Keetru Penniyam
Penniyam
டிசம்பர் 2008
நூல் அகம்

காற்றில் மிதக்கும் ஆகாயம்
அ.கார்த்திகேயன்

book_store ரூ.40/

கவிதை எழுதுவது, கவிதை வாசிப்பது, கவிதையை பற்றிப் பேசுவது இவையே வாழ்வின் மிகச் சிறந்த தருணங்கள் என்கிறது தொகுப்பின் முன்னுரை. கவிஞர் கார்த்திகேயன் கவிதைகளோடு இரண்டறக் கலப்பதில் அனைவர்க்கும் மகிழ்ச்சியே. இலக்கிய வடிவத்தில், ஒரு மொழியின் உச்சகட்ட மதனை கவிதையாகத்தான் இருக்க வேண்டும் என்பதையும் ஓரளவிற்கேனும் ஒப்புக் கொள்ளவும் முடியும். ஆனால் அந்தக் கவிதையின் எழுச்சியும், வீச்சும் எங்கிருந்து... எதை நோக்கி என்பதில் தானே அதன் உன்னதமும் உயர்வும் வெளிப்பட முடியும். கவிதை மொழியைக் கண்டு கொள்வதில் உள்ள விழைவும் முனைப்பும் கவிதைக் களத்திலும் நிலைகொள்ளும் போது, இந்தச் சமூகத்திற்கும் சக மனிதருக்கும் நிறைய 'செய்திகள்' கிடைக்கும். மாறுவது தான் நிலையானது என்பது கவிஞருக்கும் தெரிந்தே இருக்கிறது. எனவே மாற்றம் வரும் வளர்ச்சி என்பதும் மாற்றம் தானே!

நவநீதம் வெளியீட்டகம்
10சி, புதுத்தெரு, எண்.2
பொன்னம்மாப்பேட்டை, சேலம் 636 001.


வாழ்வியல் மரபு
மருத்துவர் காசிபிச்சை ரூ.60/


மரபு மர்ந்த வாழ்க்கையை இழந்துவிட்ட மனித சமூகத்தில் மனித நேயமும் மங்கிவிட்டது என்கிறார் இயற்கை வாழ்வியல் இயக்கத்தின் தலைவரும், நூலாசிரியருமான மருத்துவர் காசிபிச்சை. மனித நேயம் மறைந்து போன நவீன சமூகத்தில், நாகரீக மோகம் உச்சத்திற்குச் சென்றதில் பூமியின் தட்ப வெப்ப நிலையும் தாறுமாறாக ஏறியுள்ளது. சுமார் இருபதாண்டுகளுக்கு முன்பு தட்பவெப்பநிலை அளவு 24லிருந்து 26டிகிரி செண்டிகிரேடில் இருந்தது. இப்போதோ 44லிருந்து 46 டிகிரி ஆக உயர்ந்திருக்கிறது. மனிதரின் நுகர்வுக் கலாச்மரத்தால் காற்று, நீர், நெருப்பு, ஆகாயம், பூமி என்று பஞ்ச பூதங்களும் சீரழிந்து போனதன் வெளிப்பாடுதான் இது என்கிறார். இயற்கை வாழ்வை அணுவளவும் கடைப்பிடிக்காத அமெரிக்க நாட்டினர் உலகின் மக்கள் தொகையில் 2 விழுக்காடாக இருந்து கொண்டு, வளிமண்டலத்தைக் கெடுத்து மாசுபடுத்தியதில் 25 விழுக்காட்டுப் பங்கினைச் செலுத்தி இருப்பதையும் நூல் குறிப்பிடுகிறது.

"வாயைக் கட்டி நோயைக்கட்டு' என்னும் தமிழ் மூதுரையை கவனத்தில் கொள்ளவில்லை எனில் அமெரிக்காவினைப் போன்று மூன்றில் ஒருவர் உடல்பருமன் உள்ளவர்கள் என்பது நம் நாட்டிலும் வழக்கத்திற்கு வந்து விடும் என எச்சரிக்கிறார். இயற்கை வாழ்வியலை மறந்ததால் உடல் ""நோலிகள் மட்டுமன்று பைத்தியம் எனப்படும் மன நோயும் அதிகரித்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் 5000 பேரில் ஒருவர் என்றிருந்த மனச்சிதைவு நோலி இப்போது 1000 பேரில் நால்வர் என்று விரைவான வளர்ச்சி பெற்றிருக்கிறது. "கசப்பை மறந்தால் வாழ்க்கை கசந்து விடும்'' என்ற சொல்லுக்கு ஏற்ப இனிப்பு (சர்க்கரை) நோய் இல்லாத வீடே இல்லை என்ற நிலை உருவாகிவருகிறது. உழைப்பு தான் உடல் நலக் கவசம் என்பதை மறந்த கூட்டம் பெருகிவருகிறது. சூரிய ஒளி படாத வாழ்க்கை எலும்புத் தேலிமானத்தை உண்டாக்குகிறது. அரமங்கமோ ‘புகை மனிதனுக்குப் பகை' ‘குடி குடியைக் கெடுக்கும்' என்று விளம்பரங்களைச் செய்வதோடு கடமையை முடித்துக் கொள்கிறது. இத்தகைய சூழல்களில் வந்து விட்ட உடல் மன நலக் கேடுகளைப் போக்க பல வழிகளைக் கடைப்பிடித்தாலும் வராமல் தடுப்பதற்கு உள்ள ஒரே வழி மரபு மர்ந்த வாழ்வியலே என்கிறார் நூலாசிரியர்.

வெளியீடு : வெண்ணிலா பதிப்பகம், மனிதம் இல்லம்
218/3, இராமமமி நகர், திருமானூர்
அரியலூர் மாவட்டம் 621 715
மொபைல் : 93450 09288

மே நாளும் தமிழ்நாடும்.
கட்டுரைத் தொகுப்பு ரூ.15/


தமிழம்மா பதிப்பகத்தின் பதினெட்டாவது வெளியீடாக வந்திருக்கும் இச்சிறு நூல் 1890ல் மே முதல்நாள் எனும் உலகத் தொழிலாளர் தினத்தின் தோற்றத்தையும் அதற்கான போராட்டங்களையும் விளக்குகிறது. உலகத் தொழிலாளர் வர்க்கம் ஒருங்கிணைந்து போராடி உரிமைகளை வென்றெடுத்த மே தினம். முதலாளித்துவத்தை வீழ்த்தி தொழிலாளி வர்க்கம் ஒருநாள் அதிகாரத்தைக் கைப்பற்றும் என்பதற்கான ஒரு சமிக்ஞை.

இந்தியாவில் சிறப்புமிக்க மே தினத்தை தமிழ்நாட்டின் சிந்தனைச் செல்வர் மா.சிங்கார வேலரே அறிமுகப்படுத்தியும் இருக்கிறார். மெரினா கடற்கரையில் முதல் மே தினம் 1.5.1923 அன்று கொண்டாடப்பட்டது. இத்தகு சிறப்பு வாலிந்த மே தினத்தின் இன்றைய சூளுரை தற்போதுள்ள உலக மயத்தையும், வல்லரசுகளின் ஏகாதிபத்தியத்தையும் வீழ்த்த உறுதி பூண வேண்டும் என்பது தான் என்கிறது இவ்வெளியீடு.

இருபாலாருக்கும் இயைந்த
இனிய தமிழ்ப் பெயர்கள்
ரூ.5/


பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே இழந்துவிட்ட நமது மொழிப்பற்றையும் இனப்பற்றையும் மீட்டெடுக்கும் ஒரு முயற்சியே தாலிமொழியாம் தமிழில் பெயரிடுவது என்பது. ஆண், பெண் இருபாலார்க்கும் பொருத்தமான தமிழ்ப் பெயர்கள் அகர வரிசையில் இந்நூலில் தொகுக்கப் பெற்றுள்ளன. 192 நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. சபையின் நுழைவுவாயிலில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் தமிழகப் பாவலரின் பாடல் வரி 'பொறிக்கப்படும் போது தமிழரின் இல்லங்களில் தமிழ்ப் பெயர் ஏன் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறது இக்குறுநூல்.

மேற்கண்ட இரு நூல்களின் வெளியீடு : தமிழம்மா பதிப்பகம், 59, முதல் தெரு, வினாயகபுரம், அரும்பாக்கம், சென்னை 106, போன் : 24753373


அடலேறு அந்தாலனார் வாழ்வியல்
ஓர் கண்ணோட்டம்
தொகுப்பு : கவிஞர் தாதை உபதேசி


அரை நூற்றாண்டு காலம் தமிழ்ப்பணி ஆற்றிய மு.அந்தாலனார் அவர்களைச் சிறப்பித்து வெளியிட்ட விழா மலரின் இணைப்பு இந்நூல். தென்னாற்காடு மாவட்டத்தில் ஆசிரியர் பணியாற்றி, எழுத்தாளராலி மலர்ந்து, அரசியலில் களப்பணியாற்ற ஆசிரியப் பணியினைத் துறந்தவர், திராவிட இயக்கக் கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டு அரசியல் பயணத்தைத் துவங்கியவர், "பயணம்' எனும் புரட்சிகர ஏட்டுக்கு ஆசிரியர் ஆனார். தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் அனைவரோடும் இவருக்கு இருந்த நல்லுறவினைத் தெளிவாகவும் வரிசைப்படுத்தியும் விளக்கமாகக் கூறுகிறார் தொகுப்பாசிரியர் கவிஞர் தாதை உபதேசி. பெரியார் கருத்துக்களினால் உருவாகி, தி.மு.க.வில் பணியாற்றி, தமிழ்த்தேசிய சிந்தனைக்கு ஆட்பட்டு இன்று தீவிரமான தமிழீழ ஆதரவாளராக மாறி இருப்பது ஐம்பதாண்டுகால சமூக வாழ்வில் அந்தாலனார் அவர்கள் கடந்து வந்த பாதை. இவரது "பயணம்' தொடரவும் வேண்டும், வெல்லவும் வேண்டும் என்பது தானே தமிழர்களின் ஆவலாகவும் இருக்க முடியும்?

நூல் கிடைக்குமிடம் : தமிழ்க்குடில், 13பி, 1311,
பெருமாள் தெரு,
தாதகா பட்டி, சேலம் 6.

ஈழச்சிக்கல் தீர ஒரே வழி
இராசேந்திர மேழன் ரூ.7/


ஈழப்பிரச்சனை குறித்து மண்மொழி இதழில், அதன் ஆசிரியர் எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஈழச்சிக்கல் தீர்வதற்கு ஒரே வழி, ஈழத்தை அங்கீகரிக்கக் கோரி மத்திய அரசுக்கு நெருக்குதல் தர வேண்டும். அதற்கு தமிழகத்தில் மொழி உணர்வு கொண்ட கட்சிகள் ஓரணியாலித் திரண்டு இரு கழகங்களுக்கு மாற்றாக புதியதோர் அணியை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது இவ்வெளியீடு.

ஆனால் தமிழக மக்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தால் தான் தில்லி விழித்துக் கொள்ளும் என்கிற கருத்துக்கு இந்த “மாற்று அணிக் கருத்து' என்பது எதிரானதாகவே இருக்கிறது. ஏனெனில் தமிழக மக்களில் பெரும்பான்மையோர் இவ்விரு கழகங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். கூடவே நூலாசிரியர் மாற்று அணிக்கெனச் சுட்டிக்காட்டும் மூன்று தலைவர்களின் கட்சிகளும் இந்த இரு கழகங்களின் இணைபிரியாத கட்சிகளாகவே இருக்கின்றன. எனவே மாற்று அணியை முன்னிறுத்துவதன் வழியே ஈழச்சிக்கல் தீர்க்கப்படும் என்பது ஆழ்ந்த விவாதத்திற்குரியதாகவே தென்படுகிறது. மாற்று அணி மத்தியம்தானா என்ற கருத்தும் பல நிலைகளில், பல கோணங்களில் விவாதிக்கப்பட்டவேண்டும். நல்லதொரு முடிவின் வழியே ஈழத்தமிழர்களின் துயரம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் இருக்கிறது.

பகுத்தறிவின் மூட நம்பிக்கைகள்
மங்கியன் ரூ.7/


மண்மொழி இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலும். பகுத்தறிவாளர் என்போரிடம் மூட நம்பிக்கை இல்லையா? மூடநம்பிக்கையாளர் என்போரிடம் பகுத்தறிவு இல்லையா? என்கிற கேள்வியை எழுப்பி அதற்கு பதிலைச் சொல்ல முனைகிறது இவ்வெளியீடு. அறிவியல் அடிப்படையில் இந்தக் கேள்வியே முறையானது தானா என்ற ஐயம் தான் முதலில் எழுகிறது. பகுத்தறிவு என்பதே மனிதரின் ஆறாம் அறிவு என்பதும் அதனால் தான் ஊர்வன, பறப்பன, நீந்துவன, நடப்பன என்று ஐந்தறிவு கொண்டவற்றுள் மனிதகுலம் ஆறாம் அறிவைப் பெற்று உயர்ந்து நிற்கிறது என்பதும் தானே அறிவியலின் கண்டுபிடிப்பு. அந்தப் பகுத்தறிவைக் கொண்டு வாழ்வியலைத் தெளிவு படுத்திக் கொள்வோரைத் தானே மூடநம்பிக்கை களைந்தவர் என்றும் பகுத்தறிவைச் செயல்படுத்துபவர் என்றும் காலம் கொண்டாடுகிறது. இந்தச் சமூக அறிவியலையே "பகுத்தறிவின் மூட நம்பிக்கை' எனும் நூல் தலைப்பே கேள்விக்குட் படுத்துகிறது. இது ஒரு புறமிருக்க கிறித்தவ, இசுலாமிமதத்தையெல்லாம் விட்டு விட்டு இந்து மதத்தை மட்டும் தாக்குவது என்பதைப் பெரிதும் குறைகூறி நூலாசிரியர் கருத்து கூறுவதும் விந்தையாகவே தெரிகிறது. கிறித்தவ மதத்தைக் குறை கூறுபவர் கிறித்தவ நாட்டுப் பகுத்தறிவாளராக இருக்க வேண்டும். இசுலாமிய மதத்தைக் குறைத்துச் சொல்பவர் இசுலாமியராக இருக்க வேண்டும். அது போலவே இந்நாட்டில் பெரிதும் வலுவுள்ள, பெரும்பான்மை இந்து மதத்தைத் தாக்கிப் பேசுவது தானே இந்நாட்டில் உள்ள பகுத்தறிவு வாதியின் வேலையாக இருக்க முடியும்! இதில் குறை காண நினைப்பதும், திருத்த முயலுவதும் முறையான செயலாக இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கும்பிடுகிறவன் காட்டு மிராண்டி என்றால் மதிகள் நிலவக் கடவுள் எப்படிக் காரணம் ஆகமுடியும்? உலகம் முழுவதும் தான் கடவுள்கள் இருக்கிறார்கள். அங்கெல்லாம் இல்லாத மதி இங்கு மட்டும் ஏன்? என்று வினவுவதும் வெகுளித்தனமாகவே படுகிறது. உலகம் முழுதும் நன்கறிந்த உலகக் கடவுள்களில் கிறித்தவத்தின் யேசுவும், இசுலாமியத்தின் அல்லாவுமே முதன்மையானவர்கள். உலகில் வேறெந்த நாட்டிலும் இந்த மதங்களை, இந்தக் கடவுள்களைப் பின்பற்றுபவர்களிடம் மதி என்பதே இல்லை. ஆனால் இந்தியாவின் இந்து மதத்தில் மட்டும் தான் இத்தனை மதிகள், எத்தனை எத்தனையோ கடவுளர்கள். மதிக்கொரு கடவுள் என்பதும் இங்குள்ள நீதி. இங்குள்ள மனிதர்கள் இந்து மதத்திலிருந்து மாறி கிறித்தவத்தையோ, இசுலாமியத்தையோ பின்பற்றினாலும் கூட இந்துமதத்தின் மதிப்பிரிவினையிலிருந்து மட்டும் அவர்களால் விடுபடவே முடியாது. எனவே தான் இந்தியாவின் பகுத்தறிவு வாதியாயினும், தமிழகத்தின் பகுத்தறிவுவாதியாயினும் இந்து மதத்தையே குறி வைத்துத் தாக்க வேண்டியதாகவும் இருக்கிறது. இந்துவாக இருந்து கொண்டு பெரும்பான்மை மதமான இந்து மதத்தைத் தாக்குவதன் மூலம் "இந்துமத அடிப்படைவாதிகளுக்கு' செயல்களம் அமைத்துக் கொடுக்கப்படுகிறது என்று சொல்கிற கருத்தும் அறிவியல் பூர்வமானதாக இல்லை. ஏனெனில் எதிரிகள் இருவர் போரிடும் போது போர்க்களம் என்பது ஒன்று தான். அதில் வெல்வது யார் என்பதில்தான் நல்லோரின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது.


மேற்கண்ட இரு நூல்களின் வெளியீடு :
மங்கை பதிப்பகம், 700, எம்.ஐ.ஜி. 2வது முதன்மைச் மலை
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, சென்னை42.
தொலைபேசி : 04422440983