Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Neythal
Neythal Logo
மார்ச் - ஏப்ரல் 2008

ஒரு கை குறைகிறது
பார்கவன்

ஒரு கை குறைகிறது
இருக்கிறவர்களுக்கு
ஒரு கை குறைகிறது.

யாராவது வருவார்களா என்று
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
ஒரு கை குறைகிறது
நிரம்ப நேரமாக
காத்துக்கொண்டே இருக்கிறார்கள்
ஒரு கை குறைகிறது.
ஒரு கை குறைகிறது
ஆரம்பிக்கவே முடியாமல்போய்
அவஸ்தைப்படுகிறார்கள்
ஒரு கை குறைகிறது
உட்கார்ந்திருக்க முடியாமல்
பதற்றத்துடன் தேடுகிறார்கள்
ஒரு கை குறைகிறது
இருந்த இடத்திலிருந்து
எழுந்தே விட்டார்கள்
நீங்கள்
ஒரு கையாக வரமுடியுமா?
நான்
ஒரு கையாகப் போகட்டுமா?
அல்லது அவனை ஒரு கைக்கு
அனுப்பி வைக்கலாமா?
ஒரு கை இல்லாமல்
ஒன்றும்நடக்காது
ஒரு கை வந்து உட்கார்ந்தால்தான்
உருப்படியாக ஏதாவது செய்யலாம்
ஒரு கை குறைகிறது
ஒரு கை குறைகிறது
ஒரு கை குறைவாகவே இருக்கிறது


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.