Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Penniyam
Penniyam
அக்டோபர் 2006
புதிய மூலதனம்
மு. குருவம்மாள்

அழகல்ல மூலதனம் பெண்களுக்கு
அறிவாற்றல் என்றென்றும் அவரின் சொத்து
அசையாத மூலதனம் பெண்களுக்கு
அவரவர் மேல் நம்பிக்கை கொள்ளல்தானே?

சரியான மூலதனம் பெண்களுக்கு
சலனத்தைப் புறந்தள்ளும் இரும்பு இதயம்
சரியாத மூலதனம் பெண்களுக்கு
மரியாதை சுயமிரண்டும் அணியாய்ப் பேணல்

எழிலான மூலதனம் பெண்களுக்கு
எப்போதும் தளர்ந்திடாத உள்ள ஊக்கம்
மங்காத மூலதனம் பெண்களுக்கு
மயக்கமில்லா சிந்தனையை தனதாய்க் கொள்ளல்!

வளமான மூலதனம் பெண்களுக்கு
வாக்கு மனம் ஊனமின்றி காத்து நிற்றல்
நலமான மூலதனம் பெண்களுக்கு
நற்சொல்லை நாள்தோறும் நாக்கில் தேக்கல்

உயர்வான மூலதனம் பெண்களுக்கு
ஒப்பில்லா நற்பண்பைக் கவசம் ஆக்கல்
நிகரில்லா மூலதனம் பெண்களுக்கு
நிலையாக மானுடத்தைப் பேணிக் காத்தல்


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP