Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
டிசம்பர் 2008
மதி -இடம் கேளுங்கள்

அண்மையில் சென்னையில் 'ஓரினச் சேர்க்கையாளர் உரிமைகள்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் 'சுனில் பந்த்' என்னும் நேபாள நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்புரையாற்றினார். இவர் தான் ஒரு "ஓரினச் சேர்க்கையாளர்' என வெளிப்படையாக அறிவித்து தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர். நேபாள மாவோயிஸ்ட் அரசும், நேபாள காங்கிரசு கட்சியும் இவரை அங்கீகரித்துள்ளது. கூடவே நேபாள நீதிமன்றமும் "சிறுபான்மை பாலினச் சேர்க்கைக் குழு' (Minority Sexual Group) என்று, வரையறை செய்து சட்ட ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இவர்கள் 'சங்கமா' என்ற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்துள்ளனர். மேலும் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திராவில் கிளைகளை உருவாக்கி ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் கர்நாடக அரமலும், காவல்துறையினாலும் பெரிதும் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். எனவே அரவாணிகளை அங்கீகரித்துள்ள, பெரியார் பிறந்த மண்ணான தமிழ்நாடு தங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் இந்திய அர” தண்டனைச் சட்டத்தின் படி இது தவறான புணர்ச்சிமுறை என்ற நோக்கில் குற்றமாகக் கருதப்படுகிறது. இவர்களோ, தங்களது உணர்வுகளுக்குச் சமூக/சட்ட ஒப்புதல் மறுக்கப்படுவதால் தற்கொலைகளும், கொலைகளும் நிகழ்கின்றன என்று புள்ளி விவரம் தருகின்றனர். இந்த உணர்வு 'இயற்கையின் பிழை' என்பதையும் மறுக்கின்றனர். ஓரினச் சேர்க்கையாளர்களின் இந்தக் கோரிக்கை ஏற்கக்கூடியதா? இதை எப்படி மறுப்பது? இயற்கையின் படைப்பில் எது சரி?
-மாறன், சென்னை.

ஓரினச் சேர்க்கை என்பது மனித குல வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் மன்னர்களின் அந்தப்புரங்களில் கணக்கிலடங்கா கன்னிப் பெண்களைக் காம இச்சைக்கென அடைத்து வைத்திருந்த காலத்தில், அப் பெண்களுக்குள் வேறு வழியின்றி ஓரினச்சேர்க்கை ஏற்பட்டதென்பது ஒரு செய்தி. இப்போது உலகம் முழுவதிலும் உள்ள எண்ணிலடங்கா சிறைகள், ராணுவ முகாம்களில் பற்பல ஆண்டுகளாக அடைப்பட்டுக் கிடக்கும் கைதிகளுக்குள் ஓரினச் சேர்க்கை ஏற்படுவதும் தவிர்க்க இயலாததே என்கிறது மற்றொரு தகவல்.

எனவே இப்புணர்ச்சி முறை மனித குலத்தில் இயற்கையாக நிகழ்ந்ததல்ல உருவாகியது அல்லது உருவாக்கப்பட்டது என்பதும் தெளிவாகிறது. ஓரினச் சேர்க்கையாளர்களின் பிறப்பே அப்படித்தான் என்பது அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில் இந்தப் புணர்ச்சி முறையினை போதையின் பாற்பட்ட விஷயமாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. பணக்காரன் மிதமிஞ்சிய சுகத்திற்காக போதையை நாடுகிறான். ஏழையோ தனது துயரை மறக்கவும், சிறிது நேரமேனும் அதிலிருந்து விடுபடவும் போதையினைத் தேடுகிறான். இது போன்றே வசதி படைத்தோரின் ஓரினச் சேர்க்கை வரம்பு மீறிய நுகர்வுக் கலாச்மரம் எனில் எளியோரின் இந்நிலை வறுமையின் பிடியில், சூழ்நிலைக் கைதியாக சிக்கிக் கொண்டதன் பரிதாபக் கலாச்மரம்.
அரவாணிகளை அர” அங்கீகரிக்கக் காரணம் இயல்பாக நிகழ்ந்த இயற்கைப்பிழையே அவர்களது தோற்றம் என்பதை உணர்ந்ததால் தான். இத்தகைய இயற்கையின் தடுமாற்றத்தால் தங்களது உணவு, உடை, உறையுள் போன்ற அடிப்படையான வாழ்வுரிமை கூட நெடுங்காலமாக மறுக்கப்பட்டதை, அரவாணிகள் இடைவிடாத போராட்டங்கள் மூலம் சமூகத்திற்கு உணர்த்தியதும் ஒரு காரணம். ஆனால் ஓரினப் புணர்ச்சி என்பது உச்சகட்ட நுகர்வின் வெளிப்பாடாகவோ அல்லது இயலாமையின் வெளிப்பாடு என்றோ தான் மதிப்பிடப்பட்டிருக்கிறது. பாலின சமத்துவம் மற்றும் பொருளாதார சமத்துவமற்ற ஆதிக்கச் சமூக அமைப்புகளின் காரணமாக ஏற்பட்ட அவலநிலை தான் இது என்றே கருதவேண்டி இருக்கிறது.

இயற்கை நெறிகளை மதித்துப் போற்றுவதும், அதன் வழியே வாழ்க்கையினை அமைத்துக் கொள்வதும் தான் மனித குலம் உலிவதற்கான ஒரே வழியாக இருக்க முடியும். இரு பாலினத்தின் இயல்பான சங்கமம் தான் உயிரியல் வளர்ச்சியின் உண்மைத் தத்துவம் என்பதை சகல உயிரினங்களின் வாழ்வியல் வழியே இயற்கை ஓயாமல் ஓதிக் கொண்டிருக்கிறது. இதனை உணர்ந்து கொள்வதென்றே இந்தப் பிரச்சனைக்கு தீர்வாகவும் இருக்கும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com