் புரிந்துகொண்டு- எச்சரிக்கையுடன் இருப்பார்கள் அல்லவா?
அந்த வகையில், ம.க.இ.க. கூட்டத்தை அம்பலப்படுத்திய, அய்யா விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

thene babu
2009-02-16 06:26:00
thene_babu@gmail.com

பார்ப்பனத் தலைமையில் இயங்கும் அமைப்பு சமூக நீதி விஷயத்தில் எப்படி இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இதில் மட்டும் சிபிஎம், ம.க.இ.க. என எல்லா இடது சாரி அமைப்புகளும் ஒற்றுமையுடன் இருக்கின்றன. எல்லோரையும் திட்டுவதைத் தவிர இவர்களுக்கு வேறென்ன தெரியும்? உண்மையிலேயே இவர்களிடம் நேர்மைத் திறம் இருந்தால், மண்டல் பிரச்சினையின் போது பாஜகவின் குரலையே இவர்களும் ஒலித்தது ஏன் என்ற கேள்விக்குப் பதில் கூறட்டும்.

TAMIL RAJENDIRAN
2009-02-16 06:55:00
tamilrajendiran@gmail.com

CORRECT EXPOSURE OF FALSE COMMUNISTS
9787933344,9789433344

mani
2009-02-16 08:02:00
fmvasanthy@gmail.com

பெரியார் தி.க நண்பர்களே

ஒருவரை நேரடியாக விமர்சனம் செய்து வந்த கட்டுரையையும் பார்ப்பன பத்திரிக்கைகள் அவரை ஒர் மனிதராக கூட அங்கீகரிக்காததையும் எப்படி ஒப்பிட முடியும்

காங்கிரசில் இருந்தபோது பிற்போக்குகளுக்கு மவுனமாக இருந்ததை கண்டிக்க முடியாது என்றால் பாப்பான்களை அவர்கள் இன்று சாதி பார்ப்பதில்லை என் அப்பனும், தாத்தனும் பண்ணிய கொடுமைக்கு நான் பொறுப்பா என்ற அவர்களது வாதத்தையும் நாம் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும். தவறுகளுக்கு அமைதியாக இருந்து எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது அந்த தவறிழைப்பில் அவர்க்கு உள்ள பங்கை மறைத்து விடுமா என்ன

மண்டல் வந்ததால் ஐஐடி யில் சூத்திர பசஞசம சாதிகளை சேர்த்துவிட முடியவில்லை. எழுபதுகளின் மத்தியில் எழுந்த சாதாரண மக்களின் கோபத்தை அடக்க லிபரல் நிலபிரபுக்கள் கண்டடைந்த வழிமுறைதான் மண்டல் கமிசன். இதன்மூலம் சமூக மாற்றம் வந்துவிடாது என்றும் இது மடைமாற்றம் செய்ய உதவும் என்றும் அவர்களது ஜனதாவில் இருந்த ஜனசஙக் காரர்களுக்கு தெரியும். மேலும் தொன்னூறுகளில் மேற்குலகில் இருந்து விளிம்பு நிலை அரசியல் பல தளங்களில் இறக்குமதியான போது அதற்கு எதிராக இவர்கள் கண்டறிந்த அரசிய்லதான் இது. சில தீக்குளிப்புகளைத தாண்டி பாப்பனர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆனால் அதன்பிறகு தேவர் வன்னியர் என ஆதிக்க சாதிகள் தங்களையும் மிக பிற்பட்டோர் என அறிவிக்க கோரி போராட்டம் நடத்தினர். வேலை வாய்ப்பு தேவை என்றால் எம்பிசி என்றும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைக்கு பாப்பான்களின் அடியாள்படையாக நின்றவர்கள் இத்தகைய ஆதிக்க சாதிகள்தான். இவர்கள் கருப்பு பாப்பான்கள் அல்லது பாப்பார சூத்திரர்கள்...பாப்பான் வந்து சொல்ல வேண்டியது இல்ல.. இவனுங்க பாப்பார புத்தியோட செயல்படுறாங்க. அந்த புத்திதான் பாப்பனீயம்.

இதனை இரண்டாவது பார்த்துக் கொள்ளலாம். பாப்பான்தான் ஒழிக்கப்பட வேண்டியவன் என நீங்கள் கருதுகிறீர்கள் எனப நினைக்கிறேன். பக்கத்து வீட்டில திருடன் வந்துட்டான் பிடிச்சுட்டாங்க...அவன அடிக்க நீங்களும் போறீங்க...உங்க புள்ளயும் சின்ன சின்ன திருட்ட வீட்டுக்கு உள்ளயே பண்ணிக் கொண்டு இருக்கு என்ன பண்ணுவீங்க... அறிவுரை சொல்லலாம். அறிவுரையை கேக்காம வேல்கம்ப தூக்குதுன்னா அதுக்காக அதத் தாங்குறதும், காந்தீய உபதேசம் பண்ணுறதும் பகுத்தறிவு உள்ள யாரும் பண்ணமுடியாதுன்னு நினைக்கிறேன்.

எனவே இட ஓதுக்கீடு வேண்டும் என்பவன் தனது சகோதரனான தலித்தை தனக்கு சமமாக பாவிக்க கூடியவனாகவும் அவனுடன் இணைந்து இருவரும் இந்த ஒடுக்குமுறை கருத்தை விதைத்த பாப்பானை அல்லது அந்த சிந்தனை உள்ள எந்த ஒன்றையும் எதிர்க்க கடமைப்பட்டவர்கள். இதில் தவறுபவர்களை, தவறுவதற்கான வாய்ப்புள்ள வழிமுறைகளை ஆதரித்தால் புதிய பார்ப்பான்கள் வருவார்களே தவிர பாப்பனீயம் அழியாது.

90 ஆம் ஆண்டுகளை அப்படியே ஒருமுறை அசைபோடுங்கள். ஈழம் அருகில் உள்ளது போல தெரிந்தது. ரா"ஜீவ் என்ற கோமாளி பாசிஸ்டை வைத்து ஆள முடியாமல் திணறிய ராஜபரம்பரை அமைச்சர்களின் ஜனாதா தளம் ஆள வழியில்லா சூழல்... உலக முதலாளிகளுக்கோ தேவை இந்தியா என்ற பெரிய சந்தை...அதற்குகந்த உலகமயமாக்கலை அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்பு சில அரசியல் கொலைகள், ஒரு இடிப்பு, க்ட்டற்ற அடக்குமுறைக்கு மக்களை பயிற்றுவிக்க தோதான சூழல், ...காட் ஒப்பந்தத்தில் கையெழுத்தின ஒரு துரோக ஆட்சியாளர்களுக்கு வேறு எப்படிப்பட்ட தருணம் அமையும். அதன்பிறகுதான் கொடியன்குளம் வந்தது. அதன்பிறகுதான் கண்டதேவி வந்தது. ஏன் இன்றைய உத்தபுரமும் வந்தது...

இட ஒதுக்கீடு இருக்கின்ற சாதி அமைப்பில் என்ன மாற்றத்தை கொண்டு வரும். சில பிற்பட்ட தலித் மக்களது வாழ்வில் வரும் மாற்றம் மட்டுமே தீர்வா...சமூக அந்தஸ்தில் ஒரு ஏழை பிராமணனை விட ஒரு கலக்டர் தலித் இன்னும் பெரியவர் என ஆக முடியாததுதான் இதற்கு உதாரணம். எனவே தற்போதைய சாதியமைப்பை உடைக்காமல் அதற்குள் சிறிது வடிவமைப்பு செய்து தரப்படும் முடிவுதான் இட ஒதுக்கீடு. பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பெண்ணுக்கு அதாவது தலித் பிற்பட்ட மக்களுக்கு...தரப்படும் நட்ட ஈடு தான் இட ஒதுக்கீடு. இதற்காக போராட வேண்டுமா அல்லது பாலியல் வல்லுறவு நிகழ்வதைத் தடுக்கும் சமூக சூழலை உருவாக்க வேண்டுமா

இம்மாதிரியான பார்வை மட்டுமே ஒடுக்கப்பட்ட அனைத்து பிரிவினரையும் விடுவிக்கும். தலித் களை தேவர் மற்றும் வன்னியர்களிடமிருந்தும், தேவர் மற்றும் வன்னியர்களை பாப்பாரப் புத்தியிலுருந்தும்...
மற்றவர்கள் இட ஒதுக்கீட்டை ஆதிக்க சாதிகளுக்கு ஆதரிப்பது ஒரு வகையில் அவர்களது பார்ப்பன புத்தியை விமர்சனம் செய்து மாற்றாமல் அப்படியே ஏற்பதுதான்....ஏற்கனவே பாப்பான் அமெரிக்கா ஓடிப்போக அவங்க எல்லாருக்கும் வாய்ப்பிருக்கு.... தேவரும் வன்னியரும் சேர்ந்து தமிழகத்துல 2016 ல ஒருவேளை ஆட்சி அமைத்தால் அவர்கள் காட்டும் சாதிவெறியை பஞ்சமர்களூக்கு எதிரான சூத்திர ஆதிக்கம் எனப் பார்க்கும் வரை காத்திருக்க போகின்றீர்களா

ராணுவம் ஏன் திரும்பியது என்பதை போறுத்த வரை அந்த இலங்கை சூழலையும் நமது ஆளும் வர்க்க நலனான இனிமேல் இலங்கையில் தொழில் நடத்த வழியை அடைக்காமல் இருக்கவே ராணுவம் புலிகள் ம்ற்றும் பிரேமதாசா போன்றோரின் எதிர்ப்பிற்கிணங்க திரும்ப பெறப் ப்ட்டது.

பார்ப்பனிய அமைப்பின் மீது மண்டல் எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. சிறுவர்களுக்கு பேருந்து பயணம் கூட பெரும் அதிர்வு போலத்தான படுகின்றது அதற்காக அதனைப் பெரியவர்களுக்கும் போருத்த முடியுமா?

