Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
ஜனவரி - பிப்ரவரி 2009
நாதியற்ற தமிழினம் நாற்காலி தலைவர்கள்
இரா. சம்புகன்


தமிழீழத்திலிருந்து அன்றாடம் வந்து கொண்டிருக்கும் செய்திகளும், படக் காட்சிகளும் மனதுக்குப் பார மாய், நெஞ்சை அழுத்துவதாய், சோகத் தைப் பிழிவதாய், எங்கே நெஞ்சு வெடித்து சிதறிவிடுமோ என்கிற அளவுக்கு உணர்வுள்ள ஒவ்வொரு மனி தனையும் உண்ணவிடாமல் உறங்க விடாமல் வதை கொள்ளச் செய்வதாய் இருக்கின்றன. உறுப்புகள் சிதைந்த உடல்களின் துடிப்பும், மனித உயிரிழப்புகளும் ஏதோ எண்ணிக்கைக் கணக்கு போல் நோக்கப்படு கிறதேயன்றி, அதன் பின்ன ணியிலான துயரமும் மன வதைவு களும் ஆட்சியாளர் களால் அரசியல் கட்சித் தலை வர்களால் உரியவாறு உணரப் பட்டதாகத் தெரியவில்லை.

ஈழ மக்களுக்கு ஆதர வாக தமிழகத்தில் போரா டாத மக்களே இல்லை என்கிற அளவுக்கு தமிழகத் தின் அனைத்துப் பிரிவு மக் களும் அவரவர் சக்திக்கும் வாய்ப்புக்கும் ஏற்ற வழி களில் அவர்களால் எந்த அளவுக்கெல்லாம் முடி யுமோ அந்த அளவுக்கெல் லாம் போராடித் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதுவரை ஈழத்துக்காக வாயைத் திறக்காதவர்களும் அல்லது அப்படியே திறந்தாலும் எதிராகவே திறந்தவர் களும் கூட, தற்போது தாங்களும் ஈழத்துக்காக நிற்கிறோம் என்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியத் தில் தள்ளப்பட்டவர்களாக இல்லா விட்டால் தமிழக மக்களிடமிருந்து அந்நியப்பட நேருமோ என்று அச்சப் படுகிற அளவுக்கு தற்போது ஈழஆதரவு உணர்வு தமிழகத்தில் பொங்கிப் பிரவாக மெடுத்துள்ளது.

இவ்வளவும் இருந்தும் நம் தமிழகத் தலைவர்கள் மட்டும் எதற்கும் அசைந்து கொடுக்காமல் ஏற்கெனவே இருந்த அதே நிலையிலேயே, சொல் லப்போனால் அதைவிடவும் சற்று பின்தங்கிய நிலையிலேயே தங்கள் திட்டங்களையும்செயல்பாடுகளையும் வைத்துக் கொண்டிருக்கிறார்களே ஏன் என்பதுதான் தமிழக மக்களிடையே வேதனை மிகுந்த பெரும் கேள்வியாக இருந்து வருகிறது. காங்கிரஸ் சிங்கள ஆதரவு கட்சி, திமுக காங்கிரஸ் ஆதரவு கட்சி, இந்த இரண்டுமே ஈழத் தமிழர்களுக்கு எதி ரான கட்சி. ஈழச்சிக்கலில் இரட்டை வேடம் போடும் கட்சி என்பது ஊரறிந்த கதை. அதேபோலவேதான் அதிமுக வும். இப்போது இது ஈழத்துக்காக பட்டினிப் போராட்டம் நடத்தியிருந் தாலும் இதுவரை அது ஈழ எதிர்ப்பு, போராளிகள் எதிர்ப்பு என்கிற நிலை பாட்டில் இருந்த கட்சி. ஆகவே இக் கட்சிகளை விடுத்து மற்ற கட்சிகளுக்கு வருவோம்.

