Keetru Neythal
Neythal
ஜனவரி 2009
தமிழகக் கரையோரங்களில்
கடல்சார் தொல்லியல் அகழாய்வுகள்
இரா. கண்ணன்

மிகப் பழங்காலத்தில் இருந்தே, தமிழகத் துறைமுகங்கள் கடல் தாண்டிய வணிகத்தில் மிகப்பெரும் பங்களிப்பை செய்து வந்துள்ன. 800 கி.மீ.க்கும் அதிக நீளமுள்ள தமிழகக் கடற்கரை சிறியதும் பெரியதுமான பல்வேறு துறைமுகங்களை உள்ளடக்கியது. சங்க இலக்கியக் குறிப்புகளில் இருந்து மூன்றாம் நூற்றாண்டு முதலாகவே தமிழகம் தென்கிழக்கு ஆசிய நாடுகள், சீனா, ரோம், கிரேக்கம் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்தது என்று நாம் அறிவோம். அரிக்கமேடு, காவிரிப் பூம்பட்டினம், கொற்கை, நாகப்பட்டினம், முசிறி ஆகியன அக்காலத்தில் முக்கியத் துறைமுகங்களாக விளங்கியுள்ளன.

பிளினி, பெரிப்ளஸ், இட்ஸிங் மற்றும் பாஹியான் போன்ற வெளிநாட்டுப் பயணிகள், வரலாற்றாசிரியர்கள் தமிழகத் துறைமுகங்களையும், அதன் வியாபாரப் பொருட்களையும் குறித்து எழுதியுள்ளனர். காவேரிப் பூம்பட்டினம், கொற்கை மற்றும் அரிக்கமேடு முதலான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் பழங்கால வாணிபம் மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை உறுதிப்படுத்துவனவாக உள்ளன. பூம்புகார் மற்றும் மாமல்லபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட கடலடி அகழாய்வுகள், மூழ்கிப்போன துறைமுகக் கட்டுமானங்களை கண்டுபிடிக்க உதவியுள்ளன. அதிகம் வெளியே தெரியாத, சிறிய அளவில் நடைபெறுகிற இத்தகைய கடலடி அகழாடீநுவுகள் பற்றிய அறிமுகமாக இக்கட்டுரை எழுதப்படுகிறது. இந்தியாவின் மேற்குக் கரையோரத்தில் நிகழ்த்தப்படுகின்ற கடலடி அகழாய்வுகள் பெரும்பாலும் அரசியல் சாயம் பூசப்பட்டு வெளியிடப்படுகின்றன. ஆரிய நாகரிகம், சிந்து நாகரிகம், திராவிட நாகரிகம் போன்ற அரசியலுக்குள் அவை சிக்கிவிட்டன. இந்நிலையில் தமிழகக் கடற்கரையில் வெகு தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட கடலடி அகழாய்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றுள் மேற்சொன்ன சாயம் இன்னும் பூசப்படாவிட்டாலும் பின்னாளில் தெளிக்கப்படலாம்.

பழங்கால இலக்கியக் குறிப்புகள், கல்வெட்டுகள் இவற்றைத் துணை கொண்டும், அவற்றை உறுதிப்படுத்தவும் இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாமல்லபுரம், பூஞ்சேரி, வாசவ சமுத்திரம், அரிக்கமேடு, பரங்கிப்பேட்டை, தரங்கம்பாடி, திருமலைராயன் பட்டினம், கோடிக்கரை, தொண்டி, தேவிப்பட்டினம், மனக்குடி, புட்டாந்துரை, கொற்கை, பெரிய பட்டினம், அழகங்குளம், இராமேஸ்வரம், காயல்பட்டினம் மற்றும் குலசேகரப்பட்டினம் போன்ற இடங்கள் சமீப காலமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. ஆடீநுவில் கிடைத்த தகவல்கள் இந்த இடங்களில் கடல் வாணிபத்திற்கான கட்டுமானங்கள் இருப்பதை உறுதி செய்கின்றன.

அரிக்கமேட்டில் உள்ள உப்பங்கழியில் காணப்படும் கட்டிட எச்சங்கள் ரோமானியர்களின் நங்கூரமிடும் வசதித்தளங்களை ஒத்திருக்கின்றன. பின்னாளில் பிரெஞ்சுக்காரர்களின் தாக்கமும் இவற்றில் அறியப்பட்டுள்ளன. சிதைவுற்ற நிலையில் இருக்கும் சோழர் காலக்கோயில் ஒன்றையும், டச்சுக்காரர்களின் துறைமுக எச்சங்களையும் தரங்கம்பாடி கடற்கரையில் காணலாம். தரங்கம்பாடி கோட்டையின் ஆவணங்களில், அங்கு வந்து போன வெளிநாட்டுக் கப்பல்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அழகங்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் ரோமானியர்களது தொடர்பை உறுதிப்படுத்துகின்றன. கப்பல்களின் பாகங்கள், மதுக்கலயங்கள் மற்றும் எண்ணற்ற சிறு பொருட்கள் அறியப்பட்டுள்ளன. ஏதோ ஒரு நிகடிநவைக் குறிக்கும் விதமான கல்லினாலான நினைவுத் தூணொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரிய பட்டிணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆடீநுவுகள் அத்துறைமுகங்கள் 12 - 14ம் நூற்றாண்டுகளில் முக்கியத்துவம் பெற்றிருந்ததை உறுதிப்படுத்துகின்றன. கல்லினாலான பழமையான நங்கூரம் ஒன்றும் இங்கே கண்டறியப் பட்டுள்ளது. முத்துக்குளிப்பதில் முக்கியமான இடமாக சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கொற்கை தற்போது கடலிலிருந்து 7 கி.மீ தள்ளி நிலப்பகுதிக்குள் உள்ளது. இப்பகுதியில் கடல் பின்வாங்கியுள்ளது.

இராமேஸ்வரம் கோயிலின் வடகிழக்குத் திசையில் 5 கி.மீ தொலைவில் பழைய துறைமுகம் இருந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. காயல் பட்டினம் மற்றும் குலசேகரப்பட்டினம் இன்றளவும் கடல் வாணிபத்தில் முக்கிய இடமாய் உள்ளன.மிகுந்த பொருட்செலவு, குறைந்த அளவிலான ஆடீநுவுக்கருவிகள் மற்றும் தூண்டுதலின்மைஆகிய காரணத்தால் இத்தகைய ஆடீநுவுகள் தொடர்ச்சியாக நடைபெறுவதில்லை. கடல் நீரோட்டங்களின் மாற்றத்தால் ஆய்வுப் பகுதிகளை மீண்டும் கண்டறிவது சிரமமாகவும், காலம் மற்றும் பொருட்செலவு மிக்கதாகவும் உள்ளது என்றாலும் நமது பழைய கடல்சார் வாணிபத் திறமையை வெளிக்கொணர்வதாய் அமைகிற இத்தகைய ஆய்வுகள் புதிய செய்திகளை கொண்டு வரும் என்று நம்புவோம்.