Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
ஜனவரி - பிப்ரவரி 2009
Slum Dog Millionaire - ஸ்லம் டாக் மில்லியனர் - கோட்டீஸ்வரனாகும் குப்பத்து நாய்
பவா சமத்துவன்


கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி, உத்திரப் பிரதேச மாநிலம் எடவா என்னு மிடத்தில் கோமள் என்ற 6 வயது தலித் சிறுமி பணப்பையை திருடியதாக கைது செய்த போலிசார், குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு கூறி அச்சிறுமியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். துணை காவல்துறை ஆய்வாளர் ஷியாம்லால் யாதவ் என்பவர் அந்த இளம் பிஞ்சின் இரண்டு காதுகளையும் பிடித்து உயரே தூக்கியதையும், தலை முடியைக் கொத்தாக பிடித்து உலுக்கி எடுத்ததையும் தற்செயலாக ஒருவர் தன் செல்போன் கேமராவில் படம் பிடிக்க, அக் காட்சிகளை வட இந்திய செய்தித் தொலைக்காட்சிகள் நாள் முழுக்க ஒளி பரப்பி பார்வையாளர்களின் இதயங் களைத் துடிதுடிக்க வைத்தனர்.

“போலிசாரின் இந்தக் கண்மூடித்தனமான தாக்குதல் காட்டு மிராண்டித்தனமானது” என்றார் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் சாந்தா சின்ஹா. “இதுபோன்று குழந்தைகள் கொடுமைக்குள்ளாக்கப்படுவதை கண்டு நாம் ஒவ்வொருவரும் வெட்கித் தலை குனிய வேண்டும்” என்றார் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி. இத்தனைக்கும் அச்சிறுமி நிரபராதி, அந்த திருட்டுக் குற்றச்சாட்டே பொய்யானது என்பது பிறகு தெரிய வந்தது.

இந்த நிஜ இந்தியாவை, இரத்தம் தெறிக்கும் அதன் வாழ்வை, இதயத்தை உலுக்கி எடுக்கும் அதன் வலியை யாரேனும் ஸ்லம் டாக் மில்லியனர் போன்று திரைப்படம் எடுத்து விட்டால் கோபம் வந்துவிடுகிறது இந்த நாட்டின் போலி அறிவு ஜீவிகளுக்கும் சுயமானம் காக்கும் சுதேசிகளுக்கும்.“மூன்றாம் உலக நாடுகளை சந்தோஷப்படுத்துவதற்காக இந்தியாவைக் கேவலப்படுத்தும் சினிமா - ஸ்லம் டாக் மில்லியனர்” என எழுதுகிறார் சண்டே இந்தியன் அரித்தம் சவுத்ரி.

சவுத்ரி அவர்களே, எருதின் வலி அதை கொத்தி தின்னும் காக்கைகளுக்குத் தெரியுமா? இப்படித்தான் “பதேர் பாஞ்சாலி” எடுத்த சத்யஜித்ரேவையும் “சலாம் பாம்பே” எடுத்த மீரா நாயரையும் தூற்றினீர்கள். ஆனால் உண்மையை தோலுரித்துக் காட்டும் படைப்புகளை உங்களின் படைபரிவாரங்களாலும் பத்திரிகைகளாலும் தடுக்க முடியவில்லை. அப்படி என்னதான் இருக்கிறது, குப்பத்தில் ஒரு நாயாய் பிறந்தவன் கோடீஸ்வரனாகும் இந்த படத்தில்...?

* காவல் நிலையத்தில் விசா ரணைக்கு அழைத்து வரப்படுகிறான் சிறுவன் ஜமால் மாலிக்.

“சொல்லுடா நாயே.... எல்லா பதிலும் உனக்கு எப்படி தெரியும்? விடையை எப்படி திருடினே?”

அடியும் உதையினூமூடே மிரட் டியபடி கேட்கிறார் காவலர்.

“தெரியும்” சிறுவன் ஜமால் மாலிக்.

“அதான் எப்படி...” மீண்டும் அடி உதை.

“தெரியும் அவ்வளவுதான்!” ஜமால் மாலிக்.

“உனக்கு அவ்வளவு திமிரா? சொல்லமாட்டே... சேரியில பிறந்த நாய் நீ... கோட்டீஸ்வரன் ஆகப் போறியா... உன்னை....?”

காவல் நிலையத்தில் சிறுவன்மீது சித்திரவதைத் தொடர்கிறது. அவர்கள் எதிர்பார்க்கும் பதில் ஏதும் வராது போகவே, காவல் ஆய்வாளர் அடுத்த கட்ட சித்திரவதைக்கு உத்தரவிடு கிறான். உயரத்தில் தொங்கவிடப்பட்டு கால் விரல்களில் மின் அதிர்ச்சி கொடுக் கப்படுகிறது. மயங்கி விடுகிறான் சிறுவன் ஜமால் மாலிக்.

