Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
Keetru Penniyam
Penniyam
பிப்ரவரி 2008
மற்றுமொரு கடல்
செல்வகுமாரி

அவளுக்குள் ஒரு கடல்
அலையடித்துக் கொண்டிருந்தது
பெரும்பசியுடன்.

சோராது தூங்கும் இரவைத்
தட்டி எழுப்பினாள்

தூக்கத்தில் விடுபடாத
கணவனையும் எழுப்பினாள்

அடுக்களை அருகில் இருந்த
கஞ்சிப் பானையில் மீந்த
பழைய சோற்றுடன் வெங்காயம் இட்டு
ஒரு கையில் பரியுடனும்
மறு கையில் கஞ்சிக்கலயத்தோடும்
கடலை வரவழைத்தாள்

மண்மீது மோகித்திருந்தன
கட்டுமரங்கள் யாவும்
தன்கணவனோடு கைசேர்த்து
எதிரும் அலைகளுக்கு எதிராகச்
செலுத்தினாள் கட்டுமரத்தை

இருள் பிரியாது
தூக்கம் கலையாது
தாவு தாங்கிச் செல்லும்
கணவனைக் கணநேரம் பார்த்தாள்

நாளை விடியுமா
நாளும் பசிதீருமா எனக்
கேள்விகளைச் சுமந்து
தாகத்தோடு வீடு திரும்பினாள்.

பொழுது விடிந்தது
கடலுக்குச் சென்ற மீனவர் மாயம்
எனச் செய்தித்தாள் சொல்லியபோதும்

தென்புலக் கடல் நோக்கி
அவளுடனே காத்திருக்கும்
வெறும் கூடையும்
தாளாப் பசியும்
தீரா நம்பிக்கையும்...

மற்றுமொரு கடலாக...


படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP