Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
பரம்பரை
சூர்யா


Watch me deeply என்று எழுதப்பட்ட பச்சை நிற முண்டா பனியனை தொப்புள் வரை மட்டுமே அணிந்திருந்த அந்த பெண்ணை ராகவனும் கர்ணனின் கவச குண்டலத்துக்கு இணையாக உடலோடு உடலாக சேர்த்து தைக்கப்பட்டிருந்த ஜீன்சை அணிந்திருந்த பெண்ணை சிவாவும் சைட் அடித்தப்படி தங்கள் எதிர்கால வாழ்க்கை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என சீரியஸாக பேசிக் கொண்டிருந்தார்கள். எவ்வளவுதான் சைட் அடித்தாலும் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கடைபிடித்தார்கள்.

root_family ராகவன்: இன்னைக்கு காலைல எங்கப்பா என்ன சொன்னார் தெரியுமாடா. அந்த சிவா பயலோட சேர்ந்து சுத்திகிட்டு இருக்குற வரைக்கும் நீ உருப்படவே மாட்டன்னு சொன்னாரு.

சிவா : ஏன் அப்படி சொன்னாரு

ராகவன் : ஏன்னா நீ சிகரெட் பிடிக்கிறியாம். தண்ணி அடிப்பியாம். பொண்ணுங்க பின்னாடி சுத்துவியாம். ஊர் சுத்துவியாம். ம் . ம் . ம். ........shhhh
(அந்த சிவப்பு முண்டா பனியன். குடித்து கொண்டிருந்த காபியை மேலே ஊற்றிக் கொண்டது)

சிவா : சொல்லுடா வேற என்னல்லாம் சொன்னார் மதிப்பிற்குரிய சந்திரசேகர்.

ராகவன் : நீ. உருப்படாதவனாம்டா அதைத்தான் நீட்டி முழக்கி சொன்னாரு. (சொல்லிக் கொண்டே கர்ச்சீப்பை எடுத்து தனது அடித்தொண்டையை துடைத்துக் கொண்டான்)

சிவா : (ஜீன்சை பார்த்தபடி) டேய் . நீ கூடத்தான் இதெல்லாம் பண்ற. உங்கப்பா உன்ன திட்ட வேண்டியது தானடா. என்னை ஏன்டா திட்டுறாரு

ராகவன் : அதுக்கில்லடா. உன் கூட சேர்றத விட்டுட்டேனா நான் நல்ல பையனா மாறிடுவேனாம்டா.

சிவா : உங்கப்பாவோட அறியாமைக்கு ஒரு அளவே இல்லை

ராகவன் : ஏன்டா உங்கப்பா என்ன பத்தி ஏதாவது சொல்லுவாராடா

சிவா : எங்கப்பாவுக்கு உங்கப்பாவ விட அறியாமை ஜாஸ்திடா. இதுக்கு மேல எதுவும் கேக்காத. ஏன்னா ரொம்ப கேவலமா இருக்கும். உன் மனசு.......... (அந்த ஜீன்ஸ் எழுந்தது. என்ன நினைத்ததோ திரும்ப உட்கார்ந்து கொண்டது. அந்த ஜீன்சை போலவே சிவாவும் மெதுவாக எழுந்து உட்கார்ந்தான்)....... தாங்காது.

ராகவன் : ஏன்டா இந்த அப்பாக்கள்லாம் இப்படி இருக்காங்க.

25 வருடங்களுக்கு முன்னர்

திரு. சந்திரசேகரும் திரு முரளிதரனும் காக்கி பேண்டும் வெள்ளைச் சட்டையும் போட்டுக் கொண்டு கையில் புத்தகத்துடன் ஹெர்குலஸ் சைக்கிளை உருட்டியபடி கல்லூரிக்கு நடந்து கொண்டிருந்தார்கள். முன்னால் ஒரு சிவப்பு நிற தாவணியும் ஒரு பச்சை நிற தாவணியும் ஜோடியாக நடந்து சென்று கொண்டிருந்தது.

திரு. சந்திரசேகர் : டேய் எங்கப்பா இன்னைக்கு காலை உன்னைப் பத்தி என்ன சொன்னார் தெரியுமா?.............சொன்னவர் முன்னால் எதையோ (எதிர்காலம்) பார்த்துவிட்டு ஷாக் ஆனார்.

முன்னால் ராகவனும் சிவாவும் நகத்தை கடித்தபடி கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ரெஸ்டாரேண்ட் சேர்ரில் உட்கார்ந்தபடி திரு. சந்திரசேகரும் திரு. முரளிதரனும் பின்னால் திரும்பி பார்த்தார்கள் (இறந்த காலம்) இரண்டு வயதான கிழவர்கள் திருதிரு வென விழித்து கொண்டிருந்தார்கள் வாக்கிங் ஸ்டிக்கை பிடித்தபடி.

- சூர்யா([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com