Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

பட்டாணி சுண்டல்
விமலன்

பட்டாணி சுண்டல்
Market கடலைப்பருப்பு
வாங்க வேண்டுமெனப்
போய்
பட்டாணி நூறுகிராம்
வாங்கி வந்தேன்
திடீர் ஞாபகம்
வந்தவனாக
பட்டாணிக்குப் பக்கம்
கடலைப்பருப்பு,
அதன் அருகாமையாய்
உப்புக்கடலை,
அடுத்ததாக
பொரிகடலை என
குவித்து
வைத்திருந்தவைகள்
எல்லாம்
பார்க்க
நன்றாகவே இருந்தது.
அந்தக் கடைக்காரரைத்
தவிர
பக்கத்திலேயே
தேங்காய்க்கடை
அதை ஒட்டியதாய்
மிட்டாய்க்கடை,
பீடிக்கடை,
பலசரக்குக்கடை
ஜவுளிக்கடை என
பல் முளைத்திருந்த
வரிசையாய்
நான் நின்றிருந்த
காய்கறிக்கடையில்
முட்டைக்கோஸ்
தக்காளி, வெங்காயம்
எப்போதுமே
கிடைக்கும் சிறப்பு
என்கிறார்
கடைக்காரர்
அவர் குவித்து
வைத்திருந்த
காய்கறிகளும்
அதை வாங்கிய
பெண்களும், ஆண்களும்
அழகாகவே தெரிந்தார்கள்.



நூற்றி ஐம்பதிலிருந்து
இருநூறுக்குள்ளாக
இருக்கலாம்
அவர்கள்
அணிந்திருந்த சேலை,
அதற்கு மேட்சான
சட்டையும்
சுமார் ரகமாகவே
அதைப் போலவே
ஆண்களனிதும்
அவர்கள்
வைத்திருந்த
பையும்
பையுனுள்ளிருந்த
கையிருப்பும்
கொஞ்சமாகவே
பட்டாணிக் கடையிலும்
அதை ஒட்டிய
தேங்காய்க் கடையிலும்
காய்கறிக் கடைகளிலும்
இன்னமும்
பிற கடைகளிலுமாக
நின்றவர்கள்
வந்தவர்கள்
போனவர்கள்
வாங்கியவர்கள்
வாங்க யோசித்து
நோட்டமிட்டவர்கள்
எல்லோரிலும்
எனது ஏழ்மை முகமும்
மனதும்
பதிந்திருப்பதாகவே
அறிகிறேன்

- விமலன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.