Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
ஜனவரி - பிப்ரவரி 2009
மதவாதக் கொலைவெறியில் மாலேகான் குண்டுவெடிப்பு
சந்தியா கிரிதர்


கடந்த வருட செப்டம்பர் மாதம் மாலேகாவ் என்ற இடத்தில் குண்டுகள் வெடித்துச் சிதறின. மாலேகாவ் வன்முறைக்கு இந்துமத அடிப்படைவாதி யான சாதவி பிரக்யாசிங் தாகுர் என்பவர் முக்கிய குற்றவாளியாக நிரூபிக்கப் பட்டிருக்கிறார். இராணுவத் தில் பணி புரியும் ஸ்ரீகாந்த் புரோகித் என்பவர் இந்த வன்முறைக்கு திட்டம் தீட்டியவராவர். 2001ஆம் ஆண்டில் நாசிக்கிலுள்ள பொன்சாலா இராணுவப் பயிற்சி பள்ளியில் குண்டு தயாரிக்கும் பயிற்சி பெற்ற 54 இளைஞர் களில் ஒரு சிலர் மாலேகாவ் வன்முறை சம்பவத்தோடு இணைத்துப் பேசப்படுகிறார்கள். மாலேகாவ் வெடிகுண்டு விசாரணைக்குழு இந்த வன் முறை சம்பவத்திற்கு பல இந்து அடிப் படைவாதிகளை குற்றம் சாட்டியுள்ளது.

இந்து அடிப்படை வாதிகள் பல மாநிலங்களில் வஞ்சகம் வெறுப்பு போன்ற விஷ விதையை ஆழமாகப் பதித்து வன்முறையை கையாண்டு வருகிறார்கள். முரண் பாடான கொள் கையைப் பின்பற்றி பல செயல்களை நடத்தி வரு கிறார்கள். இந்துமத இயக்கத் திலுள்ள உறுப்பினர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் என்று சொல் லலாம். எங்கேயாவது ஒரு நிகழ்வு இந்து மதத்திற்கு எதிராக நடைபெற் றால் இந்த இளைஞர்கள் இரத்தம் கொதித்து, கோபத்தோடும், ஆவேசத் தோடும் செய்யக் கூடாதவற்றை செயல்படுத்துகிறார்கள். இதனால் நாடு மாபெரும் அழிவை சந்திக்க நேரிடுகிறது. இந்து அடிப்படைவாதி இளைஞர்கள் சிறிய துரும்பை மா பெரும் போராட்டமாக நடத்தி, இத னையே கலவரமாக மாற்றுவதில் வெற்றி கொள்கிறார்கள். இந்த வன் முறை நாட்டினுடைய அமைதியைக் குலைத்து நாட்டு மக்களுக்கு பாது காப்பில்லாத வாழ்க்கையைக் கொடுக் கிறது.

இந்துமத இயக்கத்திலிருந்து உரு வாகிய இந்து ஜாக்ரன் அடிப்படை வாதிகள் மஹாராஷ்டிராவிலுள்ள தானே என்ற இடத்திலுள்ள கலை மேடையில் இந்து மத அடிப்படை வாதத்திற்கு எதிராக நாடகம் நடத்திய குழுவின் மீது குண்டுகள் வீசியெறிந்து முதன் முறையாக வன்முறையைக் கையாண்டார்கள். இதனால் நாடகக் குழு முழுதும் சிதைந்தது மட்டுமல்லா மல் வந்திருந்த பார்வையாளர்களின் உயிர்களும் பலியாகின. இதனால் எத்தனை உயிர்கள் இழந்தன என்று சற்றுகூட இரக்கம், மனிதாபிமானம் பாராமல் தொடர்ந்து இன்றும் அடிப் படைவாதிகள் வன்முறையைக் கையாண்டு வருகிறார்கள்.

பிரபல எழுத்தாளர் குமார் கேத்கர் இந்து மதத்திற்கு புறம்பாக பல கட்டு ரைகள் எழுதி வந்தார். இந்துமத இயக் கத்தின் ஒரு பகுதியான சிவ் சங்கார இளைஞர் அடிப்படை வாதிகள் இந்த பத்திரிகையாளரின் இல்லத்தில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி, கேத்கரை உயிர் போகுமளவு அடித்து நொறுக்கி னார்கள். இந்துமத அடிப்படைவாதி களின் தாக்குதலால் கேத்கர் பல நாட் கள் மருத்துவமனையில் எமனோடு போராடினார். ஒருவரைத் தாக்கி குற்று யிரும் குலையுயிருமாக அடித்துத் துவைக்கப்பட்ட செயலைப் பற்றி சற்று கூட சிந்திக்காமல், எதையும் சர்வ சாதாரணமாக விழுங்கும் இந்து அடிப்படைவாதிகளின் போக்கு குடி மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பு கிறது. சிந்திக்க வைக்கிறது.

