வெயிலின் கிளைகளை ஓவியமாக்குபவள்
வா. மணிகண்டன்
ஆண்களால் நிரம்பியிருக்கும்
பேருந்தில் ஏறியவள்
வெறித்து
கணங்களைக் கடத்தினாள்.
இரவின் பக்கங்களில் எழுதிய கதைகளில்
மழைத்துளியின் கன்னங்களில் வரைந்த ஓவியங்களில்
காற்றின் இடைவெளிகளில் நிரப்பிய கவிதைகளில்
நினைவுப் பந்தலிட்டு
வசிக்கத் துவங்கிய
அவளுக்கும்
எனக்குமிடையில்
நீ
வருகையில்
சொல்லத்துவங்கினாள்
தான்
வெயிலின் கிளைகளை
ஓவியமாக்குபவள் என்று
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|