Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Neythal
Neythal
ஜனவரி 2009
ஏழிலைப்பாலை
மலையாள மூலம்: எஸ்.கெ. பொற்றேக்காட்
தமிழில்: மு. குருமூர்த்தி

காலை நேரம் என்றுடைய அறைக்குள் உட்கார்ந்து ஒரு ரஷ்யன் துப்பறியும் நாவலில் கவனமாக இருந்தேன். கடைசி அத்தியாயம் ரொம்பவும் சுவாரசியமாக போய்க்கொண்டிருந்தது. வாசிலில் காலடிச்சத்தம் கேட்டது. கூடவே பழக்கமான கனைப்புக் குரலும் கேட்டது. தலையை நிமிர்த்தி சன்னல் வழியாகப் பார்த்தேன். பஞ்சாயத்து அதிகாரி பத்மநாபன் நம்பியார். “யாரது? ஆபீசரா? வாருங்கள்.. வாருங்கள்.”

நாவலில் வில்லனின் பின்கழுத்தில் ஒரு ரோமக்கை நீண்டு வந்து கொண்டிருந்தது. அந்த இடத்தில் விரலை அழுத்திக்கொண்டு அதிகாரியை வரவேற்றேன். குட்டையான பருத்த சரீரம்; வெளுத்த உடல்; உச்சியில் காய்ந்துபோன இலையைப் போன்ற வழுக்கை; மூக்கில் கண்ணாடி. இவர்தான் பஞ்சாயத்து அதிகாரி பத்மநாபன் நம்பியார்.

பேச்சிலும், பழக்கத்திலும் கொஞ்சம் சிடுசிடுப்பான மனிதர். பேதிமருந்து சாப்பிட்டது போன்றதொரு முகபாவம் அவருக்கு. “நம்முடைய புதிய சாலை போடும் வேலை இன்றைக்கு தொடங்கிவிட்டது. “அதிகாரி தன்னுடைய சரீரத்தை நாற்காலியில் திணித்துக் கொண்டார். “காண்ட்ராக்டர் போக்கர் ஹாஜி கிழக்கேயிருந்து பதினாறு கூலியாட்களைக் கொண்டுவந்து வேலை செடீநுது கொண்டிருக்கிறார்.”

‘நல்ல செய்தி’. அதிகாரியை பாராட்டுகிற விதத்தில் தலையாட்டிச் சிரித்தேன். என்னுடைய பாராட்டு மனப்பூர்வமாக இருந்தது. ஆள் கொஞ்சம் சிடுசிடுத்தவராக இருந்தாலும் பஞ்சாயத்து வேலைகளில் இந்த அளவிற்கு அனுபவமும் சுறுசுறுப்பும் உள்ளவர்களை கேரளத்தில் வேறெங்கும் பார்க்கமுடியுமா என்பது சந்தேகமே. எங்களுடைய புதிய தூம்போலை பஞ்சாயத்து அற்புதமாக முன்னேறி வருவதற்கு முழுமுதற் காரணம் பஞ்சாயத்து அதிகாரி பத்மநாபன் நம்பியாரின் இடைவிடாத ஆர்வமும், திறமையுமே என்று நிச்சயமாக கூறலாம்.

“அப்புறம் ஒரு விஷயத்தை நினைவுபடுத்திவிட்டுப் போகலாம் என்று வந்தேன். அந்த குளியன் மூலை விஷயம்.. “அதிகாரி வழுக்கைiத் தலையை சொறிந்து கொண்டு சொன்னார்.

“அந்த இடத்தை பஞ்சாயத்து சாலை போட்டுக்கொள்வதற்கு இலவசமாகக் கொடுக்கிறேன் என்று பத்திரம் செய்து கொடுக்க வேண்டும்”.என்னுடைய சிந்தனை நாவலில் இருந்தது. வில்லனின் கழுத்தை நோக்கி நீண்டுகொண்டிருந்த அந்த ரோமக்கை.. ஓ.. அதுவா..?

முடியுமானால் அதை இன்றைக்கே கொடுத்துவிட்டால் நல்லது. அதிகாரியின் முகம் விளக்கெண்ணை குடித்த மாதிரி இருந்தது. ஓ அதைப்பற்றி பெரியமாமாவிடம் பேச மறந்துபோடீநு விட்டேன். பரவாயில்லை அதிலொன்றும் கஷ்டமில்லையே எங்களுடைய குடும்பச் சொத்துதானே அது வெறும் பொட்டல். அதெல்லாம் சரி சார். எழுத்தும், பத்திரமும் எல்லாம் அதது உள்ளபடி முறையாகச் செடீநுய வேண்டுமில்லையா? நாளைக்கு என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது அல்லவா?

நாவலில் நீண்டுவந்த முரட்டுக்கை யாருடையது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் நான் இருந்தேன். எழுத்தும், பத்திரமும் எல்லாம் என்கிற வார்த்தைகள் என்னை அவமதித்தது போன்றதொரு உணர்வு எனக்குள் இருந்தது. ‘அதெல்லாம் எனக்குத் தெரியும் நீங்கள் போடீநு வாருங்கள்’.

என்னுடைய அதிகாரக்குரல் கொஞ்சம் வரம்புமீறிப் போனதாக எனக்குத் தோன்றியது. இன்னும் வேறுபல பஞ்சாயத்து விஷயங்களைப் பற்றியும் அதிகாரிக்கு பேசவேண்டியிருந்திருக்காலம். அதற்குள் பேச்சை முறித்துக் கொண்டேனே!.. அதற்கப்புறம் அந்த நாவலைப் படித்து முடித்துவிட்டுத்தான் கீழே வைத்தேன். அந்த முரட்டுக்கை வேறு யாருடையதும் அல்ல. கதாநயாகனின் கைதான் அது. புத்தகத்தை மூடிவைத்துவிட்டு நிமிர்ந்தபோது பஞ்சாயத்து அதிகாரியின் வாடிய முகம் என்னுடைய மனக்கண்ணில் மின்னி மறைந்தது. அதிகாரியின் கவலையைத் தீர்க்கவேண்டும்; குளியன்மூலை பிரச்சினையை பெரிய மாமாவிடம் பேசவேண்டும். அன்று இரவு சாப்பாட்டிற்குப் பிறகு பெரிய மாமாவை சந்தித்து விடுவது என்று முடிவு செய்தேன்.என்னுடைய பெரிய மாமாவைப்பற்றி இந்த நேரத்தில் கொஞ்சம் சொல்லிவைக்க வேண்டும். தனிக்கட்டை பழைய ஆள். வீட்டில் அவர் சொல்படிதான் எல்லாம் நடக்கும். உச்சியில் மூன்றங்குலத் குடுமியும், காதில் கொடிக்கடுக்கனும் அதது இருக்கவேண்டிய இடத்தில் இப்போதும் இருக்கிறது.

பெரிய மாமாவிற்கு வாயில் பற்கள் ஏதும் இல்லை. பொய்ப்பல் கட்டிக்கொள்ளுமாறு பலமுறை வற்புறுத்திப் பார்த்துவிட்டேன். ஆள் மசிந்து கொடுக்கவில்லை. ஈறுகள் முழுவதையும் வெளிக்குக் காட்டிக்கொண்டு ஒரு கார்ட்டூன் சிரிப்பு சிரிப்பார். அந்தச் சிரிப்பில் ஜீவக்களை சொட்டும். “வேண்டாமப்பா!... நான் இப்போது கல்யாணம் செய்து கொள்ளுகிறதாயில்லை! பெரியமாமா இதுவரையில் கல்யாணம் செய்து கொள்ளவில்லை முழு பிரம்மச்சாரி. வெற்றிலை போடுவது, பொடி போடுவது போன்ற கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை. புகை பிடிப்பதைப் பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. அவருடைய தனிப்பட்ட நடவடிக்கைகள் இப்படி இருந்தாலும் முற்போக்கான எண்ணம் உடையவர். எங்களுடைய ஊருக்கு ஐந்தாண்டு திட்டங்களும், போஸ்ட் ஆபீசும், ஒரு நடுநிலைப்பள்ளியும் வந்ததே கொஞ்ச காலத்திற்கு முன்னால்தான்.

பேட்டரியில் வேலையும் ஒரு ரேடியோ பெட்டியை எங்கள் வீட்டிற்கு கொண்டுவந்தபோது அதில் கந்தர்வ கானத்தைக்கேட்டு முதன்முதலாக கைத்தாளம் போட்டதும் எங்க பெரிய மாமாதான். என்னை தூம்போலை பஞ்சாயத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுத்த அன்றைய தினம் ஆனந்தக் கண்ணீர் பெருக பெரியமாமா என்னைக் கட்டித்தழுவியதை மறக்க முடியாது. எங்களுடைய வம்சத்தில் முதன்முதலாக ஓர் உள்ளூர் தலைவர் தோன்றியிருக்கிறார் இல்லையா? பெரிய மாமா அவ்வப்போது என்னை அழைத்த பக்கத்தில் உட்கார வைத்துக்கொள்வார். பஞ்சாயத்தில் நடைபெறும் வேலைகளைப் பற்றியெல்லாம் விசாரிப்பார். அவரும் ஆலோசனைகள் சொல்லுவார். புதுப்புது சாலைகள் தான் நமக்கு இப்போது தேவை. உடலில் நாடிநரம்புகள் எப்படியோ அப்படித்தான் ஒரு நாட்டில் சாலை வழிகள்.

