Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Neythal
Neythal Logo
மார்ச் - ஏப்ரல் 2008

வழிவிடு.... வழிவிடு....
விக்னேஷ் ராம்

மேட்டுக்குடி வீட்டு வாசல் நுழையாது பின்கட்டுப் புகுந்து
வந்த வேலை கடனே செய்து திரும்பின குப்பனும் சுப்பனும் போல
ஊருக்குள் வராமல், கொல்லைப்புறமாம் கோயம்பேட்டில்
பயணிகள் உதிர்த்து, வந்த வழியே பைபாஸில் திரும்பிப்போ
எனப் பணித்த ஆம்னி பஸ்கள் இன்று மீண்டும் சாலைகளில்
சாரி சாரியாய்க்குரல்வளை நெறிக்க.....

கட்டிட வேலை செய்து கல் சுமந்து கைரேகை தேய்ந்த கூட்டம்
கட்டண உயர்வால் கால்நடையாய்ச் செல்ல
கணிணி வெறித்து, காலணா பெறாச்த மின்னஞ்சல் பரப்பி
காஃபிடேரியாவில் கடலை வறுத்து, கழுத்தில் கம்பெனிக் கயிறோடு
கண்ணயர்ந்து ஆம்னி பஸ் அம்பாரி மேலமர்ந்து சாலை பிதுக்குகிறார்கள்.
கடவுளே காப்பாற்று... சென்னையை...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.