Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam

‘குலத் தொழிலை செய்யாவிடில் அபராதம்!
பார்ப்பனர்கள் மிரட்டல்

news ஒரிசா மாநிலத்திலிருந்து - ஒரு செய்தி வந்திருக்கிறது. முடிதிருத்தும் சமூகத்தில் பிறந்தவர்கள் உயர்சாதிக் காரர்களின் கால்களைக் கழுவ வேண்டுமாம். அப்படிப்பட்ட அடிமை வேலையைச் செய்ய மறுத்த அந்த சமூகத்தினருக்கு பார்ப்பனர்கள், ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளார்களாம். இந்த மனித உரிமைக்கு எதிரான வர்ணாஸ்ரம வெறிப் போக்கு ஒரிசாவில் பூரி மாவட்டத்தில் அமுலில் இருந்து வருகிறது. இன்னமும் உயர் சாதியினர் காலைக் கழுவும் அடிமை வேலையை செய்ய மாட்டோம் என்று இந்த சமூகத்தைச் சார்ந்த இளைஞர் கள் கொதித்தெழுந்தனர். இவர்கள், பூரி மாவட்டத்திலுள்ள பூபன்பட்டி என்னும் கிராமத்தைச் சார்ந்தவர்கள். தங்களது ‘குலத்தொழிலாக’ திணிக்கப்பட்ட சவரத் தொழிலை கைவிட்டு, வேறு சுயமரியாதையை தரக் கூடிய வேலைக்குச் செல்லத் துவங்கிவிட்டனர்.

கடந்த ஜூன் 12 ஆம் தேதி உயர்சாதி திருமணம் ஒன்றுக்கு வந்திருந்த விருந்தினர்கள் மற்றும் மணமகன் கால் களைக் கழுவுமாறு உயர்சாதியினர் உத்தரவிட்டபோது, இவர்கள் மறுத்து விட்டனர். வர்ணாஸ்ரமத்தை மீறுவ தால் ஆத்திரமடைந்த பார்ப்பனர்கள் அந்த சமூகத்தினருக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்ததோடு, ஊர்க் குளத் தில் குளிப்பதற்கும், அவர்களுக்கு தடை விதித்தனர். “எந்தத் தொழிலையும் செய்யும் உரிமை உண்டு. குலத் தொழிலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது” என்று மாவட்ட அரசு நிர்வாகம் கூறினாலும், சுயமரியாதைக்குப் போராடும் இந்த சவரத் தொழில் செய்யும் சமூகத்தினருக்கு, அரசு எந்த பாதுகாப்பும் தர முன் வரவில்லை. இதனால் அபராதம் விதித்த பார்ப்பனர்களைக் கண்டித்து ஆகஸ்டு 14 ஆம் தேதி முதல் பூரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன், இந்த சமூகத்தினர் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். புவனேசுவரத்தில், செய்தியாளர்களிடம், இத்தகவலை, மனித உரிமை அமைப்பைச்
சார்ந்த பனாம்பார்பட் நாய்க் தெரிவித்தார்.

பார்ப்பனரல்லாதார் சாதனை!

மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் திறந்த போட்டியில் இடம் பெற்றுள்ள மாணவர்களின் ‘கட்-ஆப்’ மதிப்பெண் 294 புள்ளி 83; பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் ‘கட் ஆப்’ 294 புள்ளி 59 (மதிப்பெண் வேறுபாடுகள் மிகக் குறைவாக இருப்பதையும், பிற்படுத்தப்பட்டோர், திறந்த போட்டி மாணவர்களிடம் நெருங்கிக் கொண்டிருப்பதையும் கவனிக்க வேண்டும்). மிக பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் ‘கட்-ஆப்’ 292 புள்ளி 50; தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்களின் ‘கட்-ஆப்’ 268; மேற்குறிப்பிட்ட பார்ப்பனரல்லாத மாணவர்கள் மொத்த இடங்களில் (1398) 95 புள்ளி 77 சதவீதத்தைக் கைப்பற்றியுள்ளனர். பார்ப்பனர் முன்னேறிய சாதியினருக்கு கிடைத்துள்ள இடங்கள் 4 புள்ளி 22 சதவீதம்! திறந்த போட்டியில் பார்ப்பனர்கள் கூறிவரும் ‘தகுதி திறமை’யின் அளவுகோல்களின்படி பார்ப்பனரல்லாத மாணவர்களிடம் அவர்களால் போட்டியிட முடியவில்லை என்பதையே இந்தப் புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன. பார்ப்பன ரல்லாத மாணவர்களுக்கு சமூக நீதி கதவுகள் திறந்து விடப்பட்டதால், இந்த சாதனைகளைப் படைத்து வருகிறார்கள்! இது பெரியார் போராடிப் பெற்ற சமூகநீதிக்குக் கிடைத்த வெற்றிக் கனிகள்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com