Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Neythal
Neythal
ஜனவரி 2009
திரையில் தத்தளிக்கும் அறிவியல்-இரண்டாம் பகுதி
ம. ஜெயப்பிரகாஷ்வேல்

கே. எஸ். ரவிக்குமார் இயக்கி கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் பார்த்த அன்று இரவு நண்பர் விக்னேஷ்ராமிடம் தமிடிந சினிமாவில் அறிவியலை அபத்தமாகக் கையாளும் போக்கு குறித்துப் பேசினேன். அந்தத் தகவல்களை ஒரு கட்டுரையாக எழுதச் சொன்னேன். அவரும் சிறிய கட்டுரையை திரையில் தத்தளிக்கும் அறிவியல் என்ற அருமையான தலைப்பிட்டு நெடீநுதலுக்காக அனுப்பினார். அதை ஒட்டிய எனது கருத்துக்களையும் பதிவு செடீநுகிற நோக்கில் அதே தலைப்பில் இந்த இரண்டாம் பகுதி.

பாலியல் உறவை புனிதம் என்ற போர்வைக்குள் மறைத்து வைத்து இருக்கிற நமது சமூகம் அறிவியலை எல்லாத் தளங்களிலும் பெரிய சங்கதி என்று சொல்லி பரண்மேல் வைத்து விட்டது. அதை எட்டமுடியாத விஷயமாக ஆக்கிவிட்டது.

புழுதிபட்டது தான் நம் அறிவியல் என்றாலும் அதை எட்டமுடியாத விஷயமாக சாமானிய மக்களை எண்ண வைத்தத்தில் ஊடகங்களுக்கும் அறிவியல் அறிஞர்களுக்கும் சமபங்கு உண்டு. மற்ற தளங்களைப் பேசுவதை விட சினிமாவில் குறிப்பாக தமிடிந சினிமாவில் அறிவியல் எவ்வாறு பிம்பப்படுத்துகிறது என்ற விஷயத்தைத்தான் இந்த இரண்டு பகுதிகளிலும் நாங்கள் சொல்ல விரும்புகிறோம்.

தீவிர அறிவியல் அறிஞர் என்றால் தூங்காத பிராணி; பிள்ளை மனைவியை ஏறிட்டும் பார்க்காதவர் என்ற பொதுப் பிம்பத்தை தொன்று தொட்டு தமிழ்சினிமா உருவாக்கி விட்டது. ஓரு படத்தில் சிவாஜி கணேசன் தீரா நோடீநுக்கு மருந்து கண்டுபிடிப்பதாக வரும் காட்சிகள், இன்னொரு படத்தில் மின்னலின் ஆற்றலைக் குப்பிக்குள் அடக்க ஆடீநுவு செடீநுகிற காட்சிகளில் எம்.ஜி.ராமசந்திரன் பட்ட (கொடுத்த என்று எழுதினால் இன்னும் பொருத்தம்) வேதனைகள் இவைகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

அறிவியல் பூர்வமான விஷயங்களைத் தொடுகிற படங்களில் கூட மிக அசிரத்தையான முறையில் காட்சிகள் அமைக்கப்படுவது மன்னிக்கவே முடியாதது. உழைக்க வேண்டும் ஒப்பேற்றக் கூடாது. ‘ஈ’ மற்றும் ‘தசவதாரம்’ ஆகியன சமீபத்திய உதாரணங்கள். பணத்திற்காக செடீநுயப்படும் விபரீத மருத்துவ ஆடீநுவுகளின் பிண்ணனி பற்றிய துணிச்சலான படம் ஈ என்ற போதிலும், படத்தில் மேற்கொள்ளப்படுவதாக காட்டப்படுகிற ஆடீநுவுகளின் தன்மை பூடகமாகவே மேலோட்டமாகவே காட்டப்பட்டது. தெளிவில்லை ஆனால் முற்றிலும் தவறு என்று சொல்லிவிட முடியாது. இந்தக் குறையை கனாகண்டேன் படத்தில் பார்க்க முடியாது. கே.வி. ஆனந்த் அந்தப் படத்தில் வருகிற அறிவியல் ரீதியிலான காட்சிகளுக்கு ஒப்புக்கொள்கிற வகையில் விளக்கமும் கொடுத்திருப்பார். படத்தில அக்காட்சிகளுக்காக உதவிய அறிவியல் நிபுணர்களுக்கு நன்றியும் சொல்லியிருக்கிறார். இந்தக் கண்ணோட்டத்தில் சேர்கிற மற்றொரு படம் சாமி இயக்கிய மிருகம் ஹெச்.ஐ.வி. வைரஸின் நுட்பமான புற அமைப்பு, அது தாக்கி அழிக்கும் செல்கள் என எல்லாமும் மற்றும் அந்த நோயின் காரண காரியங்களையும் தெளிவாக காட்சிப்படுத்தியிருக் கிறார் சாமி.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் படமாக்கம் போன்ற பல விஷயங்களில் அல்லாமல் அறிவுப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் காட்சியமைத்தல் என்கிற கோணத்தில் அளந்து பார்த்தால் கமல்ஹாசனும், ரவிக்குமாரும் வெட்கப்பட வேண்டிய படம்தான் தசாவதாரம். அறிவுப் பூர்வமாக காட்சியமைத்தல் என்பது தமிடிநத் திரைப்படங்களில் கதாநாயக பிம்ப வழிபாட்டில் செத்துப்போகிறது. மிகச் சமீபத்திய உதாரணம் குருவி. கதாநாயகனை ஒரு லிப்ட்டுக்குள் அடைத்துப் பூட்டி, லிப்டை மேலே கொண்டுபோடீநு இணைப்பைத் துண்டித்தால் கட்டுப்பாடற்று கீழே வரும் லிப்டோடு காதாநாகனும் மண்ணுக்குள் போவார் என்பது வில்லனின் திட்டம். நன்றாகத் தான் இருந்தது. அவரும் நம்பி செய்துவிட்டுப் போவார். தரைக்கு அடியில் தரணி படுத்திய பாடு; அம்மாடியோவ்.. மண்ணைப் பிளந்து தண்ணீருக்குள் போடீநு பூட்டியிருந்த லிப்டை விட்டு வெளியே வந்த கதாநாயகனைப் பார்த்த போது, வடிவேலு பாணியில் ‘முடியல’. தரைக்கு அடியில் தண்ணீர் இருக்கும்தான். ஆனால் நீச்சல் அடிக்கலாம் என்று எடுத்த தரணியை என்ன சொல்வது? இவர்தான் ஏற்கனவே அரை இறுதியில் தோற்ற கில்லி அணியை இறுதிப் போட்டிக்கு கூட்டிப் போனவர்.

அறிவியல் பூர்வமாகத்தான் படமெடுக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. ஆனால் அறிவுப் பூர்வமாகவாவது படமெடுப்பது தார்மீகக் கடமை. கேயாஸ் தியரியை மேற்கோள் காட்டி ஆரம்பித்த படத்தில் அடிப்படை அறிவியலைஅடிப்படை அறிவை தவறவிட்ட காட்சிகள் இருப்பது என்ன நியாயம்? அம்மன் முன் வேப்பிலை எடுத்து ஆடினால் வீட்டில் உள்ள குழந்தையின் அம்மை நோய் விலகுகிறது. லேசாக தலையில் அடிபட்டாலே வாகன ஓட்டிகள் செத்துக்கூட போகிறார்கள். சினிமாவில் மட்டும் மாங்கு மாங்கென்று அடிக்கிறார்கள் அடிவாங்குகிறார்கள். தமிடிந சினிமாவில் புற்றுநோடீநு சகட்டுமேனிக்கு அடிவாங்கியிருக்கிறது. இங்கே கல்லூரிப் பேராசிரியர்கள் - காமெடியர்கள், அறிவியலறிஞர்கள் - உணர்ச்சிகளற்றவர்கள்.

சயன்ஸ்ஃபிக்ஷன் என்றொரு வகையுண்டு. அதில் என்ன விதமான கற்பனைகளையும் பரிசோதனைகளையும் பண்ணிப் பார்க்கலாம். சக்தி சிதம்பரத்தின் ‘வியாபாரி’, எஸ்.ஜே. சூர்யாவின் ‘நியு’ முதலியன இவ்வகையில் அடங்கும். இதில் தத்துபித்துகள் இருக்கலாம். ‘ஆர்டிபீசியல் இன்டலிஜென்ஸ்’ மற்றும் ‘மைனாரிட்டி ரிப்போர்ட்’ ஆகிய படங்களை எடுக்கும் முன்பு பீல்பெர்க் அது சம்பந்தமான வல்லுநர்களைக் கொண்டு கருத்தரங்கம் நடத்தினார்.

அமெரிக்கா ஆம்ஸ்ட்ராங் கோஷ்டியினரை நிலவுக்கு அனுப்பிய ஆய்வையே அரங்கம் அமைத்துப் படமாக்கப்பட்டது என்று சொல்பவர்கள் உண்டு. இதன் மூலம் சொல்ல வருவது அறிவியல் பூர்வமான விஷயங்களை அணுகும்போது சீரிய தயாரிப்பு வேண்டும். காவல் அதிகாரி பற்றிய படமென்றால் ஒரு உண்மையான காவல் அதிகாரியிடம் உடல்மொழி பயில்கிற தயாரிப்பு, உழைப்பு இதிலும் வேண்டும்.

எஸ்.பி. ஜனநாதன் எங்கள் விடுதி விழாவில் பேசும்போது அறிவியல் கற்றவர்கள் சினிமாவிற்கு வரவேண்டும் என்றார். அதுபோலவும் சிலர் வரட்டும். ஆனால் சினிமாவின் நுட்பங்களைத் தெரிந்த இயக்குநர்கள் சில காட்சிகளுக்காக அறிவியல் கற்றவர்களை விவாதத்திற்காகவாவது பயன்படுத்திக் கொள்ளலாம்; தவறில்லை.

இந்த இரு தொடர்களும் குறை சொல்லும் நோக்கோடு எழுதப்பட்டவை அல்ல. ஆதங்கத்தை வெளிப்படுத்துவன. மாற்றம் நிகழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com