Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
டிசம்பர் 2008
அமெரிக்காவின் குளறுபடி இந்தியாவுக்கு நெருக்கடி!
பொன். ஏழுமலை

உலகமயமாக்கல் என்ற மேலை நாட்டுக் கருத்தியலும், அது மர்ந்த பொருளாதார நடைமுறைகளும், வளர்ந்த நாடுகள் தங்கள் பொருளாதார அரசியல், தொழில்நுட்ப, வணிக மேலாண்மையின் மேம்பட்ட நிலைகொண்டு, வளரும் நாடுகளை அடிமைப்படுத்திச் ”ரண்டக் கையாளும் நடைமுறைத் தந்திரமாகும். அவ்வாறே "கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளா தாரம்''(Free Market Economy), நுகர் பொருள்களின் உற்பத் தியையும், தேவையையும் சிறப்பான முறையில் நிறைவு செய்யும் என்பதும் அவர்களது கருத்தாகும். எனவே அரசு நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளைப் பல்வேறு தளங்களிலும் குறைக்கவும், அகற்றவுமான கொள்கையினைக் கையாண்டு, தனியார்மயத்தை (முதலாளித்துவத்தை) ஊக்குவிப்பதன் மூலம் மேம்பட்ட நிலையினை எலிதுவது என்ற நோக்கில் பொதுத்துறை நிறுவனங்களைத் தவிர்ப்பது என்று திட்டமிட்டனர். இக்கருத்தியலை முழுவதுமாக ஏற்றுக்கொண்ட காங்கிரசு அரசு 1991 ஆம் ஆண்டில் மறைந்த நரசிம்மராவ் பிரதமராகவும், திரு.மன்மோகன் சிங் நிதி அமைச்சராகவும், திருமதி. மேனியா காந்தி வழிகாட்டுபவராயும் ஏற்று நடைமுறைப்படுத்த முயன்றது. எதிர்க்கட்சியான பா.சகவும் இதனை வரவேற்றது.

bush இந்நிலையில் இந்தியப் பங்குச் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யவும், எடுத்துச் செல்லவுமான கட்டுப்பாடற்ற தன்மையினால் பங்குகளின் ஏற்ற இறக்கங்கள் அதிரித்தன. இந்நிலையில் திரு.அர்சத் மேத்தா பல பொதுத்துறை வங்கித் தலைவர்களின் ஆசியோடு, மோசடி செய்து பலநூறு கோடி ரூபாலிகளைத் திரட்டி பங்குச் சந்தையில் முதலீடு செய்து, தமது விருப்பம் போல் பங்குச் சந்தையை ஆட்டிப்படைத்தார். இதைச் சட்டத்தின் வழியே சந்திக்க இயலாத இந்திய அரசு, அர்சத்மேதாவைக் கைது செய்து, அவரிடமிருந்த பங்குகளை முடக்கியது. ஆனால் வங்கி உயர் அதிகாரிகள் தண்டிக்கப் படவில்லை. வங்கிமோசடிக்காக அர்சத்மேத்தா தண்டிக்கப்பட்டது சரியே. ஆனால் அவரிடமிருந்த பங்குகளை முடக்கியது "கட்டுப்பாடற்ற வணிகம்'' என்ற உலகமயமாக்கல் கொள்கைக்கு எதிரானது. எனினும் வங்கிகளுக்கு ரூ.18,000 கோடி, மக்களின் வரிப்பணத்திலிருந்து உதவி, அவை சீராக நடைபெற உதவியதுடன், லட்சக்கணக்கான முதலீட்டாளர்களைக் காப்பாற்றியது. எனினும் அன்று நிதி அமைச்சராக இருந்த மன்மோகன்சிங் இந்நிலை திரும்பவும் ஏற்படாதிருக்க வழிகோல முயலவில்லை என்பது, அவரது மேலை நாட்டு எசமானர்களின் நன்மை கருதியே ஆகும்.
பின்னர் வந்த பா.ம.க அரசு, பொதுத்துறையை விற்பதற்கென்றே ஒரு துறையை உருவாக்கி, திரு.அருண் செளரியை அமைச்சராக்கி விந்தை புரிந்தது. இந்நிலையில் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட இடது மரிக் கட்சிகள் பல தளங்களிலும் எதிர்த்து வந்ததனால் ஓரளவு கட்டுப் படுத்தப்பட்டது. நிதித் துறையிலும் வெளிநாட்டு வங்கிகள் இங்கு தடையின்றி வணிகம் புரிய தடையாக இருந்த பல சட்டங்களை நீக்க காங்கிரஸ் அரசும், தற்போதைய பிரதமரான திரு.மன்மோகன் சிங்கும் முயன்ற போதிலும் "மத்திய ரிசர்வ் வங்கியின்'' நிர்வாக ரீதியான தடையினாலும், இடது மரிகளின் எதிர்ப்பினாலும் அது தடைப்பட்டது. அதனால்தான் இன்று இந்தியா மிகப்பெரிய நிதி இழப்பிலிருந்து தப்பித்து உள்ளது என்பதும் உண்மை. எனவே தற்போதைய மிகக் குறைந்த பாதிப்பினுக்காகப் போராடிய ரிசர்வ் வங்கி அதிகாரிகளும், இடதுமரிகளும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதாரம் என்ற அடிப்படையில் கட்டப்பட்டுள்ள அமெரிக்க நிறுவனங்கள், வீட்டுக்கடன் தரும் வகையில் சரியான கணிப்பின்றி செயல்பட்ட காரணத்தால் "National Housing Bubble" வாரா வீட்டுக் கடன் என்றாகி திவாலாகும் நிலையில் இச்சிக்கல் தோன்றியது. "(1) நிதி நெருக்கடி'', (2) நிதிக் குளறுபடி, (3) நிதி மோசடி இம் மூன்று சொல்லாடல் பற்றிய புரிதலைக் காண்போம்.

soniya (1) நிதி நெருக்கடி : ஒரு அரசு தனது திட்டமிட்ட செயல்பாட்டுக்கு அப்பாற்பட்ட, போர், இயற்கைச் சீற்றம், வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்படும்போது நிதி வருவாலி குறைந்தும், செலவுகள் அதிகமாகியும் ஏற்படும் நிலை.

(2) நிதிக் குளறுபடி : அரசின் தவறான கொள்கை, திட்டமிடல், செயலாற்றல் போன்றவற்றினால் ஏற்படும் சூழல்

(3) நிதி மோசடி : ஒரு அரசு தனது அலுவலர்களின் மோசடியாலோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தனித்தோ வெளி நிறுவனங்களுடன் இணைந்தோ நிதி இழப்பினுக்கு வழி கோலுவது.
இந்த வரையறைகளின்படி அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது "நிதி மோசடியால்'' விளைந்த குளறுபடியே. வங்கி மராதவணிக நிறுவனங்கள் (Non banking financial Institutions) வகுத்த பல்வேறு கடன்முறைகள் (Financial Products). மக்களி டையே, முதலீட்டு வங்கிகளால் (Investment Bankers) வழங்கப்பட்டது. இதற்கு முறையான தணிக்கையாளர்களின் ஒப்புதலும், Rating Agencies எனப்படும் ஆலிவு நிறுவனத்தின் ஒப்புதலும் உண்டு. இவ்வனைவரின் ஒட்டு மொத்த மோசடியும், வீட்டு/நில மதிப்பும், 20% முதல் 80% வரைத் தாறுமாறாக ஏறியும், இறங்கவுமான நிலை ஏற்பட்டதற்குக் காரணம் அரசின் கட்டுப்பாடு இல்லை என்ற குறைபாட்டினால் தானே? எனவே தற்போது அமெரிக்க அரசு தனது கொள்கை நிலைப்பாட்டினுக்கு மாறாக, 800 BN USD (ரூ.40 லட்சம் கோடி) நிதியை மக்கள் வரிப்பணத்திலிந்து உதவி, அம்மோசடி நிறுவனங்களை மீட்டெடுக்காவிடில், அதில் முதலீடு செய்த லட்சக் கணக்கான அமெரிக்க குடிமக்கள் பாதிக்கப்படுவர் என்பதாலும், உலக அரங்கில் தாம் ஒரு கேலிப்பொருளாகக் கருதப்படுவோம் என்ற அச்சத்திலும், நிலைமையைச் சீர்படுத்த முயன்றுள்ளது.

