Keetru Neythal
Neythal
ஜனவரி 2009
எங்கே செல்லும் பாதை...
இமயவரம்பன்

இக்கட்டுரை நமது நாட்டின் ஒவ்வொரு அசைவிற்கும் காரணமாக இருக்கும் இன்றைய அரசியல் சூடிநநிலை, கொள்கையில்லாமல் வாரிசுகளை அரியணை ஏற்றி, ஜாதி மதம் கலந்து, அரிதாரம் பூசி, நிதி வசூல், பேனர் கலாச்சாரம், மக்களுக்கு பயன்தராத மாநாடுகள் என்று திசைமாறி பயணம் செய்யும் அவலத்தைக் கவலையுடன் அலசுகிறது.

கொள்கையா... வெங்காயம்

பகுத்தறிவு பட்டறையில் வளர்ந்த நமது கட்சிகளில் கொள்கையுடைய கட்சிகளை நாம் மைக்ரோஸ்கோப் கொண்டு தேடினாலும் கிடைக்காது என்ற போதிலும், இவர்களுடைய பேச்சுகளும், செயல்களும் நாளுக்கு நாள் வேறுபடுவதை வேதனையுடன் சுட்டிகாட்ட கடமைப்பட்டுள்ளோம். உதாரணத்திற்கு நாட்டின் முக்கியமான பிரச்சினையான அமெரிக்க அணுஆயுத ஒப்பந்தத்தைக் கூட தமிழக முதல்வர் நேரடியாக ஆதரிக்கவில்லை. அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்காகவும் லாவகமாக பேசுகிறார். இவர்கள் எதிர்காலத்தில் எந்தபக்கம் காற்று அடிக்கிறதோ அந்த பக்கம் சாயப்பொழுதே மௌனத்தை கடைபிடித்து கொள்கை முடிவை அறிவிக்காதவர்கள்.

தமிடிநநாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் நிலை ஐயோ பாவம்! இவர்களே தங்கள் தேர்தல் அறிக்கையில் சேதுசமுத்திர திட்டம் வேண்டும் என்பார்கள். அதுவே இப்பொழுது திமுக செயல்படுத்தும்போது அதற்கு எதிராக பக்கம் பக்கமாடீநு அறிக்கை விடுகிறார்கள். அதுவும் வைகோவை கூட்டணியில் வைத்துக் கொண்டு. அதற்கு வைகோவும் மௌனம் சாதித்து தமது கொள்கை விசுவாசத்தை காட்டுகிறார்.

மாநில கட்சிகளின் நிலைமை இப்படி என்றால் தேசியக் கட்சியின் நிலைமை கவலைக்குரியது. தமிழ்நாடு பாஜக ஒகேனக்கல் எங்களுக்கே சொந்தம் என்கிறது. காவிரி நீரை கர்நாடகம் தர வேண்டும் என்கிறது. ஆனால் கர்நாடக பாஜக எதிர்ப்பதோடு மட்டுமில்லாமல் அதன் முதல்வர் வேட்பாளர் தமிடிநநாட்டிற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செடீநுகிறார். அதேபோல் கேரள செந்தோழர்களும், தமிடிநநாட்டின் செந்தோழர்களும் முல்லை பெரியாறு பிரச்சினையில் முரண்பாடுகளின் மூட்டைகளை அவிடிநத்துவிடுகிறார்கள்.

காங்கிரஸ் கேரளத்தை ஆட்சி செடீநுத போதும், கர்நாடகத்தை ஆட்சி செய்தபோதும் அதன் மாறுபட்ட அரசியல் வெளிப்பட்டது. இன்றும்கூட ஆந்திராவில் ஆட்சி செடீநுது கொண்டு மத்தியில் நமது தமிழக முதல்வரோடு கைகுலுக்கி கொண்டு பாலாறு விஷயத்தில் கோளாறு பண்ணுகிறது. ஆக நமது பார்வையில் கதர் தேசிய கட்சி மூன்று மாநிலத்திலும், செஞ்சட்டைக்காரர்கள் கேரளத்திலும், காவிச்சட்டைக்காரர்கள் கர்நாடகத்திலும், அவரவரின் தேசிய கொள்கையை பறக்கவிடுகிறார்கள்.ஆனாலும் இவர்களிடம் சில கொள்கைகள் உள்ளதை நம்மால் மறுக்கமுடியாது. அதாவது திமுகவிடம் இந்துமத எதிர்ப்புக் கொள்கை, வாரிசு அரசியல், இலவசத்தை வழங்கி மக்களை சிந்திக்காமல் சோம்பேறியாக்கும் கொள்கை, அதிமுகவிடம் ஈழத்தமிழர் எதிர்ப்புக் கொள்கை, கலைஞர் தவறி நல்லது செய்தாலும் அதை தடுக்கும் கொள்கை, மாதம் தவறாமல் கொட நாட்டில் ஓய்வு எடுக்கும் கொள்கை, செந்தோழர்களிடம் தூக்கத்தில் கூட அமெரிக்கா என்று சொன்னால் அது நல்லதோ, கெட்டதோ அதை எதிர்க்கும் கொள்கை, காங்கிரஸிடம் போலி மதச்சார்பற்ற கொள்கை, இத்தாலிய இந்திய உறவை வலுப்படுத்தும் கொள்கை, நேரு குடும்ப விசுவாச கொள்கை, பாஜகவிடம் எந்த பிரச்சினை என்றாலும் இராமரை அழைக்கும் கொள்கை என மக்களுக்கு உதவாத கொள்கைகள் ஏராளம். இதில் விந்தையிலும் விந்தை புதிதாய் கட்சி தொடங்கிய நடிகர் விஜயகாந்த் டெல்லியில் சென்று நான் காங்கிரசுடனும், பாஜகவுடனும், செந்தோழர்களோடும் கூட்டணிக்கு தயார் என்கிறார். இவரின் கொள்கை இதுதான் என்றாலும் அதையும் தாங்க தமிடிநநாடு தயாராகட்டும்.

வாரிசு அரசியல்

கண்
திறக்காத குழந்தை
படுத்திருக்கிறது;
அப்பன்
கரைவேட்டியில்!
நமது கிராமத்தில் குழந்தை பிறந்தவுடன் அப்பன் வேட்டியில் படுக்க வைப்பது மரபு. அப்பொழுதே அவனுக்கு தந்தையின் அரசியல் சாயம் பூசப்படுவதை உணர்த்துகிறது இவ்வரிகள். ஆம் நண்பர்களே! குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து அரசியல் செடீநுத திராவிடக் கட்சிகளின் வாரிசு அரசியல் பற்றி அதிகம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆட்சிக்கு ஒருவர், கட்சிக்கு ஒருவர், டெல்லிக்கு ஒருவர் என தமது குடும்பத்திற்கு நிர்வாகத்தை பிரித்துகொடுத்து பார்த்து அழகு பார்ப்பதும், இவ்வாரிசுகள் மக்களை நேரடியாக சந்தித்து வெற்றி பெற முடியாமல் போனாலும் பரவாயில்லை. இராஜ்யசபா மூலம் மத்திய அமைச்சராகும் வாடீநுப்பை இன்றைய சூடிநநிலை உருவாக்கியுள்ளது. இதற்கு எல்லாம் துண்டுகோளாடீநு அமைந்தது நமது தேசிய கட்சியான காங்கிரசின் அணுகுமுறை என்று கூறலாம். சமீபத்தில் அவர்கள் இராகுல்காந்தியை இளவரசர் என்று அழைப்பதும் பின் அதை அவர் மறுப்பதும், அர்ஜூன்சிங் போன்றவர்கள் தூக்கம் கலைந்து குரல் கொடுப்பதும், பிறகு அவரே மண்டியிட்டு நேரு குடும்பத்து விசுவாசத்தை காட்டுவதும் நல்ல நாடகமாகவே தெரிகிறது. இதில் உலக அரசியலும் விலக்கல்ல! போராளிகள் முதல் கிளிண்டன் போன்ற வல்லரசு நாடுகளின் அரசியல்வாதிகள் வரை தங்கள் குடும்பத்தினரை அரசியல் வாரிசுகளாக உருவாக்குகிறார்கள். நித்தமும் துப்பாக்கி சத்தத்தில் ஈழத்தமிழ் மக்களின் வாழ்க்கைக்காக போராடும் பிரபாகரன் போன்றோர் கூடதன் துணைவியாரை அரசியல் வாரிசாகக் கொண்டுவரப் போவதாக வரும் செய்திகள் (உண்மையானால்) நம் மனதை கவலை கொள்ள செடீநுகிறது. இந்த வாரிசு பிரச்சினை பரவலாக இந்தியாவின் பல மாநிலங்களிலும் பரவி வருகிறது. இதனால் இவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது நமது எண்ணம் அல்ல. உதாரணத்திற்கு ஸ்டாலினையும், கனிமொழியையும் ஒப்பிட்டுநாம் அரசியல் பேச இயலாது. வாரிசுகளுக்கு என பல முன்னுரிமைகள் வழங்கி திறமையான அரசியல் தலைவர்களை பின்னுக்குத் தள்ளும் போது நமது அரசியலும், ஆட்சி நிர்வாகமும் பின் தங்குகிறது என்ற நியாயத்தின் வெளிப்பாடாக இதை கருதவும்.

ஜாதி அரசியல்

தமிடிநநாட்டின் ஒவ்வொரு மறைந்த தலைவருக்கு சிலை வைக்கும் போதும் அதைப் பாதுகாக்கக் காவலரையும் நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் நமது அரசியல் சூழ்நிலை தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்தாலும் அவற்றில் 80 சதவீத கட்சிகள் ஜாதியையும் மதத்தையும் தொடர்பு கொண்டே அமைகிறது. இந்த இயக்கத்தினால் அச்சாதிய தலைவர்கள் வேண்டுமானால் பயன் பெற்றிருக்கலாமே தவிர தொண்டர் களுக்கும் அச்சாதியை சேர்ந்தவர்களுக்கும் எப்பயனும் இல்லை. தயவு செய்து இறந்த தலைவர்களையாவது சாதியை குறிப்பிட்டு ஒரு இனத்தின் தலைவராக மட்டும் கருதாமல் இருக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அரிதாரம் பூசும் அரசியல்

