Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஏப்ரல் 2009

‘இந்து’ ராம் நடத்தும் ஏடு ஒப்புதல்
சிங்களப் படைக்கு உளவு சொல்வது, இந்தியா தான்!

தமிழ்நாட்டில் - இலங்கை அரசின் தமிழினப் படுகொலையை ஆதரிப்பதோடு, இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் நேரடி தொடர்பு கொண்டு, அவரின் ஊதுகுழலாகவும் இயங்கி வருகிறது, ‘இந்து’ நாளேடு. அந்த நாளேடு நடத்தும் மாதம் இருமுறை ஆங்கில ஏடு ‘பிரன்ட் லைன்’, இந்தியா இலங்கைக்கு செய்து வரும் ராணுவ உதவிகளை விவரித்துள்ளது:

“தனது சிறப்பு தூதரை டெல்லிக்கு அனுப்பியமைக்காக, ராஜபக்சேவுக்கு இந்தியா மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்து, மகிழ்ச்சி அடைந்துள்ளது. சிறிலங்காவின் 13வது சட்டத் திருத்தத்தின்படி தமிழர் பகுதிகளுக்கு சில கூடுதல் அதிகாரங்களை வழங்கலாம் என்ற யோசனையை இந்தியா பசில் ராஜபக்சேயிடம் முன் வைத்தது.

வடக்குப் பகுதியில் இலங்கை அரசு மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு, இந்தியா இதுவரை எந்த திட்டவட்டமான கோரிக்கையையும், இலங்கையிடம் முன் வைக்கவில்லை என்றே, சிறீலங்கா பிரச்சினையைக் கவனித்து வருவோர் கூறுகின்றனர். உண்மையில், கொழும்பில் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் பேட்டி அளித்த பசில் ராஜபக்சே, “விடுதலைப் புலிகளை முற்றாக நசுக்குவதற்கு, இந்தியா எவ்வளவு அதிகம் உதவ முடியுமோ, அந்த அளவு உதவிகளை செய்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் 800 இலங்கை ராணுவத்தினருக்கு காடுகளில் போராடுவது பற்றியும், போராளிகளை எதிர்கொள்வது பற்றியும் இந்தியா பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த பிப். 2007-இல் வெளியிட்ட அறிக்கையில், “இலங்கை ராணுவத்துக்கான, பெரும் அளவிலான பயிற்சி இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது” (A major part of training of Srilanka Armed forces is carried out in India) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய கப்பல்படையின் உளவுத் துறை, கடல் பகுதிகளில் உளவு வேலைப் பார்த்து, இலங்கை கப்பல் படைக்கு பல ரகசிய தகவல்களைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. (இந்திய கடல் பகுதியில் ராடார் கருவியை அமைத்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அண்மையில் சென்னையில் அளித்த பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார். அந்த ராடார் கருவி இப்படி உளவு சொல்வதற்குத்தான் பயன்படுகிறது.) இந்திய கப்பல் படை தந்த தகவல்களினால் இலங்கை கப்பல் படை விடுதலைப் புலிகளின் படகுகளையும், கப்பல்களையும் அழித்துள்ளன. அவர்களுக்கு வந்த ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகளும், இலங்கை கப்பல் படை அதிகாரிகளும் சந்தித்து, இது தொடர்பான அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு திட்டமிடுகின்றனர்.

இது தவிர, இந்தியாவும், இலங்கையும் ‘பாதுகாப்பு கூட்டுறவு உடன்பாடு’ ஒன்றை உருவாக்கியுள்ளன. இரு தரப்பினரும் அதில் கையெழுத்திடும் நிலை வந்தபோது, கடைசி நேரத்தில் அய்க்கிய முன்னணி ஆட்சி, கூட்டணிக்கு பாதிப்பு வரக்கூடும் என்பதால், கையெழுத்திடாமல் தள்ளிவைத்துள்ளது. “அரசியல் தீர்வு” என்று ஒரு பக்கம் கூறிக் கொண்டு, மற்றொரு பக்கத்தில் ராணுவ உதவிகளை வழங்கி வரும் இரட்டை கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது - என்று அந்த ஏட்டில் அதன் செய்தியாளர் ஜான் செரியன் எழுதியுள்ளார்.

- ‘பிரன்ட்லைன்’ மாதமிருமுறை ஆங்கில ஏட்டில் அதன் செய்தியாளர் ஜான் செரியன் - 21.11.2008


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com