நானும் அவர் சொல்லுவதுதான் சரி என்பதாக தலையை ஆட்டுவேன். எங்களுடைய கிராமத்திற்கு இரண்டு மைல் கிழக்கிலும், ஒண்ணரை மைல் மேற்கிலுமாக இரண்டு சாலைகள் போய்க்கொண்டிருந்தன. ஆனால் இரண்டு சாலைகளுக்கும் ஒரு இணைப்புச்சாலை இல்லாமல் இருந்தது. இடையில் குன்றுகள், பாறைகள், சிறுசிறு வயல்கள். மழைக்காலத்தில் மனிதர்களுக்கு சங்கடம் கொடுப்பதற்காகவே பிறந்த ஓர் ஆறும் இருந்தது. இதுபோதாதென்று வற்றி வறண்டுபோன ஒரு வாய்க்காலும் இருந்தது. வாய்க்காலுக்கு பின்னால் ஒரு கதையும்கூட இருந்தது. சுமார் இருபது வருஷங்களுக்கும் முன்னால் உள்ளூரில் ஒரு அதிகாரி இருந்தார். அவருடைய வீட்டுப்பெண்கள் குளிப்பதற்காக ஒண்ணரை மைல்தூரம் நடந்து சென்று குளித்து வந்தனர். அதைப் பார்த்து அவருடைய மனது ரொம்பவும் வேதனைப்பட்டது. ஆற்றுத்தண்ணீரை வீட்டு வாசலுக்கு கொண்டுவருவதென தீர்மானித்தவர் அந்த வாடீநுக்காலை வெட்டத் தொடங்கினார். வாடீநுக்கால் வெட்டத் தொடங்கிய இடம் அவருடைய வீட்டு வாசல். முக்கால் மைல் தூரத்திற்கு வாய்க்காலை வெட்டி முடித்தபிறகு கையிலிருந்த பணம் தீர்ந்துபோய்விட்டது. வாடீநுக்காலும் அத்துடன் நின்றுபோய் விட்டது. அந்த அதிகாரி ஆற்றுக்கரையில் இருந்து வாய்க்கால் வெட்டத் தொடங்கியிருந்தால் அதிகாரி வீட்டுப் பெண்களுக்கு முக்காமல்மைல் தூரம் நடந்து ஆற்றில் முங்கிக் குளிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கும்.

அந்த அதிகாரியின் அறிவுத்திறமைக்கு நினைவுச்சின்னமாக வெறும் மண்ணாங்கட்டிகள் நிறைந்த அந்த வாடீநுக்காலை நீங்கள் இப்போதும் பார்க்கலாம். தூம்போலை பஞ்சாயத்தை ஒரு மாதிரிப் பஞ்சாயத்தாக மாற்றுவதற்கு பெரிய மாமா ஆசைப்பட்டார். “புதிய சாலைகள் போடுதல்” என்ற அவரது திட்டத்தையே நான் கையிலெடுத்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டேன். என்னுடைய திட்டத்தை பஞ்சாயத்து அதிகாரி பத்மநாபன் நம்பியாரும் முழுமனதாக ஏற்றுக்கொண்டார். கிழக்குச் சாலையையும், மேற்குச் சாலையையும் இணைத்து ஒரு புதிய பஞ்சாயத்து சாலை அமைப்பது என்கிற திட்டம்கூட இந்த நடவடிக்கையின் ஒரு பகுதிதான். புதிய சாலை போடுகிற வழியில் இருக்கும் நிலங்களின் சொந்தக்காரர்கள் தடையேதும் சொல்லாமல் விட்டுக்கொடுக்க சம்மதித்தார்கள். ஒரு சில உரிமையார்களுக்கு பெயரளவிற்கு சிறுதொகை மட்டும் ஈடாக கொடுக்கப்பட்டது. மேற்கேயிருந்து வருகிற புதிய சாலை கொஞ்சதூரம் போனதற்கப்புறம் ஒரு குன்றின் அடிவாரத்தில் வயலின் நடுவில் புகுந்து செல்லவேண்டியிருந்தது. வயலிற்கும், குன்றிற்கும் இடையில் ஒரு மேட்டு நிலம். மேட்டுநிலத்தின் மூலையை செதுக்கிக்கொண்டு புதிய சாலை போட வேண்டியிருந்தது. அந்தக் குறுகலான இடத்திற்கு குளியன் மூலை என்று பெயர்.

எங்கள் குடும்பத்தின் பாரம்பரிய சொத்து அந்த இடம். சாலை போடுவதற்காக அந்த இடத்தை எழுதிக்கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் பஞ்சாயத்து அதிகாரி காலையில் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். அன்று இரவு சாப்பிட்டபின், பெரிய மாமாவை சந்திப்பதற்காக பத்தாயப்புரை வீட்டிற்குப் போனேன். பெரிய மாமாவின் நிரந்தர வாசம் அங்குதான். பெரிய மாமா ஒரு குவளையில் லேகியமோ வேறு ஏதோ நிரப்பிக் கொண்டிருந்தார். புதுப்புது மருந்துகளை சொந்தமாகத் தயாரித்து சாப்பிடுவது என்பது பெரிய மாமாவின் பொழுதுபோக்கு. என்ன தம்பி, பஞ்சாயத்து வேலையெல்லாம் எப்படியிருக்கிறது? ஒரு இலைத்துண்டை எடுத்து குவளையின் வாயை மூடிக்கட்டினார் பெரிய மாமா. ஒரு பழைய துணியில் கையைத் துடைத்துக் கொண்டார். ஈறுகளை வெளிக்குக்காட்டி ஒரு குழந்தைச் சிரிப்பு. பெரிய மாமாவின் முகபாவம் சிரிக்கும்போது அழுகிறமாதிரியும், அழும்போது சிரிக்கிற மாதிரியும் இருக்கும்.

பெரிய மாமா என்னைப் பார்த்தவாறு திரும்பி உட்கார்ந்து கொண்டார்.நாங்கள் அதுவரையில் செடீநுதிருந்த பஞ்சாயத்து வேலைகளையெல்லாம் பெரிய மாமாவிடம் சொன்னேன். புதிய சாலை போடுவது பற்றிய விவரங்களை விரிவாகச் சொன்னேன். புதிய சாலையின் வரைபடத்தையும், அது போகும் பாதையையும், நீளத்தையும், உத்தேச செலவினத்தையும் கேட்டு பெரிய மாமா ரொம்பவும் சந்தோஷப்பட்டார். கொஞ்ச நேரம் ஏதோ யோசனையில் இருந்தார். “புதிய சாலையில் ஆடுமாடுகள் தண்ணீர் குடிப்பதற்காக ஒரு கருங்கல் தொட்டி வைக்கவேண்டும். அப்புறம் ஒரு தண்ணீர் பந்தல். அதெல்லாம் என்னுடைய செலவு.

கருங்கல் தொட்டி, தண்ணீர் பந்தல் இதெல்லாம் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது என்கிற விவரத்தை பெரிய மாமாவிடம் எடுத்துச் சொன்னேன். “அதெல்லாம் தேவையில்லாத செலவுகள். காலப்போக்கில் சாலையோரங்களில் டீக்கடைகள் வந்துசேரும். இன்னும் கொஞ்சகாலம் போனதற்கப்புறம் புதிய சாலையில் பஸ்கள்கூட ஓடத் தொடங்கிவிடும்”. பெரிய மாமாவிற்கு நான் சொன்னதில் திருப்தி ஏற்படவில்லையென்பது அவருடைய முணுமுணுப்பில் இருந்து தெரிந்து கொண்டேன். அதற்கப்புறம் அந்த குளியன் மூலை விஷயத்தை எடுத்தேன். கோரன் குன்றின் அடிவாரத்தோடு போடீநு குளியன் மூலையில் ஏறினால், சந்தோமனின் வயல் பக்கமாக புதிய பாதை இறங்கிப்போகிறது. குளியன்மூலை இருக்கிற இடத்தை பஞ்சாயத்துக்கு தானமாக நாம் எழுதிக்கொடுக்க வேண்டும்.

“ஏய்...” பெரிய மாமாவின் குரல் ஓங்கி ஒலித்தது.

பெரிய மாமா என்னை விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் சொன்ன விஷயம் முழுவதும் அவருக்கு சரியாகக் கேட்டிருக்காதோ என்கிற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. நம்முடைய குளியன்மூலை வழியாகத்தான் புதியசாலை போகிறது. அந்த இடத்தை நாம் பஞ்சாயத்துக்கு எழுதிக்கொடுக்க வேண்டும். நான் சற்று உரக்கச் சொன்னேன். நம்முடைய குளியன்மூலை வழியாகவா?.. அப்போ அந்த ஏழிலைப்பாலை?..

பெரிய மாமாவின் குரலில் தடுமாற்றம் தெரிந்தது. அந்த பாலைமரம் நிற்கிற இடத்தின் வழியாகத்தான் சாலை போடவேண்டும். அங்கே இந்த ஒரு மரம்தானே இருக்கிறது மரத்தை வெட்டவேண்டும். பெரிய மாமா கண் இமைக்காமல் உட்கார்ந்திருந்தார். முதிர்ந்த கிழவர்களின் சிந்தனைகளை அவர்களுடைய முகம் நன்றாகக் காட்டிக்கொடுத்துவிடும்.

சுருங்கிப்போன முகத்தசைகளும், புடைத்துப்போன நரம்புகளும், தொங்கிப்போன தோலும் பெரிய மாமாவின் முகத்தை ஒரு கதகளி நாட்டியக்காரனைப்போல மாற்றிவிட்டிருந்தன. மனதின் எண்ண ஓட்டங்கள் பாவ ஓட்டங்களாக மாறி முகத்தில் நாட்டியமாடிக்கொண்டிருந்தன. நரைத்த புருவங்கள் உயர்ந்து தாடிநந்தன. கண்களை உருட்டி என்னைப் பார்த்தார். தாவாய் எலும்புகள் புடைத்துக்கொண்டன. கீழுதட்டில் கோபம் கொப்பளித்தது.

கண்களைச் சுற்றியிருந்த கருவளையங்கள் சுருங்கி விரிந்தன. பெரிய மாமாவின் கைகள் ஏதோ முகத்திரைகளைக் காட்டின. “அந்த இடத்தை உடனே தானமாக எழுதிக்கொடுக்க வேண்டும்” நான் பொறுமையிழந்து மறுபடியும் சொன்னேன். பெரியமாமா உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு என்னை முறைத்துப் பார்த்தார். அந்த முகத்தைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. அப்படியொரு முகத்தை நான் அதுவரை பார்த்ததில்லை. போய்வா.. அப்புறமா பேசிக்கொள்ளலாம், பெரிய மாமா கர்ஜித்தார். நான் செத்துப்போனதுக்கப்புறம் அந்த மரத்தை வெட்டிக்கொள்ளலாம். கடைசியாகச் சொன்ன வார்த்தைகளில் அழுத்தம் கூடுதலாகத் தெரிந்தது. பெரிய மாமாவிற்கு என்ன ஆயிற்று? என்ற வியப்புடன் நான் அந்த இடத்தைவிட்டு வெளியில் வந்தேன். பெரிய மாமா சாப்பிட்ட லேகியத்தில் அபினோ கஞ்சாவோ கூடுதலாகிப்போயிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

என்னுடைய அறைக்குத் திரும்பி படுக்கையில் விழுந்தேன். புதியதொரு துப்பறியும் நாவலை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். மனம் நாவலில் பதியவில்லை. பெரிய மாமாவின் வழக்கத்துக்கு மாறான பேச்சும் நடத்தையும் மீண்டும் மீண்டும் நினைவுக்குள் சுழன்றன. குளியன்மூலையை எழுதிக்கொடுக்க மாட்டேன் என்று பெரிய மாமா பிடிவாதம் பிடித்தால் நான் என்ன செய்வது? பஞ்சாயத்து தலைவரே சாலைபோட நிலத்தைக்கொடுக்கவில்லை என்பது ஊர்க்காரர்கள் காதில் விழுந்தால் எனன சொல்லுவார்கள்? அதற்கப்புறம் பங்ஞசாயது தலைவராக மட்டுமல்ல.. ஒரு மனிதனாகக்கூட ஊருக்குள் நடமாட முடியுமா! இன்னுமொரு விஷயம்கூட அப்போது என்னுடைய நினைவுக்கு வந்தது.

பெரிய மாமவிற்கு குளியன் மூலையை எழுதிக்கொடுப்பதில் தயக்கமில்லை என்பதுபோலவும் பாலைமரத்தை வெட்டுவதில்தான் அவருக்கு சம்மதமில்லை என்பது போலவும் எனக்குத் தோன்றியது. அந்த பாலைமரத்திற்கு ஏன் அப்படியொரு முக்கியத்துவம்? அடுத்தநாள் காலையில் கண்விழித்ததே பஞ்சாயத்து அதிகாரியின் வழுக்கைத் தலையில்தான். குளியன்மூலை விவகாரம் அதிகாரியின் மனதில் பெரியதாக உருவெடுத்திருந்தது. சாலைபோடும் இடத்தை பஞ்சாயத்து தலைவர் வந்தபார்க்காததும் கூட ஒரு குறையாக இருந்தது.

“நான் கொஞ்சநேரம் கழித்து அங்கே வருகிறேன்” அதிகாரியிடம் சாந்தமாகக் கூறினேன். “அந்தக் குளியன் மூலை விவகாரம்” “அந்த இடத்திற்கான பத்திரத்தை நாளைக் காலையில் தருகிறேன்”. இப்படி நான் சொன்னாலும்கூட என்னுடைய வார்த்தையில் எனக்கே நம்பிக்கையில்லை. அதிகாரிக்கும் நம்பிக்கையில்லாமல் போயிருக்கலாம். பதினோரு மணியளவில் பஞ்சாயத்து சாலைபோடும் வேலை நடக்கும் இடத்திற்கு நான் போய்ச்சேர்ந்தேன். அதிகாரி சொன்னதெல்லாம் சரியாக இருந்தது. காண்ட்ராக்டர் ஹாஜியாரின் கிழக்கத்திய ஆட்கள் மண்வெட்டி, கடப்பாரை சகிதம் சுறுசுறுப்பாக வேலைசெடீநுது கொண்டிருந்தார்கள். பாறைகளையும், கற்களையும் வெட்டி கூடைகளில் அள்ளி பாதையை நிரவிக்கொண்டிருந் தார்கள். அவர்களுடைய பாடலிலும், வேலையிலும் ஒரு போராட்ட வேகம் இருந்தது. இதே வேகத்தில் வேலை நடக்குமானால் நிச்சயமாக இன்னும் இரண்டு நாட்களில் குளியன் மூலையைப் பிடித்துவிடுவார்கள். அதை நினைக்கும்போதே எனக்கு மனதிற்குள் பயம் குடிகொண்டது. பெரிய மாமாவின் மனதை எப்படியும் மாற்றிவிடலாம் என்கிற நம்பிக்கையுடன் அன்று இரவு நான் பத்தாயப்புரை மாளிகைக்குச் சென்றேன்.

ஒருவேளை அவர் சம்மதிக்காமல் போனால் அவரோடு போராடவும் நான் என்னை தயார்படுத்திக் கொண்டிருந்தேன். பெரிய மாமாவை எதிர்ப்பது என்பதை நினைத்தபோதே என்னுடைய இதயத்துடிப்பு ஒரு கணம் நின்றுபோனது போலிருந்தது. வாசல்படியேறி வீட்டுவராந்தாவில் கால் வைத்ததும் கண்களை ஒருமுறை சுற்றிலும் ஓட்டினேன். நல்ல ஓணக்கால நிலா வெளிச்சத்தினால் அந்த சுற்றுவட்டாரத்தில் ஒரு புது அழகு கூடியிருந்தபோலத் தெரிந்தது. என்னுடைய கண்கள் அங்குமிங்கும் அலைந்ததில் அந்த குளியன் மூலை என்னுடைய பார்வையில் பதிந்தது. பத்தாயப்புரை வீட்டின் வராந்தாவில் நின்றுபார்த்தால், தொலைவில் குளியன்மூலையின் ஒரு பகுதியை தெளிவாகப் பார்க்கலாம். அந்த மேட்டின் ஒரு மூலையில் நீலவானத்தின் பின்னணியில் தன்னந்தனியாக நிற்கும் அந்தப் பெரிய ஏழிலைப்பாலைமரம், பரந்த நிலாவொளியில் ஒரு பேடீநுவீட்டைப் போலக் காட்சியளித்தது.

