Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
நவம்பர் - டிசம்பர் 2008
ஈழச் சிக்கலில் தமிழர்களை ஏய்க்க தில்லி தமிழக அரசுகளின் இழுத்தடிப்பு உத்தி


தமிழக முதல்வர் கருணாநிதி ஈழப்பிரச்சனை தொடர்பாக ஏற்கெனவே தமிழர்களுக்குக் காட்டிய பயாஸ்கோப் போதாதென்று, தற்போது இந்த மாதம் 2ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர்களும் 4ஆம் தேதி இவருடைய தலைமையில் இவரும் தமிழக அமைச்சர்களும், பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து அடுத்த பயாஸ்கோப்பை அரங்கேற்றியிருக்கிறார். சந்திப்புக்கு பலன் என்றால் பிரணாப் முகர்ஜி, இச்சிக்கல் குறித்து ஈழத்துக்கு பயணம் செய்வாராம். எப்போது புறப்படுவார், என்ன பேசுவார், எப்போது போரை நிறுத்துவார் என்பதெல்லாம் யாருக்கும் புரியாத மர்மங்கள்.

ஏற்கெனவே ஈழப்பிரச்சினையில் பிரதமர் ‘கவலை தெரிவிக்க’ ஒரு போராட்டம்.... அடுத்து தன் சக்திக்குட்பட்ட அளவில் முயல்வதாகக் கூறவைக்க ஒரு போராட்டம்.... இப்போது பிரணாப் முகர்ஜியைக் கிளப்பி அனுப்ப ஒரு போராட்டம்..... இப்படி இங்கே தமிழன் போராடிக் கொண்டே இருக்க வேண்டியதும், ஈழத்தமிழன் அங்கே அன்றாடம் கொல்லப்பட்டுச் சாவதும்தாம் தமிழனுக்கு விதிக்கப்பட்ட வாழ்வா...? இந்தக் கொடுமையைப்பற்றி அக்கறைப்படாது, நமக்கு பசப்பு வார்த்தைகள் கூறி இழுத்தடிப்பு உத்தியில் ஈடுபடத்தான், நம்மை ஏமாற்றத்தான் நமக்கு தமிழக, தில்லி அரசுகளா....? தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும். இவ்வரசுகளின் ஆதிக்கப் பிடியிலிருந்து விடுபடவேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.