Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruMedicalGeneral
பொது

மூச்சுப் பயிற்சி

சில மூச்சுவிடும் நுட்பங்கள் உடலில் இருந்து தீங்கு தரும் பொருட்களை அகற்றி, அதன் இயற்கையான நோய்த்தடுப்பையும், மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் திறனையும் அதிகரிக்கிறது என்று அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் மற்றும் ஒரு முன்னணி அமெரிக்கப் பல்கலைக் கழகம் கண்டுபிடித்துள்ளன.

மனம் உடல் தொடர்பைப் புரிந்துகொள்ள முயற்சித்த இந்த முன்னணி மருத்துவ நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த மூச்சுவிடும் பயிற்சிகள் மூளையின் சில பகுதிகளில் வியத்தகு செயல்பாட்டை அளிக்கின்றன என்று கண்டறிந்துள்ளனர். அதே சமயம், இந்த பயிற்சிகளை நெடுங்காலத்திற்கு மேற்கொள்வோரின் மூளையின் இரு அரைக்கோளங்களிலும் அரிதான ஒருங்கிணைப்பைக் காண முடிந்தது.

இதன் பிற விளைவுகளில் புற்று உள்ளிட்ட பல்வேறு நோய்களுடைய நோயாளிகளில் குறைவாக உள்ள உடலின் இயற்கையான கொல்லும் செல்கள் அதிகரித்தன. ஆன்ட்டி-ஆக்சிடன்ட் என்சைம்களில் அதிகரிப்புடன் உடலின் உடலின் சுத்தப்படுத்தும் திறனும் அதிகரிக்கிறது மற்றும் அழுத்த ஹார்மோன். கோர்ட்டி சோல் அளவு இரத்த ஓட்டத்தில் கணிசமாகக் குறைகிறது.

இந்தப் பயிற்சிகளில் அதிக நம்பிக்கையுள்ளவராக மாறிவிட்ட ஏ.அய்.அய்.எம்.எஸ்.-சில் உள்ள ரோட்டரி புற்றுநோய் மருத்துவமனை கழகத்தலைவர் வினோத் கொச்சுபிள்ளை கூறுகிறார்: “இந்த பயிற்சிகளை முறையாகச் செய்வோர் தங்களது சிந்தனை ஓட்டம் மற்றும் தங்களது உடலில் மாற்றங்களைக் காணத் தொடங்குகின்றனர்.”

கொலம்பியா பல்கலைக்கழக கல்லூரியின் அசோசியேட் கிளினிகல் மனஇயல் பேராசிரியர் ஆர். பிரவுன் கூறுகிறார். “இந்த பயிற்சிகளுக்குப் பிறகு மக்கள் பிறருடன் மிகவும் அன்பானவர்களாகவும் தொடர்புடையவர்களாகவும் ஆகின்றனர்.”

தங்களது எதிர்மறை உணர்ச்சிகளான வெறுப்பு மற்றும் கோபமும் கூட மெதுவாக அன்பு மற்றும் பரிவால் இடமாற்றம் பெற்றதாக பலர் தம்மிடம் கூறியதாக கொச்சுப்பிள்ளை தெரிவிக்கிறார். குணமாகி வரும் புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையுடன் பிராணாயாமம் மற்றும் சுதர்ஷன் கிரியா போன்ற யோகப் பயிற்சிகளின் சில வடிவங்களை ஒருங்கிணைக்க இவர் பயின்றுள்ளார்.

இந்த விளைவுகளின் விஞ்ஞான அடிப்படையைத் தெரிந்து கொள்ள ஏ.அய்.அய்.எம்.எஸ்.-சின் குறைந்தது ஏழு துறைகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு நிலை மன அழுத்தமுடைய குழுக்களில் இருந்து ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்: ஒன்று, இந்த பயிற்சிகளின் நீண்ட கால விளைவுகளை வெளிப்படுத்தக்கூடிய இந்த பயிற்சிகளைப் பயிற்றுவிப்போர், மற்றும் இரண்டு காவல்துறைப் பயிற்சிக் கல்லூரியிலுள்ள வேலைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போன்ற மிகவும் மன அழுத்தமுடையவர்கள், மூன்று, எந்த விதமான ஓய்வூட்டும் நுட்பங்களையும் அறியாத ஆராய்ச்சியாளர்கள் அல்லது பிறர்.

உதாரணமாக, ஏ.அய்.அய். எம். எஸ். நரம்பியல் துறை துணைப் பேராசிரியர் மன்வீர் பாட்டியா. மூச்சுவிடும் நடவடிக்கையின் போது, முன்பு மற்றும் பிறகு, ஆசிரியர்கள் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் இதைப் போன்ற பயிற்சிகளை முன்னெப்போதும் செய்து அறியாதவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஒப்பிட்டார்.

மூளைக் கணக்கு போடுபவர்களின் சில செல்களில் அதிகமான செயலூக்கமும், அதிகமான உஷர் நிலையும் இருந்ததை பாட்டியா கண்டறிந்தார். நெடுநாட்களாக இந்த பயிற்சிகளைச் செய்து வரும் ஆசிரியர்கள் குழுவில் எல்லா மாற்றங்களும் கணிசமான அளவில் இருந்தன.

மீண்டும் ஏ.அய்.அய்.எம்.எஸ். உயிர் - இரசாயனத்துறை கூடுதல் பேராசிரியை நீடாசிங், அல்சீ மர்ஸ், பர்கின்சன்ஸ் மற்றும் இதய நோய்கள் போன்ற குறைபாடுகளுக்கு இட்டுச் செல்லும் அடிப்படைக் கூறுகளை சுதந்திரமாக வெளியிடுவதை ஆராய்ந்தார். இந்த பயிற்சிகள் இதைப் போன்ற தீங்குதரும் பொருட்களின் அளவை குறைத்ததைக் கண்டறிந்தார்.

சுரப்பியல் துறையின் மருத்துவர் தீரஜ், பயிற்சிகளுக்குப் பிறகு அழுத்த ஹார்மோன், கோரிஸ்டல் அளவுகள் குறைந்ததைக் கண்டறிந்தார். உடலின் முக்கியமான பாதுகாப்பு அமைப்பான இயற்கையான கொல்லும் செல்கள் ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி. இந்த பயிற்சிகளைச் செய்ய ஒப்புக்கொண்ட புற்று நோய் நோயாளிகளில் 60 சதவிகிதத்தினருக்கும் அதிகரித்ததை உயிர்நுட்பவியலாளர் எஸ்.என். தாஸ் கண்டறிந்தார்.

இந்த மூச்சுவிடும் பயிற்சிகள், நோயாளிகளுக்கு அதிவிரைவாக பிராணவாயு அளிக்கும் நடைமுறையான ஹெலர் வென்டிலே ஷனின் மற்றொரு வடிவமா அல்லது நன்கு அறிந்து கொள்ளப்படாத நடவடிக்கையா என்று ஆராய்ச்சியாளர்கள் இப்போது வியக்கிறார்கள். எந்த அளவு தகவல்கள் குறைபாடாக இருக்கக் கூடும் என்பதை அறிந்துகொள்ள ஆய்வில் பயன்படுத்தப்பட்ட வழி முறைகளை இந்த ஆராய்ச்சியாளர்கள் இப்போது கவனித்து வருகின்றனர். “எல்லா ஆராய்ச்சிக்கும் அதற்குரிய குறைபாடுகள் உண்டு,” என்கிறார் உடலியல் கூடுதல் பேராசிரியர் கே.கே. தீபக். இவர் இந்த நுட்பங்களில் பணியாற்றியவர். ஆனால் ஆராய்ச்சியில் பாரபட்சத்தைக் குறைக்க வேண்டும் என்று அபிப்ராயப்படுகிறார். “அத்துமீறாத வகை முறைகளை நாம் கண்காணிக்க வேண்டும்” என்கிறார் அவர். பயிற்சிகளைச் செய்யும் ஒருவர் ஒரு கருவியின் பல்வேறு வயர்களால் பிணைக்கப்பட்டிருக்கும் போது அளவுக்கருவிகளின் குறிப்புகள் பாரபட்சமாக இருக்கும் என்று அவர் கருதுகிறார். “நோயாளி வேறொரு நிலைக்குச் செல்லலாம்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com