Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
அக்டோபர் 2008
தலையங்கம்
சமூக அறிவியல் பண்பாடே தமிழர் பண்பாடு!

வணக்கம்!

இதழியல் துறையில் புதிய பெண்ணியம் தனது பயணத்தைத் தொடங்கி இரண்டாண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்நிலையில் இதழ் பற்றிய அதன் நோக்கும், போக்கும் குறித்தான சிந்தனையினை ஒரு மீளாய்வுக்கு உட்படுத்துவது என்பது முறையானதாக இருக்கும் என்று தோன்றியது.
இரு ஆண்டுகளாக இதழ் கடந்து வந்த பாதை என்பது மிகவும் சுமுகமானதாக இல்லை என்றபோதும், மிகுந்த மனநிறைவை அளித்த பயணமாகவே இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும். எப்போதோ ஒருமுறை குறிப்பிட்டதுபோல, கற்றலும் தெளிதலுமான ஓர் ஏகாந்த மனநிலை இப்பயணம் முழுவதுமே வியாபித்திருந்தது.

கற்பதற்கும், தெளிவதற்கும் உதவிய படைப்பாளிகளையும், தோழர்களையும், நண்பர்களையும், மாற்றிதழ்களையும் இந்த நேரத்தில் மிகுந்த நன்றியுடன் நினைவு கூர்வது மிகவும் அவசியம். சிந்திக்கின்ற முறையில் கற்றலுக்கும் தெளிதலுக்கும் உதவிய தோழர்கள் கூடவே இன்னொரு புதலையும் நமக்குத் தந்திருப்பதாகவே தோன்றுகிறது. இதழியல் உலகில் நடைபயில தனிமனித முயற்சி என்பதை விடவும் கூட்டுமுயற்சி என்பது மிகவும் அத்தியாவசியமானது என்கிற தெளிவுதான் அது.

ஆனால் இதழியல் துறை என்பதும் இதழ்ப்பணி என்பதும் நமக்கு எந்தளவிற்குப் புதியதோ, அதுபோலவே கூட்டுமுயற்சி என்பதன் வடிவம் எத்தன்மையதாக இருக்கும் இருக்க வேண்டும் இருக்க முடியும் என்கிற கேள்விகளும் மிகவும் புதிது. கேள்வியே புதிது எனும்போது அதற்கான பதிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் தென்படாது தானே?

கூட்டுமுயற்சி பற்றிய சிந்தனையில் கருத்தில் செயலில் இந்தளவிற்குப் பின்தங்கி இருப்பதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்க்கிறோம். இதுகாறும் கடந்துவந்த வாழ்க்கைப் பாதையில் இன்றுவரை நிறைவேற்றி முடித்த அனைத்து காயங்களிலுமே தன்னந்தனியாகவே நின்று செயல்பட்டதன் ஒட்டுமொத்த விளைவுதான் இது என்பது பளிச்செனப் புகிறது. இதனை நோக்க, ஒரு கோணத்தில் சாதனையாகப் பார்க்கும்போது மகிழ்வாகத் தெந்தாலும், மறுகோணத்தில் சோகத்திற்குக் காரணமான சோதனைகளும் குவியலாகக் கொட்டிக் கிடக்கிறது.

தனிப்பட்ட வாழ்க்கையில் தனியாக நின்று காயங்களை நிறைவேற்றுவது என்பது வேறு. சமூகம் சார்ந்து சிந்திக்க செயல்பட, கூட்டாகவும் ஒருங்கிணைந்தும் காயங்களை நிறைவேற்றுவது என்பது வேறு என்ற புதலும் இந்த இரண்டாண்டுகளில் மெல்ல உருவாகி, வளர்ந்தும் வந்திருக்கிறது.

மாத இதழாகத் தொடங்கப்பட்ட பெண்ணியம் இதழ், ‘புதிய பெண்ணியம்' என்று சட்ட ரீதியான பெயர்ப்பதிவினைப் பெற்றதோடு, சில இதழ்கள் வெளிவந்த நிலையிலேயே அரசு நூலக ஆணைக்குழுவின் அங்கீகாரத்தையும் பெற்றது. இதழ்ப்பணியில் முழு கவனத்தையும் குவித்து, தீவிரமாகக் களமிறங்கி இருந்தால், இந்நேரம் இருபத்தி நான்கு இதழ்களைக் கொண்டு வந்திருக்கலாம் என்பது ஒன்று. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பெரும்பாலான அரசு நூலகங்களில் பெண்ணியம் இதழைக் கொண்டு சேர்த்திருக்க முடியும் என்பது மற்றொன்று. ஆனால் இது இயலாமல் போனது எதனால் என்று யோசிக்கும்போதுதான் தனிமனித ஆற்றலுக்கும் ஒருங்கிணைந்த ஆற்றலுக்கும் உள்ள வேறுபாடு எத்தகையது என்பது தெரியவருகிறது.

மாதந்தோறும் சில ஆயிரங்களை (எட்டாயிரம்) செலவிட்டு கொள்கை சார்ந்த ஓர் இதழைக் கொண்டு வருவது தனிமனிதச் செயல்பாட்டில் இயலாதது என்பது மட்டுமல்ல கூடாத செயலும்தான் என்கிற புரிதல் ஒருபுறம். நமது சிந்தனைகளை கருத்துக்களைப் பதிவுசெய்வதும், பெண்களுக்கான இதழைத் தொடர்ந்து கொண்டு வருவதும் மிகவும் இன்றியமையாதது என்கிற தெளிதல் மறுபுறம். இவ்விரண்டிற்கும் இடையேயான ஊசலாட்டத்தில் யதார்த்தம் எதுவென்பதும் தெரியவே செய்கிறது.

உச்சத்தில் இருக்கும் இந்தக் தகவல்தொழில்நுட்பக் காலத்தில், கணினியுகம் என்றழைக்கப்படும் இந்நாளில், இணையத்தில் இதழைக் கொண்டு வருவதென்பது மிக எளிதான காயமாக இருக்கிறது. அதுவும் கொள்கை சார்ந்த இதழ்களுக்கு இணையதளத்தில் வரவேற்பும் அதிகமாகவே இருக்கிறது. மாதந்தோறும் ஓர் ஆயிரம் ரூபாய் செலவில் இதழை இணையத்தில் வெளியிட்டு உலவிடச் செய்யமுடியும் என்பது ஒரு நடைமுறை உண்மை. ஆனால்...

பெண்ணியம் இதழின் நோக்கமும் செயல்பாடும் இம்மாறுதலை நோக்கியதாக இருக்க முடியாது. ஏனெனில் புதிய பெண்ணியம் இதழ் முழுக்க முழுக்க பெண்களுக்கானது- பெண்ணியவாதிகளாகவும் இருக்கின்ற ஆண்களுக்கானது. இவர்களில் பெரும்பான்மையோர் இணையதளத்தின் அருகில் செல்வதற்குக் கூட இயலாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதும் மற்றொரு யதார்த்தம். ஆகவே இதழை இணைய இதழாக மாற்றுவதென்பது இதழ் தொடங்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைப்பதாக ஆகிவிடும்.

இத்தகைய சூழல்களில் இதழின் நிலைப்புத் தன்மைக்கு எதனைக் கைக்கொள்வது என்பதை யோசிக்கும்போது, காலமும் வரலாறும் கோடிட்டுக் காட்டுகின்ற கூட்டுமுயற்சி என்கிற பாதையினைத் தேர்வுசெய்வது சிறந்த முடிவாக இருக்குமோ என்ற எண்ணம் எழுகிறது. ஆனால் நமக்கோ... அதன் அரிச்சுவடி கூடத் தெயாத நிலை...

எனவே, புதிய பெண்ணியம் இதழின்மீது அக்கறை கொண்ட தோழர்களும், இதழ் தொடர்ந்து வந்து நிலைபெற வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட நண்பர்களும் இது குறித்த தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் சிரமம் பாராது எழுதி அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். எழுதுவது இயலாத நிலையில் தொலைபேசியில் கருத்துக்களைத் தெவித்தும் உதவ முன்வரலாம்.

இறுதியாக ஒரு செய்தி. தமிழ்ப் பண்பாடு, தமிழர் பண்பாடு என்பதில் பெரும்பாலோனோர் பலநிலைகளில் பல பிவுகளாக பிந்தே நிற்கின்றனர். பெண்ணியம் இதழோ “பெண் விடுதலைக்கு முன்நிபந்தனையே பண்பாட்டுப் புதல்தான்'' என்கிற நோக்கில் அப்பண்பாட்டுத் தளத்தையே முதன்மை இலக்காகக் கொண்டு இதுவரை இயங்கி வந்திருக்கிறது. அந்த நோக்கத்திற்கு உகந்த “சமூக அறிவியல் பண்பாடே தமிழர் பண்பாடு'' என்பதே இனி இதழின் கொள்கைக் குறியீடாகவும் இருக்கும்.
மீண்டும் சந்திப்போம்!
நன்றி!

குறிப்பு : இதழின் புதிய முகவரியும் மின்னஞ்சல் குறியீடும் முன்பக்கத்தில் உள்ளது. மின்னஞ்சல் வாயிலாகவும் தோழர்கள் தமது கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com