Keetru Penniyam
Penniyam
டிசம்பர் 2008
தலையங்கம்

சமூக அறிவியல் பண்பாடே தமிழர் பண்பாடு


வணக்கம்!

சென்ற இதழின் ஆசிரியவுரையினை மிகவும் கவனத்துடன் பரிசீலனை செய்து கடிதங்கள் வாயிலாகவும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் தமது கருத்துக்களை ஆர்வத்துடன் வழங்கிய அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். ‘முயன்றால் முடியாதது எதுவுமில்லை', ‘முயற்சி திருவினையாக்கும்’ என்கிற சொல்லாடல்களோடு ‘உங்களது விடா முயற்சியில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இதழியல் பணியில் வெற்றி பெறுவது உறுதி' என்றும் உற்சாகமூட்டிய தோழர்களுக்கும் மிகுந்த நன்றி!

புதிய பெண்ணியம்


ஆசிரியர்
லலிதா

பொறுப்பாசிரியர்
இளையராஜா

இணை ஆசிரியர்
நிர்மலா

ஆண்டுக் கட்டணம்: ரூ.120
வாழ்நாள் கட்டணம்: ரூ.1000
வெளிநாடு: $20

தொடர்பு முகவரி
பாலாஜி டவர், முதல் மாடி,
4, பாரதி தெரு,
காவேரி நகர்,
சைதாப்பேட்டை,
சென்னை - 600 015,
தொலைப்பேசி: 044-24323096
Email: [email protected]

பெண்ணியம் - முந்தைய இதழ்கள்
கடிதம் வாயிலாக அரிய கருத்தொன்றினை வழங்கியதோடு, தொகை தந்து உதவிடவும் முன்வந்த ஐயா மருத்துவர் அரங்கசாமி அவர்களின் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதனை நடைமுறைப் படுத்துவது மிகவும் கடினம் என்ற போதும், முயன்று தான் பார்ப்போமே என்றே முடிவு செய்திருக்கிறோம். மருத்துவர் அவர்களுக்கு கடிதம் வழியே நமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டோம். பெண்ணியத்தில் அக்கறை கொண்ட தோழர்கள் தகுதி உடையோரை அதாவது ‘புரவலர்களை' பரிந்துரை செய்யலாம். அல்லது மனமுவந்து தாமாகவும் முன் வரலாம்.

புதிய பெண்ணியம் இதழில் புரவலர்களின் புகைப்படங்கள் வெளியிடப்படுவதுடன் அவர்களது வாழ்க்கைக் குறிப்பும் இடம் பெறும். புரவலர் நிதி இரு வகையாகப் பிரிக்கப்பட்டு ரூ.5,000/ மற்றும் ரூ.10,000/ என்ற அளவில் பெறப்படும். ரூ.10,000/ வழங்குவோரின் புகைப்படம் முன்னட்டையில் சிறுபகுதியில் வெளியிடப்படும்.

தொலைபேசியில் பேசிய ஒரு தோழர் பெரியாரியப் பெண்ணியவாதிகளாக இருக்கும் பெண்களைக் கண்டறிந்து அவர்களை ஆசிரியர் குழுவில் இணைப்பதன் மூலமும் இதழை நிலை நிறுத்தலாம் என்றொரு கருத்தினைச் சொன்னார். இதுவும் நல்லதோர் ஆலோசனை என்றபோதும் இந்த இரண்டாண்டுகளில் பெரியாரியம் தொடர்புள்ள எந்த பெண்மணியும் அத்தகைய தொடர்பினைத் தொடர்ந்து கொள்ளவில்லை என்பதே உண்மைநிலையாக இருக்கிறது. எதிர் வரும் நாட்களில் ஒருவேளை இது நடைமுறையில் வரக்கூடும். பெண்ணியக் கருத்துக்களில் அக்கறை கொண்ட ஆண்களும் அதில் இடம் பெறுவர் என்பதிலும் சந்தேகம் இல்லை.

கவிஞர் சி.விநாயகமூர்த்தி அவர்களின் ‘நல்ல விளம்பரத்தினைப் பெறுவதும் இதழின் வளர்ச்சிக்கு உதவும்’ என்ற கருத்தும் ஏற்கப்பட வேண்டியதே. ‘கூட்டு முயற்சி என்று நான்கு பேர் ஒன்று சேர்ந்தால் இடைஞ்சல்கள் தான் தலையெடுக்கும். இது ஓர் அனுபவ உண்மை’ என்று அம்பாசமுத்திரம் கவிஞர் இரா.நவமணி அவர்கள் கூறியதையும் கவனத்தில் கொள்ளவே செய்கிறோம். எனினும் தொடங்கப்பட்ட பணியினது இன்றியமையாத் தேவையினையும், தொலை நோக்கையும் தெளிவாக அறிந்து கொண்ட நிலையில், அது தொடர்பாக ஏற்படும் இன்னல்களை மனம் விட்டுப் பேசுவது, விட்டுக் கொடுப்பது என்கிற அணுகுமுறைகளின் வழியே எதிர் கொண்டு வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

சிறப்பான முயற்சிகளுக்கு எப்போதும் காலமும் கூட துணைநிற்கும் என்பதுவும் ஓர் அனுபவ உண்மை அல்லவா?

மீண்டும் சந்திப்போம்!

நன்றி!