எல்லாம் சரி....இத்தனை காலம் அரசியலில் இருந்து ஒரு அறிவுஜீவி ஆக இருந்துள்ளீர்கள். பார்ப்பனீய எதிர்ப்பை கைவிட்டு விட்டது இந்த அமைப்பு என்றீர்களே..... ஒரு சந்தேகம் நிலபிரபுத்துவம் என்றால் பார்ப்பனீயம் என்ன... இந்தியாவில் இரண்டும் வேறு வேறு என்றா நினைக்கின்றீர்க்ள். பிற்போக்கில் பார்ப்பனீயம் மட்டும் நம்மை அழிப்பதாகச் சொன்னால் உங்களைப் போன்ற பார்ப்பனர்களை ம்ட்டுமே எதிர்ப்பவர்களை மொத்த சமூக விடுதலைக்காகவும் சிந்திக்க வைக்க வேண்டுமென்றால் நிலவுடமை ஒழிய வேண்டும். தமிழர் பண்பாடு, கலாச்சாரம், பெண்ணடிமைத்தனம், கற்பு எனச்சிதறும் இந்த நிலவுடமை சிந்தனை சைவ வேளாளர்களிடம் இருந்தால் மட்டும் ஆதரிக்கவா முடியும். அதனை முறியடிக்கு அதன் எதிரிகள் யார் என்படை வரையறுக்க ஒரு கட்சி அறிவித்த கருத்து அது. அதெல்லாம இருக்கட்டும்...

விபி சிங் ன் சஞ்சய் காந்தி நட்பை மிசா ஆதரவை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்......1984 ல் ராஜீவ் ன் நம்பிக்கைக்குரிய நண்பர்களாக திடீர் அவதாரமெடுத்த அருண் நேரு, ஆரிப் முகமது கான், விபி சிங், மணிசங்கர் அய்யர், தவாண், சிந்தயா என ஒரு கூட்டமே நின்றதே விபி சிங் கூடவா சொல்லக்கூடாது மக்களை ஆள அவர்களைப் பற்றி எந்த அறிவும் இல்லாத ஒரு கோமாளிக்கு உரிமை இல்லையென்று சொல்ல எப்படி சொல்ல முடியும்....மிசாவில் இந்தியா வல்லரசாக முடியாததற்கு காரணம் மக்கள் தொகைதான என் முடிவு செய்து இந்திய பிற்பட்ட தலித் மற்றும பழங்குடியின மக்களை குறிப்பாக ஆண்களை அவசர அவசரமா வாசக்டமி செய்ய வைத்து பலரை வாழ்நாள் முழுவதும் உடல் உழைப்பில் ஈடுபட முடியாமல் செய்த சஞ்சய் காந்தியைக் கண்டிக்க துப்பில்லா இந்த ராஜாவுக்கு ஒரு மைனாரிட்டி கவர்ண்மெண்டின் தனித்தன்மையைப் பாதுகாக்க கிடைத்த சில ரோமாண்டிக் அதிர்வுகள்தான் அதுவும் சினிமாத்தனமானதுதான் என் முடிவு செய்தால் அதில் என்ன தவறு.

sundar
2009-02-16 11:35:00
sundar96@yahoo.com

இட ஒதுக்கீடு செய்யுங்கள், அதே நேரம் மற்றவருக்கு பாதிப்பு இல்லாமல் இட ஒதுக்கீடு செய்யுங்கள்.

பிற சாதியினர் முன்னேற வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பமும்! அதற்கு முதலில் அதிக இடங்களையும், கல்லூரிக்ளையும் உண்டாக்க வேண்டும்! ஒவ்வொரு மாநிலத்திலும் 3 IIT , IIM ஆரம்பித்து விட்டு இட ஒதுக்கீடு செய்தால் எங்களுக்கு பாதிப்பு, ஆட்சேபம் இல்லை! யாரையும் ஏத்திப் பிழைக்க வேண்டும், சவாரி செய்ய வேண்டும், பொதுப் பணத்தைக் கொள்ளை அடித்து வாழ வேண்டும் என்பது எங்கள் எண்ணம் இல்லை!

எல்லா சாதிக்காரனுக்கும் நில, புலம் இருக்கிறது அல்லது வருமானம் வரும் தொழில் இருக்கிறது!தொழில் செய்யும் வாய்ப்பு இருந்தது. பார்ப்பானை வூருக்கே எடுத்துக் காட்டாக வாழ வேண்டும், பண ஆசை இல்லாமல் வாழ வேண்டும் என்று கூறி தெருவிலே பிச்சை எடுக்க விட்டார்கள். வெறும் உயர் சாதி அந்தஸ்தை மட்டும் வைத்துக் கொண்டு, சோற்றுக்கும், துணீக்கும் பிட்சை எடுக்கும் இழிவான நிலைதான் பார்ப்பானுக்கு இருந்தது! ஆங்கிலேயன் காலத்தில் அரசாங்கத்தில் தபால், ரயில்வே என்று புதிய துறைகளில் வேலை வாய்ப்பு கிடைத்த போது, அதை உபயோகித்து கொண்டான்- சோற்றுக்கு, துணீக்கு வழி கிடைத்தது- இதில் என்ன தவறு?


இவர்களின் சமூக நீதி என்ன? பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் ஒரு கலெக்டரின் மகனாக இருந்தாலும் அவர் காரிலே போய் கான்வென்டிலே படித்தாலும் , மாலை நேரத்திலே பிரைவேட் டியூஷன் வைத்து படித்தாலும், அவர் அப்போதும் பிற்படுத்தப் பட்டவர்தானா? அதுவும் கல்லூரி பீஸ் (fees) இலவசம். ஹாஸ்டல் இலவசம். சாப்பாடு இலவசம். பிற்படுத்தப் பட்டவர்க்கு பாதி பீஸ் இலவசம்! பொதுப் பிரிவு மாணவனுக்கு- அவன் அப்பா ஹோட்டலில் சர்வராக இருந்தாலும் முழுப் பீஸ் பணத்தையும் கட்ட வேண்டும். இதுவா சமூக நீதி?

பிராமணர்கள்தான் சாதியை உருவாக்கினார்கள் என்பதற்க்கு என்ன ஆதாரம்?

பிராமணர்களுக்கு உயர் சாதி அந்தஸ்து கொடுத்தது மற்றவர்கள்தானே!

எண்ணிக்கையில் குறைந்த, உடல் வலிவு குறைந்த ஒரு பிரிவினர் தங்களைத் தாங்களே உயர்ந்த சாதி என்று அறிவித்துக் கொண்டால் மற்றவர் எப்படி ஒத்துக் கொண்டார்கள்?

அதுவும் அரசர்கள் எல்லோரும் தமிழர்கள், படைத் தளபதிகள்,அமைச்சர்கள் , வியாபாரிகள், விவசாயப் பெருங்குடியினர் எல்லோரும் தமிழர்கள். மிகப் பழமையான மொழி, மிக நீண்ட வரலாறு, ஆட்சி, வீரம், நிர்வாகம், பண்பாடு, சிறந்த அறிவு, நாகரீகம் உடைய தமிழ் சமுதாயத்தை வெளியில் இருந்து வந்த பிரிவினர் "நாங்கள் உயர்ந்த சாதி" என்று எப்படி கூறியிருக்க முடியும்? அதைக் கேட்டுக் கொண்டூ அறிவும், வீரமும் உடைய தமிழ் சமுதாயம் சும்மா இருந்திருக்குமா? எனவே மற்ற பிரிவீனரைப் போல தமிழ் பிராமணர்களும் தமிழ் சமுதாயத்தின் பூர்வ கூடி மக்கள் ஆகத்தான் இருந்திருக்க முடியும்!

கண்ணகி அம்மாள் மதுரையை எரிக்க "தீ" க்கு ஆணையிடும் போது, " பார்ப்பனர், பெண்டிர், குழவிகள், முதியோர் பசு இவர்றை விட்டு விடும்" படி கூறியது ஏன்?

இந்தியாவில் சாதி வரலாற்றை எடுத்துப் பார்த்தால், பல பரிணாமங்கள் கிடைக்கும்! வரூநாசிரம முறையால், அதிகம் பாதிப்புக்கு உள்ளானது யார் என்று பார்த்தால், கண்டிப்பாக தலித்கள் தான்! அதே வரூநாசிரம முறையால், அதிகம் பலன் அடைந்தது யார் என்று பார்த்தால், மேல் எழுந்தவாரியாகப் பார்த்தால் பார்ப்பான் என்று தோன்றும். நன்கு ஆராய்ந்தால் பார்ப்பனரை விட வைசியரும், சத்திரியர்களும் அதிக பயன் அடைந்துள்ளது புரியும்! ஏன் என்றால் விவசாயம், கூலி வேலை செய்ய எதிர்ப்பு காட்ட முடியாத வேலை ஆட்கள் வைஷ்யருக்கும், சத்திரியருக்கும் தேவைப் பட்டது! அதற்கு இந்த சாதி முறை அவர்களுக்கு உதவியாக இருந்தது! இன்னும் சொல்லப் போனால், வர்ணாசிரம முறையால் பார்ப்பணர்கள் கஷ்டப் பட்டார்கள் என்பதே உண்மை! ப்ரோகிதம் செய்வதையும், பிட்சை எடுத்து வாழ்வதையும் தவிர வேறு வாழ்க்கை முறை பார்ப்பணர்களுக்கு மறுக்கப் பட்டது என்பதே உண்மை!

தமிழ் நாட்டில் எத்தனை சாதிகள்- செட்டியார் வகுப்பை எடுத்துக் கொண்டால், நாட்டுக் கோட்டைச் செட்டி, நகரத்துச் செட்டி, கோமுட்டி செட்டி... இப்ப்டி எத்தனை பிரிவுகள். ஆச்சாரி வகுப்பில் மர வேலை ஆச்சாரி, பொன் வேலை ஆச்சாரி என்று எத்தனை பிரிவுகள்? இதை எல்லாம் வேதத்தில் சொல்லி, பார்ப்பான் வந்து பிரித்து வைத்தானா? அவரவர் செய்யும் தொழில் , வசிக்கும் இடம் இதற்கேற்ப்ப சாதிப் பிரிவினையை உருவாக்கி விட்டு, பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பதை தான் இது காட்டுகிறது.


எல்லோருக்கும் திறமை இருக்கிறது, சாதி வித்யாசம் தொழில் அடிப்படையில் உருவானது , அது மறைய வேண்டும், என்றுதான் விரும்புகிறோம்.

