Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

தீர்ந்து போனது காதல்
பாண்டித்துரை

திருமணத்திற்க்கு முன்
எப்போதும் - எனை
சுற்றும் உன் கண்கள்
ஆ, தலை வலிக்குது
என்னடா ஆச்சு – என்னை விட
வலியை நீ உணருகிறாய்!
மணிக்கணக்காய் பேசுகிறாய்
மௌனமான என்னிடம்
எனை பார்த்தபின் உன்விடியல்.
தேடி வருகிறாய்
புரியாத மொழி பேசி
பிறக்கிறாய்
புதிதாய் தினமும்
நான், நீ என சொல்லி
இருபத்திநான்கு மணி நேரத்தை
தினமும் இரட்டிப்பு ஆக்குகிறாய்

திருமணத்திற்க்கு பின்
உன் கண்கள்
எதையோ தேடுகிறது
எனை தவிர்க்க ஓடுகிறது
மௌனமாக இருக்கிறாய்
ஆ, தலை வலிக்குது
காதில் வாங்காதவனாய்
கண்மூடி கனவு காண்கிறாய்
தினமும் கோபப் பார்வை
திராவயமாய் உன் வார்தைகள்
கடமைக்காக நீ வாங்கிய மல்லி
காய்ந்து போய் கட்டில்மேல்
விடிவதும் தெரிவதில்லை
நீ வீட்டில் இருப்பதும்………….

- பாண்டித்துரை (pandiidurai@yahoo.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.