கடவுளும்-வணிகனும்
பெ.பகவத்கீதா
பணம் தேவையென்று
கடவுளை வேண்டினேன்
கடைசியில்
அவரைப் பார்க்கவும்
தேவையாயிருந்தது
பணம்
கோவிலுக்கு.
ஒரு ரூபாய்
இரண்டு ரூபாய்க்குப் பேரமா?
அவர்களென்ன
வருங்கால டாட்டாவா
அம்பானியா
கோடியாய்ச் சுருட்டுவதற்கு
பிளாட்பார மனக்கோடீஸ்வரர்கள்
பேரம் பேசாது
கொடுத்துவிட்டு தான்
போங்களேன்
வயிறாவது நிறையட்டும்.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|