Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
டிசம்பர் 2008

கொள்கை ‘தர்மமும்’ கூட்டணி ‘தர்மமும்’

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை கலைஞர் அவசரமாக விலக்கிக் கொண்டு விட்டார். தி.மு.க. - பா.ம.க. உறவு ‘விரிசல்’ ஆனபோது பாய்ந்த சட்டம், உறவு சுமூகமான போது திரும்பப் பெறப்பட்டுவிட்டது. இந்த முடிவை நாம் எதிர்க்கவில்லை; ஆனாலும் ஒரு உண்மையைக் குறிப்பிட வேண்டும். திருவரங்கத்தில் பெரியார் சிலையை இந்து மக்கள் முன்னணியைச் சார்ந்த பார்ப்பன கைக்கூலிகள் உடைத்த போது - பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் சாதி ஆதிக்கம் நிறைந்த பார்ப்பன நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதற்காக வழக்கைச் சந்தித்து சிறை செல்லவும் தயாரானார்கள். ஆனால், கலைஞரோ பெரியார் திராவிடர் கழகத்தினர், பார்ப்பனர் பூணூலை அறுத்தது தேச விரோதச் செயல் என்று கூறி, 7 தோழர்களை தேசப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

பூணூல் அறுப்புக்கு உரிய பிரிவுகளில் வழக்குப் போடாமல் ‘பூணூலை’ தேசத்தோடு இணைத்தது கலைஞர் அரசு. தேசிய பாதுகாப்பு சட்ட போடப்பட்டதை எதிர்த்து திரும்பப் பெறுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கலைஞர் ஏற்கவில்லை. உயர்நீதி மன்றம் தான், நான்கு மாத சிறைவாசத்துக்குப் பிறகு, தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது தவறு என்று கூறி விடுதலை செய்தது.

கலைஞருக்கு கொள்கை தர்மத்தைவிட கூட்டணி தர்மம் தான் எப்போதும் மேலோங்கி நிற்கிறது. பொடா சட்டம் எப்படி விருப்பு வெறுப்புடன் பயன்படுத்தப் பட்டதோ, அதே போல் ‘தேசிய பாதுகாப்பு சட்டமும்’ விருப்பு வெறுப்புக்கு ஏற்பத் தான் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இவை சாட்சியங்கள்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com