தில்லி பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அகில பாரதிய மாணவர் அமைப்பு உறுப்பினர்கள் டிசம்பர் 13ஆம் தேதியன்று நடந்த பாராளுமன்ற வெடிகுண்டு சம்பவத் தோடு இணைத்துப் பேசப்பட்ட எஸ்.எ.ஆர். கிலானியின் முகத்தில் எச்சிலைத் துப்பி அவமதித்தார்கள். அதே மாதிரி பரோடா பல்கலைக் கழகம் நடத்திய ஓவியக் கண்காட்சியில் வைக்கப் பட்டிருந்த ஓவியங்கள் இந்து மதத்தை புண்படுத்துவதாகக் கூறி அடிப்படை வாதிகள் ஓவியங்களை எரித்தார்கள். இந்து இளைஞர் அடிப் படை இப்படி பல முறைகேடான, முரண்பாடான செயல்களை செயல் படுத்தி நாட்டு மக்களுக்கு விரோத மாக நடந்து கொள்கிறார்கள். இதனால் நாட்டினுடைய பாது காப்பு சட்டம், அடிப்படைவாதியின் கைகளில் சிக்கிக் கொண்டு, நாட்டினுடைய நிம்மதியைத் தொலைத்தது.

இப்படி மதவெறி கொண்ட அடிப் படைவாதிகள் பல வன்முறை களை செயல்படுத்தி நாட்டினுடைய அமைதியைக் குலைத்தார்கள். அவர் களுடைய இழிவான செயலுக்கு ஒரு சில அரசியல்வாதிகளும் துணை சென்றார்கள். இப்படிப்பட்ட அரசியல் வாதிகளின் மீது மக்களும் நம்பிக்கையை இழக்கிறார்கள். அராஜ கமான அரசை தேர்ந்தெடுப்பதற்கு மக்கள் ஒரு கணம் சிந்திக்கி றார்கள். இதனால் பெரும் பாலான குடிமக்கள் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். இந்து மத நிழலில் உருவாகிய பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்கள் பாப்ரி மசூதியை நொறுக்கித் தரை மட்டமாக்கினார்கள். இப்படிப்பட்ட செயலால் இந்தக் கட்சி மற்ற மதத்தவர் களின் எதிர்ப்புகளைப் பெற்றுக் கொண்டது. மற்ற மதத்தவர்கள் இந்தக் கட்சியின் மீது வைத்திருந்த நம்பிக் கையை இழக்கச் செய்தார்கள், இந்துமத அடிப்படை வாதிகளின் உதவி யால் இவர்கள் பல மாநிலங்களில் இந்து முஸ்லிம், இந்து கிறிஸ்தவர் களிடையே கலவரத்தை உருவாக்கி வருகிறார்கள். பாப்ரி மசூதியின் வீழ்ச்சி யால் பல எதிர்ப்புகளை நாடு சந்திக்க நேரிட்டது.

இந்தியாவின் அடிப்படை வர லாற்றை அறிந்து கொள்ளாமல் மத வாதத்தை சார்ந்த இக்கட்சிகள் இந்தி யாவை இந்துக்களின் தேசமென்றும், ஒவ்வொரு இந்தியனும் இந்துவாக யிருக்கவேண்டும் என்ற கொள்கையை தனது மூச்சாகக் கொண்டிருப்பது தவறான எண்ணமென்று சொல்லலாம். இதனால் மக்களின் நம்பிக்கை என்ற தூண்களை வேரோடு பிடுங்கி எறி வதைப் போல தோன்றுகிறது. இந்தியாவில் இந்து மத அடிப் படைவாதத்தை அடுத்து, உலகத்தை உலுக்கும் தீவிரவாத அடிப்படைவாதி கள் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த வர்கள் என்று கருதப்படுகிறது. இத் தகைய மதவெறி கொண்ட தீவிரவாதி கள் பயங்கரமான வன்முறை சம்பவங் களை நடத்தி, மக்களின் மனதில் பதட்டத்தையும், பயத்தையும் உரு வாக்கி உலகத்தையே தங்களுடைய கைகளில் அடக்கிக் கொள்ள முயன்றார் கள். மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் காட்டுமிராண்டித் தனமாக வன்முறையை செயல்படுத்தி உலகத்தி னுடைய எதிர்ப்பைப் பெற்றுக் கொண்டார்கள். இஸ்லாமிய தீவிர வாதிகளின் வழிகளைப் பின்பற்றும் இந்து அடிப்படைவாதிகள் மக்க ளுடைய எதிர்ப்பையும் வெறுப்பையும் பெற்றுக் கொண்டதோடு நாட்டினு டைய விரோதியாக கருதப்படு கிறார்கள்.