மதிமுக ஈழத்தமிழருக்காக நிலை யாகக் குரல் கொடுக்கிற, கொடுத்து வருகிற கட்சி. பா.ம.க. எப்படிப்பட்ட இடர் வரினும் ஈழ ஆதரவு நிலைப் பாட்டை விடமாட்டோம் என்பதில் உறுதியாக நிற்கிற கட்சி. வி.சி.க. ஈழப்போராட்ட ஆதரவு நிலைக்கு தமிழகத்தில் நெருக்கடி வந்த, வரும் போதெல்லாம் கருத்துரிமைக்கான போராட்டத்தில் தன்னை முதன்மைப் படுத்தி வரும் கட்சி. இப்படிப்பட்ட கட்சிகள் எல்லாம் இருக்க இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஈழச் சிக்கலுக்காக ஒருமித்து ஒரே மேடை யில் குரல் கொடுக்காமல், தனித்தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்கிறார் களே என்று தமிழக மக்கள் நீண்ட காலமாய்க் குறைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

தமிழக மக்களின் இந்தக் குறை யைப் போக்க இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இவர்களுடன் இந்த உணர்வோடு, இதற்காக ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டி ருந்த தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங் கிணைப்புக்குழு மற்றும் புதியதாக வந்து சேர்ந்த இ.க.க. ஆகிய அமைப்பு களையும் ஒன்று சேர்த்துக் கொண்டு ஒரு புதிய அமைப்பை “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக் கம்” என்கிற ஓர் அமைப் பைத் தோற்றுவித்தார்கள். மற்றும் பிற இன உணர்வு அமைப்புகளும் இதில் அங்கம் வகித்தன.

எல்லாம் சேர்ந்து இப் படி ஒரு புதிய வலுவான அமைப்பு உருவாகியிருக் கிறதே, இனி தமிழகத்தில் தீரமிகு எழுச்சிமிகு, போராட் டங்கள் நடை பெறும், தில்லி அரசு ஒரு வழிக்கு வரும். ஈழச் சிக்கலுக்கு விரைவிலேயே ஒரு தீர்வு கிட்ட போர் நிறுத்தத்திற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என்று பார்த்தால், கடைசியில் உள்ளதும் போச்சே என்று மனம் நொந்து கொள்கிற அளவுக்குத் தான் இதன் செயல்பாடுகள் அமைந்தன. முதலில் இவர்கள் ஈழத்தமிழர் என்பதை விட்டுவிட்டு இலங்கைத் தமிழர் என்றார்கள். பிறகு போராளிகள் ஆதரவு நிலை என்பதை விட்டுவிட்டு அதைச் சர்ச்சையாக்க வேண்டாம் என் கிறார்கள். இதையெல்லாம் கூட ஒரு நடைமுறை உத்தி என்பதாக ஏற்றுக் கொள்வதானாலும், கடைசியில் யாரும் எந்தக் கட்சியைப் பற்றியும் பேசக் கூடாது என்று சொல்லி, எதிரி யார் என்றே அடையாளம் காட்டக் கூடாது என்கிற அளவுக்கு வாய்ப்பூட்டும் போட்டார்கள்.

இதற்குத்தானா கூட்டமைப்பு என்று மக்கள் மனம் நொந்து கிடக்க, போராட்டத் திட்டங்களாவது முனைப் போடு இருக்குமா என்று பார்த்தால் அதுவும் எதுவும் இல்லை. பழைய படியே பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் மனித சங்கிலி, கையெழுத்து இயக்கம். இதையெல்லாம் ஏற்கெனவே செய்து பார்த்து பலன் எதுவும் கிடைக் காத நிலையில்தானே இதை விடவும் வலுமிக்க போராட்டங்கள் நடத்த வேண்டும் என்றுதானே மக்கள் கூட் டமைப்பு கோரினார்கள். அல்லாமல் ஏற்கெனவே நடத்திய போராட்ட வடி வங்களையே சும்மா மீண்டும் மீண்டும் நடத்தி மக்களுக்கு பராக்கு காட்டிக் கொண்டிருக்கவா இந்தக் கூட்டமைப்பு என்கிற கேள்வி உணர் வாளர்கள் மத்தியில் எழுந்தது