நமது தமிடிநநாட்டின் அரசியலில் சினிமாவும் அரசியலும் நாணயத்தின் இருபக்கமாக கருதும் அளவுக்கு எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா போன்ற தலைவர்களை நாம் நாடாள செடீநுதுள்ளோம். இதன் பயனாகத்தான் என்னவோ விஜய டி.இராஜேந்திரர், விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார் போன்றோர் அரசியல் கட்சிகளை தொடங்கியுள்ளனர். நாம் ஓர் தொழிலை செய்ய வேண்டுமானால் அல்லது ஓர் பட்டத்தை பெற வேண்டுமானால் அதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும். இவர்கள் நால்வரும் சினிமாதுறையில் உழைத்து வெற்றி பெற்று பிறகு வாய்ப்பில்லாமல் வேலை குறைகிறது என்று நினைக்கும் போது இலாவகமாக எந்த கொள்கையும் இல்லாமல் தனது ரசிகனைத் தொண்டனாக மாற்றும் விந்தை நமக்கு வேதனையை தருகிறது. சினிமாவையும், தமிழக நடிகர்களின் செயல்களையும் எதிர்த்து அரசியல் செடீநுத தொல். திருமாவளவன் போன்றோர் கூட அன்புத்தோழியில் அரிதாரம் பூசியது கொடுமையிலும் கொடுமை.இந்நடிகர்கள் அரசியலில் ஜெயித்த எம்.ஜி.ஆரைக் கொண்டே கருப்பு எம்.ஜி.ஆர்., நீல எம்.ஜி.ஆர் என்று அழைக்கும் இவர்கள் நடிப்பு சக்ரவர்த்தியாம் சிவாஜியின் அரசியல் வாடிநவையும் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

நிதி வசூல், பேனர், மாநாடு

நமது நாட்டின் நிதி வசூலில் தேசிய கட்சிகளை காட்டிலும் மாநில கட்சிகளின் பங்கு அலாதியானது. இவர்களின் பொதுகூட்ட நிதி வசூல், மாநாட்டு நிதிவசூல், என நிறுத்தாமல் தனது பிறந்தநாள் அன்று பணமாலையிட்டும், உண்டியல் வைத்தும் வசூல் செடீநுபவர்களாயிற்றே. இப்பொழுது அரசியல் கட்சிகளின் கணக்கை கேட்டு அறியலாம் என்று சட்டம் இயற்றிய போதும் எத்தனை கட்சிகள் சரியான வரவு செலவை காட்டும் என்பது கேள்விக்குறியே! மாநாடு அழைப்பு, பிறந்தநாள் வாடிநத்து பேனர்களால் தங்களின் படத்தை செல்போன் சகிதம் விளம்பரப்படுத்தி மக்களுக்கு இடையூறு செடீநுகிறார்களே, இவர்கள் இப்பணத்தை நல்வழியில் முதியோருக்கு அல்லது வேலை தேடும் இளைஞர் களுக்கு உதவினால் நாலு ஒட்டாவது கிடைக்கும். பல திருப்புமுனை மாநாடுகளைச் சந்தித்த தமிழக அரசியல் தங்களது வாரிசை முன்னிலைபடுத்தவும், தோழியோடு பங்கேற்கவும், தனது மனைவி, மச்சான் சகிதம் நானே தலைவன் என தம்பட்டம் அடிக்கவும் பயன்படுகிறதே தவிர கொள்கை முடிவுகளை பறைசாற்றவும், மக்களுக்கு பயன்படும் நல்ல மாற்றத்தையும் உருவாக்கவும் முடியவில்லை. பழது எண்ணும் மந்திரியின்பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும் - என்னும் குறளில் வள்ளுவர் சொல்கிறார் தவறான வழி எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபதுகோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும். ஆக நம்மை ஆள்வோரைப் பார்க்கும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது.

இதில் என்ன வருத்தம் என்றால் இதனை தட்டிக் கேட்கவோ, வருந்தவோ, மாற்றத்தை உருவாக்கவோ வேண்டிய இளைஞர் சமுதாயம் செல்போன் கலாச்சாரத்தில் நாய்க் காதலுக்காகவும், ஜாதி மதம் பிடித்து, மதுக்கோப்பையில் மிதந்து, பேனர் கலாச்சாரத்திற்குள் நுழைந்து எளிதில் பணக்காரனாக மாறவும், தான் படித்ததை வெளிநாடு சென்று செலவிட்டு பணம் சேர்க்கும் எண்ணமே உள்ளது. ஓர் வேடிக்கை என்னவென்றால் இவர்களிடம் ஓர் விஷயத்தில் மட்டும்தான் தேசபற்று மிகுந்துள்ளது. அதைப்பற்றி நாம் தவறாக கருத்துக்களை சொன்னால் நீ இந்தியனா! என்பார்கள். அது ஒன்றுமில்லை கிரிக்கெட்தான்.