Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
நவம்பர் - டிசம்பர் 2008
ஒபாமா
தமிழேந்தி

ஓ.. ஓ... பாரக் ஒபாமா ஒரு சொல் உன்னுடன் பேசலாமா

obama குருதியில் தோய்ந்த இனவெறியன் - கற்
கோட்டையை உடைத்த முதல் மனிதன்
நிறவெறி எழுதிய வரலாற்றின் - கொடு
நியதியைத் தகர்த்த பெருந்தலைவன்

மார்ட்டின் லூதர்கிங் தொடங்கி - எம்
மண்டே லா வரை போரிட்டார்.
ஆர்த்த அவர்தம் பெரும் போரின் - நல்
ஆக்கந் தானே உன் வெற்றி.

அதனால் உன்னை வாழ்த்துகிறேன் - நானும்
கருப்பன் அதனால் வணங்குகிறேன்.
இதனால் மட்டும் மாற்றம் வரும் - என
எவர்சொன் னாலும் பிணங்குகிறேன்.

நாரா யணன் என் பார் ஒருத்தர் - எம்
நாட்டின் முதற்குடி மகன்ஆனார்.
சீரிய பால கிருஷ்ணன் எனும் - ஒரு
சேரியர் நீதியின் தலையானார்.

மட்டை ரெண்டாய் கிழிந்ததுவா - சேரி
மக்களிடம் தேன் வழிந் ததுவா.
நக்கிப் பிழைத்தல் நாய்ப்பிழைப்பு - இதில்
நல்லவன் தீயவன் வழக்கெதற்கு.

அந்தக் கதைதான் அங்கேயும் - கொடும்
அடிமைத் தனந்தான் எங்கேயும்
பங்குச் சந்தை பெற்ற மகன் - நீ
பணத்துக் குன்னை விற்றமகன்.

கொடியவன் ‘புஷ்’ஆல் அமெரிக்கா - இன்று
குப்புறக் கவிழ்ந்து போனதடா
அடித்தது உனக்கு யோகமடா - எனில் நீ
துரும்பை அசைக்கவும் ஆமோடா

வெளுப்போ கருப்போ இவையெல்லாம் - என்றும்
வெற்றியை உறுதிப் படுத்தாது
சிவப்பின் புரட்சியைத் தேடாமல் - எந்தத்
தேசமும் இங்கு விடியாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com