ஆனால் அதுதான் நடந்தது. ஏற்கெனவே போரா டிய வடிவங்களி லேயே மீண்டும் மீண்டும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டதில் அணிகள் சோர் வடைந்ததுதான் மிச்சம். இதனால் இக்கட்சிகள் தனித் தனியே போராட் டம் நடத்திய போது திரண்ட அளவுக்குக் கூட கூட்டமைப்பு நடவடிக்கைகளில் மக்கள் அணி திரள வில்லை. மனித சங்கிலிப் போராட்டம் பேருக்கு நடந்தது. பொதுக் கூட்டங்கள் புதிய அறி விப்புகளின்றி உப்பு சப்பற்று முடிந்தன. கையெழுத்து இயக்கம் தலை யெழுத்தே என்று நடந்து கொண் டிருக்கிறது. அந்தந்த கட்சி அமைப்புகள் மத்தியில் இந்த சோர்வு நிலை என்றால், பிற அமைப்புகள் மத்தியிலோ வேறு நிலை. அவ்வமைப்புகள் இ.த.பா.இ. நிலை பிடிக்காமல் அவையவையும் தனித் தனிக் கூட்டணியை உருவாக்கிக் கொண்டு அதனதன் சக்திக்கு உட்பட்டு சில போராட்டம் நடத்தி அடுத்த டுத்த வேலைகளைப் பார்க்கத் தொடங்கின.

ஆக, சுருக்கமாக தமிழகத்தில் சிதறிக் கிடக்கிற ஈழ ஆதரவுக் குரல் ஒருமித்து ஒரே இலக்கில் வலுவோடும் வீச்சோடும் ஒலிக்க கூட்டமைப்பு பயன் படும் என்று பார்த்தால், அது நிறை வேற இயலாமல், ஏற்கெனவே இருந் ததும் நீர்த்து வலுவிழந்ததுடன் ஈழத்துக் காக ஏற்கெனவே இருந்த அமைப்புகள் போதாதென்று மேலும் மேலும் பல புதிய கூட்டமைப்புகள் உருவாகும் நிலைக்கே இட்டுச் சென்றது. இந் நிலையில் அடுத்து நாம் என்ன செய்வது என்கிற கேள்வியே மக்கள் மத்தியில் பெரும் குடைச்சலாய் உள்ளது. சற்று யோசித்துப் பாருங்கள். எழுத்தாளர் கள், ஈழச் சிக்கலை எழுதி எழுதிக் கிழித்தாயிற்று. கவிஞர்கள் ஈழம் பற்றி கவிதை பாடிப் பாடி சோர்ந்தா யிற்று. ஆய்வாளர்கள், சிந்தனை யாளர்கள் அலுப்பூட்டும் அளவுக்கு இதழ்களில் தொலைக் காட்சிகளில் வாதப் பிரதி வாதங்கள் நடத்தி, ஈழச் சிக்கலின் தன்மையை அதன் நியாயத்தை வெளிப் படுத்தியாயிற்று. மக்கள் பிரிவின் பல்வேறு தரப்பினரும் அவரவரால் முடிந்தவரை ஈழத் தமிழருக்காகப் போராடியாயிற்று. இதற்கு மேலும் இவர்கள் இன்னும் என்ன செய்ய முடியும்?எதுவும் செய்ய முடியாது. சராசரி மனிதர்களின் சாதாரண மக்களின் வரம்பு அவ்வளவு தான்.