இந்துமத அமைப்புகள் மதவெறி என்ற விஷவிதையை சலிப்படைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக் கும் இளைஞர்களின் மனத்தில் ஆழ மாகப் பதித்து தங்கள் கொள்கையை அவர்கள் மூலம் நிறைவேற்றிக் கொள் கிறார்கள். மதவாத இயக்கத்தோடு இணைத்துக் கொண்ட இந்த இளைஞர் அடிப்படைவாதிகள் கோபத்தோடும் ஆவேசத்தோடும் வன்முறையை செயல் படுத்தி மக்களின் உணர்வுகளைச் சிதைக் கிறார்கள். இந்த இளைஞர்களிடம் மத வெறி அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. இதே மதவெறிதான் இசுலாமிய இளைஞர்களிடமும். பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த இந்திய விமா னத்தை இஸ்லாமிய தீவிரவாதிகள் கந்தஹாரில் கடத்தினார்கள். இராணுவ வீரர்களால் பிடிக்கப்பட்ட சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கர வாதியின் விடுதலை கோரிக்கையை தீவிரவாதிகள் நிறைவேற்றிக் கொண் டார்கள். ஒன்றும் செய்ய முடியாத நிலையிலிருந்த இந்திய அரசு தீவிர வாதியின் கோரிக்கைக்கு இணங்கியது. இந்தச் சம்பவம் இந்து அடிப்படைவாதி களுக்கு ஊக்கமூட்டுவதாக அமைந்தது. இந்த ஊக்கம் மாபெரும் புயலாக உரு வெடுத்து தற்சமயம் மனித குலத்திற்கு ஒரு சவாலாக நிற்கிறது.

தீவிரவாதிகள் சமூகத்தின் ஒரு அங்கமாகத் தங்களைக் கருதிக் கொள்ள வில்லை. மக்களும் அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாக எடுத்துக் கொள்வதில்லை. மத அடிப்படை வாதி களுக்கு நாட்டினுடைய வளர்ச்சியும் முன்னேற்றமும் பொருந்தாத விஷய மென்று சொல்லலாம். இதனால் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் மதவாத இயக்கத்தோடு இணைந்து தங்களை அதில் ஈடுபடுத்திக் கொண்டு, கலவரத்தை உருவாக்கி நாட்டினுடைய அமைதியைக் குலைக்கிறார்கள். மத வாத நிழலில் உருவாகும் ஒரு சில அமைப்புகள் பல வழிகளில் அடிப் படைவாதிகளுக்கு உதவுகிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு சில பிணம் தின்னும் கழுகுகள் மத அடிப்படை வாதிகளை ஆயுதங்களாக பயன்படுத்தி, அவர்களை நாட்டிற்கு எதிராகத் தூண்டிவிட்டு, வன்முறையை கை யாண்டு தங்களது கொள்கையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். மக்கள் மதத்தை வெறுக்குமளவான நிலை மையை உருவாக்கியுள்ளார்கள். சமூக விரோத சக்திகளான இந்தப் பிணம் தின்னும் கழுகுகளைப் பூண்டோடு அழிக்க பொதுமக்கள் விழிப்படைந்து தீவிரமாக செயல் பட வேண்டும். அப் பொழுதுதான் நாட்டில் அமைதியை நிலைநாட்ட முடியும். எனவே, அதற் கான தருணத்தை நழுவ விடாமல் செயல்படுவது பொதுமக்களின் முக்கியமான கடமையாகும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com