இட ஒதுக்கீடு செய்யுங்கள், அதே நேரம் மற்றவருக்கு பாதிப்பு இல்லாமல் இட ஒதுக்கீடு செய்யுங்கள்.



Dr. V. Pandian
2009-02-16 08:25:00
porkkaiponds@yahoo.co.in

கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப்பட்ட நிலம் ஒரு வெப்ப நிலம். அந்த நிலத்திலே மாநிரம் முதல் கருத்த நிரம் வரைதான் மக்களின் நிரம். வெள்ளைத்தோல் பார்ப்பான் குளிர் பிரதேசத்திலிருந்து இங்கு வந்தேறியவன்.

வளமான மன்னில் தோன்றிய தமிழின் இயல்பிலேயே தயாள குணமும், மனித நேயமும் உடையவனாக இருந்தான். இவனுக்கு சூழ்ச்சி தெரியாது. இவனது ரத்தம் நல்ல ரத்தம்.

பனிப்பிரதேசத்திலிருந்து வந்த ஆரியன், அங்குள்ள பற்றாக்குறைகளால், மனதளவிலும் பற்றாக்குறை உடையவனாகவே இருந்தான். அவன் பிழைப்பிற்கு சூழ்ச்சி தேவைப்பட்டது.

இங்கு வந்தேறிய வெள்ளை ஆரியரைப் பார்த்த தமிழன், தனது அறியாமையால் அவனிடம் மறியாதை கொண்டான். சூழ்ச்சி கொண்ட ஆரியன் அதை நன்கு பயன்படுத்திக் கொண்டான்.

ஆரியன் என்று இம்மண்ணிலே அடி எடுத்து வைத்தானோ அன்று பிடித்தது 'தருத்திரம்'. நம்மை சரண்டி வாழும் இவன் தான் நமது வீழ்ச்சிக்கு காரணகர்த்தா.

இலங்கையில் பேரின தாக்குதலை தடுக்க ஆயுதமேந்தியவனை, இந்த பார்ப்பனக் கசடுகள் பாசிஸ்டுகள் என்று அழைப்பதைப் பாருங்கள்!

இவர்கள் இந்தியர்களின் பகைவர்கள். தமிழனின் 'ஜென்ம விரோதிகள்'. இவர்களிடம் நேர்மையை எக்காலத்திலும் எதிர்பார்க்க முடியாது!

சங்க கால அந்தணர்களும், பார்ப்பனர்களும் தமிழர்களே! இரண்டு தலைமுறைகளை உருவாக்கியபின், முதிர்ந்த குடும்பத்தலைவர்கள் பலர், ஊர் ஊராகச் சென்று நூல்களைப் பார்த்து, படித்து பொது மக்களிடம் விளக்குவார்கள். நூல்களைப் பார்ப்பதால் (பார்த்து சொல்வதால்) அவர்கள் பார்ப்பனர் எனப்பட்டனர். அவர்களே, நேர்மையாய் இருந்ததனால் அந்தணர் எனப்பட்டனர்.

தமிழ் முதியோர் செய்த இந்த உடலுழைப்பு குறைவான தொழிலை, தனது சூழ்ச்சியால் ஆரியர் கவர்ந்து கொண்டனர். ஆக, கண்ணகி சொன்ன பார்ப்பனர் இவர்கள் அல்ல. பல்லவர் காலத்திற்கு பிறகு தான் ஆரியரின் செல்வாக்கு கணிசமாக வளர்ந்தது. அது பிற்காலச் சோழர் காலத்தில் தழைத்தது.

பார்ப்பான் சொல்லை ஒரு போதும் நம்பாதே! அவன் நமது ரத்தம் சிறிது சிறிதாக குடிப்பவன். ஈழத்தில் அவன் தமிழனின் ரத்தத்தை பேரல், பேரலாக குடிக்கிறான்.

ஈழ யுத்தத்தை நடத்துபவன் இந்தியப் பார்ப்பனன் தான்! ஈழ யுத்தம் திராவிட, ஆரிய யுத்தம் தான்!! இது இரண்டாவது ராமாயணம் தான்!!!

mani
2009-02-17 12:29:00
fmvasanthy@gmail.com

நண்பர் சுந்தர் மற்றவர்களுக்கு பாதிப்பு வராமல் இட ஒதுக்கீடு என்பதை புரிய முடியவில்லை. மற்றவர்கள் பலரைப் பாதித்ததால்தான் இன்றைக்கு இட ஒதுக்கீடு நட்ட ஈட்டை தப்பு செய்தவன் கணக்கிலிருந்துதான் எடுக்க வேண்டும். அதுதானே நீதி

ஒரு ஓட்டபந்தயத்தில் நோஞ்சானையும் பயிற்சி பெற்றவனையும் ஒன்றாக ஓட விட முடியாதுதானே... அதற்கு நோஞ்சானுக்கு கொஞ்சம் உணவு தந்தால் இது தீர்வு இல்லை என்றாலும் ஏன் நீங்கள் எதிர்க்கின்றீர்கள். இடத்தை அதிகரிப்பதால் உங்களுக்கு தேவையான இடங்கள் கிடைக்கும். ஆனால் படிக்க வழியில்லாத குப்பனுக்கும் சுப்பனுக்கும் உயர்கல்வி என்பது கொம்புத் தேன்தானே...அதனை மாற்ற வேண்டுமா அல்லது இடத்தை அதிகரித்து போகாத ஊருக்கு அவனுக்கு வழி சொல்ல வேண்டுமா இதில் உங்களது சாதிய நலனை மட்டுமே பார்க்கும் குறுகிய மனோபாவம்தான் தெரிகின்றது.

பாப்பானுக்கு நிலம் இருந்தாலும் உடல் உழைப்பு செய்ய மாட்டான். ஏன் என்றால் உழவுத்தொழிலை பாப்பான் செய்தால் அடுத்த பிறவியில் பன்றியாக பிறப்பான் என மனு எழுதி வைத்து விட்டான்.
ஊருக்கு உதாரணமாக வாழ்ந்த பாப்பான் ஒருவனையாவது காட்டுங்கள் பார்க்கலாம்.
2500 ஆண்டுகளாக மன்னர்களை அண்டிப் பிழைத்து சூத்திரனைக் கூட மன்னனாக்க யாகம் என்ற மோசடியை உருவாக்கி அதனை தனது அங்கீகாரத்துடன் நடத்தி அரசனது மூளையாக, அமைச்சனாக இருந்து வந்த பார்ப்பன கூட்டம் வெள்ளையன் வந்தவுடன் மெக்காலே ன் கள்ளக் குழந்தையாக வடிவெடுத்தது. மெக்காலேக்கு முன் ஈஸட் இண்டியன் கம்பெனியில் கூட அவாள் ஆதிக்கமே மிகுந்திருந்தது. சோத்துகக்கும் துணிக்கும் வக்கில்லாமல் பார்ப்பான் இருந்தது அரிது. மற்றவர்களோ கூட்டம் கூட்டமாக இப்படிததான் இருந்தனர்.

ஓற்றைப் பார்ப்பானுக்கு பிச்சை இட்டால் தரித்திரியம் என்ற மூடநம்பிக்கையை வைத்து ஒரு கூட்டமாக வந்து சூத்திர வீட்டு தானியங்களைக் கொள்ளையிட்டதுதான் பார்ப்பன சாமர்த்தியம். இதனை சூத்திர பஞ்சமர்கள் செய்ய முடியுமா ? முடிந்தாலும் உயர்ந்த விழுமியங்களோடு வாழும் அம்மக்கள் அதனைச் செய்வார்களா

பிற்பட்ட சாதி கலக்டர் காரில் வந்தாலும் தனது பெண்ணை அவருகக்கு திருமணம் செய்து வைக்க மறுக்கும் பார்ப்பன ஹோட்டல் சர்வரின் பிடிவாதத்தை இயல்பாக மாற்றும் சூழல் உருவாகும் வரை இருவரும் சமம் இல்லைதானே அதற்காகத்தானே அவனுக்கு அந்த பார்ப்பனர் பெண் தர மறுக்கிறார்.

பிராமணர்கள்தான் சாதிக்கு சாசுவத வடிவம் கொடுத்தவர்கள். இன்ன இன்ன தவறான வழிமுறைகளில் பிறந்தவர்கள் இன்ன சாதிக்காரர்கள் என தொழில் அடிப்படையில் பிரித்தது மனுநீதி.

வலிமையாக இருப்பவர்கள் தோற்க மாட்டார்கள் என்பது ஒரு குழந்தைத் தனமான முடிவு. அப்படி என்றால் அடிமைகள் எங்குமே தோன்றியிருகக்க மாட்டார்கள். ஒரு ஆண்டான்தான் சில கைக்கூலி அடிமைகளை உருவாக்கி பல லட்சம் அடிமைகளை ஆள முடிந்தது. இது பல நூறு ஆண்டுகள் நீடித்தது. அதனை மாற்ற ஒரு ஸ்பார்ட்டகஸ் தேவைப்பட்டான்.

பார்ப்பனர்கள் மட்டுமே இதில் பயனடைந்தவர்கள் இல்லை. மன்னர்களான சத்திரிய, வியாபாரிகளான வைசிய, தளபதி போர்வீரரான சூத்திர என்ற இந்த வருண அமைப்பை காப்பாற்ற மன்னனையும் கல்வியையும் கையில் எடுத்துக் கொண்டு எழுத்து வடிவத்தில் கல்வியை மக்களுக்கு அறிமுகம் செய்யாமல் பரம்பரை உரிமை போல பிள்ளைகளின் பிள்ளைகள் வழியாக தனிக்குடும்ப சொத்தாக அறிவு என்ற பெயரில் ஐந்து பைசாவுக்கு கூட பெறுமானமில்லாத வேதத்தை உபநிடத்தை கல்விக்கான அந்தஸ்தை அளித்த மோசடி வேலை செய்து மக்களை மட்டுமல்ல மன்னர்களையும் ஏமாற்றிய கடவுளின் மைந்தர்கள் அதாவது பிரம்மாவின் பிள்ளைகள் என தங்களை சமூகத்தில் ஏற்றுக் கொள்ள வைத்தவர்கள்.

