Keetru Penniyam
Penniyam
டிசம்பர் 2008
போர் முடியட்டும்!

நா.சுப்புலட்சுமி

பனிக்கால புயல் மழை
ஓய்ந்தாலும், ஓயாதப் போர்!
கட்டிய துணியுடன்
காடு மலைகளில்
மேடுபள்ளமறியா இருளில்
மூப்பும் பிஞ்சுமாகி
தாயும் சேயுமாகி
பகலோ இருளோ
பதுங்கு குழியில்
வளரும் பிள்ளைகளை
இயக்கத்தில் விட்டுவிட்டு,
எனது, எனதென்று
அதிரும் பூமியில்,
அனாதையாகி, அகதியாகி வெளியேறி
அடுத்த நொடி
அதிர்ச்சியை தாங்க
பலம் வேண்டி
பரிதவித்து நிற்கும்
ஈழத் தமிழரின்
இதயம் கேட்கிறது...
அசோகர் தழுவிய
பவுத்த மதம் சொன்னது என்ன?