இவ்வாறு அந்நாடு தனது ஏற்றுமதி / இறக்குமதி வணிகத்தைச் சீரமைக்க முயலும்போது அதனுடன் வணிகம் செய்யும் அனைத்து நாடுகளும் பாதிக்கப்படும். அதன்படியே தற்போது அய்ரோப்பிய கூட்டமைப்பு 260 BN USD (ரூ.13 லட்சம் கோடி), சீனா 600 BN USD (ரூ.30 லட்சம் கோடி) என செலவிட்டு தங்களது நாட்டுப் பொருளாதாரத்தைச் சீரமைக்க முயன்றுள்ளன. அந்நாடுகள் அதற்கான தெளிவான திட்டத்தையும் செயல்பாட்டினையும் வரையறுத்தே செய்கின்றன. ஆனால் குறைவான பாதிப்பு என்ற நிலையில் இந்தியா, திறமையான நிதி வல்லுனர் மன்மோகன் சிங் தலைமையில் இருந்தும் தெளிவின்றித் திண்டாடுகிறது. ரிசர்வ் வங்கியின் நிதி ஆளுமை விதி முறைகளைத் தளர்த்தி(G.p.CRR, SLR, Reporate) ரூ.2,60,000/ கோடி பணத்தை, வங்கிகள் மூலம் கடனாக வழங்குவதன் மூலம், பணப்புழக்கத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இது யாரால், எப்படிப் பயன்படுத்தப்படும், அதன் விளைவுகள் எத்துறையில் மேன்மையை உருவாக்கும் என்ற புரிதலும், வழிகாட்டுதலும் அரசிடமில்லை என்பது வருத்தத்திற்குரியது.

அமெரிக்காவின் டாலர் கரன்சி, அந்நாட்டில் புழங்குவது 20% ஆகும். மீதமுள்ள 80% உலகின் நாணயமாக மற்ற நாடுகளில் புழங்குகிறது. இந்த மேலாண்மையின் வழியே அமெரிக்கா தனது மக்களை, தங்களது இயல்புக்கும் மேலாகச் செலவழிக்க அனுமதிக்கிறது. சேமிப்பது என்பது அம்மக்களிடம் இல்லை. அவர்களது தான்தோன்றித் தனமான வாழ்க்கை முறையைப்பற்றி வினவப்பட்டபோது, சீனியர் புஷ் (ஜார்ஜ் புஷ்ஷின் தந்தை) அமெரிக்க அதிபராக இருந்தபோது கூறிய வார்த்தைகள் : "The life Style of American Citizen is not open for Negotiation" அதாவது அவர்களது வாழ்க்கை முறையைப் பற்றிப் பேசுவதை அனுமதிக்க முடியாது என்று ஆணவமாகக் கூறினார். அந்நிலையே இன்றும் தொடர்கிறது என்பது யதார்த்தம்.
"National Housing Bubble" எனக் கூறப்படும் அமெரிக்காவின் நிதிக் குளறுபடி, இந்தியாவின் ஆறு ஆண்டு செலவுகளுக்கு ஈடான அளவிற்கு உள்ளது. (இந்தியாவின் ஆண்டு வரவு செலவு திட்டம் ரூ.7.0 லட்சம் கோடி).

அமெரிக்காவின் குளறுபடிக்கு காரணமான வீட்டுக்கடன் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

manmohan (1) தேவையைக் கணிக்காமல் மிதமிஞ்சிய நிதியைச் செலவிட்டு வீடுகளைக் கட்டி, அவை விற்காமல் தேங்குவது.
(2) அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் 20% முதல் 80% வரை விலை ஏற்றம் அதிகரித்ததால் ஏற்பட்டுள்ள சிக்கல்.
(3) வாங்கும் திறன் பெற்றிராதவர்களையும், ஊக்குவித்து வீடுகளை வாங்கச் செய்ததால் தவணையைக் கட்ட இயலாமல் திண்டாடுபவர்களினால் ஏற்பட்டுள்ள சூழல்.
(4) தமது நிதி நிலையைச் சரியாகக் கணிக்காத அமெரிக்க குடிமக்கள், விற்பனையாளர்களின் மோசடி வலையில் சிக்கி விழி பிதுங்கி நிற்கிறார்கள். இவர்கள் தங்களது உதவிக்கு அமெரிக்க அரசை எதிர்நோக்குகிறார்கள்.
அரசின் இந்த "நிதிக் குளறுபடியின்'' தொடர் விளைவாக "CITI Group" என்ற அமெரிக்க நிறுவனத்தில் 55,000 பேர் வேலையிழந்தி ருக்கிறார்கள். மேலும் பல நிறுவனங்களில் லட்சக்கணக்கில் அமெரிக்க மக்கள் வேலையிழப்புக்கு ஆளாவர். தற்போது உள்ள 6.5% வேலையின்மை, பலமடங்கு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அண்மையில் "மஸ்கட்டில்' இந்திய வம்மவளியினரிடம் பேசும்போது, அமெரிக்க நிதிச் சிக்கல் நமது நாட்டில் கடுமையான பாதிப்புகளை நிகழ்த்துமெனவும், அது நீண்ட காலம் நிலைத்திருக்கும் எனவும் வெளிப்படையாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். ஆனாலும் இந்த உலகமயப் பொருளாதாரக் கொள்கை தொடரும் என்று அறிவித்துள்ளார். அதனால் பல நன்மைகளும் விளைந்துள்ளன என்று கூறும் அவர் அவற்றை விளக்க முற்படவில்லை. அவரும் மேனியாகாந்தியும், எதிர்க்கட்சியான பா.ச.க. வும், அமெரிக்க அடிவருடிகளாக உள்ளனர் என்பது வெட்கப் படவேண்டிய ஒன்று. அணுசக்தி உடன்பாட்டிலும் இவர்கள் காட்டிய அவசரமும், பா.ச.க.வின் பாமங்கு எதிர்ப்பும் நாமறிந்ததே.

அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதி, இந்தியாவைப் போல் பல மடங்கானதால், அவர்களின் பாதிப்பும் அதிகமாகவே இருக்கும். ஆனால் சீனா வலுவான பொருளாதாரச் சூழலைக் கைக்கொண்டு இருப்பதால், உடனடியாகத் தங்களது உள்நாட்டு மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளனர். நில நடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், அதில் முதலீடு செய்து மக்கள் துயர் துடைக்கவும் பொருளாதாரச் ”ணக்கத்தை நீக்கவும் முனைந்துள்ளனர்.

இந்தியாவில் 33% மக்கள், அமெரிக்காவின் சிறைக்கைதிகளைவிட மோசமான வாழ்நிலையிலிருக்கிறார்கள் என்று ஓர் ஆலிவு கூறுகிறது. 130 மில்லியன் டன் உணவு உற்பத்தி, இந்தியாவிற்கு தற்மர்பை வழங்கியிருந்கிறது என்பது பெருமைப்பட வேண்டியதெனினும், வாங்கும் சக்தியற்ற மக்களுக்கு அதுபயன்படாது, அவர்கள் பட்டினி கிடக்கும் நிலைதான் தொடர்ந்து நிலவுகிறது. அமெரிக்க இறக்குமதி (Goods & Services) குறைவதனால் ஏற்படும் பாதிப்பினை இந்தியா, தனது உள்கட்டமைப்பு வேலைகளில் முதலீட்டினை கணிசமாக அதிகரிப்பதன் மூலம் தவிர்க்கலாம் என்பதே வல்லுனர்களின் கருத்து....
இந்திய அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com