இந்த வருண அமைப்பு நீடிப்பதால் தலித் பாதிப்பு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் இது உடைவதால் வைசிய சத்ரிய சாதிகளுக்கு சிறிய இழப்பு உண்டுதான். ஆனால் பார்ப்பனர்களுடைய வாழ்வே இந்த அமைப்பு தொடர்ந்து நிலவுவதால் மட்டுமே சாத்தியம். சாதி முதலில் திராவிட சமூகத்தில் இருந்தாலும் அதற்கு ஒரு கடவுளின் மதத்தின் அங்கீகாரம் தந்தவர்கள் பார்ப்பனர்களே
எனவே பழி உங்கள் மீதும் பாவம் மற்றவர்கள் மீதுமதானே விழுந்துள்ளது.

கவிதை கிறுக்கன்
2009-02-17 02:03:00
kirrkku@hotmail.com

மறைந்த இந்திய பிரதமர் வி.பி.சிங் குறித்து, "புதிய ஜனநாயகம்" எழுதி மகிழ்ந்தது கண்டு பதற வேண்டாம். அவர்கள் நிலைபாடு என்பது எப்போதும் இப்படித்தான். சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பது போல, சுவர் கண்ட இடமெல்லாம் புரட்சி என எழுதிப்போட்டு விட்டு தலைமறைவாகிப் போவார்கள். மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பார்த்து , போலி கம்யூனிஸ்ட் என்பார்கள். விடுங்க பாஸ். . . எப்பவுமே இவங்க இப்படித்தான். . . நமக்கு புதுசா? மக்கள் அபிமானம் பெற முடியாமலேயே மக்கள் புரட்சி நடத்தப்போவதாக பினாத்தும் இவர்களுக்கு , புரட்சியும் தெரியாது: புடலங்காவும் தெரியாது. மெனக்கெட்டு போய் ஐயா, விடுதலை ராசேந்திரன் தாவு தீர ஏன் மெனக்கெடவேண்டும் எனக்கேட்கிறேன்.

chithra lekha
2009-02-17 04:13:00
chithralekha.p@gmail.com

VR sir
Apart form these discussions, I ve a doubt.
Who are the OBCs now? Are they Yadhava, Nadar or thevar alone? Pillai, Takoor, Marathi and all dominant castes are coming under obc except bramin. As time goes on, I think like SV Sekar's claim they also ll come under OBC. Under such a circumstance, u r all barking for reservation for OBCs and V.P. Singh.
For your information, my guide hails from Nadar community. When OBC reservation was impelmented three years before, he was talking against it. In tamil nadu, most of the OBCs think only SCs are enjoying the benefits of reservation. Is it true?

Now u r blaming PALA for criticing VPS. But when OBC reservation was implemented in central universities and AIIMS they wrote about it favourably and the article exposing the bramin and dominant caste students' mentality towards reservation were published in PuJA. Now I ve a doubt. Whether u were deaf and blind at that time?

Then coming to the discussions about reservation!
U may have come in such a postion because of reservation. But just turn back and self critisize. What r the contributiuons of u OBCs to the society? Now u r all organising for Ezha thamizhar. R u ever organised against an opression against Dalit by Thevar or other OBCs like this? Whether reservation brought social conscious to common OBCs? How many caste organisations of OBCs in Tamil Nadu fought for reservation or even to talk in favour of reservarion Except Tika and communists?

For common man these are all dog fighting. Just understand that.

SUNDAR
2009-02-17 12:24:00
sundar96@gmail.com

நண்பர் மணி, நீங்கள் கூறியது "மற்றவர்களுக்கு பாதிப்பு வராமல் இட ஒதுக்கீடு என்பதை புரிய முடியவில்லை.மற்றவர்கள் பலரைப் பாதித்ததால்தான் இன்றைக்கு இட ஒதுக்கீடு நட்ட ஈட்டை தப்பு செய்தவன் கணக்கிலிருந்துதான் எடுக்க வேண்டும். அதுதானே நீதி"

அதிக இடங்களை உருவாக்கினால், அதிக உயர் தொழில் நுட்ப கல்விக் கூடங்களைத் திறந்தால், பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கும் அதிக இடங்கள் கிடைக்கும், எல்லோரும் படிக்கலாம்.


படிக்க ஆர்வம் உள்ள ஒருவன், படிப்பதில் முனைப்பு காட்டி , கடும் உழைப்பை வெளியிட தயாராக உள்ள ஒருவனுக்கு படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும் என்று செயல்படுவது எந்த நீதியிலும் சரி அல்ல.

பிராமணர்கள் மற்றவர்களை தடுத்தனர் என்று கூறுவது உண்மையே அல்ல. உதாரணமாக தபால், தந்தி துறையில் பனி நியமனங்கள், பள்ளி இறுதித் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே. பிற்படுத்தப் பட்ட பிரிவை சார்ந்தவர் பார்ப்பனரை விட ஒரு மதிப்பெண் அதிகம் இருந்தாலும், அவருக்குத் தான் வேலை அளிக்கப்பட்டேயாக வேண்டும். யாரும் , யாருக்கும் சலுகை அளிக்க முடியாது.வங்கிகளில் தேர்வுகள் கணினி முறையிலே

எனக்கு ஒரு இட ஒதுக்கீடும் வேணாம், எல்லோருக்கும் குடுப்பது போல எனக்கு 2 ஏக்கர் இலவச நிலம் குடுநண்பர் மணி, நீங்கள் கூறியது "மற்றவர்களுக்கு பாதிப்பு வராமல் இட ஒதுக்கீடு என்பதை புரிய முடியவில்லை.மற்றவர்கள் பலரைப் பாதித்ததால்தான் இன்றைக்கு இட ஒதுக்கீடு நட்ட ஈட்டை தப்பு செய்தவன் கணக்கிலிருந்துதான் எடுக்க வேண்டும். அதுதானே நீதி"

அதிக இடங்களை உருவாக்கினால், அதிக உயர் தொழில் நுட்ப்ப கல்விக் கூடங்களைத் திறந்தால், பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கும் அதிக இடங்கள் கிடைக்கும், எல்லோரும் படிக்கலாம்.


படிக்க ஆர்வம் உள்ள ஒருவன், படிப்பதில் முனைப்பு காட்டி , கடும் உழைப்பை வெளியிட தயாராக உள்ள ஒருவனுக்கு படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும் என்று செயல்படுவது எந்த நீதியிலும் சரி அல்ல.

பிராமணர்கள் மற்றவர்களை தடுத்தனர் என்று கூறுவது உண்மையே அல்ல. உதாரணமாக தபால், தந்தி துறையில் பனி நியமனங்கள், பள்ளி இறுதித் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே. பிற்படுத்தப் பட்ட பிரிவை சார்ந்தவர் பார்ப்பனரை விட ஒரு மதிப்பெண் அதிகம் இருந்தாலும், அவருக்குத் தான் வேலை அளிக்கப்பட்டேயாக வேண்டும். யாரும் , யாருக்கும் சலுகை அளிக்க முடியாது.வங்கிகளில் தேர்வுகள் கணினி முறையிலே திருத்த‌ப் ப‌ட்டு ம‌திப்பென் வ‌ழ‌ங்க‌ப் ப‌டுகிற்து!

"பாப்பானுக்கு நிலம் இருந்தாலும் உடல் உழைப்பு செய்ய மாட்டான். ஏன் என்றால் உழவுத்தொழிலை பாப்பான் செய்தால் அடுத்த பிறவியில் பன்றியாக பிறப்பான் என மனு எழுதி வைத்து விட்டான். "

என்ன‌வொ இந்த‌ புரொகித‌ம் செய்யும் தொழில், பார்ப்ப‌ன‌ர்க‌ள் வீரும்பி எடுத்துக் கொன்ட‌து போல‌ பெசுகிறீர்க‌ள். சென்னையில் உள்ளா தொழில் சாலையில் வெலை செய்யும் ப‌ல‌ பிராம‌ண‌ர்க‌ளைக் காட்ட‌ முடியும். க‌டை நிலை க‌லாசி வேலையில் ப‌ல‌ர் உள்ள‌ன‌ர். டில்லியில் ரிக்ஷா இலுப்ப‌வ‌ர்க‌ளில் 40% உத்த‌ர‌ பிர‌தெச‌ பிராம‌ண‌ர்க‌ள்.
உட‌ல் உலைப்புக்கு பிராம‌ண‌ர் த‌ய‌ங்குவ‌தில்லை. நீங்க‌ள் உய‌ர் த‌ட்டு வ‌ச‌தியான‌ பிராம‌ன‌ர்களிட‌ம் ம‌ட்டும் ப‌ழகீ ஊள்ளீர்க‌ளோ என்றே நினைக்கிரேன்.

உட‌ல் உழைத்து பிழைப்ப‌தெ சிற‌ந்த‌ வ‌ழி. புரொகித‌ம் செய்ப‌வ‌ர் வீட்டில் ம‌ணி அரிசி இல்லை என்றால் , அப்பொது கூட உழைத்து பிழைக்க‌ பார்ப‌ன‌ருக்கு அனும‌தி அளிக்க‌ப்ப‌ட‌வில்லை.


எனக்கு ஒரு இட ஒதுக்கீடும் வேணாம், எல்லோருக்கும் குடுப்பது போல எனக்கு 2 ஏக்கர் இலவச நிலம் குடுங்க. நான் பயிர் செய்து பிழைத்துக் கொள்கிறேன்!

mani
2009-02-19 02:35:00
fmvasanthy@gmail.com

நண்பர் சுந்தர் ... இடங்களை அதிகரிக்க வேண்டுமா... இது மேல்சாதிகளின் கனவு... ஆனால் தலித், பழங்குடியினருக்கான அரசுப் பொறியல் கல்லூரி இடங்கள் கூட கடந்த ஆண்டு தமிழகத்தில் அண்ணா பல்கலையில் நிரம்பவில்லையே அது ஏன் ?

ஒரு வேளை மக்கள் தொகையில் அவர்கள் குறைந்து விட்டார்களா? இடம் அதிகரிப்பால் அவர்களுக்கு என்ன பயன்?

மேல்சாதியில் பிறந்தவனுக்கு அப்பன், பாட்டன் எல்லாம் படித்தவர்களாக இருந்தும் நல்ல மதிப்பெண் வாங்க முடியாவிடில் அவனுக்கு அறிவு குறைவுதான் காரணம். தாய தந்தை படிக்காத வீட்டில உள்ள தலித் பிள்ளை எடுக்கும் கொஞ்சம் மதிப்பெண்ணே உயர்ந்ததுதான்.

