Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
ஜனவரி - பிப்ரவரி 2009
நாலு வார்த்தை


மண்மொழி நான்காம் ஆண்டின் முதல் இதழ் இது. அதாவது, மூன்று ஆண்டுகள் 10 + 10 + 5 என 25 இதழ்கள் கொண்டு வந்தது போக அடுத்து வெளிவரும் 26வது இதழ். இந்த ஆண்டு தொடங்கி இரண்டரை மாதம் கழித்து மிகுந்த காலதாமதத்தோடு வெளி வருகிறது. தமிழகத்தில் ஈழச் சிக்கல் சார்ந்த கொந்தளிப்புகள் எழத் தொடங்கி அது சார்ந்து ஆங்காங்கே பல போராட்டங்கள் நடைபெறுவதையொட்டி அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி நேர்ந்த சூழல், இதழ்ப் பணியைத் தாமதப்படுத்தி விட்டது.


நிர்வாகி

இராசேந்திரசோழன்

நிர்வாகக்குழு

காஞ்சி அமுதன்
சக்தி சுப்பு
பொன்.மாயவன்
மா.மு.பூங்குன்றன்

தொடர்பு முகவரி:

மண்மொழி வெளியீட்டகம்,
காந்தி நகர், மயிலம் - 604 304,
திண்டிவனம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்.
தொலைபேசி: 04147-241256
கைபேசி: 94432-12761

இருக்கட்டும். மண்மொழியைப் பொறுத்தமட்டில், இதழுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் வாசகத் தேவையை நிறைவு செய்யுமளவுக்கு இதழின் அகக் கட்டுமானம்தான் போதுமானதாய் இல்லாமல் மிகப் பலவீனமாயிருக்கிறது. இதைக் களைய உணர்வாளர்கள் யாராவது இந்தப் பணியோடு தங்களை ஈடுபடுத்திக் கொண்டால் பயனுள்ளதாய் இருக்கும், இதன் அகக் கட்டுமானத்தையும் மேம்படுத்த உதவிகரமாய் இருக்கும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் யாரும் முன்வருகிற மாதிரியோ, பொருத்தமானவர்கள் கிடைக்கிற மாதிரியோதான் தெரியவில்லை. என்ன செய்வது, இருக்கிற நிலைக்குத் தாக்குப் பிடித்து முடிந்தவரை, இயங்க வேண்டியதுதான். அந்த இயக்க சாத்தியப்பாட்டுக்குள் என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்து கொண்டிருக்க வேண்டியதுதான். அந்த வகையில் மண்மொழியின் இயக்கம் தொடரும், நீடிக்கும் என்று மட்டும் உறுதியளிக்கலாம்.

மண்மொழி நிதிநிலையைப் பொறுத்தமட்டில் கடந்த ஆண்டுக்கு முந்தைய 2007 ஆம் ஆண்டு ரூ. 4,200/- பற்றாக்குறை என்று குறிப்பிட்டிருந்தது. அதில் ரூ. 2,000/- பெயர் குறிப்பிட விரும்பாத உணர்வாளர் ஒருவர் ஏற்றுக் கொண்டார். மீதி ரூ. 2,200/- தான் பற்றாக்குறை. அதற்கடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை கடைசி பக்கத்தில் தரப்பட்டுள்ளது. இதன்படி தற்போதைய பற்றாக்குறை ரூ. 5,000/-. இதையும் உணர்வாளர்கள் மூலம் ஈடு கட்டிக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. எனவே, இப்போதைக்கு அது ஒரு பொருட்டில்லை. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

இப்போதைய நமது மற்றும் தமிழக உணர்வாளர்களின் சிந்தனையெல்லாம் ஈழச்சிக்கல் பற்றியதுதான். அச்சிக்கலில் கொந்தளித்துக் கொண்டிருந்த தமிழகத்தை நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புகள் சற்று தேக்கமடையச் செய்திருக்கிறது. இதில் பத்திரிகைகள் எதுவும் ஈழச்சிக்கலுக்கு அதிக முக்கியத்துவம் தந்து செய்திகள் வெளியிட வேண்டாம் என ஆட்சியாளர்கள் தரப்பிலிருந்து வாய்மொழி உத்திரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் கேள்வி.

இந்நிலையில் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும், உணர்வாளர்கள் சிந்தனையும் செயல்பாடும், பெரும்பாலும் ஈழச் சிக்கல் சார்ந்தே நிலவுவதிலும் இந்த இதழும் ஈழச் சிக்கல் சார்ந்தே வெளி வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால், தமிழக மக்களெல்லாம் ஈழத்துக்கு ஆதரவாக இருந்தும், அமைப்புகள் பலவும் ஈழ ஆதரவுக் குரல் கொடுத்தும், அந்த உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்து போராட, அதை முன்னெடுத்துச் செல்ல, ஒரு உரிய தலைமை, உரிய அமைப்பு இல்லையே என்பதுதான் வேதனையாக இருக்கிறது. இந்த வேதனையின் வெளிப்பாட்டிலேயே இது தமிழகத் தவிப்பு இதழாக வெளிவருகிறது.

தமிழக மக்களால் என்ன செய்ய முடியும். தவிக்க மட்டுமே முடியும். இந்தத் தவிப்பைப் புரிந்து, அதற்கு வடிவம் கொடுப்பதும், வழி காட்டுவதும், போராட்டத்துக்கு அணி திரட்டுவதும் அதைத் தளராது, சோராது முன்னெடுத்துச் செல்ல வேண்டியதும் தலைவர்கள்தானே. அதனால் இத்தலைவர்களுக்கான விண்ணப்பங்கள், வேண்டுகோள்களால் நிரம்பி இருக்கிறது இதழ். தலைவர்கள் இந்த வேண்டுகோள்களை பரிசீலிக்க வேண்டும். மக்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்ற முன்வர, பாடுபட வேண்டும்.


தோழமையுடன்
ஆசிரியர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.