இருப்பின் இழிவு
ச.விஜயலட்சுமி
உங்களுக்கு
சாத்தியமாகிறது
நண்பனின் வீடு செல்வதும்
உரையாடுவதும்
நட்பையே சுற்றமாய்
வரித்துக் கொள்வதும்
இருப்பினும்
சுதந்திரக் காற்றின் போதாமை
அவ்வப்போது
வெளிப்படத்தான் செய்கிறது
எங்களை ஒப்பிட்டு
உங்களைப் பாவம் எனும் போக்கு
மிகச் சிறந்த அங்கதம்
அவ்வப்போது கேட்டதுண்டு
என்னகுறை உமக்கென?
சரிதான்
என்றேனும்
அருகாமையிலிருக்கும்
நெருங்கிய நட்பின்
இறுதி அஞ்சலியில்
பங்கேற்காமல் போனதுண்டா?
ஒருமுறை
தவிர்த்துப் பாடுங்கள்
உணர்வீர்கள் எங்கள் இருப்பை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|