எல்லோரும் படிக்க வேண்டும் அதற்கான கல்லூரிச் சூழல் இரண்டாம் பட்சம்தான்...சமூகச் சூழல்தான் முதல்பட்சம்.

பார்ப்பனர்கள் மற்றவர்களுக்கு கல்வியை மறுத்தது வரலாறு. அதனை இன்று நடக்கும் ஓஎம்ஆர் ஷீட் வேல்யூவேஷனோடு போட்டு குழப்பிக் கொள்ள கூடாது.

உடல் உழைப்பு செய்யக்கூடாது எனச் சொன்னது மனுநீதி. அதுதான் சாதிகளையும் வரையறை செய்கின்றது. மற்றபடி உடல் உழைப்பிற்கு தயாராக உள்ள தங்களது மனநிலை குறித்து மகிழ்ச்சி அடைகின்றேன்.

முக்காலமும் உணர்ந்த முனிவன்
2009-02-24 02:39:00
prognosticsage@gmail.com

http://yekalaivan.blogspot.com/2009/02/blog-post_24.html

விடுதலை ராசேந்திரனிடமிருந்து இன்னும் ‘விடுதலை’யாகாத காழ்புணர்ச்சி!.....

/////‘காக்கை குயிலாகாது; பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்து மதவெறியர்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அக்கட்டுரை, வி.பி.சிங்கைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது. குஜராத் மோடி அளவில் வி.பி.சிங்கைக் கொண்டு வந்து நிறுத்தி, "குற்ற"ப் பட்டியல்களை அடுக்கியிருக்கிறது. பச்சைப் பார்ப்பனியப் பார்வையில் வெளிவந்திருக்கும் அக்கட்டுரை 'துக்ளக் சோ', 'சு.சாமி' கும்பலை நிச்சயமாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கும். 'பொதுவுடைமை கட்சிகளில் மீண்டும் தமது குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது' என்று "அவாள்"கள் கருதினால், அதில் தவறு இல்லை என்பதே நமது கருத்து./////

மேற்கண்ட வரிகளை மீண்டும் ஒருமுறை நிதானமாக வாசித்துப் பாருங்களேன். இது பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், புதிய ஜனநாயகத்துக்கு எதிராக கட்டியெழுப்பியுள்ள மணற்கோபுரம்!

“பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்து மதவெறியர்களுக்கு அனுசரனையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்” என்கிற குற்றச்சாட்டை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கும் விமர்சனம், எப்படி பார்ப்பனியத்தைக் குளிர்விக்கும்? பார்ப்பன-இந்துவெறியர்களை ஆதரித்தவன் என்று ஒருவனைக் குற்றம் சாட்டினால், பார்ப்பனியவாதிகளுக்கு நம்மீது ஆத்திரம் வருமா, வராதா; என்பதை நீங்களே (வேறாருமல்ல இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள்தான்) சொல்லுங்கள். ஆனால், இப்போது ஆத்திரம் விடுதலை ராசேந்திரனுக்கு வருகிறதே, அது ஏன்? இதனை அடிப்படையாகக் கொண்டு, பார்ப்பன-இந்துவெறியர்களை எதிர்த்து எழுதப்பட்டிருப்பதை அவதூறு செய்வதனால், விடுதலை ராசேந்திரனுக்கு பார்ப்பன ஆதரவு கண்ணோட்டம் இருப்பதாக நாமும் சொல்லலாமா? இல்லையா? ஆனால், அப்படியெல்லாம் நாம் சொல்லவில்லை. அது சரியான மதிப்பீடும் அல்ல என்பது விடுதலை ராசேந்திரனுக்குத் தெரியாது; நமக்குத்தான் தெரியும்.

பிறகு ஏன், பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் ‘புடம்போடப்பட்ட(!)’ விடுதலை ராசேந்திரன் இவ்வாறு எழுத வேண்டும், என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

’சமூக நீதி’க் காவலராக திராவிடக் கட்சிகளாலும் போலி கம்யூனிஸ்டுகளாலும் ’தலித்’ அரசியல் பேசுபவர்களாலும் போற்றப்படும் வி.பி.சிங்கின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் “காக்கை குயிலாகாது...” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தது. அக்கட்டுரை வி.பி.சிங்கிற்கு எதிராக வைத்திருக்கும் கேள்விகளில் சிலவற்றை இங்கே (தேவை கருதி) பட்டியலிடுகிறேன்.

1. சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்த வி.பி.சிங்கை இடஒதுக்கீட்டுக்காக மட்டும் தூக்கி வைத்துக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? ஜெயலலிதா, பார்ப்பன பயங்கரவாதி சங்கராச்சாரியைத் துணிவோடு கைது செய்ததை வைத்து அவரைப் "பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி' என்று கொண்டாட முடியுமா?

2. காங்கிரசில் இருந்தபோது அவசரநிலை பாசிச ஆட்சியை அவர் தீவிரமாக ஆதரித்ததையோ, அவருடைய குருநாதர் சஞ்சய்காந்தி காட்டுமிராண்டித்தனமாக முசுலிம்கள் மீது பாய்ந்து குதறியபோது அதனை அவர் கண்டும் காணாமல் இருந்ததையோ, மனித உரிமை பேச காஷ்மீர் வரை போகும் அ.மார்க்ஸ் ஏன் கண்டுகொள்வதில்லை?

3. அவசரநிலைப் பாசிச ஆட்சிக் காலத்தில் தி.மு.க. பிரமுகர்கள் சிறையில் அடைக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்ட போதிலும், வி.பி.சிங்கின் அவசரநிலை ஆதரவை தி.மு.க. ஏன் விமர்சிப்பதில்லை?

4. 1980இல் இவர் உ.பி. முதல்வராக இருந்தபோதுதான், உ.பி. அரசின் ஆயுதப்படை போலீசு மொராதாபாத் முசுலிம்களை இனப்படுகொலை செய்து, இந்தியாவின் மதக்கலவர வரலாற்றில் புதுப்பரிணாமத்தை உருவாக்கியது. இவரின் ஆட்சியில்தான் ஆதிக்க சாதிப் பண்ணையார்களின் சட்டவிரோத ஆயுதப்படைகள் தாழ்த்தப்பட்டோர் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தன. ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும் "நிலைமை விரைவில் சரிசெய்யப்படும்' என்ற வெற்று அறிக்கையைத் தவிர, இவர் செய்தது எதுவுமில்லை. கான்பூருக்கு அருகேயுள்ள தஸ்தம்பூர் தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, 1982இல் இவர் பதவி விலகவேண்டி வந்தது. 1984 சீக்கியப் படுகொலைக்காக 1989இல் மன்னிப்புக் கேட்ட வி.பி.சிங், தனது ஆட்சியில் கொலையுண்ட முஸ்லிம்களுக்காகவோ, தாழ்த்தப்பட்டோருக்காகவோ மன்னிப்பு எதையும் கேட்டதில்லை என்பது தொல்.திருமாவுக்கோ, தமிழக முசுலீம் முன்னேற்றக் கழகத்திற்கோ தெரியாதா?

இன்னும் ஏராளமான, உறுதியான தருக்கங்களுடன் புதிய ஜனநாயகத்தின் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. (நேரமிருப்பவர்கள் மேற்கண்ட சுட்டியை அழுத்தி படித்துக் கொள்ளலாம்) இக்கட்டுரைக்கு மறுப்பு என்கிற பெயரில் ”வி.பி.சிங்கை இழிவுபடுத்தும் புதிய ஜனநாயகம்” என்கிற தலைப்பில் ‘பார்ப்பனவாதி’ என்று எமது தோழர்களை வசைபாடியிருக்கிறார், விடுதலை ராசேந்திரன். ஆனால், அவருடைய அந்த நீண்ட பதிவினூடாக மேற்கண்ட கேள்விகளுக்கு நேரடியான பதில்கள் ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

மேற்கண்ட பு.ஜ. கேள்விகளுக்கு [வி.பி.சிங்கின் பொது வாழ்க்கை காங்கிரஸ் அரசியலில் முடங்கிக் கிடந்தபோது, காங்கிரஸ் இழைத்த தவறுகளையெல்லாம் பட்டியலிட்டு அதை வி.பி.சிங் மீது சுமத்தி, அவற்றையெல்லாம் எதிர்த்தாரா என்று 'புதிய ஜனநாயகம்' கேள்வி எழுப்புவது - அதன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறதே தவிர, நேர்மையான சமூகப் பார்வையை அல்ல. காங்கிரஸ் அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்காமல், அதன் சுயரூபத்தை அறிந்து வெளியேறி - காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தொடங்கியதுதான் வி.பி.சிங்கின் சிறப்பு.] என்கிற வரிகளைத்தான் தனது அதிகபட்ச பதிலாகத் தந்திருக்கிறார்.

இடஒதுக்கீட்டையும், அதனைச் சாதித்தார் என்று வி.பி.சிங்கையும், ‘காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் அதனால் அவர்தான் தேசத் தந்தை’ என்று சொல்வதைப் போல உருவகப்படுத்தி முட்டுக்கொடுத்து நிறுத்தப் படாதபாடுபட்டிருக்கிறார். அதன் பொருட்டு தான் பு.ஜ.வுக்கு பார்ப்பன பட்டம் சூட்டி, அகமகிழ்ச்சி கொள்ள முயன்றிருக்கிறார் பாவம்!

பார்ப்பன-வருணாசிரம படிநிலைகளில், பார்ப்பனன், சத்திரியன், வைசியன் ஆகிய வருணத்தாருக்கு சேவை செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்தனர் சூத்திர, பஞ்சம, சண்டாள வருணங்களைச் சார்ந்த உழைக்கும் மக்கள். அந்த உழைக்கும் மக்களை சட்ட நிருவாகத்தின் மூலம் மிரட்டிப் பணியவைத்து, உழைப்பையும் உடமைகளையும் சுரண்டிக் கொடுத்து பார்ப்பன சேவையாற்றியதைத் தவிர வேறொன்றும் செய்யாத பிறவருணத்தவர்களை இடஒதுக்கீட்டின் மூலம் சூத்திரர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்றுத்தந்ததுதான் இவர்கள் வழிபடும் நீதிகட்சி முதல் வி.பி.சிங் வரையிலான ‘சமூக நீதி’ அரசுகளின் சாதனையாக இருக்கிறது. அதேநேரத்தில் வெகுசில பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் இதன்மூலமாக சலுகைகளைப்(உரிமைகளை) பெற்றிருந்தாலும், இதனைச் சாதனையாக ஏற்கமுடியாது, இவை வெறும் சீர்திருத்தம் மட்டுமே. இந்த சீர்திருத்தத்தால் சமூகத்தில் ஒடுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு எந்த விடிவும் ஏற்படவில்லை. இதனாலேயே இவர்கள் முன்னிறுத்தும் இடஒதுக்கீட்டுக் கொள்கை ஏற்கத்தக்கதாக இல்லை என்பது பு.ஜ.வின் அழுத்தமான நிலைப்பாடு. இதனை, இடஒதுக்கீடு – ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை என்கிற சிறு வெளியீட்டின் மூலம் ஏற்கெனவே நேரடியாகப் பதிவு செய்திருக்கிறது புதிய ஜனநாயகம்.

ஆயிரமாண்டுகளாக நமது சமூகத்தை, உழைக்கும் மக்களை இழிவுபடுத்திய பார்பன கும்பலுக்கும், அவர்களின் எடுபிடிகளாக, அடியாளாக இருந்து கொண்டு நம்மக்களை அடிமை படுத்திவந்த ஆதிக்கசாதிக் கூட்டத்திற்கும் இடையில் நடைபெற்றுவரும் இந்த ‘இட ஒதுக்கீடு’ குறித்த குழாயடி சண்டையில் புரட்சிகர அமைப்புகளுக்கு என்ன வேலை இருக்க முடியும்? ஆளூம் வர்க்கச் சேவையாற்றுவதற்கு நடக்கின்ற போட்டா போட்டியில், இந்த மோசடியான ஆளும்வர்க்கத்தை துடைத்தெறிவதற்கு போராடும் புரட்சிகர அரசியல் இவ்விருகூட்டத்தையும் முற்றாக அழிப்பதைத்தான் முன்னிறுத்த முடியும். முன்னிறுத்துவோம்; இதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை.

இடஒதுக்கீட்டையும் அதனூடாக வி.பி.சிங்கையும் மேன்மை படுத்தி எழுதியிருக்கும் விடுதலை ராசேந்திரன், புரட்சிகர அமைப்புகளின், இடஒதுக்கீடு குறித்த மேற்கண்ட நிலைப்பாடுகளை குறைந்த பட்ச அறிவு நாணயத்தோடு பரிசீலித்திருக்கிறாரா என்கிற ஐயத்தையே அவரது பதிவு ஏற்படுத்துகிறது. இடஒதுக்கீட்டை எதிர்ப்பது நமது நோக்கமல்ல என்று தெளிவாக, அழுத்தமாக புதிய ஜனநாயகம் தெரிவித்திருக்கிறது. அதனை ஆதரிப்பதில் உள்ள பிரச்சினைகளையும் தொகுத்தளித்திருக்கிறது. அதன் மீதான விடுதலை ராசேந்திரனின் கருத்துக்கள் எதையும் நான் படித்ததில்லை. அவ்வாறு எதேனும் அவர் இதற்கு முன்னதாக எழுதியிருப்பாரேயானல் எனக்கு யாராவது அறியத்தாருங்கள்.


இந்த மோசடியான ஆளும்வர்க்கத்தை சுக்கு நூறாகப் பிளப்பதன் பொருட்டு வேலை செய்துவரும் புரட்சியாளர்கள், அதே ஆளும் வர்க்கத்தின் ஆகப்பெரும்பான்மையான கேடுகளுக்கும் துணை நின்ற, ஆளுவர்க்கப் பிரதிநிதியாகவே வாழ்ந்து மறைந்த வி.பி.சிங்கை மண்டல் பரிந்துரை என்கிற ஒன்றைக் கொண்டு ஒருபோதும் புனிதப்படுத்த முடியாது. போபர்ஸ் பீரங்கி ஊழல் என்றும் மண்டல் கமிசனென்றும் வி.பி.சிங் கூச்சலிட்டது ஓட்டுப் பொறுக்குவதற்காக மட்டும்தான். இதனால் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு சிறு துரும்பளவேனும் பலனில்லை என்பது தெளிவாகத் தெரியும் போது அதற்காதரவாக குரல் கொடுப்பது முற்றிலும் பலனற்றது.

////////ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் - வி.பி.சிங் - புரட்சிகர மார்க்சிய லெனினியக் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல. ம.க.இ.க.வின் தத்துவார்த்தப் பார்வையில் கூற வேண்டுமானால், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியலில் இருந்த ஒருவரே, அந்த அரசியலுக்குள் அதிர்வுகளை நிகழ்த்தியவர் என்பதுதான். அந்த அதிர்வுகளின் தாக்கத்தைக் கவனத்தில் கொள்ளாமல் ஏற்கனவே இருந்த 'சமூக நிலையைக் குலைத்து விட்டாரே' என்று புலம்பும் பார்ப்பனியக் குரலோடு தன்னையும் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தன் பங்கிற்கான 'சேற்றை' பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு வி.பி.சிங் மீது வீசுவது பார்ப்பனிய சார்புப் பார்வை அல்லவா? //////////

இங்கே நான் குறிப்பிட்டுள்ள புதியஜனநாயகத்தின் இடஒதுக்கீடு மீதான மதிப்பீடுகளை அறவே புறக்கனித்து, திருவாளர் ராசேந்திரன் ‘’ஏற்கெனவே இருந்த சமூக நிலையைக் குலைத்துவிட்டாரே...” என்று புதிய ஜனநாயகம் புலம்புவதாக எழுதியிருக்கிறார். ஏற்கெனவே இருந்த, இப்போது இருக்கின்ற சமூக நிலைமைகளை அடியோடு புரட்டிப் போடுவதுதான் புதிய ஜனநாயகத்தின் அரசியல் என்பது விடுதலையாருக்குத் தெரியாது போலும்! சொல்வது அவதூறாக இருந்தாலும் கொஞ்சமாவது பொருந்தச் சொல்ல வேண்டாமா?

அடுத்து, ம.க.இ.க.வின் திட்டத்தில் பார்ப்பன எதிர்ப்பு கைவிடப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளதுதான் இது அவதூறுப் பதிவு என்பதற்கான ஒரு சோற்றுப் பதம். ”இந்து எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு போன்ற பல்வேறு சூழல்களில் களப்பணிகளில் இணைந்திருக்கிறோம்....” என்பதாக இக்கட்டுரையினைத் தொடங்கியுள்ள விடுதலையார்தான், ம.க.இ.க. பார்ப்பன எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டதாகவும் திரிக்கிறார். இதில் எது உண்மை அய்யா?!

இவர் குறிப்பிட்டுள்ள 1998ஆம் ஆண்டிற்குப் பிறகு மட்டும் ம.க.இ.க. மேற்கொண்ட பார்ப்பன எதிர்ப்பு போராட்டங்களை மொத்தமாக இருட்டடிப்பு செய்வதாக இருக்கிறது இவரது இந்த கருத்து. 2003 –ல் தான் ”பார்ப்பனிய, மறுகாலணிய பண்பாட்டுப் படையெடுப்பிற்கு எதிரான போராட்டமாக”, பார்ப்பனிய பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

இவர் மேற்குறிப்பிட்டுள்ள காலகட்டத்திற்குப் பிறகுதான் தில்லைப் போராட்டத்தினை ஆறுமுக சாமியைக் கொண்டு தொடங்கி இன்றுவரை அதே வேகத்தோடும் வீச்சோடும் நடத்திக் கொண்டிருக்கிறது. பார்ப்பன எதிர்ப்பு போராட்டங்களில் ம.க.இ.க.வின் செயல்பாடுகள் குறித்து தமிழக மக்களுக்குத் தெரியும், உங்கள் கட்சியிலுள்ள கீழ்மட்ட அணிகளுக்கும் நன்றாகவே தெரியும், பாவம் உங்களுக்குத்தான் தகவல் ஏதும் வரவில்லை போலும்!

///////"இன்றைய நிலையில் இந்திய மக்கள் மீது மூன்று மலைகள் - அமெரிக்கத் தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், நிலப் பிரவுத்துவம் ஆகியவை அழுந்திக் கொண்டிருக்கின்றன. இம் மூன்றும் தான் முக்கியமாக இந்திய மக்களின் எதிரிகளாகும்" - (ம.க.இ.க.வின் கட்சித் திட்டம்-1998). - என்று 1998 இல் திட்டத்தை வகுத்துவிட்டார்கள். //////

ம.க.இ.க. குறிப்பிட்டுள்ள அந்த மூன்று மலைகள், பொருளாதார ரீதியில் தேசத்தைச் அடிமைப்படுத்தி, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரங்களையும் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறது. அந்த சுரண்டல் வாத ஆளும் வர்க்கத்துக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் சேவை செய்யும் அமைப்பாகத்தான் பார்ப்பன பயங்கரவாதம் திகழ்கிறது, என்பதையும் பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராகவும், மறுகாலணியத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் கூர்மை படுத்தப்படவேண்டும் என்ற ம.க.இ.க.வின் அறைகூவலெல்லாம் விடுதலையாரின் செவிகளை எட்டவில்லை போலும்!

ம.க.இ.க.வின் திட்டத்தை சுருக்கி, வெட்டி ‘தேவைக்கேற்ற வகையில்’ பயன்படுத்துகின்ற விடுதலையாரின் பார்வையில் நிறைந்திருக்கும் காழ்புணர்ச்சிக்கு என்ன பெயர் சூட்டியழைக்கலாம்? இவரது பார்ப்பன எதிர்ப்பை, ம.க.இ.க., பு.ஜ., மீதான அவதூறுகளை பாராட்டுபவனைக் கொண்டு பார்த்தாலே இவரது கருத்துக்களின் தரம் எளிதாகப் புரியும். இவரது கட்டுரையினை அட்சரம் பிசகாமல் தனது தளத்தில் பதிவிட்டு, நன்றியையும் பொங்கி வழியவிட்டிருக்கிறான், சிபிஎம் கட்சியின் செல்வப்பெருமாள்.

வி.பி.சிங்கை பு.ஜ. விமர்சித்திருப்பது பார்ப்பனர்களைக் குளிர்வித்திருக்கிறது, என்று உருவகப்படுத்தும் விடுதலை ராசேந்திரனுக்கு ஒரேயொரு கேள்வி. உங்களுடைய இந்த கூற்று, பார்ப்பனியத்தில் கேவலம் பூநூலைக் கூட இழக்க மனமின்றி உழலும் சி.பி.எம். யோக்கியர்களைக் குளிர்வித்திருக்கிறதே, இதற்குப் பெயர்தான் பார்ப்பன எதிர்ப்பா? உங்களின் கட்டுரை பு.ஜ.வை சிறுமைபடுத்தவில்லை, மாறாக அதனை சி.பி.எம். ஆதரிப்பதுதான் உங்களைக் கடுமையாகச் சிறுமை படுத்தியிருக்கிறது. உங்களை நோக்கி வரும் பாராட்டுக்களே உங்களுக்கு எதிர்வினையாக மாறியிருக்கிறது. இதையாவது கொஞ்சம் பகுத்தறிவு கண் கொண்டு பாருங்களேன்!

தோழமையுடன்,

ஏகலைவன்.

முக்காலமும் உணர்ந்த முனிவன்
2009-02-24 02:46:00
prognosticsage@gmail.com

//இந்திய மக்களின் அடிப்படை எதிரிகளாக பார்ப்பனர், பார்ப்பனியச் சக்திகள் இல்லை என்பதை கட்சித் திட்டமாக வைத்துக் கொண்டு, அதே பார்வையில் வி.பி.சிங் பற்றிய விமர்சனத்தையும் முன் வைத்துக் கொண்டு ம.க.இ.க. செயல்படுவது நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பவே செய்கிறது.//

விடுதலை ராசேந்திரனின் இந்த பொய்யை என்ன சொல்லுவது. இந்தளவுக்கு இவர் தரம் தாழ்ந்து செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. மிகவும் மானக் கேடான விசயம்.

தமிழ்ப்பிரியன்
2009-02-28 03:24:00
thamizhpriyann@yahoo.co.in



ஏற்கனவே தமிழ்தேச பொதுவுடைமை இயக்கம் இடஒதுக்கீடு குறித்து "ம.க.இ.க.வின் மறைமுக பார்ப்பனீயம்" என்ற ஒரு சிறு பிரசுரத்தை வாங்கிப் படியுங்கள். அதில் இவர்களது பார்ப்னீயத் தலைமை எப்படியெல்லாம் திருகுவேலை செய்து சீர்குலைவாதம் செய்கிறது என்பதை அம்பலப்படுத்தியிருப்பார்கள். மறுபுறம் தமிழகத்தில் தமிழ் இனவாத உணர்வில் மறைமுகமாக குளிர் காய்ந்துக் கொண்டிருக்கும் இந்த குள்ளநரிகள். இடஒதுக்கீடு பேசும் போது வர்க்கம் என்று பேசி மழுப்புவார்கள். ஆனால் இனம் என்று வரும்போது வர்க்கம் காணாமல் போகும். மொத்தத்தில் தமிழகத்திற்குள்ளேயே குண்டுச் சட்டையில் குதிரை ஓட்டும் இந்தக் கும்பல் தமிழ் மக்களின் உண்மையான எதிரி என்பதை அடையாளம் காணவேண்டியுள்ளது. அதைவிட கொடுமை இந்த பார்ப்பனீய சீர்குலைவுவாதிகளுக்கு தங்களது கட்சி பெயரை சொல்லுவது என்றால் பெரும் அலர்ஜீதான். அதனால்தான் இவர்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த பதிலையும் விடுதலை ராஜேந்திரனுக்கு தரவில்லை. புரட்சி எல்லாம் வெறும் வாயில் ஏமாற்றுவதற்குதான். புரட்சி புயல் பற்றி மட்டும் வாயே திறக்க மாட்டார்கள் இந்த வாய்புரட்சியாளர்கள்

ஏகலைவன்.
2009-02-28 11:16:00
yekalaivan@gmail.com

///////////ஏற்கனவே தமிழ்தேச பொதுவுடைமை இயக்கம் இடஒதுக்கீடு குறித்து "ம.க.இ.க.வின் மறைமுக பார்ப்பனீயம்" என்ற ஒரு சிறு பிரசுரத்தை வாங்கிப் படியுங்கள். அதில் இவர்களது பார்ப்னீயத் தலைமை எப்படியெல்லாம் திருகுவேலை செய்து சீர்குலைவாதம் செய்கிறது என்பதை அம்பலப்படுத்தியிருப்பார்கள். மறுபுறம் தமிழகத்தில் தமிழ் இனவாத உணர்வில் மறைமுகமாக குளிர் காய்ந்துக் கொண்டிருக்கும் இந்த குள்ளநரிகள். இடஒதுக்கீடு பேசும் போது வர்க்கம் என்று பேசி மழுப்புவார்கள். ஆனால் இனம் என்று வரும்போது வர்க்கம் காணாமல் போகும். மொத்தத்தில் தமிழகத்திற்குள்ளேயே குண்டுச் சட்டையில் குதிரை ஓட்டும் இந்தக் கும்பல் தமிழ் மக்களின் உண்மையான எதிரி என்பதை அடையாளம் காணவேண்டியுள்ளது. அதைவிட கொடுமை இந்த பார்ப்பனீய சீர்குலைவுவாதிகளுக்கு தங்களது கட்சி பெயரை சொல்லுவது என்றால் பெரும் அலர்ஜீதான். அதனால்தான் இவர்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த பதிலையும் விடுதலை ராஜேந்திரனுக்கு தரவில்லை. புரட்சி எல்லாம் வெறும் வாயில் ஏமாற்றுவதற்குதான். புரட்சி புயல் பற்றி மட்டும் வாயே திறக்க மாட்டார்கள் இந்த வாய்புரட்சியாளர்கள்/////////////

அய்யா தமிழ்ப்பிரியன் அவர்களே!

உங்கள் தமிழ்த்தேச பொதுவுடைமை இயக்கம் தில்லைப் பார்ப்பனர்களுடன் கொண்டிருந்த இனக்கத்தையெல்லாம் அம்பலப்படுத்தி எழுதியாகிவிட்டது. நீங்கள் வெளியிட்ட சிறு பிரசுரத்தை சுக்குநூறாக்கும் விதமான பல்வேறு எதிர்வினைகளையும் பதிந்தாகிவிட்டது. ஆளும்வர்க்கத்துக்கு சேவை செய்வதற்காகவே பார்ப்பன எதிர்ப்பை மட்டும் பேசிக்கொண்டு, பார்ப்பனீயத்தை அட்டியின்றி கடைபிடித்துவரும் ஆதிக்கவெறி சாதி இந்துக்களுக்காக வேலை செய்யும் நீங்கள்தான், ’பார்ப்பன ஆதரவு திருகுவேலை’ பார்த்துவருகிறீர்கள்.

இனவாத உணர்வில் குளிர்காயவேண்டிய அவசியம் புரட்சிகர அமைப்புகளுக்கு இல்லை. ஒடுக்கப்படுகின்ற இனமாக தமிழினம் இருக்கும் பட்சத்தில், ஏகாதிபத்தியமும், இந்திய பார்ப்பனீய மேலாதிக்க அரசும், சிங்கள பேரினவாதத்தோடு கைகோர்த்துக் கொண்டு ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கும்போது புரட்சிகர அமைப்புகள் வேறெப்படி பேசவேண்டும்? ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள், பார்ப்பனிய-இந்து எதிர்ப்பாளர்கள் இப்படித்தான் பேசவேண்டும். இது குளிர்காய்வதுஅல்ல.

ராஜீவுக்கு தண்டனை கொடுக்கப்பட்டபோது “ராஜீவ் ஒருமுறையல்ல நான்கு முறை கொல்லப்படவேண்டியவன்” என்று கூட்டம்போட்டு பேசியது ம.க.இ.க.தான். அவ்வேளையில் த.தே.பொ.க. உள்ளிட்ட உங்களைப் போன்ற தேசியவாதிகள் எங்கே சென்று ’குளிர்காய்ந்து’கொண்டிருந்தீர்கள் என்பதைக் கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும். பிரபாகரனின் ரசிகர்களுக்கு வர்க்கம் குறித்த பார்வை எப்படி இருக்கும் என்பதற்கு இதோ உங்களது இந்தப் புலம்பல் ஒரு உதாரணம்.

யார் ‘தமிழ் மக்களின் உண்மையான எதிரி?’. கொத்துக்கொத்தாக ஈழத் தமிழ் மக்களைக் கொண்று குவித்துக் கொண்டிருக்கும் சிங்கள-இந்திய பாசிச ஆட்சியாளர்களையும், அவர்களுக்கு துணைநிற்கும் இந்திய ஓட்டுப் பொறுக்கிகளையும் சமரசமின்றி அம்பலப்படுத்தாமல், ராஜபக்சே எதிப்பையும் புலியாதரவையும் ஏதோ மிகப்பெரிய தீர்வினைப் போல் ‘முழங்கி’வரும் தேசியவாதிகள்தான் ‘தமிழ் மக்களின் உண்மையான எதிரி’.

விடுதலை ராசேந்திரனின் கட்டுரைக்கான என்னுடைய சிறியதொரு எதிர்வினை இங்கே பதியப்பட்டுள்ளது. அதைப் படிப்பதற்குக் கூட உங்களுக்கு நேரமில்லாத அவசரம்போலும். அவதூறுகளை அள்ளிவீச ஆத்திரத்துடன் கிளம்பிவருகிறீர்கள். ம.க.இ.க.வைத்திருக்கும் தருக்கரீதியான முரன்பாடுகளைப் பொருட்படுத்த கையாலாகாத நிலையில் சும்மா ‘பார்ப்பனத் தலைமை’ என்று கூச்சல் போடுவதில் நீங்கள்தான் மீண்டும் மீண்டும் அம்பலமாகிறீர்கள். இன்னும் இரண்டு பக்கத்துக்கு நீட்டி முழக்கி வசைபாடிக்கொள்ளுங்கள், பார்ப்பன பட்டங்களை அள்ளி வீசிக்கொள்ளுங்கள் ஆனால் யோக்கியமாக பதிலென்று ஒற்றை வார்த்தையையாவது பதியுங்கள். அதுவரை நீங்கள் எங்கள் மீது சுமத்தியிருக்கிற குற்றம் வெறும் அவதூறாக மட்டுமே காட்சியளிக்கும்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

செங்கொடி
2009-03-01 01:26:00
senkodithamizhan@gmail.com

பல முறை தெளிவுபடுத்தப்பட்டபின்பும் "இடஒதுக்கீட்டுக் கொள்கையில் அக் கட்சியின் தெளிவான நிலைப்பாட்டை நாம் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்" என்பது ஏமாற்று வேலை.
கட்டுரை எழுப்பியிருக்கும் கேள்விக்கு உங்களின் பதில் என்ன?
"வி.பி.சிங் - புரட்சிகர மார்க்சிய லெனினியக் கட்சியின் உறுப்பினர் அல்ல"
இப்படி கூறிவிட்டால் எல்லம் சரியாகி விடுமா?
பார்ப்பனீயர்கள் எதிர்க்கிறார்கள் என்பதால் நாம் ஆதரிக்க வேண்டும் என்பதும், இருவரும் எதிர்க்கிறார்கள் எனவே இருவரின் நிலைப்பாடும் ஒன்று என்பதும் ஆழமில்லாத பார்வையின் வெளிப்பாடுகள்

மீண்டும் ஒரு முறை புஜவின் கட்டுரையையும் உங்களின் கட்டுரையையும் படித்துப்பாருங்கள். எது விமர்சனம்? எது அவதூறு? என்கிற வேறுபாடு உங்களுக்கு புறியவரும்.

தோழமையுடன்
செங்கொடி

புரச்சி
2009-03-06 02:46:00
purachi1107@gmail.com

பிரான்ஸைச் சேர்ந்த பெரியாரிய தோழி தமிழச்சி, விடுதலை ராசேந்திரன் அவர்களின் எதிர்வினை கட்டுரையையும், புதிய ஜனநாயகம் கட்டுரையையும் படித்துப் பார்த்து தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். விடுதலை ராசேந்திரனின் பொறுப்பற்ற அந்த கட்டுரையை அவர் விமர்சித்துள்ளார். அவரது கட்டுரை.

கொள்கையில் தடுமாறுகின்றோமா தோழர்களே!
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1021

Thursday, 05 March 2009 18:12 தமிழச்சி


கடந்த நவம்பர் 27-ஆம் தேதியில் மரணம் அடைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் குறித்து அமைக்கப்பட்ட "புனித பிம்ப எழுத்துக்கள்" தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அவருக்கு "சமூகநீதிக் காவலர்", "பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காகப் பதவியை இழந்தவர்" என்ற கற்பிதம் இருக்கின்றது. இந்நிலையிலேயே, புதிய ஜனநாயகத்தில் "காக்கை குயிலாகாது" என்ற தலைப்பில் மாற்று விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், பெரியார் முழக்கத்தில் தோழர் விடுதலை இராசேந்திரன், "வி.பி.சிங்கை இழிவுபடுத்தும் புதிய ஜனநாயகம்" என்ற தலைப்பில் கடுமையான எதிர்வினை செய்திருக்கிறார். "பச்சைப் பார்ப்பனியப் பார்வை" இது என களப்பணிகளில் ஒன்றிணைந்து செயல்படும் தோழமை அமைப்பான ம.க.இ.க. வை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. "வி.பி.சிங் அவர்களை, குற்றவாளி கூண்டில் நிறுத்தியிருக்கிறது ம.க.இ.க." என்கிறார் தோழர் விடுதலை இராசேந்திரன்.

இதன் மூலம் சகதோழர்களை "பச்சைப் பார்ப்பனியத்தின் அடிதாங்கி"களாக குற்றவாளிகளாக்க முற்பட்டது குற்றமில்லையா? சோ- சு.சாமி- ஜெ-க்களுக்கு இக்கட்டுரை மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்கிறவர் தங்கள் சகதோழமை அமைப்பை "பச்சைப் பார்ப்பனியப் பார்வை" என்று விளித்துக் கூறும் போதும் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதையும் தோழர் விடுதலை இராசேந்திரன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தந்தை பெரியாரை மறுஆய்வுக்கு உட்படுத்துவதற்கு எவ்வளவு உரிமை பகுத்தறியும் மனிதர்களுக்கு இருக்கின்றதோ அதே உரிமை முன்னால் பிரதமர் வி.பி.சிங் அவர்களையும் மறுஆய்வுக்குட்படுத்த உரிமை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது நமது மாற்றுக் கருத்துக்களை எதிர்வினையாக்க வேண்டுமே தவிர மறுஆய்வு செய்வதே தவறு என்கிற வாதத்தை நாம் கடுமையாக ஆட்சேபிக்கிறோம். இவை நம் கொள்கைக்கு எதிரானது என்பதை உணர்ந்து கொள்வோம்.

மேலும் சக தோழமை அமைப்பை "பச்சைப்பார்ப்பனிய பார்வை" என்று தோழர் விடுதலை இராஜேந்திரன் கூறியது கண்டிக்கப்பட்டத்தவை என்பதற்காகவும், வி.பி.சிங்கை இழிவுபடுத்தும் புதிய ஜனநாயகம் என்னும் கட்டுரையில் பல இடங்களில் நடுநிலை தவறி கருத்துச் சருக்கல் இருப்பது நம் பகுத்தறிவு கொள்கைக்கு முரணானது என்பதாலும், நாளை நம் கொள்கை, கோட்பாடுகள், செயல்பாடுகள் தடம்மாற ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஓர் அமைப்பின் நம்பகத் தன்மையை வீழ்த்திவிடுவதற்கு காரணமாக இருந்துவிடக் கூடாது என்ற பதற்றத்தாலும், நாம் நம்மை ´சுயவிமர்சனம்´ செய்துக் கொள்ள, சகதோழர்களின் எதிர்வினையை ஒரு வாய்ப்பாக உபயோகித்துக் கொள்ளுவோம் என்பதற்காகவே எழுத முற்படுகிறோம்.
"காங்கிரஸ் அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்காமல், அதன் சுயரூபத்தை அறிந்து வெளியேறி - காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தொடங்கியதுதான் வி.பி.சிங்கின் சிறப்பு" என்பதை மட்டும் மையப்படுத்தி தோழர் விடுதலை இராசேந்திரன் வி.பிசிங் நடத்தையை கணிக்க முற்பட்டால் அது தவறாக கணிப்பில் முடியும் என்பதையே நாம் இங்கே சுட்டிக் காட்ட முற்படுகிறோம்.
ஒருமுறை தந்தை பெரியாரிடம் ஏன் காங்கிரசில் இருந்து வெளியேறினீர்கள் என்று கேட்ட பொழுது, "நான் ஏன் காங்கிரசில் இருந்து விலகினேன் என்பதைப்பற்றி எழுதும் முன், நான் ஏன் காங்கிரசில் சேர்ந்தேன் என்பதைப்பற்றி தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். அதற்கும் முன் எனது சரித்திரத்தையும் ஒரு சிறிது எடுத்துக் காட்டுவது அவசியமாகும்" என்றார். (ஆதாரம் : "தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை" என்னும் நூல். பக்கம் :1)
அதேப்போல், வி.பி.சிங் காங்கிரசில் சேரும் முன் என்ன செய்துக் கொண்டிருந்தார், எப்படி இருந்தார் என்பதையும், நாம் ஆய்வுக்குட்படுத்தி பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. எனவே, காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை மட்டும் வைத்து வி.பி.சிங் சிறப்புத் தன்மையை பேசுவதை நிறுத்துவோம்.
அடுத்தது பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டு ஆணையை பிறப்பித்தவர் என்னும் பெருமையை, புகழாரத்தை வேறு அமைப்புகளோ அரசியல்வாதிகளோ முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு அடைமொழிளாக்கி பாராட்டு பத்திரம் கொடுக்கலாம். பெரியாரியவாதிகளான நாம் அப்படி பேசலாமா? என்னும் வினா எம்முள் எழுகிறது.
அரசியல் என்பது சாக்கடை என்று ஒதுங்கிய சமூகவாதியான தந்தை பெரியார் ´ஓட்டுப்பொறுக்கிகள் அரசியல்வாதிகள்´ என்று விமர்சித்ததையும் மறந்துவிடக்கூடாது. வி.பி.சிங் அவர்களும் ஓர் அரசியல்வாதி என்பதையும், பிரதமர் பதவி என்பது இனாமாக கொடுப்பது இல்லையென்பதையும், அந்த உயர்ந்த பதவியை அடைய ´மகாத்மா´வாக இருந்தால் மட்டும் முடியாது என்பதையும் கவனத்திற்கொள்வோம்.
உலகம் முழுவதிலுமே அரசியல் என்றால் குளறுபடிதான் என்றாலும், நம் இந்திய அரசியல் அளவுக்கு அதிகமாகவே தங்களுக்கு தேவையான உரிமைகளை ஜனநாயகத்தின் பேரால் அனுபவிப்பவர்கள் என்பதையும் கவனத்திற்கொள்வோம் என்பதுடன் சகதோழமை அமைப்புக்களை விமர்சிக்கும் போது ஒன்றுக்கு பலமுறை நம் விமர்சனம் நடுநிலைமையானதா என்று சிந்தித்து எதிர்விணை செய்வோம்.
இக்கட்டுரைக்கு தொடர்புள்ள இணைப்புகள் :
விசுவநாத் பிரதாப் சிங் : காக்கை குயிலாகாது!
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4772:2009-01-08-20-51-14&catid=278:2009&Itemid=30
வி.பி. சிங்கை இழிவுபடுத்தும் ´புதிய ஜனநாயகம்´ விடுதலை இராசேந்திரன்
http://www.keetru.com/periyarmuzhakkam/feb09/vp_singh.phphttp://www.keetru.com/periyarmuzhakkam/feb09/vp_singh.php
தமிழச்சி
05/03/2009



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP