Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
Keetru Penniyam
Penniyam
நவம்பர் 2006
மண் விடுதலையும், பெண் விடுதலையும்
அ.சி.சின்னப்பத்தமிழர்

ஆண்டை யானாலும் அடிவருடி யானாலும்
மீண்ட முதலாளி படிப்பாளி யானாலும்
மண்டையில் சுரக்கும் மாண்புச் சிந்தனையிலும்
பெண்டிர் உரிமையை மறுக்கும் பார்ப்பனியம்

நிலக்கிழார் பணக்கிழார் ஆனாலும் குணத்திலும்
குலத்திலும் வேறுபட்ட வாழ்வியல் ஆனாலும்
மகளிர்க்கு விடுதலையா? முன்னுரிமையா களத்திலும்!
மதமெடுத்த யானையாய் மநுநூல் துடிக்கும்

ஊராட்சித் தலைவியா? நகராட்சிப் பதவியா?
யாராட்சி வந்தாலும் ஆடவரின் ஏவலாய்!
நாடாளு மன்றத்தில் முப்பத்து மூன்று......
போட்டாச்சு முடிச்சு மூச்சு விடாதே....

பாலியல் ஒழுக்கம் ஆணுக்கு இல்லையா?
ஆடவரின் வன்புணர்ச்சி பாலியல் வல்லாண்மையா?
சுமப்பது அறுப்பது மறுமணம் அற்றும்
சுருக்குக் கயிற்றிலும் தீயிலும் எரிவதா?

ஒழுக்கமும் ஊடலும் மாந்தயின மேன்மை
உழைப்பும் விளைப்பும் இருபாலாரின் உடைமை
ஐம்பதுக்கு ஐம்பது அனைத்திலும் உண்டு
வையத்தில் நிகரமய ஆளுமையில் அவையுண்டு

இருபாலரின் உரிமையை நிலைநாட்ட இணைவோம்
மறுப்போரை தடுப்போரை பண்பாட்டை சிதைப்போரை
மண்ணுக்கு உரமாக்கி மக்களைத் திரட்டுவோம்
மண்விடு தலையுடன் பெண்விடுதலை பெறுவோம்!



கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP