Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruMedicalGeneral
பொது

தோல் தடிப்பதேன்..?

கேள்வி : என் வயது 22. எனக்கு மூன்று வயதிலிருந்தே தோலில் சிறிது அழுத்தமாகவோ அல்லது கூர்மையாகவோ ஏதாவது பட்டால் தடித்தும் சிவந்தும் விடுகிறது. புத்தகத்தை எடுத்து செல்லும்போது தோழியர் என் கைகளை பிடித்து விளையாடும்போதும் அவ்வாறு ஏற்படுகிறது. சிறுவயதிலேயே எங்கள் ஊரிலுள்ள தோல் மருத்துவரிடம் காண்ப்பித்தோம். பயனேதுமில்லை இந்த வியாதி எனக்கு அருவருப்பையும் தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்துகிறது. இதற்கு காரணம் என்ன? இது தீராத தோல் வியாதியா..?

பதில்: இதை நோய் என்றே கூறமுடியாது. உடலில் எங்கு அழுத்தம் தரப்பட்டாலும் அந்த இடம் தடித்துப்போகும். அழுத்தம் தவிர அலர்ஜிக்கு சொத்தைப்பல், தொண்டை அழற்சி (infection), வயிற்றில் பூச்சி, வெயில், மழைத் தண்ணீர், தூசு, வியர்வை, புழுக்கம் என்று பல காரணங்கள் இருக்கலாம். இவற்றில் ஒவ்வொன்றாக விலக்கிப் பார்த்து, அழுத்தம் தருவதால்தான் தோல் தடிப்பு ஏற்படுகிறதா என்று உறுதி செய்யவேண்டும் ( பஸ்ஸின் ஜன்னலில் கைவைத்து அழுத்திய படி பயணம் செய்வது, ஹேண்ட் பேக் தோளில் தொங்கி அழுத்தம் தருவது போன்றவை). உறுதியானால், அதிக அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் தோலின் தன்மை அப்படி! மெத்தை மாதிரி துணி வைத்தும் அழுத்தத்தைத் தவிர்க்கலாம். ஒவ்வாமைக்கு (அலர்ஜிக்கு) மருந்து, cetrizine- 10mg மாத்திரை உண்டு. மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். வெளியே, உடலுக்கு மேற்புறத்தில் Myconderm-c பவுடர் தடவினால் நமைச்சல் நிற்கும்.

நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.


Unable to connect to database! Please try again later.