Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
நவம்பர் - டிசம்பர் 2008
நாலு வார்த்தை


மண்மொழி மூன்றாம் ஆண்டின் நிறைவு இதழ் இது. முதல் இரண்டு ஆண்டுகளும் 32 பக்களவில் ஆண்டுக்கு பத்து இதழ் என 20 இதழ்கள் கொண்டு வந்து, இந்த மூன்றாம் ஆண்டில் 64 பக்க அளவில் 5 இதழ்கள் என கொண்டு வந்ததின் அடிப்படையில் 25வது இதழாக வெளிவருவது இது. இந்த மூன்றாம் ஆண்டு நிறைவில், இதழுக்காக பல்வகையிலும் உதவிய, உழைத்த அனைவருக்கும் அதாவது, மனமுவந்து இதழுக்கு நிதியுதவி செய்த நன்கொடையாளர்கள், விரும்பியவாறு நல்லமுறையில் ஒளியச்சு, வடிவமைப்பு செய்து தந்த இலக்கியா ஒளி அச்சு, அச்சாக்கம் செய்து தந்த தேவா அச்சகம், இதழ் விற்பனை முகவர்கள், விற்பனையாளர்கள், வாசகர்கள், அபிமானிகள், ஆதரவாளர்கள் முதலான அனைவருக்கும் மண்மொழி ஆசிரியர் குழு தன் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறது.


நிர்வாகி

இராசேந்திரசோழன்

நிர்வாகக்குழு

காஞ்சி அமுதன்
சக்தி சுப்பு
பொன்.மாயவன்
மா.மு.பூங்குன்றன்

தொடர்பு முகவரி:

மண்மொழி வெளியீட்டகம்,
காந்தி நகர், மயிலம் - 604 304,
திண்டிவனம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்.
தொலைபேசி: 04147-241256
கைபேசி: 94432-12761

அடுத்த நான்காம் ஆண்டிலிருந்து இப்படி 2 மாதத்துக்கொருமுறை என நீண்ட இடைவெளி விட்டு 64 பக்கம் கொண்டு வராமல், 48 பக்க அளவில் மாதத்துக்கு ஒன்று என கொண்டு வரலாம் என்று திட்டம் இருக்கிறது. என்னதான் திட்டம் மனதிலிருந்தாலும் புறச்சூழல்களே அதைத் தீர்மானிக்கின்றன என்பதால் அதற்கேற்ப எப்படி வாய்ப்போ அப்படி மண்மொழி வெளிவரும். ஆக எப்படியும் தொடர்ந்து வரும் என்பதை மட்டும் வாசகர்கள் உறுதியாக நம்பலாம்.

இந்த இதழ் சேதிகள் அதிகமாக நிரம்பிவிட்டன. அன்றாடம் ஈழத்திலிருந்து வரும் செய்திகளும் அதுசார்ந்து அவ்வப்போது எழும் சிந்தனைகளுமே இந்த சேதி பெருக்கத்துக்குக் காரணம். இன்னமும் இது சார்ந்து வெளிப்படுத்த விழையும் எண்ணங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. அந்த அளவு உலகில், விடுதலைக்காகப் போராடிய வேறு எந்தத் தேசிய இனமும் அனுபவிக்காத இன்னல்களையும் துயரங்களையும் ஈழ மக்கள் அனுபவித்துக் கொண்டிருக் கிறார்கள். இந்த நேரத்தில் இதைத் தாண்டி வேறு சிந்தனையே எழாத சூழலில், ஈழம் சார்ந்த சிந்தனைகளே மிகுந்து அதுவே இதழ் முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டுள்ள நிலையிலேயே இந்த இதழ் ஈழச்சிறப்பிதழாக - கொதிப்பிதழாக வெளி வருகிறது.

சேதிகள் நிறைய அடைத்துக் கொண்டதால் வடிவமைப்பில் வழக்கமாக படங்கள் வைப்பது போல் இந்த இதழில் வைக்க முடியவில்லை. படம் ஒன்றும் பெரிய பலனைத் தந்து விடப்போவதில்லை என்றாலும், பக்கம் பூராவும் எழுத்தாயிருக்கும் அலுப்பைத் தவிர்க்கவே தொடர்புடைய படங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது வாசகர்கள் அறிந்ததுதான். என்றாலும் அந்தப் பயன் இந்த இதழில் வாய்க்காமல் போய் விட்டதால் வாசகர்கள் அலுப்படையாமல் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேறு என்ன? நிர்வாக ரீதியில், நிதி ரீதியில் பகிர்ந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறையவே இருக்கின்றன. ஆனால் வெறுமனே பேசி என்ன பயன், என்ன பேசினாலும் ஈடு பாடு உள்ளவர்கள் மட்டுமே அக்கறைகாட்டுவார்கள், உதவுவார்கள். அந்த அக்கறை, உதவும் நோக்கு எல்லோருக்கும் வரவேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள், எதிர்பார்ப்பு. இதையெல்லாம் கட்டாயப்படுத்த முடியாது. வற்புறுத்திப் பெற முடியாது அல்லவா?

சரி இருக்கட்டும். இலக்கு நோக்கிய நகர்வுகள் எதுவுமே பட்டு மெத்தையில் பயணிக்க முடியாது. சபரி மலைக்கு சாமி கும்பிடப்போகிறவர்களே கல்லும் முளளும் காலுக்கு மெத்தை என்று சொல்லும்போது அது நமக்கு எம்மாத்திரம் என்று மனதை தேற்றிக் கொண்டு, இடர்களுக்கு மத்தியிலேயே பயணிக்க வேண்டியதுதான். நாம் நம் வரலாற்றுக் கடமையைச் செய்வோம். பலன் உடனடியாய் விளையாவிட்டாலும், தாமதமாகவேனும் எப்படியும் விளையும் என்கிற நம்பிக்கையோடு செயல்படுவோம். பார்ப்போம்.

தோழமையுடன்
ஆசிரியர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com