Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Neythal
Neythal Logo
மார்ச் - ஏப்ரல் 2008

நிகழ்வு
விக்ரமாதித்யன் மணிவிழா

தமிழின் முக்கிய கவி ஆளுமையான விக்ரமாதித்யனின் மணிவிழா திருக்கடையூரில் 21-03-2008 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விக்ரமாதித்யன் என்கிற நம்பிராஜனின் இரு மகன்களும் நெருங்கின சுற்றமும் நட்பும் விக்ரமாதித்யனையும் அவரது துணைவியையும் சிறப்பு செய்தனர். உறவின் நெகிழ்வோடும் நட்பின் இணக்கத்தோடும் நடந்த இந்த நிகழ்வில் நாங்களிருவரும் கலந்து கொண்டது இனிய அனுபவமாக இருந்தது.

கோணங்கி, சங்கரராமசுப்பிரமணியன், வித்யாஷங்கர், சி.மோகன், லக்ஷ்மி மணிவண்ணன், மதிகண்ணன், பாலைநிலவன், ரவி சுப்பிரமணியன், பாண்டிய ராஜன், பிரான்சிஸ் கிருபா, பாலகுரு, சுகன், புலியூர் முருகேசன் மற்றும் இளங்கவி அருள் உள்ளிட்ட எழுத்துலக நண்பர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த மணிவிழா ஒரு அறிவிக்கப்படாத இலக்கியச் சங்கமம் போல நிகழ்ந்தது. சிறு சிறு இலக்கிய விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் புதிய நட்புகள் என நிகழ்ந்த இந்த மணிவிழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தக வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டது சிறு வருத்தம். எல்லாவற்றிலும் மேலாக, விக்ரமாதித்யன் என்கிற கவியை அவரின் பலவீனங்களோடு அரவணைத்து, கட்டிக் காக்கிற அவரின் குடும்ப அங்கத்தினர்கள் வணக்கத்திற்குரியவர்கள்.

ம.ஜெயப்பிரகாஷ்வேல்
இரா.முத்தெழிலன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.