காரணம் அனைத்தையும் ஊடு ருவி நிற்பது, அனைத்தையும் சாதிக்க வல்லது அரசியல்அதிகாரமும்,அரசியல் கட்சிகளும்தான். இந்த அரசியல் அதி காரம் அரசியல் கட்சிகளின் பங்கெடுப்பு செயல்பாடு இல்லாமல் சமூக இயக்கத்தின் சிறு துரும்பும் அசையாது, அiசைய முடியாது. மக்களே சகல வல்லமையும் படைத்தவர்கள் என்பது உண்மைதான். இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் உதிரியாக நிற்கும் மக்களால் ஒன்றும் சாதித்து விடமுடியாது. அமைப் பாகத் திரளும் மக்களாலேயே எதையும் சாதிக்க முடியும்.

தமிழக மக்கள் இன்று பல்வேறு அரசியல் கட்சிகள் அமைப்புகளாய் சிதறிக் கிடக்கிறார்கள். அவரவர்க்கும் ஒரு கட்சி, அமைப்பு, தலைவர்கள். உண்டு இப்படி யிருக்க, இத்தலை வர்கள் கட்சிகள் அமைப்புகளைத் தாண்டி மக்கள் தானாய் எதுவும் செய்து விட மாட் டார்கள். அவர்கள் எவ்வளவுதான் உணர்வுள்ளவர் களாக இருந்தாலும் அவர்களது செயல் பாட்டுக்கு ஒரு வரம்பு உண்டு. அந்த அளவுதான் அவர்களால் எதுவும் செய்ய முடியும். ஆனால் இதுவே கட்சியாகத் திரண் டால் அதன் வீச்சும் வடிவுமே வேறு. விளைவுகள், சாதனைகளின் வலுவும் வேறு.

இதனால்தான் தமிழக மக்களின் உணர்வுகளெல்லாம் ஈழ மக்களுக்கு ஆதரவாக இருந்தும், அது ஒருமித்து வெளிப்பட வீறுகொள்ள வாய்ப்பின்றி தேங்கி முடங்கிக் கிடக்கிறது. இதுவே அவரவர் சார்ந்திருக்கிற அரசியல் கட்சிகளும் ஒன்று திரண்டு ஒருமித்துக் குரல் கொடுத்து ஒரணியில் நின்று போராடினால் மக்கள் சக்தியும் ஓரணி யில் ஒருமித்துத் திரளும், தில்லி அரசை நோக்கிப் பாயும். தில்லி ஆட்சியாளர் களின் நிலைபாட்டிலும் ஒரு மாற் றத்தை ஏற்படுத்தும். ஆனால் இதுவரை அப்படி ஏதும் நிகழவில்லையே ஏன்? எனவே இந்த அடிப்படையில்தான் ஈழ ஆதரவுத் தமிழகத் தலைவர்களுக்கு நாம்இரண்டு வேண்டுகோள்களை முன்வைக்கி றோம்.

ஒன்று, ஒவ்வொருவரும் தயவு செய்து தங்கள் நெஞ்சில் கைவைத்து மனச்சாட்சியைத் தொட்டு பதில் சொல் லட்டும். ஈழ மக்களுக்கு ஆதரவாக இப்போது நடத்தும் இந்த சடங்குத் தனமான போராட்டங்களைத் தாண்டி நாம் வேறு எதுவுமே செய்ய முடியாதா. ஒன்றும் வேண்டாம். ம.தி.மு.க, பா.ம.க, வி.சி.க, இ.க.க, ஆகிய நான்கு கட்சிகள் போதும். இக்கட்சிகளோடு உடன் வருபவர்கள் வரட்டும். இக் கட்சிகளும் உணர்வாளர்களும் மட்டும் ஒன்று சேர்ந்தால் இந்த சக்தியை மட் டுமே வைத்துக் கொண்டு தமிழகத் தையே அசைவற்று முடக்கச் செய்ய முடியாதா, தில்லிக்கு ஒரு நெருக் கடியைக் கொடுக்க முடியாதா, ஏன் செய்யாமல் இருக்கிறார்கள். இதற்கு என்ன தடை?

இப்படி ஒரு போராட்டம் தொடங்கினால் அது ஈழ மக்கள் ஆதரவோடு மட்டும் நிற்காது. அது தமிழக ஆதரவு போராட்ட மாகவும் பரிணமிக்கும். தமி ழகம் நீண்டகாலமாய் எதிர் கொண்டிருக்கிற ஆற்றுநீர்ச் சிக்கல், மண்ணுரிமைச் சிக்கல் உள்ளிட்ட அனைத்து சிக்கலுக் கான தீர்வாகவும் அமையும். ஆகவே அப்படிப்பட்ட கூட் டணியை அமையுங்கள் ,அதற்கான போராட்டப் பாதையாக தேர்ந்தெடுங் கள் என்று நாம் தொடர்ந்து பாடிப்பாடி சொல்லி வருகிறோம். இது ஒன்று.

அடுத்தது, அரசியலில் மனச் சாட்சி, நீதி, நேர்மை, நியாயம், என் றெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் ஒன்றும் சரிவராது, சுற்றிலும் சந்தர்ப்ப வாதமும், சூழ்ச்சியும் மிக்க நாற்காலி அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்க நாங்கள் மட்டும் ஏமாளிகளாக இருந்து இந்த போராட்டப்பாதையைத் தேர்ந் தெடுத்துக் கொண்டு ஓட்டாண்டியாய்ப் போக முடியாது. எனவே, இந்த சந்தர்ப் பவாத சாகச அரசியலை எதிர்கொள்ள நாங்களும் அதையே நடத்த வேண்டி யிருக்கிறது என்பதானால் சரி, அந்த வழியிலேயே அடுத்த மாற்று யோசனை யாக ஒன்று சொல்வோம்.

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. தவிர்த்த, தில்லியில் காங்கிரஸ், பா.ஜ.க.வைத் தவிர்த்த ஒரு மாற்று கூட்டணியையாவது உருவாக்க முயலுங்கள். இது தொடக்கத்தில் சில இழப்புகள், சரிவுகளைச் சந்திக்க நேர் வதானாலும் காலப்போக்கில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று உறுதிப்பட்டு நிற்கும்.மக்களின் பேராதரவோடு தமிழகத்தின் மாபெரும் சக்தியாகத் திகழும். சரி, இதற்கும் இப்போது உடனடி யான சாத்தியப்பாடு இல்லையென்று தலைவர்கள் சொல்வதானால் ஒன்று செய்யலாம். இப்போது அறிவிக்கப் பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் உடனடித் தேவை, இலக்கு என்கிற அளவில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியை முறியடிப்பது என்று முடிவு செய்யலாம். தமிழீழ மக்களுக் கும் தமிழக மக்களுக்கும் தொடர்ந்து துரோகம் புரிந்து வருகிற அதற்கு ஒரு பாடம் புகட்டலாம்.

ஆனால், இன்னமும் சில உணர் வாளர்கள் தமிழகத்தில் தி.மு.க. விட்டால், அடுத்தது அ.தி.மு.க. தானே ஆட்சிக்கு வரும், அது இதை விடவும் பெரிய ஆபத்தாயிற்றே என்று சொல்லி, தி.மு.க.வே இருந்து விட்டுப் போகட் டும் என்று தி.மு.க. ஆதரவுநிலை எடுத்து அதற்கு ஒரு நியாயம் கற்பித்து வருகிறார்கள். அவர்களது சிந்தனைக்கு ஒரு கேள்வி. சரி, இப்போது தமிழக சார்பில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தில்லி யில் இருக்கிறார்கள். இருந்தும் இவர்கள் ஈழத்துக்காக என்ன சாதித் திருக்கிறார்கள் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை என்பதுதானே உண்மை. ஆக, தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தில்லியில் இருந்தாலும் ஒன்றுதான், இல்லா விட்டாலும் ஒன்றுதான்.இரண்டிற்கும் ஒன்றும் பெரிய வேறுபாடு இல்லை. அதைப் போலவே தான் அ.தி.மு.க. சார்பிலும் .தில்லியில் யார் இருந் தாலும் இல்லாவிட்டாலும் நிலமை ஒன்றுதான் அதே நிலைதான் தமிழகத்திலும்.