அறிவும் ஆற்றலும் ஒரு சேரிச் சிறுவனுக்கு எப்படி சொந்தமாக இருக்க முடியும். அது மேட்டுக் குடிக்கும் மேல் ஜாதிக்கும் மட்டுமே சொந்தமல்லவா? எப்போதும் நீ இருக்குமிடம் சேரிதான். அதைவிட்டு விலகி வந்து எங்கள் ஆசா பாசங்களில் கை வைக்காதே.. என்பதன் எச்சரிக்கை தான் இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சிகள். * ஆசியாவின் மிகப்பெரிய சேரியான தராவியில் அனாதைச் சிறுவர் களாக வாழ்வோர் ஜமால் - சலிம் எனும் இரண்டு சிறுவர்களும், லத்திலா என்ற சிறுமியும். குப்பை களைப் பொறுக்கி, அதிலுள்ளதை விற்று, வயிற்றை நிரப்பு வதுதான் இவர்களின் ஆரம்பகட்ட வாழ்க்கை. ஆதரவற்ற சிறுவர்களை தேடிப் பிடித்து கண்களைக் குருடாக்கி யும், உறுப்புகளை ஊனப்படுத்தியும் பிச்சையில் ஈடுபடுத்தும் சமூக விரோத கும்பலிடம் இச்சிறுவர்கள் சிக்கி பின் அங்கிருந்து தப்பிக்கிறார்கள். சிறுமி மட்டுமே அவர்களிடம் அடைபட்டு விடுகிறாள்.

கால மாற்றத்திலும் - வாழ்க்கை போக்கிலும் பலவித அனுபவங்களுக்கு ஆட்படுகிறார்கள் சிறுவர்கள். இரயி லில் சிறு பொருட்களை விற்பனை செய்பவர்களாக, அயல்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக, டீக் கடை சிறுவர்களாக, கம்ப்யூட்டர் கால் சென்டரில் உதவியாளராக... இப்படி போகிறது இவர்களது வாழ்க்கை. ஜமாலின் சகோதரன் சலீம் மட்டும் சமூக விரோத சக்திகளிடம் சிக்கி தானும் அவ்விதமே வளர்கிறான்.

சிறுவன் ஜமால் மட்டும் சமூகத் தில் தானும் உயர்ந்து பெரிய நிலைக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கு முயற்சிக்கிறான். அப்போது இந்தியாவே ஆட்டிப் படைத்து பல பேரை கோட்டீஸ்வரனாக்கிக் கொண் டிருக்கிறது தொலைக் காட்சிகளில் வரும் “கோன் பனேகா குரோர்பதி” நிகழ்ச்சி.

பலவாறு முயன்று அந்நிகழ்ச்சி யில் ஒரு பங்கேற்பாளராக இடம் பிடித்து விடுகிறான். ஒவ்வொரு கேள்விக்கும் ஆன பதிலை தனது வாழ்க்கை சம்பவங்களிலிருந்தே தேடி எடுக்கிறான். பார்வையாளர்கள் அனை வரும் ஒரு சேரிச் சிறுவனின் திறமையை எண்ணி திகைத்துப் போகிறார்கள். நிகழ்ச்சி நடத்துனரோ (அனில் கபூர்) ஒரு சேரிப் பையன் எப்படி கோடீஸ்வரனாக முடியும் என்று மனதிற்குள் மருகிக் கொண்டிருக்கிறார். பல நேரம் சிறு வனை திசை மாற்றவும் முயற்சிக்கிறார். ஆனால் முடியவில்லை. கடைசி கேள் விக்கு முன்னதான இடை வேளையில் தனது சந்தேகத்தைக் காவல் துறையிடம் சொல்லி வைக்கிறார். இந்தியாவே திரும்பிப் பார்க்கும் ஒரு சிறுவனை சித்திரவதைக்குப் பின்னும் எதுவும் செய்ய முடியாமல் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைக்கிறது காவல்துறை. கடைசி கேள்விக்கும் தனது காதலி லித்திகாவின் உதவியுடன் பதிலைப் பெற்று, விடை யாகக் கூறி கோட்டீஸ்வரனாகிறான் இளைஞன் மாலிக்.

நாற்றமெடுக்கும் குப்பைகளில் நகரும் வாழ்க்கை, மதத் தீவிரவாதத் தின் கொடூரம், பல குழந்தைகள் அநாதையாக்கப்படும் அவலம், பெண் கள், சிறுமிகள் பாலியல் ரீதியில் குரூர மாக சுரண்டப்படுதல், வன்கொடுமைக் குள்ளாக்கப்படுதல், தங்களது சுய நலத்திற்காக குழந் தைகளைக் கொடுமைப்படுத்தும் சட்ட விரோத கும்பல்கள், மனித உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் இந்த நாட்டின் காவல் துறை அமைப்பு, விளிம்பு நிலை சமூகத்திலும், இந்தியக் குழந்தைகளிடம் இருக்கும் அறிவு, ஆற்றல் சூழல்களுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்கிற அவர்களின் பக்குவம், எத்தனை தடைகள் வந்தாலும், தங்களின் இலட்சியத்தில் அவர்களுக்கு இருக்கும் விடாமுயற்சி இப்படி மிக அழகாக இந்தியச் சூழலுக்கு ஏற்ப மிகச் சிறப்பாக சம்ப வங்களை அடுக்கி திரைக்கதை எழுதி யிருக்கிறார் சைமன் பியுப்பாய். படத்தை அற்புதமாக இயக்கி இருப் பவர் இங்கிலாந்துக்காரரான டானி பாய்ல்.

இருக்கிற எல்லா இசைக் கருவி களையும் படத்தில் எல்லா நேரங் களிலும் இசைத்து விட வேண்டும் என்றில்லாமல் கதையின் போக்கிற்கு ஏற்ப, இசை அமைத்திருக்கிறார் நம்மூர் ஏ.ஆர்.ரஹ்மான்.உலகெங்கும் பெரும் வர வேற்பைப் பெற்று, பல்வேறு விருது களை குவித்து வரும், இந்தப் படம் விகாஸ் ஸ்வரூப் என்ற இந்தியர் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதாகும். ஒரு சிறந்த கலைப்படைப்பு என்பது காலத்தைக் காட்டும் கண்ணாடியாகும் என்பதை இந்தப் படம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com