Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Neythal
Neythal Logo
மார்ச் - ஏப்ரல் 2008

சில்லரை
அனிதா

இரண்டு என்ற எண்ணை
விரல்களால் குறித்துக் காட்டுவது போன்ற
இரண்டு ரூபாய் நாணயம் ஒன்று
கொஞ்சம் காலமாய் வைத்திருக்கிறேன்.

எங்கோ போய்விட்ட என் பூனைகுட்டிக்கும்
போன வாரம் இறந்துபோன என் கரப்பான்பூச்சிக்கும் பிறகு
அடிக்கடி நினைவில் வரத் துவங்கிவிட்டது இது.
கைப்பையை எடுக்கையில் சின்னதாய் சிரித்துக்கொண்டும்
திறக்கும்போதெல்லாம் பார்த்தபடியுமிருக்கிறேன்.

பேருந்துக்காய் காத்திருக்கும் இந்த நிமிடம்
ஏறியதும் நடத்துனரிடம் கொடுத்துவிட நினைத்திருக்கிறேன்.
கொடுக்கவேண்டுமெனத் தோன்றுகிறது.
கொடுக்கிறேன்.

உன்னிடம் ஏன் சொல்கிறேனெனத் தெரியவில்லை.
சொல்லவேண்டுமெனத் தோன்றுகிறது.
சொல்றேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.