Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatruveli
Maatruveli logo
நவம்பர் 2008
கால்டுவெல் சிறப்பிதழ்
வீ. அரசு


இந்தியவியல், திராவிடவியல், தமிழியல் ஆகிய சொல்லாடல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவானது. இதில் திராவிட இயல் உரு வாக்கத்தில் கால்டுவெல்லின் பங்களிப்பு முதன்மையானது. இத்தன்மை குறித்த உரையாடல்கள் அண்மையில் நண்பர்கள் பொ.வேல்சாமி, எம்.வேதசகாயகுமார் ஆகிய பிறரால் முன்னெடுக்கப்பட்டது. இப்பின்புலத்தில் கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலின் மூன்றாம் பதிப்பு குறித்த உரையாடல்கள் கூர்மைப்பட்டன. இவ்வுரையாடல்களைக் ‘கவிதாசரண்’ பதிவு செய்தது.


சிறப்பாசிரியர்

வீ.அரசு

ஆசிரியர் குழு

செந்தில்பாபு
அ.சதீஷ்
பா.இளமாறன்
கா.அய்யப்பன்
ஜைனாப பஷீர்
தே.சிவகணேஷ்
ஜ.சிவகுமார்
மு.நஜ்மா
க.செந்தில்ராஜா

வள அறிஞர் குழு

கண்ணன்.எம்
வ.கீதா
அ.மங்கை
சு.பாலச்சந்திரன்
சித்திரலேகா மௌனகுரு
தெ.மதுசூதனன்

வெளியீட்டாளர்
சிவ.செந்தில்நாதன்

விலை ரூ.50
10 இதழ்கள் ரூ.500

தொடர்பு முகவரி

பரிசல் புத்தக நிலையம்
எண்: 176, Q பிளாக்
தொல்காப்பியர் தெரு
அரும்பாக்கம்
சென்னை – 600 106
மின்னஞ்சல் – [email protected]
கால்டுவெல் உரையாடல்களைப் பதிவு செய்ததின் தொடர்ச்சியாகக் கால்டுவெல்லின் இரண்டாம் பதிப்பின் (1875) முழு வடிவத்தைக் ‘கவிதாசரண்’ வெளிக்கொண்டு வந்தது. மூன் றாம் பதிப்பிலிருந்து நீக்கப்பட்ட செய்திகளை கவிதாசரண் பதிப்பு மூலம், தமிழ் உலகம் மீண்டும் பெற்றுள்ளது. ‘கவிதாசரணின்’ இப்பணியை மதிப்பீடு செய்யும் நோக்கில், கால்டுவெல் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் அந்நூல் குறித்த கருத்தரங்கம் ஆகியவை 24. 04. 2008 வியாழனன்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டோரின் உரையாடல்களை இவ்விதழில் பதிவு செய்துள்ளோம். இருபத்தோராம் நூற்றாண்டில் கால்டுவெல்லைப் புரிந்துகொள்ள முயன்றுள்ளோம்.


மாற்றுவெளி ஏன்?

ஐரோப்பிய புத்தொளிதாக்கம், காலனியம் மூலம் ஆசிய நாடுகளில் பதினெட்டாம் நூற்றாண்டில் உருப்பெறத் தொடங்கியது. சமஸ்கிருதம் தொடர்பான புரிதல் ஐரோப்பியர்களுக்குப் பதினாறாம் நூற்றாண்டு முதல் உருவானது. தக்காணம், மலபார் என்ற பெயர்களில் அழைக்கப்பட்ட பகுதிகள் சார்ந்த புரிதல் என்பது பதினெட்டாம் நூற்றாண்டில்தான் ஐரோப்பியர்களுக்கு ஏற்பட்டது. இன்றைய தென்னிந்தியா என்று அழைக்கப்படும் பகுதியின் மக்கள், மொழி, வாழ்விடம் ஆகிய பிற குறித்தப் புரிதல், ஐரோப்பியர்களுக்கு உருப்பெற்றச் சூழல் தொடங்கி இன்று வரையிலான சூழல்கள் குறித்த வரலாற்றுப்புரிதல் அவசியமாகும். இச்சூழலில் மொழி சார்ந்த செயல்பாடுகளைக் காலனியம் எவ்வாறு நிகழ்த்தியது? அதன்மூலம் நாம் பெற்றவை எவையெவை? பெற்றவைகளைத் தன்வயமாக்குதல் எப்படி நிகழ்ந்தது? ஆகிய பிற கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

சுமார் இருநூறு ஆண்டுகள் காலனியச் செயல்பாடுகளுக்குள், தமிழ்ச்சூழலை எவ்வாறு இனம் காண்பது? இப்பெருங்கதையாடலுக்குள் எதனை நாம் தொற்றிப் படிப்பது? எப்படியெல்லாம் நமது சூழல் இயங்கியது? இக்கணத்தில் அதற்குள் எப்படி நாம் பயணம் செய்வது? அப்பயணத்தின் வெளிகள் எவையெவை? இப்படியான கேள்விகள் மூலம், தமிழ்ச்சூழல் இயங்கிய, இயங்கும், இயங்கப்போகும் வெளிகளை நோக்கிய தேடலை முன்வைப்பது அவசியமாகும்.

தமிழ்ச்சமூகத்தின் முன் குறிப்பிட்ட இருநூறு ஆண்டுகால மொழிசார்ந்த செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள, மாற்றாகச் செயல்பட்ட ஆளுமைகளை அடையாளம் காண்பதும் அவசியம். பெருவெளிக்குள் தனக்கான வெளிகளை அடையாளப்படுத்திய ஆளுமைகள் மூலம்தான், சமூக இயங்குதளத்தைப் புரிந்து கொள்ளலாம். இதனைப் பின்வரும் வகையில் தொகுத்துக் கொள்ளலாம்.

- கிறித்தவ சமயப் பரப்புதலை நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட சீகன்பால்கு, பெஸ்கி, கால்டுவெல், போப் ஆகிய பிற பாதிரியார்கள் தமிழ்மொழி சார்ந்த வெளிக்குள் நிகழ்த்திய ஊடாட்டங்கள்.

- எல்லீஸ், மெக்கன்சி, மர்டாக், பிரின்சிப் ஆகிய பிற பிரித்தானிய ஆட்சி அலுவலர்கள், தமிழ்ச் சமூகம் சார்ந்த புரிதலுக்குள் சொல்லப்பட்ட முறைமைகள்.

- இராமலிங்கம், ஆறுமுக நாவலர், சோமசுந்தர நாயகர் ஆகிய பிற சமயச் சார்பு மனிதர்களின் செயல்பாடுகள்.

- மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, சி.வை.தா, உ.வே.சா, வையாபுரிப்பிள்ளை உள்ளிட்டோர், காலனிய வளர்ச்சிகளை உள்வாங்கிய முறைமைகள்.

- அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர், அயோத்திதாசர், பெரியார் ஈ.வெ.ரா உள்ளிட்டோரின் செயல்பாடுகள்.

- மதுரைத் தமிழ்ச் சங்கம், சைவ சித்தாந்த மகா சமாஜம், கரந்தைத் தமிழ்ச் சங்கம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகிய அமைப்புகள் மற்றும் Tamil Antiquity, சித்தாந்த போதம், செந்தமிழ், தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச் செல்வி ஆகிய இதழ்கள் வழி உருவான மொழி சார்ந்த விளைவுகள்.

- சென்னை, அண்ணாமலை, மதுரை மற்றும் தமிழ்ப் பல்கலைக் கழகங்கள் சார்ந்த செயல்பாடுகள், Tamil Culture, Tamil studies, தமிழ்க்கலை, Tamil civilization, IJDLஆகிய இதழ்வழி வெளிப்பட்ட தமிழியல் ஆய்வுகள்.

- எமனோ, விபுலானந்தர், தனிநாயம் அடிகள், தெ.பொ.மீ, கமில்சுவலபில், வ. அய். சுப்பிரமணியம் ஆகியோரின் செயல்பாடுகள்.

- ரகுநாதன், நா. வா, கைலாசபதி, சிவத்தம்பி ஆகிய பிறரின் தத்துவார்த்த வெளிசார்ந்த தேடல்கள்.

- எஸ்.வி.ஆர், தமிழவன், அ.மார்க்ஸ் ஆகிய பிறர் சார்ந்த ‘புதிய வெளிகள்’ சார்ந்த தேடல்கள்.

- ராஜ் கவுதமன், நாகார்ச்சுனன், எம். டி. முத்துக்குமாரசாமி ஆகிய பிறர் உருவாக்க விரும்பும் புதிய வெளிகள்.

- யாத்ரா, இலக்கிய வெளிவட்டம், பிரக்ஞை, படிகள், மேலும், நிகழ், நிறப்பிரிகை வழி உருவான உரையாடல்கள்.

மேலே நாம் தொகுத்துக்கொண்ட போக்குகளின் ஊடாக நாம் பெற்றவை எவை? அதனை மேலும் வளர்த்தெடுக்க என்ன செய்கிறோம்? என்ற பிரக்ஞை நோக்கியே இந்த முயற்சி ...

ஒரு பல்கலைக்கழகம் சார்ந்த சிறிய கூட்டத்தினர் இதற்குள் நுழைகின்றனர் ... இது எப்படிப் போகும் என்பது குறித்த கவலைக்குள் இப்போது நாங்கள் போகவில்லை. தமிழ்மரபு என்பது இயற்கை சார்ந்த நெறிக்குள் உருவானது ... துரதிஷ்டம் அது வைதீக குப்பையுள் மூழ்கடிக்கப் பட்டது ... மீண்டும் இருபதாம் நூற்றாண்டில் நமது மரபை புதிய ஒளிகளுடன் தொடர்கிறோம். சமயம் சார்ந்த உரையாடல்களுக்குள்(அது எவ்வகையில் இருந்தாலும்) இருந்து விடுதலை அடைவதே மனிதனின் சுயமரியாதை. மாற்றுவெளி அதை நோக்கிய பயணம்.

சிறப்பாசிரியர்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com