குளியன் மூலையைப் பற்றியும், அந்த ஏழிலைப்பாலையைப் பற்றியும் சிறுவயது முதற்கொண்டே நான் பல கதைகளையும் கேட்டிருக்கிறேன். சிறுவயதில், ஓணக்காலத்தில் அந்த இடங்களுக்கு பூப்பறிக்கச் செல்லும்போது நாங்கள் பாடும் பாடல் என்னுடைய நினைவுக்கு வந்தது. ஒன்றாம் குன்றம்மா..ஒன்றடிக் குன்றம்மா..
ஒன்றல்லவோ மங்கையர் நட்ட பாலை..
பாலைக்கு இலை வந்தது..பூ வந்தது..காய் வந்தது..
பாலைக்கு பால்கொடு பார்வதியே...
இப்படிப்போகும் அந்த ஓணப்பாட்டு. அந்த ஓணப்பாட்டில் ஒன்றாம் குன்று என்பது அந்த குளியன்மூலை மேடு என்பதும், பாலைமரம் அந்த ஏழிலைப்பாலை என்பதும் எங்களுக்குத் தெரியும். இளம்பருவத்தின் நினைவுகளின் உருவமாக நின்றுகொண்டிருந்தது அந்த பாலை மரம். நான் குமரப்பருவத்தை அடைந்தபோது அச்சமூட்டும் பல கதைகளின் பிறப்பிடமாக அந்த பாலை மரம் மாறிப்போனது. பாலைமரத்தின் கிளைகளில் நிலவின் நிறத்தில் இருக்கும் மோகினிப் பிசாசுகள் நிர்வாணமாக தொங்கிக் கொண்டிருக்குமாம். வெள்ளிக்கிழமைகளில் ராத்திரி நேரங்களில் பாலைமரத்தினடியில் அந்தப் பிசாசுகள் நடனமாடிக் கொண்டிருக்குமாம். அந்தப் பிசாசுகளின் வாயிலிருந்த தீப்பொறிகள்கூட பறந்து கொண்டிருக்குமாம். மந்திரவாதிகள் அந்த பேய் பிசாசுகளை பாலைமரத்தில் கட்டிப்போட்டிருப்பார்களாம். நள்ளிரவில் அந்த பேய் பிசாசுகள் கூட்டமாகக் கூக்குரலிடுமாம். அந்த கூக்குரரைலக் கேட்டதாகக் கூட பலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

நடுநிசி நேரத்தில் அந்த வழியாகப் போகிறவர்களை பேய்கள் மயக்கிவிடுமாம். வழிதவறிப்போன ஆட்களை இரண்டு மைல் தூரத்தில் இருக்கிற பகவதி கோயிலின் பாழுங்கிணற்றில் தள்ளிக்கொன்றுவிடுவது அந்தப் பேய்களின் வழக்மென்று கூட சொல்லுவார்கள். பகல் நேரத்தில் கூட அந்த வழியாக ஆட்கள் நடமாடுவதை தவிர்த்து விடுவார்கள். கெட்ட மந்திரவாதிகள் மந்திரித்துப்போட்ட மிச்ச மீதங்களும், தீட்டுக்கழித்த குருத்தோலைகளும், ரத்தம் நிரப்பிய சுண்ணாம்புக் குறிபோட்ட புதுப்பானைகளும், எரிந்துபோன ஊதுபத்திகளும், அணைந்துபோன தீவெட்டிகளும், கோழித்தலையும் அந்த இடங்களில் சிதறிக் கிடப்பதை நானே அந்த வழியாகப் போகும்போது பார்த்திருக்கிறேன்.

மூடநம்பிக்கைகளுக்கும், பேடீநுக்கதைகளுக்கும் உறைவிடமாகிப்போன அந்த பாலைமரத்தை வெட்டியெறிவது கூட நல்லது என்று நான் கருதினேன். பெரிய மாமாவின் கடுமையான எதிர்ப்பிற்கு காரணம் என்னவாக இருக்கமுடியும்? எந்தவொரு காரியத்திலும் பெரிய மாமா இப்படியொரு முரட்டுத்தனம் காட்டியதில்லையே? பஞ்சாயத்து காரியங்களில் ரொம்பவும் ஆர்வமாக இருக்கிற பெரிய மாமா இப்படி தடைக்கல்லாக நிற்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை பாலை மரத்தடியில் பெரிய மாமா புதையல் ஏதும் வைத்திருப்பாரோ. அதற்கும் வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தோன்றியது. இந்த எண்ணம் தோன்றிய உடனேயே, அந்த பாலைமரத்தை வெட்டிவிட வேண்டுமென்பதில் எனக்கு ஆர்வம் அதிகரித்தது. ஆனால், பெரிய மாமாவின் அனுமதி இல்லாமல் ஏதும் செடீநுய முடியாதல்லவா? பெரிய மாமாவின் படுக்கையறைக்குள் மெதுவாக காலடியெடுத்துவைத்தேன். நிசப்தமாக இருந்தது. பெரிய மாமா தூங்கிப்போயிருப்போரோ?

மேசைமேல் லாந்தர் விளக்கு மங்கலாக எரிந்துகொண்டிருந்தது. முகத்தை மூடிக்கொண்டு பெரிய மாமா படுத்திருந்தார். மெல்லக்கனைத்து ஓசையுண்டாக்கிப் பார்த்தேன். கட்டிலில் எந்த அசைவும் இல்லை. இரு இலை வீடிநந்தாலும் கூட தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்கிற பெரிய மாமா நான் குரல்கொடுத்த பின்னாலும்கூட பட்டமரத்தைப்போல கிடந்தார். பக்கத்தில் சென்று உடலைத்தொட்டு அழைத்தேன். அந்த உடல் குளிர்ந்துபோய் மரம் போல் கிடந்தது. பெரிய மாமா உயிரற்றுக் கிடந்தார். படுக்கையில் ஒரு காகிதம் கிடந்தது. அது ஒரு கடிதம். அதை எடுத்துப்பார்த்தேன். பெரிய மாமாவின் பெரிய கையெழுத்தில் அந்தக்கடிதம் இருந்தது.

“சொந்த விஷயம். அப்புக்குட்டனுக்கு பெரிய மாமா எழுதுவது. நான் விரும்பிய ஒரு பெண் என்னுடைய மானத்தையும், நம்முடைய வீட்டு மானத்தையும் காப்பாற்றுவதற்காக, குளியன்மூலையில் இருக்கும் அந்த ஏழிலைப்பாலையின் கிளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். இன்றோடு ஐம்பது வருஷங்கள் ஆகிவிட்டன. அது நடந்தது ஒரு ஓணக்காலத்தில். தினமும் அந்த பாலைமரத்தை பார்த்தவாறேதான் நான் வாடிநந்து கொண்டிருந்தேன். நான் போகிறேன் பஞ்சாயத்து சாலை போடுவதில் சுணக்கம் வேண்டாம். குளியன் மூலையை தானமாக எழுதிக்கொடுத்துவிடு. அந்த ஏழிலைப்பாலை மரத்தை வெட்டிவிடு”. மேசைமேல் எஞ்சியிருந்த லேகியத்தைப் பார்த்தவுடன் ஒரு உண்மை வெளிப்பட்டது. அந்த லேகியத்தில் அளவுக்கதிகமான அபின் சேர்க்கப் பட்டிருந்தது. அளவுக்கதிகமான அபின் சாப்பிட்டு பெரிய மாமா தற்கொலை செய்துகொண்டார் என்று நான் உறுதி செய்துகொண்டேன். பெரிய மாமாவின் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த சன்னல் வழியாக நான் கண்களை ஓட்டினேன்.

வெகுதூரத்தில் குளியன்மூலையும், அந்த ஏழிலைப் பாலையும் சன்னல் வழியாக முழுமையாகத் தெரியும் என்கிற விஷயத்தையும் அன்றுதான் நான் தெரிந்துகொண்டேன். ஒரு அரைநூற்றாண்டு காதல் கதைக்கு பட்டுக்குடை பிடித்தாற்போல் அந்த ஏழிலைப்பாலை மரம் நீலவானத்தை நோக்கி பொங்கி எழுந்து நிற்பதாக எனக்குத் தோன்றியது. ஆக்ரா கோட்டையின் சிறைக்கூடத்தில் அடைபட்டிருந்த ஷாஜஹான் சன்னல் வழியாக காதலியின் சமாதியான தாஜ்மகாலைப் பார்த்தவாறு வாடிநக்கையை ரசித்துக்கொண்டிருந்தாராம். என்னுடைய பெரிய மாமாவும் அதைப்போன்றதொரு வாடிநக்கையை வாடிநந்திருக்கிறார் என்பதை நான் நினைத்தபோது, அபின் சாப்பிட்டதைப்போல ஒரு மயக்கம் எனக்குள் தோன்றியது. பெரிய மாமாவின் இறுதிச் சடங்குகள் முடியும்வரை சாலைபோடும் வேலைகளை நிறுத்திவைத்தோம். அதற்கப்புறம் ஒரு விடியலில் ஆட்கள் வந்துசேர்ந்தார்கள்.

பாலைமரத்தை வெட்டத் தொடங்கினார்கள். கோடாரியின் ஒவ்வொரு வெட்டிலும், அரைநூற்றாண்டுகால காதல் கதையின் வரிகள் எனக்குள் ஒலித்துக்கொண்டிருந்தன. அப்போது நான் மயங்கி வீடிநந்துபோனதாகவும், பஞ்சாயத்து அதிகாரி பத்மநாபன் நம்பியார்தான் என்னை தாங்கிப்பிடித்து நிழலில் கிடத்தினார் என்பதையும் நான் அப்புறமாகத் தெரிந்துகொண்டேன். இன்று அந்த குளியன்மூலை வழியாகப்போகும் ஒரு புதிய சாலையை நீங்கள் பார்க்கலாம். அந்த புதிய பாதை மண்பாதையல்ல. எங்கள் தூம்போலை பஞ்சாயத்தின் வெற்றிப்பாதை அது. அந்த ஏழிலைப்பாலை மரம் நின்று கொண்டிருந்த இடத்திற்கு எதிராக ஒரு பஞ்சாயத்து விளக்குத்தூண் ஒன்றையும் பார்க்கலாம்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com