Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puratchi Periyar Muzhakkam
டிசம்பர் 2006

டிசம்பர் 6: அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்

“அரசியல் சார்ந்த நமது மக்களாட்சித் தன்மையை, சமூகத் தளத்திற்கும் மாற்றியாக வேண்டும். அரசியல் ஜனநாயகத் திற்கு அடித்தளமாக சமூக ஜன நாயகம் விளங்க வேண்டும். அப்போதுதான் அரசியல் ஜன நாயகம் நிலைத்து நிற்கும். சமூக ஜனநாயகம் என்பதன் பொருள் என்ன?

சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை அங்கீகரிக்கும் வாழ்வியல் நெறியே சமூக ஜனநாயகம். சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவம் இவை மூன்றும் தனித் தனி அங்கமாகக் கருதப்படக் கூடாது. இவை மூன்றும் ஒன்றிணைந்து விளங்க வேண்டும். ஒன்றிருந்து மற்றொன்று இல்லையெனில், அது ஜனநாயகத் தன்மையின் நோக்கத்தையே அழித்து விடும்.

சுதந்திரத்தை சமத்துவத்திலிருந்து பிரிக்க முடியாது. சமத்துவத்தை சுதந்திரத்திலிருந்து பிரிக்க முடியாது. சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் - சகோதரத் துவத்திலிருந்து பிரிக்க முடியாது. சமத்துவமற்ற, சுதந்திரம் ஒரு சிலரின் ஆதிக்கத்திற்கே வழி வகுக்கும். சுதந்திரமற்ற சமத்துவம், தனி மனித முயற்சிகளைப் பாழடித்து விடும். சகோதரத்துவமற்ற சுதந்திரமும், சமத்துவமும் இயல்பான உறவை ஏற்படுத்தாது.

இந்திய சமுதாயத்தில் இரண்டு தன்மைகள் முழுவதுமாக இல்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

1. சமத்துவம், சமூகத் தளத்தில், இந்தியா படி நிலைப்படுத்தப்பட்ட - சமத்துவமற்ற சமுதாயமாகவே உள்ளது. இது ஒரு சிலரின் முன்னேற்றத்தையும், பலரின் வீழ்ச்சியையுமே வெளிப்படுத்துகின்றது. பொருளாதாரத் தளத்தில், ஒரு சிலர் மட்டுமே பெரும் செல்வத்துடன் வாழ்கின்றனர்; பலர் கடும் வறுமையால் வாழும் முரண்பாடு உள்ளது.”

25.11.49 அன்று அரசியல் நிர்ணய அவையின் இறுதிக் கூட்டத்தில் ஆற்றிய பேருரை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.