உரிய பாதையில் உரிமையைத் தேடு....
நா. சுப்புலட்சுமி
தேம்பித் தேம்பி நித்தம்
ஏங்கும் பெண்ணே - நீ
தேய்பிறையோ வளர்பிறையோ
கண்ணே!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
நசுக்கும் உலகில் - நீ
எடுத்துக் கொண்ட உரிமைகளைச்
சொல்லு கண்ணே!
கழனி செல்ல உரிமையாம்
கல்விகற்க உரிமையாம்
தொழில் செய்ய உரிமையாம்
தொட்டதெல்லாம் பொன்னாகும்
காசுக்கான உரிமையெல்லாம்
கணக்காவே நடக்குது
கல்யாணப் பேச்சில் மட்டும் நீயா
சொன்னாக் கொதிக்குது.
பிள்ளை பெறும் இயந்திரமாய்
பேறுகால வதையுடன்
திரும்பத் திரும்ப முட்டுது
சீர் செனத்தி வரிசையாய்
கிணத்துமீனை, குளத்துமீனாய்
மாற்றிப் போடறான்
மீறிப்போனா ஓடைமீனாய்
ஓடி ஓடிக் களைச்சிப் போகிறாய்...
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|