கவிதை
குழந்தைக் கேள்விகள்..! செல்வராஜ் ஜெகதீசன்
ஏன்
வீடு திரும்ப வேண்டும்?
ஏன்
சக்கரங்கள் சுழல்கின்றன?
ஏன்
அம்மா வேலைக்குப் போவதில்லை?
எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்
எல்லோரும் இத்தனை வாகனங்களில்?
வளர்ந்த பின் தான்
வேலைக்குப் போகணுமா?
சாலையோர பூனைகளுக்கு
யார் சாதம் தருவா?
குழந்தைத்தனமாகவே இருப்பதில்லை
எப்போதும்
குழந்தைகளின் கேள்விகள்.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (SJEGADHE@tebodinme.ae)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|