Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
பிப்ரவரி 2009

வெள்ளைக்காரன் பெத்துப்போட்ட...
பாடல்-பண் : தலித் சுப்பையா

பல்லவி :    வெள்ளைக்காரன் பெத்துப்போட்ட

   கள்ளப்பிள்ளை காங்கிரசு

   இத்தாலிப் பெண்மணியின்

   ஏவல் படையாய் மாறிப்போச்சு.

   அ.பல்லவி :    ஊருக்கு நாளுபேரு கணக்குங்க - சும்மா

பேருக்கு காங்கிரசு இருக்குங்க. (வெள்ளை)

சரணம் 1 :    காமராசர் செல்வாக்குல ஆண்டது - பிறகு

   கழுதை தேஞ்சு கட்டெறும்பா ஆனது

   குருடனுக்கு ராசபார்வை கிடைக்குமா - கை

   தமிழகத்தை ஆளும்கனவு பலிக்குமா (வெள்ளை)

சரணம் 2 :    அரசியலில் காங்கிரசு சாக்கடை - இரு

   கரைகளாக கழகங்கள் வெளிப்படை

   மாறி மாறி பிச்சைவாங்கி செயிக்குது - இதில்

   மான ஈனம் ஏதுமின்றி குரைக்குது! (வெள்ளை)

சரணம் 3 :    கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது - நம்

   கடல்மக்கள் உரிமைகளை பறிச்சது

   சிங்களப்படை மீனவரை கொல்லுது - இதை

   தடுத்துநிறுத்த துப்பில்லாமல் மழுப்புது (வெள்ளை)

சரணம் 4 :    அழிவுப்படை ஈழத்துக்கு போனது - அங்கு

   அடிபட்டு அசிங்கப்பட்டு மீண்டது

   எறிந்தபந்து எதிர்த்திசையை தாக்குமே - அதை

   தமிழகத்தில் நாமெல்லோரும் பார்த்தோமே. (வெள்ளை)

சரணம் 5 :    தமிழ்ஈழ விடுதலையைத் தடுக்குது - அதன்

   தலைவரையே கொன்றுவிடத் துடிக்குது

   இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்குது - தமிழரை

   இளிச்சவாயர் கூட்டமென்று நினைக்குது. (வெள்ளை)

சரணம் 6 :    புலிகளை அழித்துவிடத் துடிக்குது - அவர்தம்

   தடயமறிய ராடர்களை கொடுக்குது

   படையனுப்பி பயிற்சிதந்து அழிக்குது - மூன்று

   மலையாளிகள் பொறுப்பில்இது நடக்குது (வெள்ளை)

சரணம் 7 :    சட்டமன்றத் தீர்மானத்தை மதிச்சதா - அதை

   சலூன்கடை தாள்என்று நினைக்குதா

   மனிதச்சங்கிலி லட்சம்பேரு நடத்துனோம் - எந்தப்

   பலனுமின்றி தமிழினமே தவிக்கிறோம். (வெள்ளை)

சரணம் 8 :    பாகிஸ்தானை பிரித்துதந்தார் தாத்தனார்

   பங்களாதேசுக்கு காரணமே மாமியார்

   ஈழத்தமிழர் அழிப்பைசெய்தார் கணவரு - அந்த

   இரண்டகத்தை சோனியாவும் செய்கிறார். (வெள்ளை)

சரணம் 9 :    காங்கிரசை ஒழிக்கச்சொன்னார் பெரியாரு - அந்தக்

   கடனடைக்க களமாடுது தமிழ்நாடு

   தமிழ்ஈழம் மலரப்போவது நிச்சயம் - துரோகக்

   காங்கிரசை ஒழிப்பதே நம் லட்சியம் (வெள்ளை)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com