ஆக இந்த இரண்டு கட்சியில் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் நிலைமை ஒன்று தான் என்பது தெளிவு. ஆகவே அதிகாரத்தில் யார் இருப்பது என்கிற விவாதம் தேவையில்லை. அடுத்து எதிர்க் கட்சியாக யார் இருப்பது என்பது கேள்வி. இதில் தி.மு.க. ஆண்டு அ.தி.மு.க எதிர்க்கட்சி யாயிருப்பது நல்லதா, அல்லது அ.தி.மு.க ஆண்டு தி.மு.க எதிர் கட்சி யாக இருப்பது நல்லதா என்று பார்த் தால், இரண்டாவது நிலையே தமிழ் நாட்டுக் கு தமிழர்களுக்கு நல்லது, பயனுள்ளது என்பதுதான் கடந்த கால அனுபவம்.

அதிமுக ஆட்சி அடக்கு முறை மிக்கதா, கருத்துரிமைக்கு எதிரானதா, இருக்கட்டும் பரவா யில்லை. இதை எதிர்த்து தமிழகத் தில் வலுமிக்க இயக்கங்கள் ,வீறு மிக்க போராட்டங்கள் எழும். வேறு வழியில்லாமல் தி.மு.க இதற்கு ஆதரவு நிலை எடுத்து தமிழகத்திற்காக, தமிழர்களுக் காக குரல் கொடுக்க வேண்டி வரும். உண்மையான அக்கறை இல்லாவிட்டாலும் அ.தி.மு.க எதிர்ப்பு அரசியலுக்காகவேனும் தி.மு.க இப்படிப்பட்ட நிலை எடுக்க வேண்டி வரும்.ஆனால் இதே தி.மு.க ஆண்டால் தானும் எதுவும் செய்யாமல், மக்களும் எதற்காகவும் வீறு கொண்டு எழவிடாமல் அவர்களது போராட்ட உணர்வுகளுக்கு தீனி போட்டு அவர் களுக்கு எதாவது பராக்கு காட்டி அவர் களது உணர்வுகளையும் மழுங்கடித்து அல்லது காயடித்து விடும்.

ஆகவே இந்த இரண்டு நிலை களை நோக்க தற்போது தி.மு.க, காங்கிரஸ் துரோகக் கூட்டணியை முறியடிப்பது என்பதை ஈழ ஆதரவு அணியினர் இலக்காகக் கொள்ளலாம். இதில் காங்கிரஸ் எதிர்ப்பு, வெறுப்பு என்பது ஏற்கெனவே மக்களிடம் தீயாய் பற்றிப் பரவியுள்ளது.எனவே அது ஒன்றும் பிரச்சனையாய் இருக்காது. தி.மு.க. எதிர்ப்பு என்பதுதான் மக் களுக்குக் கொஞ்சம் தயக்கமாய் இருக்கும். ஆனால் ஈழப் பிரச்சனையில் அதன் துரோகத்தை விளக்கி பிரச்சாரம் செய்து அதைத் தெளிவு படுத்த வேண் டியதுதான்.

