KeetruLiteraturePoem
கவிதை

முல்லைக்கு தேர்
தங்கம்

Eelam சூழ்ந்திருக்கிறது
இராணுவமும் கடலும்

செவிப்பறையை பிளக்கிறது
பீரங்கிச் சத்தமும் விமானத்தின் இரைச்சலும்
வெடித்துக்கொண்டேயிருக்கிறது
குண்டுகள்

சிதறி ஓடுகிறது
மனித உயிர்கள்
நடந்துகொண்டேயிருக்கிறது
படுகொலைகள்

சோர்ந்து விட்டன கைகள்
ஆதரவுக்கு நீட்டி... நீட்டி
நீர்த்துப்போனது நம்பிக்கை

மரணத்திற்கு தயாராகாத உள்ளம்
சொல்லக் கூசுகின்ற அச்சம்
பிரித்தறிய முடியதா வதை

நீண்டுகொண்டேயிருக்கிறது
இரவும் பகலும் மௌனமாய்
முல்லைத் தீவில்

- தங்கம் ([email protected])