இந்த நோக்கில் தற்போது இ.த.பா.இ. அமைப்பில் உள்ள ம.தி.மு.க, மற்றும் இ.க.க.வுக்கு இதில் ஒன்றும் சிக்கல் இருக்காது.சிக்கல் பா.ம.க., வி.சி.க. வுக்குத்தான். தற்போது இருக்கும் நிலைப்பாட்டி லேயே தற்போது உள்ள கூட்டணி யிலேயே இவை நீடித்தால் ஈழத்துக் காகப் போராடிக் கொண்டே, ஈழ மக்க ளுக்கு துரோகம் செய்யும் தி.மு.கவுடன் கூட்டு சேர்ந்து வி.சி.க. எப்படி வாக்கு கேட்கமுடியும்.அதேபோல ஈழத்துக்காக குரல் கொடுக்கும் பா.ம.க. ஈழ மக்களைக் கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவும் காங்கிரசோடு கூட்டு சேர்ந்து எப்படி வாக்கு கேட்க முடியும்.

ஆகவே இவ்விரு கட்சியினரும், திமுக-காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வந்து விடவேண்டும். அப் படி வந்து விடுவதுதான் அவர்களுக்கு மரியாதை. இல்லையென்றால் இவர் களது ஈழ ஆதரவு நிலை போலி என்று ஆகிவிடும் என்பதோடு மட்டுமல்ல தி.மு.க இந்தக் கூட்டணிக் கட்சிகளுக்கு விசுவாசமாக இருக்குமா, இவற்றுக்கு உண்மையா உழைக்குமா என்பதும் சந்தேகமே. சரி, அப்படியானால் அ.தி.மு.க அணி மட்டும் ஈழ ஆதரவு அணியா என்று கேள்வி எழலாம். நியாயம். அ.தி.மு.க அணி ஈழ ஆதரவு அணி இல்லைதான். ஆனால் அது ஈழத்திற்கு துரோகம் செய்யும் தி.மு.க, காங்கிரஸ் எதிர்ப்பு அணி. எனவே எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற வகையில் தற்போது ஈழ ஆதரவுக் கட்சிகள் அ.தி.மு.க அணியை ஆதரிக்கலாம். பா.ம.க.வும் வி.சி.க.வும் இந்த அணியை நோக்கி வந்தால் இந்த அணியை ஈழ ஆதரவு நிலைப்பாட்டை நோக்கி கூடுதல் அழுத்தம் கொடுக்க வைக்கலாம்.

ஆக சுருக்கமாக, தற்போது இ.த.பா.இ அமைப்பில் உள்ள ஈழ ஆதரவுக் கட்சிகளிடம் நாம் கோருவது, போராட்ட அரசியலா, தேர்தல் அரசி யலா என்கிற நமது கேள்விக்கு தற் போது போராட்ட அரசியல் இல்லை தேர்தல் அரசியல்தான் என்று இவர்கள் சொல்வார்களேயானால்,நமது முதல் வேண்டுகோள், தி.மு.க, அ.தி.மு.க.வை விடுத்த, காங்கிரஸ் பாஜகவை விடுத்த ஒரு மாற்று அணியை அமையுங்கள் என்பதே. இது இப்போதைக்கு உடனடி சாத்திய மில்லை என்றால், இப்போது அதி காரத்திலுள்ள துரோக கும்பலை வீழ்த்த அ.தி.மு.க அணியோடு சேர்ந்து விடுங்கள். அந்த அணியை ஆதரியுங்கள் என்பதுதான்.

இதில் இரண்டு அணியுமே மோசம், ஆகவே எந்த அணியையுமே ஆதரிக்காதீர்கள் என்று மக்களிடம் கோரலாம். ஆனால் இது கொள்கைப் புனிதவான்களாய், பரிசுத்தவான் களாய்த் தோற்றம் காட்டத்தான் பயன்படுமேயல்லாது நடைமுறையில் இது சாத்தியப் படாது,செயலுக்கு வராது. இது எந்த அணியுமே அதி காரத்துக்கு வராமல் தடுத்து நிறுத்தி விடவும் முடியாது. ஒரு மிகச்சிறு பான்மை மட்டுமே வாக்களிப் பைப் புறக்கணிக்க, பிற பெருவாரி மக்களின் வாக்களிப்பில் இரண்டில் ஏதாவதொரு அணி அதிகாரத்திற்கு வந்தே தீரும். இது மறைமுகமாக தற்போது அதி காரத்தில் இருக்கிற தி.மு.க, காங்கிரஸ் அணிக்குத் துணை போவதாகவே முடியும். ஆகவே வெளிப்படை யாகவே இந்தத் துரோகக் கும்பலை ஒழித்துக் கட்டுவதே தற்போது நம் முன்னுள்ள உடனடிக் கடமை யாகும். ஆகவே தமிழீழ ஆதரவு நிலைப்பாட் டில் இருக்கும் தமிழகத் தலைவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்.

இறுதியாக ஒன்று, இந்த வாத மெல்லாம் சரிதான், ஆனாலும் சம்மந்தப்பட்ட தலைவர்கள் இதற்கு இணங்கி ஒன்றுபட்டு வருவார்களா, மனத் தாங்கல் இல்லாமல் தொகுதிப் பங்கீடு செய்து கொண்டு ஒற்றுமை யாகச் செயல்படுவார்களா என்கிற கேள்விகள் எழலாம். தமிழீழ மக்களின் நலன் காக்க, தமிழக மக்களின் உரிமைகள் மீட்க தலைவர்கள் இதுபோன்ற சிக்கல்களில் சற்று விட்டுக் கொடுத்து, இணக்க மாகப் போக வேண்டியதுதான். வி.சி.க.வே வேண்டாம் என்கிற காங்கிரஸ் கூட்டணியில் அக்கட்சி நீடிக்க விரும்பும் போது, காங்கிரசோடு சேர்ந்து தி.மு.க. தமிழர்களுக்கு துரோ கம் செய்யும்போது, இங்கெல்லாம் காட்டுகிற சகிப்புத் தன்மையை ஈழ ஆதரவுக் கட்சிகளின் ஒற்றுமையைக் கட்டுவதில் இவர்கள் காட்டக் கூடாதா?அதாவது தமிழின அழிப்பில் அதற்குத் துணை போவதில்தமிழ்த் துரோகக்கட்சிகள் ஒன்று பட்டுச் செயல் படும்போது தமிழினக் காப்புக்காக நாம் ஒன்று பட்டுச் செயல் பட முடியாதா ஒருவருக்கொருவர் கொஞ்ச மாவது விட்டுக் கொடுத்துப் போக முடியாதா. போகலாம். போக வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. பார்ப்போம். இது எந்த மட்டத்தில் கை கூடுகிறது என்பது நடைமுறையில் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். வரலாறு காலாகாலத்துக்கும் இந்த சந்தர்ப்பவாத நாற்காலித் தலைவர் களையே நம்பிக் கொண்டிருக்காது. ஈழத்தில் மூத்த சந்தர்ப்பவாத சமரசத் தலைமைகளை நிராகரித்து விட்டு எப்படி இளம் புரட்சியாளர்களும், போராளிகளும் தோன்றினார்களோ, அதே போல, தமிழகத்திலும் தற்போ திருககும் சந்தர்ப்பவாத நாற்காலித் தலைவர்களை நிராகரித்துவிட்டு, நாளை புரட்சியாளர், போராளிகள் தோன்றுவார்கள். அதற்கான அறி குறிகள் இப்போதே தோன்றத் தொடங்கி விட்டன.அப்படிஅவர்கள் மூலமாகத் தான் தமிழகத்திற்கு ஒரு விடிவு காலம் கிட்டமுடியும் என்றால் அப்புறம் நாளைய சரித்திரத்தில் இத்தலை வர்கள் செல்லக் காசாக, வரலாற்றின் கரும் புள்ளிகளாக ஆகிவிடுவார்கள். அப்படி ஒரு நிலை தேவைதானா என்பதைத் தமிழகத் தலைவர்கள் இப்போதே சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com